Sunday, September 11, 2005

உண்மையான தலைவர்


பெருந்தலைவர் காமராஜரை கட்சி கண்ணோட்டத்தோடு பார்க்ககூடாது. அவர்
மாபெரும் சகாப்தம்.அவரை சிலர் சர்வாதிகார போக்கு கொண்டவர் என்பார்கள். அது
தவறு. அவர் எல்லோர் கருத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டவர்.
அன்றைக்கு பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு மறைந்த போது
நேருவுக்கு பிறகு யார் பிரதமர் பொறுப்பை ஏற்பது என்று வந்தது.
அப்போது பெருந்தலைவர் அத்தனை எம்.பி.க்களையும் கலந்து ஆலோசித்து
லால்பகதூர் சாஸ்திரியை தேர்வு செய்தார். அது, எல்லோருடைய கருத்தையும் கேட்டு
அவர்கள் மனநிலை அறிந்து எடுத்த முடிவு.
அதே நேரத்தில் பெருந்தலைவர், காலத்துக்கு ஏற்ப முடிவெடுக்கும் தன்மை
கொண்டவர். நேரு மறைந்த போது, பெருந்தலைவர் அனைத்து காங்கிரஸ்
எம்.பி.க்களின் கருத்துகளையும் அறிந்து முடிவெடுத்தது போல லால்பகதூர் சாஸ்திரி
இறந்த போது அந்த முறையை கையாளவில்லை.
தேர்தல் மூலம்தான் பிரத மரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
அதை பெருந்தலைவர் ஏற்றுக் கொண்டார். இந்திரா காந்தி பிரதமராக வந்தார்.
பெருந்தலைவர் தோல்வியை கண்டு துவளாத மனம் கொண்டவர்.
இந்தியாவுக்கே வழி காட்டியாக இருந்து நேருவுக்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரியை
தேர்வு செய்து விட்டு தமிழகத்துக்கு வந்து தேர்தலை சந்தித்த பெருந்தலைவர்
தோல்வியை தழுவினார் .
ஆட்சி தி.மு.க.வுக்கு கை மாறியது. அப்போது இமயத்தின் உச்சியில் இருந்து அதள
பாதாளத்தில் தள்ளப் பட்ட நிலை பெருந்தலைவருக்கு ஏற்பட்டது. ஆனால் அவர்
தோல்வியை கண்டு துவண்டு போய் விடவில்லை.
``மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு''. இதை மனமுவந்து ஏற்று கொள்கிறேன். என்று
சொல்லி தோல்வியை ஏற்றுக் கொண்டார். அந்த பக்குவத்தை வேறு எந்த
தலைவரிடமும் நான் பாக்க வில்லை.
காமராஜர் காங்கிரஸ் கட்சியில் பலதரப்பட்டவர்களுடனும் இணைந்து ஒன்றர கலந்து
விட்டவர்.
தேர்தலில் தோற்றபிறகு சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
அப்போது எல்லோரும், மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுகள் இல்லை
என்று யாருடனாவது கூட்டு சேரவேண்டும் என்று பேசினார்கள்.
அப்போது காமராஜருக்கு கோபம் வந்தது. ஏல, போறவனெல்லாம் போங்க! என்னை
ஆளை விடுங்க யார் வேணுமானாலும் எங்கேயும் போய் சேருங்க என்று கோபமாக
பேசினார்.
அந்த கூட்டத்தில் நானும் பங்கு கொண்டிருந்தேன். பெருந் தலைவர் ஆத்திரப்பட்டு
பேசி விட்டதால் எல்லோரும் வெளியே போயிருவாங்க என்று நான் தலையை
தொங்க போட்டுக்கொண்டு இருந்தேன். சுமார் 15 நிமிடம் அமைதி நிலவியது.
திடீரென பெருந் தலைவரே பேச ஆரம்பித்தார். நான் எதுக்கு சொல்றேன் தெரியுமா!
என்றார். அவரை யாரும் பேச விடல்லை. 10 பேர் எழுந்து தேம்பி, தேம்பி அழுதனர்.
அதில் பணக்காரர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் உண்டு.
அவர்கள் எங்களுக்கு பதவி வேண்டாம் ஒன்றும் வேண்டாம் உங்களை விட்டு போக
மாட்டோம். தப்பா பேசினால் மன்னியுங்கள் என்று சொன்னதும் கூட்டமே அழுதது.
இது கட்சியில் பலதரப்பட்டவர்களுடனும் காமராஜர் இணைந்து ஒன்றர கலந்து
இருந்தார் என்பதற்கு சிறந்த சான்றாகும்.
கட்சியின் வெற்றி தோல் வியை விட மக்களின் வளர்ச்சியிலேயே காமராஜர்
கண்ணும் கருத்துமாக இருந்தார்.
காமராஜர் அவருடைய ஆட்சி காலத்தில் சிமெண்டு ஸ்டீல், மின்சாரம் போன்ற
அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதற்குரிய வகையில் இது போன்ற
தொழிற்சாலைகளை தமிழ் நாட்டில் பல இடங்களில் தொடங்கினார்.
அன்றைய திட்ட கமிஷனிடம் போராடி பெல் நிறுவனத்தை பெற்றார்.
அன்றைக்கு காமராஜரின் வற்புறுத் தலின் பேரில் பெல் நிறுவனத்தை அமைப்பது
தொடர்பாக மத்திய அரசில் இருந்து நிபுணர் குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்ய
வந்தார்கள்.
தமிழகம் முழுவதும் ஒரு வார காலம் சுற்றுபயணம் செய்து விட்டு தங்கள்
அறிக்கையில் அதற்குரிய இடம் இல்லை என்று தெரிவிப்பதற்கான நிலை இருந்ததால்
அதை அன்றைய முதல்வராக இருந்த பெருந் தலைவரை நேரில் சந்தித்து கூறி
னார்கள்.
அவர் ஏன்? என்ன சாத்தியகூறுகள் இல்லை? என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் தண்ணீர் நிறைய கிடைக்க வேண்டும். போக்குவரத்து வசதி
வேண்டும், பல ஊர்களுக்கு ரெயில்வே தொடர்பு வேண்டும், மின்சார வசதி வேண்டும்.
பெருமளவுக்கு காலி இடம் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை கேட்ட
காமராஜர் அப்படியா! என்று கூறி விட்டு சற்று நேரம் மவுனமாக இருந்தார். பிறகு
அவர்களிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்.
நாளைக்கு திருச்சி போகி றீர்கள். அங்கு இருந்து தஞ்சை சாலையில் தஞ்சை வரை
செல்கிறீர்கள். அங்கு போய் பார்த்து விட்டு வந்து என்னிடம் பேசலாம்! முடிவு
பண்ணலாம் என்றார்கள்.
நிபுணர்களும் மறுநாள் திருச்சியில் இறங்கி தஞ்சை வரைக்கும் சென்று பார்த்து
பிரமிப்படைந்தார்கள். பெருந் தலைவரிடம் தொடர்பு கொண்டு நாங்கள் நினைத்த
இடம் அப்படியே இருக்கிறது என்று சொல்லி, ஏற்றுக் கொண்டார்கள்.
இப்படியாக மக்களின் வளர்ச்சி யிலேயே கண்ணும் கருத்தையும் செலுத்தினாரே தவிர
காங்கிரஸ் கட்சியின் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாத தலைவர் அவர்.
அவர் பதவியில் இருந்த போதும் சரி இல்லாத போதும் சரி அனைவரிடமும் மனித
நேயத்தோடு பழகி வந்தார். மற்ற வர்களும் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும்
சரி ஒன்று போலவே நடத்தினார்.
இதையெல்லாம் எண்ணி தான் டெல்லியில் காமராஜர் சிலையை ராஜீவ்காந்தி திறந்து
வைத்து பேசிய போது பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்தாலும் சரி,
இல்லாவிட்டாலும் சரி காமராஜ் காமராஜ் தான் என்று கூறினார்.
ஆம் காமராஜருக்கு நிகரான தலை வரில்லை அவருக்கு நிகர் அவரே. ஒப்பில்லாத
பெருந் தலைவருடைய எளிமையை கடைபிடிப்பதுதான் அவருக்கு நாம் செலுத்தும்
சிறந்த அஞ்சலியாகும்.
ராஜ்யசபா முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.டி. ராமச்சந்திரன் பெருந் தலைவரோடு
பழகிய நாட்களில் கண்ட காமராஜரின் நற்பணபுகளை வாசகர்களிடம் நினைவு
கூறுகிறார் எஸ்.கே.டி.ராமச்சந்திரன் இருந்தது. ஆனால் அவரை பார்க்க பரோலில்
வரக்கூட மறுத்து, சுதந்திர போராட்டத்தில் உறுதியாக இருந்தார் காமராஜர்.
இதன்பின்னர் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கைதான அனைவரும் விடுதலை
செய்யப்பட்டனர். காமராஜரும் விடுதலையானார். விருதுநகருக்கு வந்த அவரை ஊர்
மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அவர்களிடம் பேசிய காமராஜர் ``உங்களின் அளவற்ற அன்பை பெற்று இருப்பதால்
நான் தலைக்கனம் பிடித்தவனாக மாறினாலும் மாறலாம் அல்லவா? அந்த மனநிலை
ஏற்படாமல் இருக்க எனக்காக நீங்கள் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்'' என்றார்.
அவரது அடக்கத்தை கண்டு மக்கள் வியந்து பாராட்டினார்கள். பின்பு, வீட்டுக்குள்
சென்று தனது பாட்டியை பார்த்தார்.
பேரனை கண்டு மகிழ்ந்த பார்வதி அம்மையார் 2 நாட்களுக்கு பிறகு மரணம்
அடைந்தார். பாட்டியின் மறைவு காமராஜரை பெருந்துயரில் ஆழ்த்தியது.
இதன்பின்னர் காமராஜர் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பிரதிநிதியாக
தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே காம ராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முதன்
முதலாக ஏற்ற முக்கிய பதவி.
காந்தி_இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்கள் தேவைக் கான
உப்பை தயாரித்து கொள்ள அரசு சம்மதித்தது. இதன்பின்னர் ஆங்கிலேய அரசு
பிரதிநிதியாக இந்தியாவுக்கு வந்த வெலிங்டன் பிரபு இந்த ஒப்பந்தத்தை
ஏற்கவில்லை.
அப்போது வெளிநாடு சென்று திரும்பிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.
காரணமே இல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது, காமராஜரும்
கைதானார்.
இதைத்தொடர்ந்து 1933_ம் ஆண்டு சென்னை மாகாண சதி வழக்கு ஒன்று பதிவு
செய்யப்பட்டது. இந்த வழக்கில் காமராஜரும் சேர்க்கப்பட்டார். ஆனால்,
விசாரணையில், காமராஜர் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டதால் வழக்கில்
இருந்து விடுவிக்கப்பட்டார்.
இது போலவே, விருதுநகர் வெடிகுண்டு வழக்கிலும் காமராஜர் அவரது நண்பர்கள்
முத்துச்சாமி, மாரியப்பன் ஆகியோரை சேர்த்து வழக்குகள் ஜோடிக்கப்பட்டன. இந்த
வழக்கிலும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது தெரிய வந்ததும் விடுவிக்கப்பட்டனர்.
காமராஜர் மீது ஆங்கிலேய அரசு வழக்குகள் போட்டு சலித்து போனது. ஆனால்,
காமராஜர் எதை பற்றியும் கவலைப்படாமல் சளைக்காமல் விடுதலை போராட்டத்தில்
ஈடுபட்டார்.
1936_ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக சத்தியமூர்த்தி
தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காமராஜர் கட்சியின் செயலாளர்களில் ஒருவராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருவரும், தோளோடு தோள் நின்று கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
1937_ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு சாத்தூர்
எம்.எல்.ஏ. ஆனார். 1940_ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக
காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941_ம் ஆண்டு இந்திய மக்களை கேட்காமலேயே இந்தியாவை 2_வது உலகப்
போரில் ஆங்கிலேய அரசு ஈடுபடுத்தியதை கண்டித்து, போராட்டம் நடந்தது. இந்த
போராட்டத்தின்போது காமராஜர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில்
அடைக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் விருதுநகர் நகரசபைக்கு தேர்தல் நடந்தது. சிறையில் இருந்தபடியே
இந்த தேர்தலில் போட்டியிட்டு, காமராஜர் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டார். காமராஜர் விடுதலை செய்யப்படும் வரை துணை தலைவராக இருந்து
நகரசபை கூட்டத்தை நடத்தி வந்தார்.
பின்பு, காமராஜர் விடுதலை செய்யப்பட்டு விருதுநகர் திரும்பினார். நகரசபைக்கு அவர்
வந்தபோது அங்கு நகரசபை கூட்டம் நடந்து கொண்டு இருந்தது.
துணைத்தலைவர் கூட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தார். காமராஜரை கணடதும்
அவர் எழுந்து நகரசபை தலைவர் இருக்கையில் அமரும்படி காமராஜரை கேட்டுக்
கொண்டார். தலைவர் இருக்கையில் காமராஜரும் அமர்ந்தார்.
அவரை பலரும் பாராட்டி பேச காமராஜரோ ``என் குறிக்கோள் இந்திய
விடுதலைக்காக பாடுபடுவதுதான். உள்ளூரில் இந்த பதவியில் இருந்து கொண்டு
செய்ய நான் விரும்பவில்லை. இதை நீங்களே கவனித்து கொள்வது நல்லது.நீங்கள்
அன்போடு அளித்த தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னை தவறாக
நினைக்க வேண்டாம்'' என்று கூறி பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார்.
விடுதலை போராட்டத்தில் அவர் கொண்டு இருந்த வேட்கை இதன்மூலம் தெரிய
வந்தது. அவரை பாராட் டாதவர்களே இல்லை.
``வெள்ளையனே வெளியேறு'' போராட்டத்தில் சிறை சென்ற காமராஜர் தனக்கு
கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி நிறைய புத்தகங்கள் படித்தார். இயற்கையாக
அவரிடம் சேர்ந்திருந்த நுண்ணறிவுடன் நூலறிவும் சேர்ந்ததால் அவர் சிறந்த அரசியல்
அறிஞர் ஆனார். காமராஜர் சிறையில் இருந்தபோதுதான் அவரது அரசியல் குரு
சத்தியமூர்த்தி மறைந்தார்.
காமராஜர் திருமணமாகாதவர். அவருக்கென்று எந்த தொழிலும் கிடையாது. நாட்டு
விடுதலைக்காக உழைப்பதையே அவர் தனது தொழிலாக கொண்டு இருந்தார். சிறந்த
லட்சியவா தியான அவரை பொது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் மிகவும்
மதித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி யில் காமராஜருடைய செல்வாக்கு உயர்ந்திருந்ததை
போலவே, சட்ட சபையிலும் அவரது செல்வாக்கு உயர்ந்தது. காமராஜர் நினைத்தால்
யாரையும் முதல்_அமைச்சராக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது நடந்த தேர்தலில் அமைச்சரவை அமைக்கப்பட்டு ஆந்திர கேசரி பிரகாசம்
முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்குள் அவர் காங்கிரஸ்
கட்சியினரின் வெறுப்புக்கு ஆளானதால் அடுத்த ஆண்டே ஓ.பி. ராமசாமி என்பவரை
காமராஜர் முதல் அமைச்சராக்கினார். இதன்பிறகு அவரது போக்கும் பிடிக் காமல்
குமாரசாமி ராஜாவை முதல் அமைச்சராக்கினார், காமராஜர்.
இப்படி 4 ஆண்டுகளில் 3 பேரை முதல் அமைச்சராக்கும் அளவுக்கு காங்கிரசில்
காமராஜரின் செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. ஆனால், காமராஜர் வழக்கம்போல
எளிமை யாகவே வாழ்ந்தார். அனைவரிடமும் இனிமையாக பழகினார்.
1947_ம் ஆண்டு மார்ச் மாதம் பிரகாசம் முதல் அமைச்சர் பதவியை இழந்தார். அந்த
ஆண்டு ஆகஸ்டு 15_ந் தேதி தான் இந்தியாவுக்கு சுதந்திரமும் கிடைத்தது. இதற்கு
பிறகுதான் காமராஜரின் செல்வாக்கும் ஓங்கியது. அவர் யாரை ஆதரித்தாரோ அவர்கள்
முதல் அமைச் சரானார்கள். அவர் யாரை விரும்பவில்லையோ, அவர்கள் முதல்
அமைச்சர் பதவியை இழந்தனர். அடுத்த தேர்தல் வரை இந்த நிலை நீடித்தது.
நன்றி மாலை மலர்

