பாகிஜ்தானில் குண்டுகள் வெடிப்பில் ஈடுபட்டதாக கூறி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்கின் அப்பீல் மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர் சரப்ஜித்சிங். இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகாப்பகுதியை கடந்த 1990ம் ஆண்டில் தவறுதலாக சரப்ஜித் சிங் கடந்தார். அப்போது, அவரை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து கைது செய்து லாகூர் சிறையில் அடைத்தனர். அவர் மீது உளவு பார்த்தாக குற்றம் பதிவு செய்யப்பட்டது. பின்னர், லாகூர் மற்றும் பைசலாபாத்தில் 1990ம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்புகளில் சரப்ஜித் சிங்குக்கு தொடர்பு உள்ளது என்று கூறி அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. லாகூரில் நடந்து குண்டு வெடிப்புக்காகவும், பைசலாபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்காகவும் சரப்ஜித் சிங்குக்கு சுப்ரீம் கோர்ட் தனித்தனியே தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சரப்ஜித் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. இது பற்றி முஷாரப்பிடம் வேசுவதாக பிரதமர் மன்மோகன் அறிவித்தார். இது பற்றி முஷாரப்பிடம் பிரதமர் பேசினார். சரப்ஜித்சிங்குக்கு மன்னிப்பு அளிப்பது பற்றி பரிசீலிப்பதாக முஷாரப் உறுதியளித்தார்.
இதில் லாகூர் குண்டு வெடிப்பில் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மிகவும் தாமதமாக சரப்ஜித்சிங் அப்பீல் செய்துள்ளார் என்று கோரி மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று (9-3-06)தள்ளுபடி செய்துவிட்டது. அப்பீல் மனு தள்ளுபடியானது பற்றி சரப்ஜித்சிங்கின் வக்கீல் கூறுகையில்,'சரப்ஜித் சிங் ஒரு அப்பாவி. இரண்டாவது அப்பீல் மனுவையும் சுப்ரீம் கோர்ட் நிராகரிக்கும் என்று நினைக்கிறேன். அதனால், இனி அதிபர் முஷாரப்பிடம் கருணை மனு கொடுப்பதை தவிர சரப்ஜித் சிங்குக்கு வேறு வழியில்லை என்றார்.
இது தினகரன் செய்தி
1 comment:
ஆமாம் நன்றி சிவா
Post a Comment