இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போர் நிறுத்தம் எந்த நேரத்திலும் வாபஸ் ஆகிஅரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் பெரிய அளவில் போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகிறது.
போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறாவிட்டாலும் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஆங்காங்கே அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மன்னார், யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 115 பேர் பலியாகி விட்டனர்.ராணுவத்தின் கெடுபிடி காரணமாக தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அதிரடி தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினரும் கொழும்பு நகருக்குள் ஊடுருவி உள்ளனர்.(செய்தி)
இரண்டாம் உலகப் போரில்
இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால், இந்தியாவை சுலபமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தார் ஹிட்லர். ஆனால் அவருடைய முயற்சி பலிக்கவில்லை. "இந்தியா இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்து கஷ்டப்படுகிறது. நாங்கள் இந்தியாவை விடுவிப்போம்" என்று 1942 ஏப்ரலில் ஜப்பான் அறிவித்தது.
அதற்கு உடனடியாக நேரு பதில் அளித்தார். "இந்திய மக்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வார்கள். அதற்கான வீரமும், விவேகமும் இந்திய மக்களுக்கு உண்டு. எனவே இந்திய மக்களின் விடுதலைக்கு ஜப்பான் உதவி தேவை இல்லை" என்று அறிவித்தார். இந்தியாவுக்கு இங்கிலாந்து எதிரி என்றபோதிலும் ஹிட்லரும், ஜப்பானும் உலகத்துக்கே எதிரிகளாக இருந்தார்கள். எனவேதான் ஜப்பானின் உதவி தேவை இல்லை என்று நேரு கூறினார்.
இதனால் உலகப்போர்களில் இந்தியாவிற்கு நேரடியான பாதிப்பு ஒன்றும் இல்லாமல் போனது.
எப்படியோ அமெரிக்கா தலையிடாமல் இருந்தால் சரி .ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம் என்பர்.
1 comment:
ஆமாம் நாட்டை பிரி்த்து கொடுத்து போங்கடா என ஒதுக்கி விட்டுயிருக்கவேண்டும் அல்லது சுமூகமான ஏற்பாடு செய்திருக்க வேண்டும் அதை விடுத்து சண்டை போட்டு இரண்டு தலைமுறைகளை நாசப்படுத்துகின்றனர்.
ஒன்று மட்டும நிச்சயம் பிரபாகரன் நாடு ஆளமாட்டார். அந்த அளவிற்கு அவர் விபரம் தெரியாதவர் அல்ல!! முசோலினியின் கதை அவருக்குத் தெரியும்
Post a Comment