Monday, September 05, 2005

வெள்ளையரில் ஒரு நல்லவர்



கர்னல் பென்னி குக்:
21ம் நூற்றாண்டின் அசாத்திய மாகத் தெரிகிற நதி நீர் இணைப்பை 1895ல் நிகழ்திக் காட்டியவர் ஆங்கிலேய எஞ்சினியர் கர்னல் பென்னி குக். பெரும் சவால்களுக்கு இடையில் கேரளா நோக்கிப் பாய்ந்து கடலில் வீணான முல்லை - பெரியாறு நதிகளின் உபரி நீரை தமிழகத்தை நோக்கித்திருப்பிவிட்டார். இந்த அணை பல முறை நதிநீர் ஓட்டத்தால் தகர்க்கப்பட்டது. ஆங்கிலேய அரசு திட்டத்தைக் கை விட்டது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள
வீடு, உடமைகளை விற்று சொந்த முயற்சியால் அணையைக் கட்டினார் குக். அணையிலிருந்து சுரங்கம் அமைத்து முல்லை பெரியாரின் உபரிநீரை வைகை நதியில் பாயச்செய்தார்.

நன்றி இந்தியா டுடே

வெள்ளையன் கொள்ளையன் என ஏக வசணத்தில் வைதாலும்
இப்படியும் வெள்ளையுள்ளம் கொண்ட நல்லவர்களும் உண்டு

இப்படித்தான் திருச்சிராப்பள்ளி நகருக்கு தனது சொந்த பணத்தைக்கு கொண்டு தண்ணீர் கொண்டு வந்தார் இரத்தினவேலு தேவர். ஆனால் இவர் நம்ம ஊர்காரர்



Friday, August 26, 2005

மாயக் கண்ணன் பிறந்தநாள்

கண்ணன் பிறந்தான் மாயக் கண்ணன் பிறந்தநாள்
கெளரவ பண்டவர்களைஅழிக்க பிறந்தவனே
கர்ணன் புண்ணியமனைத்தும் கவர்ந்ததால்
புவியில் யாரும் புண்ணியம் செய்வதில்லை
தர்மனை பொய் சொல்ல வைத்ததால்
புவியில் அனைவரும் பொய் சொல்கின்றனர்
சகோதர சண்டையை ஏற்படுத்தியதால்
இன்னும் அது வளர்கிறது, வீட்டுக்கு வீடு நாட்டுக்கு நாடு
வெண்ணையை திருடியதால் நாடெங்கு திருட்டு
சிசுபாலன்,அரக்கியயை நீ கொன்றதால் கொலைகள் நடக்கிறது
நீ அன்று மண்ணைத்தின்றதால் எங்கள் குழந்தைளும் தின்கின்றனர்
மழையில் பசுக்களைக் காக்க மலையை குடையாகப் பிடித்ததால் மழையில்லை

Sunday, August 07, 2005

சொத்துகளை இணைய தளத்தில் காணவேண்டும்

150 இணைபதிவகங்களை கணினி மயமாக்க ரூ.19கோடி
சார்பதிவகங்கள்மற்றும் பதிவுதுறை உயர் அலுவலகங்களை கணினிமயமாக்க 19 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை.
RASI திட்டம் எனறு ஒன்று இருந்தது துத்துக்குடி மாவட்டத்தில் . அது முதலில் செயல்பட்டது; இன்று காணவில்லை அல்லது என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,அதாவது வெளிநாடுகளில் இருக்கும் நபர் தனது நிலங்களை இணைய தளத்தில் பார்துக்கொள்ள பயனுள்ளதாக இருந்தது. ஒரு பட்டாரர் தனது குறிப்பிட்ட சர்வே எண்ணை விலைக்கு வாங்கினால் அதை தனது பெயருக்கு பட்டாமாற்றம் செய்துகொண்டால் அந்த சர்வே எண் விற்றவர் பெயரிலிருந்து கிரயம் பெற்றவர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டதை தெரிந்து கொள்ளலாம். உள்ளூரில் இருப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று அதை நேரடியாக பாத்துக்கொள்ளலாம். வெளியில் இருப்பவர்கள் ? அந்தவசதியையும் தமிழக முதல் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

Friday, August 05, 2005

வீரப்பன் பணம் எங்கே?

பல ஆண்டுகளாக மாநில அரசுகளின் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் காட்டு ராஜா மான்புமிகு வீரப்பன் அவர்கள் நாட்டிலும் காட்டிலும் கொள்ளையடித்த மாபெருந்தொகை என்னவாயிற்று? வனராஜாவிடமிருந்து எந்த புவிராஜாவிடம் அல்லது ராணிடம் சென்றது.
தலைவர் பல ஆண்டுகளாக சந்தனமரம் , யானையின் தந்தம், நடிகர் ரஜ்குமாருக்காக கொடுத்த சிறு தொகை ரூபாய் 20 கோடி. விடுதலைப்புகளிடம் ஏதாவது கிடைத்திருக்கும் அது.
வீரப்பன் கொள்ளப்பட்டவுடன் நிலவறையில் பணம் இருப்பதாகக் கூறினார்களே அதுவல்லாம் என்னவாயிற்று. அரசியல் வாதிமுதல் பத்திரிக்கையாளர் வரை யாரும் வாய்திறக்க வில்லையே. ஓ அந்த தொகையில் சிறு பகுதி கொண்டு தான் வாய் அடைக்கப்பட்டு விட்டதோ.

Wednesday, August 03, 2005

ராமதாஸ் VS நிருபர்


நிருபர்:- உங்க பேத்திகள் (மத்திய அமைச்சர் அன்புமணி மகள்கள்)டெல்லியில் உள்ள மேட்டர்டே கான் வெண்டில் படிக்கிறாங்களே?

ராமதாஸ்: அதுபற்றி எல்லாம் நீங்க கேட்கக்கூடாது.


நிருபர்: எல்லாரையும் கட்டாயமா தமிழ்லே படிக்கணும்னு சொல்ற நீங்க உங்க குடும்பத்தைச் சேர்நதவங்களை மட்டும் கான்வென்ட்டில்.......


ராமதாஸ்: வரம்பு மீறி பேசறீங்க


நிருபர்: கான்வெண்ட்டில உங்க பேத்திகள் .. . .


ராமதாஸ்: அதிகமா பேசறீங்க. உங்ககிட்டே தனியா பேசறேன்.

நிருபர்: ஊருக்கு உபதேசம் பண்ற நீங்க.........

ராமதாஸ் : என்ன . . . . அரசியல் பண்றியா? நீ யாரு, ஜெயா டி.வி.யா? துக்ளக்கை படிச்சிட்டு இங்கே வந்து கேள்வி கேட்கிறியா?

ஜி.கே.மணி: மேட்டர் டே ஸ்கூல்லே தமிழ் பாடம் நடத்தப்படுகிறது.

ராமதாஸ் : (ஜி.கே.மணியிடம் திரும்பி) அந்த ஆளு (நிருபர்) கேட்கிற கேள்விக்குலாம் பதில் சொல்லாதே. ஜெயா டிவியை யாருய்யா கூப்பிட்டது?

(ஜி.கே.மணி மவுனம்)


நிருபர் : பிரஸ் மீட்னு வந்துட்டா கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றது உங்க கடைமைதானே.

ராமதாஸ் : இதுக்கு மேலே எதுவும் . . . .(அப்போது பா... பிரமுகர் ஒருவர், நிருபரின் தோளில் தட்டி,'கேள்வி கேட்காதே' என்று மிரட்டினால்)

தொடர்நது அது தொடர்பான கேள்விகளையே நிருபர் கேட்டதால் ராமதாஸ் ஆத்திரம் அடைந்தார். பேட்டியை முடித்துக்கொண்டு கடுகடுப்புடன் புறப்பட்டார். பின்னர், ஆளுங்கட்சி டிவி நிருபரை அழைத்தார்

ராமதாஸ் : என்னையா கேள்வி கேட்கிறே? ஜெயா டிவி ஒரு டிவியா? நமது எம்.ஜிஆர் பத்திரிகைலாம் ஒரு பத்திரிகையா? அந்த பத்திரிகையில் வந்த செய்ததியை துக்ளக்கில் போட்டதால இப்படிலாம் கேள்வி கேட்கிறீயா?

நிருபர் : சும்மா கேட்கல, டில்லியில் நல்லா விசாரிச்சுட்டுத்தான் கேட்கிறேன்


ஜி.கே.மணி : சரி, சரி விடுங்க. இதைத்தொடர்ந்து, மேலும் ஆவேசத்துடன் காரில் புறப்பட்டார் ராமதாஸ்.



பாவம் அந்த நிருபரை என்ன செய்யப்போகிறார்களோ பொருத்திருந்து பார்ப்போம்

Sunday, July 24, 2005

MUTHURAMALINGA DEVAR




ஓர் சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் கிறித்தவப் பாதிரியார் நாகர் கோவிலிலிருந்து வந்த மைக்கேல் தம்புராசு.

"பாவிகளே ! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஓர் கல், இதே கல்தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம் .. . . . .கூடாது. . . .!

பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை மாணவன் பேச்சை இடைமமறித்தான் . . .!

"பாதிரியார் அவர்களே ! ஓர் சந்தேகம் அதை நீங்கள் . . .!

"என்ன சந்தேகம் அதை விளக்கத்தானே ஆண்டவன் என்னை ... . . !

"அப்படியனால். . . !கோவப்படக்கூடாது நீங்கள் . . . !"

"எனக்கேன் வருகிறது கோவம்".எதுவானாலும் கேளுங்கள் . . .!

"நான் நிற்பதும் ஓர் கல் . கோவிலின்உள்ளே சிலையாக இருப்பதும் கல் . . .!"என்று குறிப்பிட்டீர்கள்

"இரண்டும் கல் தான் இதிலென்ன . . . !"

"சிலபாதிரிமார்களுக்கு தாயார், அக்காள்,தங்கை, உறவுபெண்களும் உண்டு".

"ஆமாம் ...!"

"சிலபாதிரிமார்களுக்கு . . .! மனைவியும் மக்களும் இருக்கிறார்கள்."

"உண்மைதான்"

"இவர்கள் அனைவரும் . . . .! பெண்கள் தானே?"

"சந்தேகம் என்ன வந்தது இதிலே. . . ?"

