Sunday, January 15, 2006

வருவாய்த் துறை

.அரசு திட்டம்!* இயற்கை சீற்ற நிவாரண பணிகளுக்குத் தனித்துறை* வருவாய்த்துறையை இரண்டாக பிரிக்க ஆலோசனை

தமிழக அரசில் மிகப் பெரிய துறையான வருவாய்த் துறை நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அமைப்பிலேயே இன்னும் செயல்பட்டு வருகிறது. சுனாமி, வெள்ள நிவாரணம் போன்றவற்றை சமாளிக்க பேரிடர் மேலாண்மைத் துறை தனியாக இல்லாததால் வருவாய்த் துறை இதர பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறது.
அரசில் மிக முக்கியமான துறை வருவாய்த் துறை. இத்துறைச் செயலரின் கீழ் பல்வேறு பெரிய துறைகள் உள்ளன. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை, நில நிர்வாகம், நில சீர்திருத்தம், சர்வே, பதிவுத் துறை, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு என பல துறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஐ..எஸ்., அதிகாரி தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு துறை கமிஷனரின் கீழும் ஐ..எஸ்., அந்தஸ்தில் பல இணை கமிஷனர்கள் உள்ளனர். இதுதவிர, டி.ஆர்.., அந்தஸ்திலான அதிகாரிகளும் பலர் உள்ளனர்.
மாவட்டங்களை பொறுத்தவரை அனைத்து துறைகளுமே கலெக்டரின் கட்டுப்பாட்டில் வருகின்றன. எனவே, நிவாரணம் வழங்குவது என்றாலும், இலவச வேட்டி, சேலை போன்ற திட்டங்களை செயல்படுத்துவது என்றாலும் அனைத்து துறை ஊழியர்களையும் ஒருங்கிணைத்து கலெக்டர்கள் இப்பணிகளை மேற்கொள்வர். ஆனால், மாநில அளவில் அதிகாரிகள் மட்டத்தில் இத்துறை சரிவர பிரிக்கப்படவில்லை. இதனால், பல திட்டங்களை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து வறட்சி, சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நிலவுவதால் இதற்கான பணிகளில் வருவாய்த் துறை கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், தற்போது வருவாய்த் துறையே முடங்கிப் போயுள்ளது. பல மாநிலங்களில் பேரிடர் மேலாண்மைக்கு என தனித் துறை உள்ளது. குஜராத்தில் இத்துறையின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ..எஸ்., அதிகாரி இறையண்புவின் சகோதரர் உள்ளார்.
தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைக்கு என தனித் துறையும் இல்லை. வருவாய் நிர்வாகம் மற்றும் நிவாரண, மறுவாழ்வுப் பணிகள் கமிஷனரின் கீழ் இத்துறை வருகிறது. வருவாய் கமிஷனரின் கீழ் ஐ..எஸ்., அதிகாரிகளான மூன்று கூடுதல் கமிஷனர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரின் கீழ் பேரிடர் மேலாண்மை வருகிறது. சுனாமி ஏற்பட்ட போது இதற்காக தனி அதிகாரி மற்றும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டனர்.
சுனாமிக்கு பிறகு பேரிடர் மேலாண்மைத் துறை தேசிய அளவிலும், மாநில அளவிலும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு ஆகியும் மாநில அளவில் இத்துறை தனியாக அமைக்கப்படவில்லை. தற்போது வெள்ள நிவாரணப் பணிகளை மிகப் பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் போதிய அதிகாரிகள் மற்றும் நிர்வாக அமைப்பு இல்லாமல் அரசு தடுமாறுகிறது.
அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றங்களை சமாளிக்கவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் தனியாக துறை அமைக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. தனி செயலர் கட்டுப்பாட்டில் வருவாய்த் துறையும், மற்றொரு செயலர் கட்டுப்பாட்டில் பேரிடர் மேலாண்மைத் துறையும் உருவாக்கப்பட வேண்டும். அல்லது வருவாய்த் துறை செயலரின் கீழ் வருவாய் நிர்வாக கமிஷனர் மற்றும் பேரிடர் மேலாண்மை கமிஷனர் என இரு கமிஷனர் பதவிகளை உருவாக்கி, தனித் துறையாக செயல்படுத்த வேண்டும்.
அவ்வாறு வருவாய்த் துறையை மாற்றி அமைத்தால் மட்டுமே இது போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிவாரணப் பணிகளை அரசு சிறப்பாக கண்காணிக்க முடியும்.
இது தினமலர் செய்தி இதைப் பற்றி சற்று சிந்திப்போம்

http://www.dinamalar.com/2006jan14/frontpage.asp

No comments: