Sunday, February 26, 2006

பாலசிங்கம் பேச்சு

விடுதலைப்புலிகள்- இலங்கை அரசு இடையே முதல் கட்ட சமாதான பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் பி.பி.சி. ரேடியோவுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தை எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. அரசு ஒத்துக் கொண்டபடி தமிழர் பகுதிகளில் செயல்படும் ஆயுத குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்தால் இலங்கையில் அமைதி ஏற்படும்.

ராணுவமும் அதன் புலனாய்வு துறையினரும் தமிழர்களுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தினால் தமிழர் பகுதியில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கூடிய அதிகாரமும், செல்வாக்கும் விடுதலைப்புலிகளுக்கு உண்டு.

விடுதலைப்புலியின் கட்டளையை மீறி யாரும்செயல் பட முடியாது. தமிழர் பகுதிகள் முழுவதும் விடுதலைப் புலிகளின் அதிகாரத்தின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் செயல்படுகிறது.

இலங்கை தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத் தன்மைக்கு உதவியாக அமையும். இந்திய அரசுடன் விடுதலைப்புலிகளுக்கு மறைமுக தொடர்பு இருக்கிறது. ஆனால் இதுபற்றி பகிரங்கமாக வேறு எதுவும் கூற முடியாது.

இவ்வாறு பாலசிங்கம் கூறினார்
மாலை மலர்
என்ன இது இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது பாலசிங்கத்தின் பேச்சு.
இன்னமும் துயரத்தை மறக்க முடிவில்லையே

3 comments:

வன்னியன் said...

உங்களுக்கு என்ன அவமானமாக உள்ளது?
"உங்களுக்கும் இந்திய அரசுக்கும் தொடர்புள்ளதா" என்று கேட்கப்பட்ட கேள்விக்குத்தான் அந்தப் பதில் வந்துள்ளது?
பல மாதங்களுக்கு முன்பு தெல்காவில் வந்த கட்டுரையைப் படித்தீர்களா?
பத்ரி வெளிப்படுத்தியிருந்தார்.

ENNAR said...

இந்தியா யாருடனும் கள்ளத்தனமாக தொடற்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லையே நேரடியாக வைத்துக் கொள்ளலாம் தவறை தவறு என சுட்டிக்காட்ட வேண்டியவர்கள் தான் இந்தியர்கள். ராஜீவ் காந்தியை நாங்கள் இன்னமும் மறக்க வில்லையே?

ENNAR said...

Yes Iam child