"அவர்கள் அனைவரும் ஒரே பெண்கள்தான் என்ற நிலை ஏற்படுமேயானால். . .!ஒரு மனைவியை பாவிக்கிறமாதிரி தங்களது தாய் ,தங்கையர்களை பாவிக்க முடியுமா? அப்படிபாவித்தால் அவர்களை என்ன சொல்லும் உலகம்.. .? நீங்கள் இதில் .. . ?"

இடி யோசை கேட்ட நாகம் போலாகிவிட்டார் பாதிரியார். எதிர்பாராது எழுந்த இக் கேள்வியைக்கேட்டதும்,

அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்ற பொருங்கூட்டத்தினர் எழுப்பிய

ஆரவாரங்கள் , கையோலிகள் விண்னையெட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன

பல வினாடிகளுக்குப் பின்னர் தெளிவுபெற்றார் பாதிரியார் .

"தம்பி இங்கே வாருங்கள் ... ' '

"பிறமதங்களைப் பழிக்கக்கூடாது என்பது ஆண்டவன் இட்ட கட்டளைகளில் ஒன்றாகும், அதை மறந்தேன் , தக்கசமயத்தில் வந்து உதவிசெய்தீர்கள். உண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவன் . நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் தேவன்தான். நன்றி", அடுத்த வினாடியே வெளியேறினார் கூட்டத்தை விட்டு பாதிரியார்.

அந்த மாணவன் தான் முத்துராமலிங்கத் தேவர்

Wednesday, July 20, 2005

விமானம் திருச்சியில் விழுந்து விட்டது

திருச்சியை கலக்கிய சிறு ரகவிமானம்


இன்று காலை சுமார் 10.10 மணியளவில் ஒரு ராணுவ பயிற்சி விமானம் திருச்சிராப்பள்ளி மெயின்காட்கேட் பக்கம் தாளப்பறந்து கட்டிடங்களை இடிப்பது போல பாண்டமங்கலம் வழியா லிங்கம் நகரில் கீழே விழுந்து விட்டதாக செய்தி திருச்சிராப்பள்ளி நகர் முழுதும் பரவி மக்கள், ஆம்புலன்ஸ், காவல்துறை, விமானபடை வாகனங்கள், தீயனைப்புபடை , வட்டாட்சியர் அனைவருமே விரைந்து பாண்டமங்கலம் லிங்க நகர் சென்று, அங்கு இல்லை குழுமனி என கூறியதைக் கேட்டு அங்கு சென்று அங்கும் இல்லாமல் அங்கிருந்து ஒவ்வொரு ஊராக சென்று பார்தனர் . கடைசியில் அந்த விமானம் பத்திரமாக கோவையில் இறங்கியதாக செய்தி. அந்த விமானம் பெரும் புகையை ஏற்படுத்தியதால் விழுந்து விட்டதாக மக்கள் கருதிவிட்டனர்.


எந்த ஒரு விமானமும் ஒரு எல்லையில் பறந்தால் அந்த எல்லை சம்பந்தபட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தெரியாதா? இது போல ஒரு குறும்புத்தனமாக செய்த அந்த விமானிமீது ஒழுங்கு நடவடிக்கைஉண்டா? (வேண்டுமென்றே செய்திருப்பின்).


என்னார்

Friday, July 15, 2005

மூன்று சூரியன்


சூரியன் என்றால் ஒன்றுதான் என்பவர்களுக்கு ஓர் அடி கொடுக்க வருகிறது மூன்று சூரியன்களுடன் தெரியும் புதிய கிரகம் விணவெளியில் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டு படித்துள்ளனர்.
விண்வெளியில் இருக்கும் அதிசியங்கள் பலப்பல. இது வரை சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது கிரகங்கள் பற்றித்தான் நமக்கு தெரியும். ஆனால், அதற்கு அப்பால் மூன்று சூரியன்களுடன் கிரகம் ஒன்று இருப்பதை நாசா விஞ்ஞானிகள் தற்போது கண்டு பிடித்துள்ளனர். இந்த புதிய கிரகத்தின் பெயர் 'டடூன்' இது பூமியை விட 1500மடங்கு பெரியது. இதில் இருந்து பார்த்தால் மூன்று சூரியன்கள் அருகருகே இருப்பது தெரியுமாம். ஒரு சூரியன் மஞ்சள் நிறத்திலும் . மற்ற இருண்டு சூரியன்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்திலும் உள்ளதாம். டடூன் கிரகம் பூமியிலிருந்து 149 ஒளியாண்டுகள் தூரம் உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது பத்து டிரில்லியன் கி.மீ. தூரமாகும். வாயுக்கள் இல்லாமல் உருவானதுதான் கிரகங்கள் என விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்தனர். ஆனால் இந்த கருத்தை மாற்றியுள்ளது டடூன் . இது முழுவதும் வாயுக்களால் ஆனது. இது பற்றிய ஆராய்ச்சியில் இன்னும் பல புதிய தகவல்கள் தெரியவரும். இதேபோல் இன்னும் பல கிரகங்கள்இருக்கலாம். என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Thursday, July 14, 2005

பெருந்தலைவர் காமராஜ்



வீரத்தின் விளை நிலமாய் வெங்கொடுமை புள்ளடிமை

சோரத்தின் புலை வாழ்வை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாய்
பாரதத்தின் சுதந்திரத்தை பரித்திருந்த பரங்கியரை வேரதிர
பேர்த்தெரிய வந்த பெருங்காற்றாய் அன்னை திரு நிலத்தில்
அடியூன்றிய அன்னியர்களை தறித்தெடுக்கும் கோடாறியாய்
செத்துக்கிடந்த தமிழ் சிங்கேரு போல் எழுந்து பரங்கியரை பரக்கடித்த
கர்மவீரனாய் ஏமப் பெருந்துயிலில இருளில் கிடந்தோரை
துமப் புகைபோட்டு துயில் எழுப்பும் மந்திரமாய் பிறப்பெடுத்து வந்த
பெருமகனாம் பச்சைத்தமிழனாம் விருதுபட்டி வீரசிங்கமாம்
ஆதாயம் தேடாமல் ஆற்றிய தொண்டுக்குண்டோ ஈடு
ஏழைகளுகிலவச கல்வி கண்ட தலைவா
முதியோர் உதவித் தொகை கொடுத் தலைவா
மதியஉணவு படைத்த தலைவா
குறைந்த மூலதனத்தைக் கொண்டே பல நீர் தேக்கங்கொணர்ந்தனை நீ
நீர் இல்லாத திட்டங்களுக்கு பல கோடி அதில் சில கோடி கமிசன்
20
விழுக்காடு அன்று உனக்களிக்க கமிசனுக்கேஅதிலும் இரண்டு
இயந்திரங்களை பெற்ற நீரல்லவோ மாமனிதன்*
(
தமிழக முதல்வராயிருக்கும் போது வெளிநாட்டில் இயந்திரங்கள் வெங்டராமன் மூலமாக இயந்திரங்களை கொடுத்த கம்பெனி 20 சதவீதம் நாங்கள் கமிசன் கொடுப்போம் எனட்றனர்
அதை வெங்கட்ராமன் தலைவரிடம் கூற ,"அந்த தொகைக்கு மேலும் இரண்டு இயந்திரங்கள் வாங்கு" என்றார்.)

காமராஜர் பிறப்பு-1903,

குமாரசாமி சிவகாமி செல்வன்

முதல்வராக 13 ஆண்டுகள்

சிறைவாசம் 9 ஆண்டுகளுக்கு மேல்

இறப்பு காந்தி பிறந்த நாள் அன்று 1975



Saturday, July 09, 2005

கொள்ளிடத்தில் ஏழு கதவணைகள்

தமிழ் நாடு ஆண்டு தோறும் தண்ணீர்ப் பற்றாக் குறையினால் பரிதவித்து வருகிறது. ஜீவ நதியாக விளங்கிய காவிரி வறண்டு விட்டது. கர்நாடக மாநிலம் தண்ணீர் விட மாட்டேன் என்று முரட்டுப் பிடிவதாம் பிடித்து வருகிறது. நடுவர் மன்றம் சொன்னாலும், உச்ச நீதிமன்றம் சொன்னாலும் பாரதப் பிரதமரே சொன்னாலும் கீழ்ப்படிய மாட்டேன் என்று கூறுவது முரட்டுப் பிடிவதாம் தானே! அம்மாநிலத்தினை கீழ்ப்படிய வைப்பதற்கு பலமான மத்திய அரசு இல்லை.

இப்போது கர்நாடக மாநிலத்தில் எவ்வளவு மழை பெய்கிறதோ, அந்த அளவுக்கு மேலேயே பயன்படுத்தக்கூடிய விளைநிலங்களை அது தாயர் செய்து விட்டது. எனவே கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் வரும் என்று நாம் எதிர் பார்ப்பதற்கு இடமில்லை . அவர்கள் பிடித்து வைத்துக் கொள்ள முடியாமல், பயன்படுத் தமுடியாமல் வழிந்து வரும் தண்ணீர்தான் நமக்கு வந்து சேரும். கடந்த சில ஆண்டுகளாகவே அப்படித் தான் நடந்து வருகிறது. கர்டநாடகத்திற்கு வடிகால் பூமியாகத்தான் தமிழ்நாடு விளங்கிவருகிறது.

