இன்று சுனாமிநடைபெற்ற நாள்
இதற்குமுன் இவ்வாறு நடந்ததா? ஆம் நடந்தது !!! இமயமலைகூட ஒரு காலத்தில் தண்ணீருக்குள் இருந்ததாம் அரியலூர் பகத்திலுள்ள ஊர்களும் ஒரு காலத்தில் கடலால் முழ்கப்பட்டிருந்தது அதற்கான தடயங்கள் இன்றும் உள்ளன.
பல்வேறு ஊழிகளிற்றோன்றிய கடற் பெருக்குகளால் நிலப்பரப்பு நீர்ப்பரப்பாகவும், நீர்ப்பரப்பு நிலப்பரப்பாகவும் மாறுதலடைந்ததுண்டு. இம்மண்ணகம் பல்வேறு காலங்களில் அடைந்திருந்த வடிவங்களை நிலநூலார் தமது உய்த்துணர்வுகொண்டு படங்களமைத்துக் காட்டியிருக்கின்றனர்.
ஸ்காட் எலியட் என்பவர் இவ்வுலகில் ஐந்து பெருங்கடற்பெருக்குகள் உண்டாயினவென்றும், அவற்றுள் முதலாவது பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதென்றும், இரண்டாவது எண்ணூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், மூன்றாவது இருநூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், நாலாவது எண்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், ஐந்தாவது கி.மு. 9564இல் உண்டானதென்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். இப்போது அட்லாண்டிக் கடல் அலைகொழிக்கின்ற இடத்தில் முன் ஒரு பூகண்டம் விளங்கியது. அப்பூகண்டம் கடலுள் மூழ்கிப்போக அதில் மிச்சமாக விளங்கிய பொசிடோனிஸ் (Posedonis) என்னும் தீவு கி.மு. 9564ஆம் ஆண்டில் உண்டான வெள்ளத்தால் மறைந்ததெனச் சொல்லப்படுகின்றது. இதற்குச் சான்று இலண்டன் நூதனப் பொருட்காட்சிச் சாலையிலே உள்ளதும் 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதுமாகி (Troano Mss.) தொறானோ கையெழுத்துப் பிரதியில் இருப்பதை ஸ்காட் எலியட் என்பவர் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். அதன் மொழிபெயர்ப்பு வருமாறு:-
"ஆறாவது கான் ஆண்டில் 11ஆவது மலுக்கில் சாக் என்னும் திங்களில் அங்கு மிகவும் கடுமையான பூகம்பம் உண்டாய்ச் சூன்
திங்கள் 13ஆம்நாள் வரையும் நீடித்தது. இதன் விளைவாகச் சேற்றுமலைகளிலுள்ள நாடுகளும், மூவென்னும் தரையும் மறைந்தன. இப்பகுதிகளின் அடித்தளங்கள் எரிமலை அதிர்ச்சியினால் இடைவிடாது ஆட்டி அலைக்கப்பட்டு இருமுறை மேலே எழுந்து சடுதியில் இராக்காலத்தில் மறைந்துபோயின. இக்குழப்பங்கள் இன்னும் நிலைத்தமையால் பல இடங்களில் பல முறைகளில் நிலங்கள் எழுந்தும் மறைந்தும் போயின. இறுதியில்
நிலம் வெடித்தமையால் பத்து நாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டன. இந் நடுக்கத்தைப் பொறுக்க முடியாமையால் அந்நாடுகள் 64,000,000
மக்களுடன் இந்நூலெழுதுவதற்கு 8060 ஆண்டுகளின் முன் ஆழ்ந்துபோயின." என்றுகூறுகின்றார்.
என்னமோ அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியம் எது எப்பொழுது நடக்கும் என்று.
1 comment:
test
Post a Comment