Sunday, January 15, 2006

வருவாய்த்துறை 2

வருவாய்த் துறை என்பது எப்படி வளர்ந்தது என்பதை பார்த்து விட்டு பிறகு பேசுவோம்
அந்த காலங்களில் நிலவரி வசூல் தான் நாட்டின் முக்கிய வருமானம். அதுவும் இன்றைய கால கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிக அதிகம் தான் நில வரி செலுத்த முடியாமல் கூட நிலத்தை அரசிடமே ஒப்படைத்தவர்களும் உண்டு. நிலவரி வசூல் செய்ய கிட்டி என்ற ஒரு கருவியை வைத்து விரல்களை நெரித்ததும் உண்டு; விரல்களில் துணியை சுற்றி எண்ணெய் ஊற்றி நெருப்பை வைத்தும் வசூல் செய்த காலங்களும் உண்டு . திமுக ஆட்சிக்கு வந்த ஆண்டே லெவி என்ற பெயரில் விவசாயிகளிடம் வலுக் கட்டாயமாக நெல்லை பெற்றதும் உண்டு . இவற்றையெல்லாம் பிறகு பார்ப்போம்.
கிபி. 985 – 1011 ராஜராஜ சோழன் ஆண்டு வந்தபோது வருவாய் நிர்வாகத்தை சீர் அமைத்தார்

கி.பி. 1175 – 1194 முகமது கோரி என்ற முஸ்லீம் மன்னர் இந்தியாவை அரசாட்சி செய்தார் அவருடைய காலத்தில்தான் மொகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு வழி வகுக்கப்ட்டது.

கி.பி. 1539 – 1545 அரசாட்சி செய்த ஷெர்ஷா சூரி (டைகர்) வருவாய் நிர் வாகத்தை மேலும் சீர் அமைத்தார் அவருடைய காலத்தில்தான் சென்னைக்கும் கல்கத்தாவிற்கும் இடையே கிரண்ட் ட்ரங் ரோடு அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் நாணயம் உலோகத்தில் கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1556 – 1605 அக்பர் அரசாட்சி செய்த போது இடைப்பட்ட காலத்தில் இந்துக்கள் மீது விதிக்கப்ட்ட சிசியா என்ற வரியை ரத்து செய்தார்.

கி.பி. 1792 – ஆம் ஆண்டில் லார்டு காரன் வாலிஸ் என்பவரால் அனுப்பப் பட்ட கர்ணல் (Red) என்பவர் ரயத்துவாரி அல்லது குல்பி சிஸ்டம் என்ற முறையை ஏற்படுத்தனார் .

கி.பி. 1793 – ஆண்டு லார்டு காரன் வாலீஸ் என்பவர் முதன் முதலாக வங்காளத்தில் நிலையான நிலவரித்திட்டத்தை அமுல் படுத்தினார். மேலும் அவர் முதன் முதலாக சிவில் சர்வீஸ், ஜுடிசியல் சர்வீஸ் ஆகிய பதவிகளுக்கு போட்டி தேர்வுகள் மூலம் தேர்ந் தெடுக்க உத்திரவு பிரப்பித்தார், அதற்கு முன்பு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபையினரால் பதவி சம்பந்தப்பட்ட எந்த வரை முறையின்றி விருப்பம் போல் அளிக்கப்பட்டது.

கி.பி. 1802 ல் தமிழ் நாட்டில் நிலையான நிலவரித்திட்டம் கொண்டு வரப்பட்டது

கி.பி.1806 ல் Lord William Benedict என்பவர் சென்னையில் கவர்ணராக இருந்த போது நிலையான நிலவரித்திட்டத்தை பாளையம் அல்லது ஜமீன் பகுதிகளுக்கு அமுல்படுத்துவதை ஆட்சேபித்தார்.

கி.பி. 1828 ல் - 1835ல் இதே Lord William Benedict இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொருப்பேற்ற போது ஆங்கிலம் கட்டாய பாடமாக்க வழிவகை செய்யப்பட்டது.

கி.பி.1812 ல் தமிழ் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் பாளையம் மற்றும் ஜமீனை சேர்த்து நிலையான நிலவரித்திட்டம் திரும்பவும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1817 ல் சர் தாமமஸ் மண்ரோ என்பவர் முழுமையான நிலவரிதிட்டம் அமுலுக்கு வந்துள்ளதா என்பதை கண்காணித்தார்.

கி.பி. 1858 ல் நிலவரி திட்ட இயக்குணராக இருந்த திரு.நெவிஸ் (Nevis) என்பவர் முதன் முதலாக மண் வயணம், பாகு பாடு, தமிழ் நாட்டிற்கு நிலவரி திட்டத்தை கொண்டு வந்தார், ரெகுலர் செட்டில் மெண்ட் - ஒரிஜினல் செட்டில் மெண்ட் - மெயின் செட்டில் மெண்ட் கொண்டு வந்தார்.

கி.பி. 1867 ல் பிரதி 30 வருடங்களுக் கொருமுறை மறு நிலவரித் திட்டம் (Resettlement) நடத்தப்பட வேண்டுமென அரசு ஆணைபிரப்பித்து Resettlement என்பது Resurvey செய்தபிறகு தான் செய்யப்படவேண்டும் அதேபோல் ஒரிஜினல் செட்டில்என்பது (Initial) ஆரம்ப சர்வே செய்தபிறகு தான் ஒரிஜினல் செட்டில் செய்யப்படவேண்டும்.

கி.பி. 1937 – இருதியாக இந்த ஆண்டில் தான் மறு நிலவரித்திட்டம் நடை பெற்றது 1937க்குப் பிறகு நாளது வரை மறுநிலவரித் திட்டம் நடை பெறவில்லை. 1937ல் ஆங்கிலேயரகள் ஆட்சி செய்த போது எதிர் காலத்தில் மறு நிலவரித்திட்டம் குறித்து ஏதும் ஆணைகள் பிறப்பிக்கக் கூடாதென அரசு ஆணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேய ஆட்சிக்குப்பிறகு சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சி பொருப்பில் உள்ளவர்களால் மறு நிலவரித் திடம் குறித்து ஆணைகள் ஏதும் பிறப்பிக்கவில்லை

3 comments:

நல்லவன் said...

//கிட்டி என்ற ஒரு கருவியை வைத்து விரல்களை நெரித்ததும் உண்டு; விரல்களில் துணியை சுற்றி எண்ணெய் ஊற்றி நெருப்பை வைத்தும் வசூல் செய்த காலங்களும் உண்டு .//
இப்படியும் செய்வார்களா?

ENNAR said...

ஆமாம்

நல்லவன் said...

ஏன் ஜப்த்தி செய்வார்களே அது மாதிரி செய்யமாட்டார்களா?