இயற்கையின் பாரபட்சம் காவிரிப் படுகையின் மொத்த நிலப்பரப்பில் 42.2 சதவீதம் கர்நாடகத்திலும், 3.5 சதவீதம் கேரளத்திலும் , மீதி 54.3 சதவீதம் தமிழ் நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் உள்ளது ஆனால் இற்கை அமைப்பினால் கர்நாடக, கேரள மாநிலங்களிலும் சராசரி ஆண்டு தோறும் 3015 மி.மீ. மழையும் தமிழ் நாட்டில் சராசரி 981 மி.மீ. மழையும் தான் பொழிகிறது. இதனால் கர்நாடக கேரளத்தில் பெய்யும் மழை அங்கு பயன் படுத்தாமையினால் தமிழ் நாட்டுக்கு ஓடி வந்து இங்கு ஏராளமான விளைநிலங்களுப் பயன் படுகிறது.

இது ஆயிரகணக்கான ஆண்டுகளாக நடந்து வந்தது . கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டில் கட்டிய கல்லணைதான் உலகிலேயே முதன் முதலாக கட்டப்பட்ட பாசன அமைப்பாகும் காவிரியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் பெரும்பகுதியை தமிழ் நாடு தான் பயன் படுத்திவந்தது. 1971 – 1972 வரை இந்த நிலை நீடித்தது அந்த ஆண்டு கிடைத்த நீரினைக் கொண்டு தமிழ் நாடடில் 28.2 இலட்சம் ஏக்கர் பாசனம் நடந்தது. கர்நாடகத்தில் 6.68 இலட்சம் ஏக்கர் தான், கேரளத்தில் வெறும் 6300 ஏக்கர் மட்டுமே. நாளாவட்டத்தில் இந்த நிலை மாறிவிட்டது. எங்கள் மாநிலத்தில் பெய்யும் மழை எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறிக்கொண்டு கர்நாடகம் அதன் பாசன பரப்பினை 19.6 லட்சம் ஏக்கருக்கு அதிகரித்து விட்டது. அதற்கு மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. காவிரி நடுவர் நீதி மன்றம் கர்நாடகத்தில் காவிரி பாசனம் 11.2 இலட்சம் ஏக்கருக்குமேல் அதிகரிக்கக்கூடாது என்று 1991ல் ஆணை பிறப்பித்தது.

கர்நாடகத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு 205 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்றும் இடைக்கால ஆணையிட்டது. கர்நாடகம் எதையும் பின்பற்றவில்லை. இனிமேல் பின்பற்றும் என்ற நம்பிக்கையும் இல்லை.

எனவே தமிழ் நாட்டில் பெய்யும் மழையினைக் கொண்டு தான் நாம் பிழைக்க வேண்டும் என்ற நிலமை உருவாகி வருகிறது. உண்மையில் பார்க்கப் போனால் பல நூற்றாண்டுகளாக காவிரி நீரைப்பயன்படுத்தி வந்த நமக்கு முன்னுரிமை உண்டு. நமது தேவைகளை பூர்த்தி செய்து விட்டுதான் புதிய பயன் பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது சர்வதேச சட்டம். ஆனால் எதற்கும் கட்டுப்படாத கர்நாடத்தை என்ன செய்வது?.

தமிழ் நாட்டில் நதிகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதனையும் அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதனையும் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகள் அளிப்பதற்காக நான்காண்டுகளுக்கு முன் ஒரு தொழில் நுட்பக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆறு மாதங்கள் ஆய்வுநடத்தி அரசுக்கு ஓர் அறிக்கையளித்தது. அக்குழுவில் திரு. சி.எஸ். குப்புராஜ் அவர்கள் ஒரு அங்கத்தினராக இருந்தார்கள்.

குழு அளித்த பயனுள்ள பரிந்துரைகளில் ஒன்று கொள்ளிடத்தில் மேலணைக்கும் அணைக்கரைக்கும் (ஒரு ஊரின் பெயர்)இடையே ஏழு கதவணைகள் அமைக்ப்படவேண்டும் என்பது . இதனால் கீழ் அணை என்று கூறப்படும் அணைக்கரையின் மூலமாக கடலில் கலக்கும் 100 டிஎம்சி தண்ணீரில் பெரும் பகுதியை பயன் படுத்தலாம் என்பதாகும். இந்த 100 டிஎம்சி என்பது கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
வரும் ஆண்டுகளில் இது குறையலாம் , கர்நாடகத்தின் செயல்பாடுகளால் ! இருப்பினும் கணிசமான அளவு இந்தக் கதவணைகள் மூலமாக சேமிக்க முடியும். மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் . இந்தக் கதவணைகள் (மொத்தக் கொள்ளளவு 14.0 டிஎம்சி) காவிரி நீருக்காக மட்டுமல்ல கொள்ளிடத்தின் வடபால் உள்ள நீர்பிடிப்பகுதியில் இருந்து கிடைக்கும் நீருக்காகவும் கூடத்தான்.

தமிழ் நாட்டில் பெய்யும் ஒவ்வொரு துளி மழைநீரினையும் சேமிக்க வேண்டடிய நிர்ப்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே தான் இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. .

இந்தக்கதவணைகள் கட்டப்படவேண்டிய இடங்களும் மற்ற விபரங்களும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான தோராய மதிப்பீடு ரூ.250 கோடி. பயன்கள் அளவிடமுடியதன. முக்கியமானது கொள்ளிடத்தின் இருகரைகளிலும் நூரு கி.மீ.வரை நிலத்தடி நீர் மட்டம் உயரும் .

அன்மைக்காலத்தில் தமிழ் நாடு அரசு வெளியிட்டு பின்னர் கிராம மக்களின் எதிர்ப்பினால் வாபஸ் வாங்கப்பட்ட வீரானம் விரிவாக்கத்திட்டதுடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம் .

தலைமைச் செயலகத்தில் வழக்கம் போல் தூசி படிந்து கொண்டிருக்கும் சி.எஸ். குப்புராஜ் அவர்களது குழுவின் அறிக்கையினை எடுத்து, தூசி தட்டி, இந்த ஒரு பரிந்துரையினையாவது நிறைவேற்றினால், மக்களுக்கு பெரும் பலனளிக்கும்.
கடலில் கலந்து வீனாகும் தண்ணீர் ஓரளவு சேமிக்கப்படும்.

சேது சமத்திரத்திட்டத்திற்கு 2400 கோடி நம் கொள்ளிடத்திற்கு 240 கோடி
கடலில் 2400 கோடியைப் போட வேண்டாம் எனச் சொல்லவில்லை ஆற்றிலும் ஒரு 240 கோடியைப் போட்டல் திருமானூர் தண்ணீர் சென்னைக்கு தங்கு தடையின்றி கொண்டு செல்லலாமே.

எந்த பிதிபலனும் எதிர் பார்க்காத பெருந்தலைவர் இருந்தால் இது நடக்கலாம். ஆட்சியில் இருந்தால்தான் !! ம்...ஆகட்டும் ..பா..ர்..க்..க...லா...ம்..ம்..ம்.

வெவசாயி பெருமூச்சு இது தான் என்ன பன்றது

Friday, July 01, 2005

சேது சமுத்திரதிட்டம்


சேது சமுத்திரத்திட்டம் நல்ல திட்டம் தானே இதை ஏன் சிலர் எதிர்க்க வேண்டும்

ஊர் சுற்றி போகமல் குறுக்கு வழியில் செல்வதால் பயண தூரம் மிச்சம் தானே


எ.கா:

முதல் முடிய சுற்று குறுக்கு மீதம

கண்ணியாகும சென்னை 755 487 248

" வைசாக் 1014 724 290

" கொல்கத் 1357 1103 254

தூத்துக்குடி சென்னை 769 345 424

" வைசாக் 1028 662 366

" கொல்கத் 1371 1041 330


அதுசரி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பவர்கள் பெருங்கடலை ஏன்? சமுத்திரம்

