முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அதை தடுக்கும் வகையில் கேரள அரசு தடாலடியாக சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்துள்ளது. இதன் படி கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் அளக்கப்படும். இதனால் முல்லைப்பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க முடியாது என்று கேரளம் பகிரங்கமாக அறிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை சூழலுக்கு மத்தியில் எழிலுற அமைந்திருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணைக்கு வயது இன்றளவில் 113. தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கும் பிரதான அணை இதுதான்.
இந்த அணை நீரை தமிழகம் பணன்படுத்திக் கொள்ள வகை செய்யும் ஒப்பந்தம் கடந்த 1886ம் ஆண்டு அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானததின் மகாராஜாவுக்கும் அப்போதைய பரிட்டிஷ் அரசாங்கத்தின் மாநிலச் செலருக்கும் இடையே கையெழுத்தானது. அது முதல் தமிழகம் முல்லைப் பெரியாறு அணையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்த அணையில் மொத்தம் 152 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் இப்போது 136 அடி உயரத்துக்கு மட்டுமே தேக்கி வைக்க கேரளா அனுதிக்கிறது. இந்த அளவுக்கு மேல் தண்ணீரை தேக்கினால் அணை உடைந்து விடும். அதனால் இடுக்கி மாவட்டம் உள்பட கேரளாவின் 5 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் கேரளா கூறிவருகிறது. ஆனால் முல்லைப் பெரியாறில் தண்ணீர் மட்டத்தை அதன் முழு அளவுக்கு உயர்த்த முடியவிட்டாலும் குறைந்த பட்சம் 142 அடி உயரத்துக்காவது தண்ணீரைத் தேக்கிவைக்க அனுமதிக்க வேண்டும் என்று பலமுறை கேரளாவை கேட்டுக்கொண்டது. அந்த கோரிக்கையை கேரளா கண்டு கொள்ளவே இல்லை.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை தற்போதைய 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உத்தரவிடக்கோரி தமிழக அரசு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமனறம் நிபுணர்குழுவனரின் அறிககையை பரிசீலித்து முல்லைப் பெரியாறில் 142 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கிவைக்க கேரளம் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 152 அடி உயரமுள்ள இந்த அணையின் முழு அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்கும் முன்பாக அணையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
No comments:
Post a Comment