என வைத்துள்ளர் ஐயா ராமதாஸ் என்ன சொல்லப்போகிரார்
சேதுகடல்

Wednesday, June 29, 2005

கள்ளர்களின் பட்டப்பெயர்கள்

  1. அங்கராயர்
  2. அசையாத்துரையர்
  3. அச்சுதப்பண்டாரம்
  4. அடைக்கப்பட்டார்
  5. அடைவளைந்தார்
  6. அண்ணுண்டார்
  7. அணணூத்திப்பிரியர்
  8. அதிகமான்
  9. அத்திரியர்
  10. அம்மாலைத்தேவர்
  11. அயிரப்பிரியர்
  12. அரசாண்டார்
  13. அரசுக்குழைத்தார்
  14. அரியபிள்ளை
  15. அருமைநாட்டார்
  16. அருவாத்தலைவர்
  17. அருவாநாட்டார்
  18. அலங்காரப்பிரியர்
  19. அன்னவாசல் ராயர்
  20. ஆச்சராயர்
  21. ஆட்சிப்பிரியர்
  22. ஆதாழியார்
  23. ஆதித்தநெடுவாண்டார்
  24. ஆரம்பூண்டார்
  25. ஆர்சுற்றியார்
  26. ஆலத்தொண்டமார்
  27. ஆலம்பிரியர்
  28. ஆவத்தியார்
  29. ஆளற்பிரியர்
  30. ஆள்காட்டியார்
  31. இடங்காப்பிறந்தார்
  32. இராங்கிப்பீலியர் (இராங்கியர்)
  33. இராயமுண்டார்
  34. இராரஜாப்பிரியர்
  35. இராஜாளியார்
  36. இருங்கள்ளர்
  37. ஈங்கொண்டார்
  38. ஈழத்தரையர்
  39. ஈழமுண்டார்
  40. உத்தமுண்டார்
  41. உய்யக்கொண்டார்
  42. உலகங்காத்தார்
  43. உலககுடையார்
  44. உழுவாண்டார்
  45. உறந்தைராயர்
  46. ஊமத்தரையர்
  47. ஊரத்தியார்
  48. ஊரான்பீலியர்
  49. எண்ணுட்டுப்பிரியர்
  50. எத்திரியப்பிரியர்
  51. எத்தொண்டார்
  52. ஒண்டிப்புலியார்
  53. ஒளிராயர்
  54. ஓசையார்
  55. ஓட்டம்பிடிக்கியார்
  56. ஓந்தரையர் (ஓமாந்தரையர்)
  57. ஓயாம்பிலியர்
  58. ஓனாயர்
  59. கக்கொடையார்
  60. கங்கநாடர்
  61. கச்சியராயர்
  62. கடம்பராயர்
  63. கடாத்தலைவர்(கடாரத்தலைவர்)
  64. கடாரந்தாங்கியார்
  65. கட்டவெட்டியார்
  66. கண்டபிள்ளை
  67. கண்டசில்லி
  68. கண்டியார்
  69. கதவாடியார்
  70. கரடியார்(கருடியார்)
  71. கரமுண்டார்
  72. கரம்பையார்
  73. கருப்பட்டியார்
  74. கருப்பபூண்டார்
  75. கரும்பூரார்
  76. கலிங்கராயர்
  77. கலியனார்
  78. கவுண்டர்(கண்டர்)
  79. களத்துவென்றார்
  80. களந்தண்டார்
  81. களப்பாடியார்
  82. களப்பிலார்
  83. களமுடையார்
  84. களாவர்
  85. கனகராயர்
  86. கன்னப்பட்டையார்
  87. கஸ்தூரிமுண்டார்
  88. கஸ்தூரியர்
  89. காங்கெயர்
  90. காசிநாடார்
  91. காடவராயர்
  92. காடுவெட்டி
  93. காரைக்காச்சியார்
  94. காலாக்குடியர்
  95. காவாலி
  96. காவெட்டார்
  97. களாக்கடையார்(கிளாக்கர்)
  98. கிளிகண்டார்
  99. கிளியிநார்
  100. கீருடையார்
  101. கீரைக்கட்டையார்
  102. கீவுடையார்
  103. குங்கிலியர்
  104. குச்சராயர்
  105. குடிக்கமுண்டார்
  106. குடிபாலர்
  107. குமரையண்டார்
  108. குறுக்கண்டார்
  109. கூசார்
  110. கூராயர்
  111. கூழாக்கியார்
  112. கையராயர்
  113. கொங்கணர்
  114. கொங்ககரையர்
  115. கொடுப்புலியார்
  116. கொடும்புராயர்(கொடுமளூர் ராயர்)
  117. கொட்டையாண்டார்(கோட்டையாண்டார்)
  118. கொத்ப்பிரார் (கொற்றப்பிரியர்)
  119. கொல்லத்தரையர்
  120. கொழுந்தராயர்
  121. கொன்றையர்
  122. கொன்னமுண்டார்
  123. கோதண்டப்புலியர்
  124. கோபாலர்
  125. கோழயர்
  126. கோறர்
  127. சக்கராயர்
  128. சங்கரதேவர்(சங்கரர்)
  129. சங்காத்தியார்
  130. சமையர்
  131. சம்பிரத்தேவர்
  132. சர்க்கரை
  133. சர்க்கரையப்ப நாடாள்வார்
  134. சவுட்டியார்
  135. சவுளியார்
  136. சன்னாடர்
  137. சாணர் (சாணூரர்)
  138. சாதகர்
  139. சாமுத்திரியர்
  140. சாளுவர்
  141. சிங்கப்பீலியர்(சிங்கப்புலியர்)
  142. சிங்காரிக்கர்
  143. சிட்டாச்சியார்(சிற்றாட்சியார்)
  144. சிந்துராயர்
  145. சிறுநாட்டுராயர்
  146. சிறுமாடர்
  147. சீனத்தரையர்
  148. சுக்கிரர்
  149. சண்டையார்
  150. சுந்தர்
  151. சுரக்குடியார்
  152. சுரைப்பிடுங்கியார்
  153. செம்படையார்
  154. செம்பியமுத்தரசர்
  155. செம்மைகொண்டார்
  156. செம்மைக்காரர்
  157. செயங்கொண்டார்
  158. செனவராயர்(சன்னவராயர்,சனகராயர்)
  159. சென்னண்டார்
  160. சேண்டாப்பிரியர்
  161. சேதிராயர்
  162. சேப்பிழார்
  163. சேர்வைகாரர்
  164. சேலைக்கொண்டார்
  165. சேனாபதியார்
  166. சேனைகொண்டார்
  167. சேனைநாடார்
  168. சோணாருண்டார்
  169. சோணையர்
  170. சோதிரையர்
  171. சோமணநாயக்கர்
  172. சோமரசர்
  173. சோழகர்
  174. சோழங்கதேவர்
  175. சோழங்கநாடார்
  176. சோழங்கர்
  177. சோழதரையர்
  178. சோழப்பிரியர்
  179. சோழன்கிளையார்
  180. ஞானிசேவகர்
  181. தஞ்சைராயர்
  182. தனஞ்சராயர்
  183. தாக்கலக்கியார்
  184. தாளிதியார்
  185. தானாதியார்
  186. திண்ணாப்பிரியர்
  187. திராணியார்
  188. திருக்காட்டியார்
  189. திருப்பூவாட்சியார்
  190. துண்டுராயர்(துண்டீரராயர்)
  191. துறவாண்டார்
  192. தெத்துவென்றார்
  193. தென்கொண்டார்
  194. தென்னரையர்
  195. தேசிராயர்
  196. தேவண்டார்
  197. தேவர்
  198. தொண்டார்
  199. தொண்டைமான்
  200. தொண்டைமான் கிளையார்
  201. தொரையண்டார்
  202. நந்தியராயர்
  203. நரங்கியப்பிலியர்
  204. நரங்கியர்
  205. நல்லவன்னியர்
  206. நல்லிப்பிரியர்
  207. நாடள்வார்(நாடாவார் நாடார்,நாட்டார்)
  208. நாட்டரையர்
  209. நாய்க்கர்
  210. நாய்க்காடியார்
  211. நார்த்தவார்
  212. நாவிளங்கியார்
  213. நெடுங்காளியார்
  214. நெடுத்தார்
  215. நெடுவாண்டார்
  216. நெறிமுண்டார்
  217. நைனியார்
  218. பசும்பிடியார்
  219. பஞ்சரமார்
  220. படைத்தலையார்
  221. படையெழுச்சியார்
  222. பணிபூண்டார்
  223. பண்ணியமுண்டார்
  224. பதுங்கராயர்
  225. பக்தாளர்
  226. பம்பாளியார்
  227. பரங்கிராயர்
  228. பருத்திகொண்டார்
  229. பல்லவராயர்
  230. பல்லவாண்டார்
  231. பவட்டுவார்(பாட்டுவார்)
  232. பழங்கொண்டார் (பழனங்கொண்டார்)
  233. பன்னிகொண்டார்
  234. பன்னையார்
  235. பாண்டியர்
  236. பாண்டுராயர்(பாண்டிராயர்)
  237. பாப்பிரியர்
  238. பாப்பபுடையார்
  239. பாப்புரெட்டியார்(பாப்புவெட்டியார்)
  240. பாலாண்டார்
  241. பாலியார்
  242. பால்நாட்டார்
  243. பால்ராயர்
  244. பாவுடையார்
  245. பிசலண்டார்
  246. பிச்சாடியார்
  247. பிச்சையன்கிளையார்
  248. பிலியராயர்
  249. பீலிமுண்டார்
  250. புட்டில்கழிந்தார்
  251. புண்ணாக்கர்
  252. புலிக்குட்டியார்
  253. புள்ளராயர்
  254. புறம்பயத்தார்
  255. பூச்சியார்
  256. பூவாட்சியார்
  257. பூழிராயர்
  258. பூனையர்
  259. பேதரையர்
  260. பொறை பொறுத்தார்
  261. பொன்பூண்டார்
  262. பொன்னமுண்டார்
  263. பொனனாரம் பூண்டார்
  264. பொன்னானீயார்
  265. போய்ந்தார்
  266. போரைச்சுற்றியார்
  267. போரக்காட்டியார்
  268. போர்பொறுக்கியார்
  269. போர்மூட்டியார்
  270. மங்கலார்
  271. மங்காத்தேவர்
  272. மட்டையர்
  273. மணவாளர்
  274. மண்கொண்டார்
  275. மண்டராயர்
  276. மயிலாண்டார்
  277. மலையரார்
  278. மல்லிகொண்டார்
  279. மழவராயர்
  280. மழுவாடியார்
  281. மண்வெற்றிக்கூழ்வழங்கியார்
  282. மன்னையார்
  283. மாங்காட்டார்
  284. மாதைராயர்
  285. மாதையாண்டார்
  286. மாத்துராயர்
  287. மாந்தரையர்
  288. மாமணக்காரர்
  289. மாம்பழத்தார்
  290. மாலையிட்டார்
  291. மாவலியார்
  292. மாவெட்டியார்
  293. மாளிச்சுத்தியார்(மாளிச்சர்_)
  294. மானங்காத்தார்
  295. மானமுத்தரையர்
  296. மானவிழுங்கியார்
  297. மான்சுத்தியார்
  298. முடிகொண்டார்
  299. முணுக்காட்டியார்
  300. முண்டார்
  301. முதலியார்
  302. முனையரையர்(முனையதரையர்)
  303. மூங்கிலியர்
  304. மூவரையர்
  305. மெய்க்கன் கோபாலர்
  306. மெனக்கடார்
  307. மேல்கொண்டார்
  308. மெனாட்டரையர்
  309. மொட்டத்தேவர்
  310. யுத்தப்பிரியர்
  311. வங்கணர்
  312. வங்காரமுத்தரையர்
  313. வடுராயர்
  314. வம்பாளியார்
  315. வல்லத்தரையர்
  316. வல்லரண்டார்
  317. வல்லாளதேவர்
  318. வல்லிடியார்
  319. வளம்பர்
  320. வன்னிமுண்டார்
  321. வன்னியர்
  322. வாச்சார்
  323. வாட்டாச்சியர்
  324. வாணதரையர்
  325. வாண்டாப்பிரியர்
  326. வாண்டையார்(வண்டைராயர்)
  327. வாயாடியார்
  328. வாலியர்
  329. வாள்வெட்டியார்
  330. விசலண்டார்
  331. விசாதேவர்(விஜயதேவர்)
  332. விசுவரார்
  333. விசையராயர்
  334. விஞ்சைராயர்
  335. விருதுளார்
  336. வில்லவராயர்
  337. விற்பனர்
  338. வீசண்டார்
  339. வீணதரையர்
  340. வீரங்கொண்டார்
  341. வீரப்புலியர்
  342. வெங்கிராயர்
  343. வெட்டுவார்
  344. வெண்டர்(வென்றார்)
  345. வெள்ளங்கொண்டார்
  346. வேணுடையார்
  347. வேளுடையார்
  348. வைராயர்

Monday, June 27, 2005

ந.மு.வேங்கடசாமி நாட்டார்



நாட்டு மக்களால் நாட்டார் ஐயா என அன்புடன் அழைக்கப்படும் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்னும் சிற்றூரில் வீ.முத்துசாமி நாட்டாருக்கும் தையலம்மாளுக்கும் நன்மகனாய் 12-04-1884 ல் பிறந்தார்.


தம் சிறு வயதிலேயே ஆசிரியர் எவருடைய உதவியுமின்றித் தாமே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சைவ சித்தாந்த நூல்களையும் ஐயம் திரிபறப் பயின்று, மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரவேச பணடிதம், பால பண்டிதம் ,பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் மூவாண்டில் (1905,1906,1907) முறையாக எழுதி முதன்மையாகத் தேர்ச்சி பெற்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பெருமகனாராகிய பாண்டித் துரைத் தேவர் அவர்களால் தங்கப் பதக்கங்களும், தங்கத் தோடாவும் அளிக்கப் பெற்றுப் பெருமை அடைந்தார்கள்.


தாமே பயின்ற தமிழ்ப் பேராசிரியரின் அறிவாற்றலை அறிந்து அவரைப் பணிபுரிய அழைத்த கல்வி நிறுவனங்கள் பல. கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக ஓராண்டும் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 24 ஆண்டுகளும் , அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக 7 ஆண்டுகளும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். பின் தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தைப் புரவர் கல்லூரியில் நான்கு ஆணடுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணி செய்து சிறப்பித்தார்கள்.


1940-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் நாவலர் என்னும் சிறப்புப்பட்டம் செப்பேட்டில் பொறித்து வழங்கப் பெற்றது. ஐயா அவர்கள்எழுதிய உரைகள் தமிழராய்ச்சி நூலகள் பல. 1921-22-இல் திருவருட் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவ முயற்சி செய்து முயற்சி நிறைவேறாமல் போக, 1925-26 -இல் தஞ்சை அல்லது திருச்சியில் தமிழ்ப் பலகலைக் கழகம் ஒன்று அமைகட்கப்பெற வேண்டுமென்று விரும்பி அப்போதைய அமைச்சர் டி.என். சிவஞாமப்பிள்ளை அவரகள் தலைமையில் அமைத்த செயற்குழுவில் உறுப்பனராகவிருந்து செயலாற்றிச் சிறப்பித்தார்கள்.


எளிய வாழ்வும் இனிய நோக்கமும் கொண்டவர்; நெஞ்சிலுரமும் நேர்மைத்திறமும் மிக்கவர்; சிறந்த புலமையாளர்; உயர்ந்த பண்பாளர், தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்ககாகவே தொண்டாற்றிய நாட்டார் 28-3-44 அன்று தம் மணிவிழா நடைபெறுவதற்கு இருவாரத்திறகு முன்டகாலமானார். அன்னாரின் உடல் பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டு அதன்மேல் கற்கோயில் எழுப்பி ஆகம விதிகளின்படி பூசை நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் இக்காலத்தில் தமிழ்ப் புலவர் ஒரு வருக்ககாக எழுப்பப்பட்ட முதல் கற்கோயில் இது.

தஞ்சை தமிழ் பல்கலைக் கலகத்துக்கு ஐயா பெயரை வைக்காதது ஐயாவின் தமிழ்த் தொண்டைமதிக்காத செயலாகும்.

Sunday, June 26, 2005

எமெர்ஜென்சிக்கு வயது 30 ஆண்டுகள்

இதற்கு மக்களிடம் நிரம்ப வரவேற்பு இருந்தது இது ஒரு பொற்காலம் பத்தரைமணிக்கு அலுவலகம் செல்பவர் 8 மணிக்கே சென்றார், அணைத்து அலுவலர்களுமே ஒரு வித பயத்துடன், தம்மையறியாமலே தப்பு நடந்திடுமோஎன இருந்தனர். வெடிகுண்டு வேந்தரெல்லாம் பின் அமைச்சர். அன்று அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தால் அது அநியாயமா?
பேரூந்தில் கூட பின்பக்கம் ஏறி முன்பக்கம் இறங்கினர். அப்படி பட்ட நான்னாளை இன்று நினைத்தப்பார்க்கின்றனர். அன்று லஞ்சம் கிடையாது.
எந்த கோப்பும் சரியான நேரத்திற்கு சென்றடையும். அன்னாளை இவர்கள் கருப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். வருத்தந்தான் தவறு செய்பவர்களுக்கு அது செய்முடியாததால் அதை எதிர்த்தனர். எழை பாமரமக்கள் வங்கிகளில் எளிமையாக கடண் பொற்றனர்.
அந்த அம்மையாரின் காலத்தில் தான் நீதிமன்றம் சுயமாக இருந்தது.
அன்னை இந்திராகாந்தி பெற்ற தண்டனை

தேர்தலில் பிரதிவாதி ஊழல் முறைகளை கையாண்டு இருக்கிறார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படுகிறது. அரசு இயந்திரங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியரான எஸ்பால் கபூர் தேர்தல் வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேற்சொன்ன 2குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவே பிரதிவாதி திருமதி. இந்திராகாந்தியை குற்றவாளியென தீர்மானித்து
ரேபர்லின் தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என தீர்மானிக்கிறது.

"சர்க்காரியா கமிஷன் விசாரணையை இந்திரா கொண்டு வந்ததால் வேறு வழியில்லாம்ல எமர்ஜென்சியை அவர் எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது சர்க்காரியா வந்ததிருக்காவிட்டால், கருணாநிதி எதிர்த்திருக்க மாட்டார்", என பத்திரிக்கைளார் சோ இன்றைய தினமலரில் கூறியுள்ளார்.மேலும் கூறுகிறார் ,” விடுதலைப் புலிகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததற்கு அரசில் இடம்பெறும் விடுதலைப் புலிகளின் ஆதரவளர்களும், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும், சிலரும், தமிழகத்தில் இருக்கும்புலிகள் ஆதரவு நபர்களுமே காரணம் ஆகும். முஸ்லீம் தீவிரவாதம், புலிகள் நடமாட்டம், அரசு அதிகாரிகளிடம் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கின்மை அதிகரித்திருக்கும் இந்த காலகட்டத்தில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினால்தப்பில்லை", என்கிறார் ஆக இப்படிப்பட்ட சூல் நிலைகளில் மிசாவைக் கொணடுவர சிபாரிசு செய்யு சோ அவர்கள் கலந்து கொணட கூட்டம் மிசா கருப்பு தினக்கூட்டம்
அவரே, உண்மையை ஒத்துக்கொள்கிறார் எமர்ஜென்சியை தேவை என.

அதாவது எங்கோ ஒரு தவறு நடந்திருக்கலாம் அது அந்த சம்பந்த பட்ட நபரின் தவறு தானே தவிர அமைச்சரின் தவறு அல்ல!.
என்னைப் பொருத்தவரை பையனை கண்டிக்க, தண்டிக்க பெற்றோர். மாணவனை கண்டிக்க ஆசிரியர் சமூக விரோதிகளை கண்டிக்க , தண்டிக்க சட்டம், காவல்துறை. இதில் சேராதவரக்ள கண்டிக்க இப்படிப்பட்ட சட்டம் இந்தியாவிற்கு இன்று உடனடியாக தேவை! தேவை!! தேவை!!!

Saturday, June 25, 2005

காவிரி தண்ணீர்

1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயற்சி செய்தது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
பின்பு 1835 ம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரை திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.
1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர் , அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அனுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமிஅய்யரின் முன்டனேர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்ளே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெறிவிக்வே; தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோரும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்னர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30.00,000/-க்கு 1 லட்டசம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமிஅய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதகடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்dதலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.
அதன்படி மேட்டூரில் 1924ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சென்னையில் வசித்து வந்த STANLY என்ற பொறியாளர் மூலம் அணைகட்ட ஆரம்பிக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் உயரம் 124 அடி நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம் 120 அடி முழுக் கொள்ளளவு 124 அடிக்கு 9,347 கோடி கண அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
1 tmc தண்ணீர் குறைந்தால் அணையில் 1.25 அடி தண்ணீர் குறையும்
1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 tmc குறையும்
அன்று கர்னாடகா தண்ணீரால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டது என நாம் போராடப்போய் ; இன்ற தண்ணீர் இல்லை என போராட வேண்டியிருக்கிறது..

தமிழக மன்னர்கள் மைசூர் மன்னருக்கு கப்பம் கட்டிய காலம் அது வெள்ளையருக்கு ஒரு பகுதி வரி வசூல் தானே தவிர முழுஆளுமையுமில்லை
மேலும் ஒரு இடத்தில் அணைகட்டினால் பல கிராமங்களை தூக்க வேண்டி வரும்
மேட்டூர் நீர்த் தேக்கத்தில் பல கிராமங்களும் கோவில்களும் உள்ளன. இன்றும் தண்ணீர் குறைந்ததும் அந்த கோவில்கள் தெரியம் அங்கிருந்த கிராமத்தை வேறு இடங்களுக்கு மாற்றி இருப்பர். அவைகள் அணைத்தும் கர்ணாடகா வைச் சேர்நதவை பல்லாயிரகணக்காண நஞ்சை புஞ்சை நிலங்களும் தற்போது நீரில் மூழ்கியிருக்கும் . அணை தமிழக மாயிருப்பினும் நிர்பிடிப்புபகுதி கர்ணாடகா.

Friday, June 24, 2005

கண்ணதாசன்

அம்மாயக் கண்ணனின் தாசா! எங்கள் நேசா!;
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை" என்றயே
இன்று உனக்குப் பிறந்த நாளா? யாருக்கொன்று என்றாலும்
கவிதை எழுதுவாயே இன்றுனக்கு யார்?
உண்மையை மறைக்காமல் பேசும் உத்தமனே
முத்தையா உன் கவிதைகள் முத்தய்யா
அனைத்தும் தமிழ் சொத்தையா உனைப் பற்றி கோடி நினைத்தேன்
குறைவே முடித்தேன் நீ சென்று இரண்டு மாமங்கள் ஆகியதா
நேற்று நடந்தது போல் இருக்கய்யா!
வந்தநாள் 24-06-27 சென்ற நாள் 17-10-81
வந்த இடம் சிறுகூடல் பட்டி சென்ற இடம் சிகாகோ

Thursday, June 23, 2005

காந்தி பெயரில் மாட்டுக்கறி விற்பனை

ஆஸ்திரேலியாவின் சவுத்வேல்ஸ் நகரில் 'காந்தி' கடையில் சிக்கன், மட்டன், பீப்,
மீன், நண்டு என எல்லா ஐட்டங்களும்தாராளமாக சுடச் சுடக் கிடைக்கும். ஆம் புலால் உண்பதை அறவே தவிர்த்த, எல்லாரையும் தவிர்க்கச் சொன்ன அந்த மகாத்மாவுக்கு இப்போது இப்படி ஒரு கதி!

நல்ல வேலை நமது பிரதமர் இதற்கு கண்டனம் தெறிவித்து தடுத்துவிட்டார்
நன்றி சொல்லுவோம் நம் தலைமைஅமைச்சருக்கு

Sunday, June 05, 2005

விஜயாலய சோழன்

விஜ
பாம்பினிடமிருந்து
வல்லூறு காத்த மணிப்புறாதான் நாமங்கு!
வேளி
வல்லூறாய்ப் பல்லவரை எண்ணல் வலிவின்மை.
கொல்லென்றுகூறி எதிர்த்தல் அறிவின்மை.
புல்லுருவி போலே நாம் பல்லவஆல் பொந்தினிலே
மெல்ல வளர்ந்ததையே வீழ்த்தல் மதியுடைமை!
விஜ
வேளிரே! ஆண்டுமக்கு மேலேற மேலேற
வானில் மதிப்புக் குறைந்துகொண்டு போகிறதோ!
வீச்சுக்கத் திக்கு விழிஇமைக்கா வீரன்நான்.
சூழ்டச்சிக்கே கோழைநான், சொல்லுவதைக் கேளுங்கள்
சோணாட்டில் சூழ்ச்சி நரியிடத்திலே யிருந்தும்
நானோட்ட எண்ணி நலிகின்றேன். என்னிடத்தில்
சொல்லிவிட்டீர் நீர் இச்சொல்! சொன்ன ஆள் வேறென்றால்
பல்லிவால் போல்துடிக்கும் பாழ்நாக்கும் துண்டாகி!
வேளி
தங்கம் கதிர்காய்த்துச் சாய்ந்தாடும் நாட்டரசே!
சிங்கத்தைப் பார்த்துச் சிறுநரியாய் ஆகென்று
கூறுவேனோ?

Saturday, June 04, 2005

சோழ மன்னன் விஜயாலன்

விஜயாலயன்
கூறும், கொடும்பாளூர்வேளிரே! எம்வேலில்
கூருண்டு பாய்ச்சக் குறிதான் தெரியவில்லை....!
வேம்பெடுத்துப் பூச்சூடும் வேந்தனவன் அம்பெடுத்து
வீம்பெடுத்த சோழர் குடமுக்கில் வீசினான்முன்!
வாள் கொடுத்தோம், வாளுக்கு யாமும் எமக்காகத்
தோள் கொடுத்தார் பல்லவர்கள், தோற்றோம், அவர்வென்றார்
தோற்றதனால் யாமிழந்தோம் சோணாட்டின் தென்பகுதி,
தோற்றதனால் யாதழந்தார் சொல்லுமப் பல்லவர்கள்?
மீண்டும் அரிசிலாற் றங்கரையில் வேலெடுத்த
பாண்டியர்கள் ஓர்பக்கம், பல்லவர்கள் எம்பக்கம் !
தென்பாண்டி வேந்தன்தன் சித்தத்திலும் சோழ
மண்தீண்டா வாறுநாம் வாட்டி விரட்டிவிட்டோம்.
யாபெற்ற தென்னஅவ் வெற்றியினால்? பல்லவர்கள்
தாம்பெற்றார் யாம் வென்ற சோழத் தரையெல்லாம் !
'வெற்றால் பலன் அவர்க்கு, தோற்றால் இழப்பெமக்கு'
என்றால் துணைஎதற்கு? சொல்லும் நீர்.
வேளிர்
இட்டஓர் நெல்
கட்டுக் கதிராகும் காவிரிபாய் சோழமன்னா !
மட்டுப் படாச்சினத்தை மாற்றித்தாம் கேட்டருள்க.
போரெடுத்துச் சோணாட்டு மண்ணில் புதுப்பகைவர்
யாரடுத்தார் என்றாலும் தாமே எழுந்திடுவார்
பல்ல்வர்கள் காக்க நமை....