மணிகண்டன்
2006-ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படணும் .
யாரும் பயப்படத்தேவையில்லை எதற்காக பயப்படணும் இது எல்லாம் ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து அல்ல. மண்ணையாண்டவர் யாரோ மனையை ஆண்வர்கள் யாரோ. இமய மலையில் கொடியை நாட்டியவனும் இலங்கையின் மீது படையெடுத்தவனும் தமிழன்
எச். ராஜா எம்.எல்.ஏ.,(பா.ஜ.க.):
மாற்றங்களை நமதாக்கிக் கொள்ள வேண்டும். நாம் கும்பிடுகிற தெய்வத்தை நிந்திக்கிறவர்களை பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தால் நம் பக்தியிலே குறையிருக்கிறது என்று அர்த்தம். எதற்கு பொறுத்திருக்க வேண்டும்.? இத்தனை கோடி மக்கள் இருக்கும் இந்தியாவிலே இந்துக்களை மட்டும் நிந்திக்க காரணம் என்ன?
நாம்கும்பிடுகிற தெய்வத்தை திட்டுவது யார் நமது குடும்பத்தைச்சேர்நத இந்துக்கள் தான் நம்மைத்தான் திட்ட முடியும் அடுத்த வீட்டுக்காரனை திட்டினார் அவன் உதைப்பான் அதான் நம் தெய்வங்கை திட்டுகிறார் தெய்வம் இல்லை என்று சொன்ன ஈ.வே. ராமசாமி மற்றதெய்வங்கை செறுப்பால் அடித்தாரா ?ஏன் செய்ய வில்லை? அவரது சிஷ்யர்கள் அவர்வழியை பின் பன்றுகிறார்கள்.
ஆமாம் உண்மைதான் திராவிட பாரம்பரியம் இந்துக்களை மதிப்பதில்லை இந்துகோயில் களுக்க அரங்காவளர்களாக இருப்பார்கள் இந்துகளையே திட்டுவர் ஒருவர் இந்து வை திருடன்என்பார் (ஒரு வேலை வெண்ணை திருடன் கண்ணனைச் சொன்னாரோ)
நடிகர் டெல்லி கணேஷ்:
நாமெல்லாம் உதாரணப் புருஷர்கள். நாசாவில் ராக்கெட் பறப்பதற்கு நாம்தான் காரணம். பிராமண இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது. ஒரே மனித இனமா வாழ்ந்துவிடலாம் என்று பார்த்தோம் முடியவில்லை. இப்போ ஜாதி ரீதியாகத்தான் வாழமுடியுது. தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா அது ஒரு சுலோகம். பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன்.
உண்மைதான் நாட்டை ஆள்வது நாட்டை பாது காப்பது உணவு உற்பத்தி செய்வதுரோடு போடுவது நாத்து நடுவது அறுவடை செய்வது தொழிற்சாலையில் உழைப்பது எல்லாம் மற்றவர்கள். குடியனவன் சேற்றில் கை வைக்காவிட்டால் சோற்றில் நீங்கள் கைவைக்க முடியுமா?. ராக்கெட் விடாமல் சாப்பிடலாம் !வயலில் பாடுபடாமால் உண்ணமுடியுமா?
சரசுவதி ராமநாதன்:
அங்கு 10 வீடுகளுக்குப் போனேன். மூன்று வீடுகளில் பிராமண பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கலப்பு மணங்கள் நமது கலாச்சாரத்தை சீரழிக்கிறது. பிராமின் என்று ஒரு கலாச்சாரம் இருந்தால் போதும், உட்பிரிவுகள் கூடத் தேவையில்லை என்று ஆச்சார்ய சுவாமிகள் கூறியிருக்கிறார்.
அவர்கள் சொல்வது தெரிகிறது இது காலத்தின் கட்டாயம் இதை யாராலும் மாற்ற முடியாது
மற்றவர்கள் பொறுப்பேற்க முடியாது
எழுத்தாளர் சுஜாதா:
நம்முடைய எண்ணிக்கை என்ன? நம்மை அவர்கள் தமிழர்கள் அல்லர் என்கிறார்கள், நமக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். (கைதட்டல்) சங்க காலத்தில் மிகச் சிறந்த புலவரான கபிலர் பிராமணர் .
எனக்கு ஆங்கிலேயரை விட நல்ல ஆங்கிலம் தெரியும் என்னை ஆங்கிலேயன் என சொல்ல முடியுமா? தமிழ் தெரிந்தால் தமிழனா.. வீரமாமுனிவர் வந்து இருந்து தமிழ் கற்று காவியம் படைத்தார் அவர் தமிழன் என்ற சொல்ல முடியுமா?
சினிமா இயக்குநர் பாலசந்தர்:
லவுகீக பார்ப்பானாக இருந்தாலும், வைதீகப் பார்ப்பானாக இருந்தாலும், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். பார்ப்பனர் வெறி என்பது அவர்களின் ரத்த ஓட்டமாக இருக்கிறது என்பதற்கு இன்னும் என்ன ஆதாரம் வேண்டும்? மாநாட்டில் பார்ப்பனர் சிலர் அரிவாளைச் சுழற்றிக் காண்பித்துள்ளனர். இதன் பொருள் வெளிப்படையானது.
இவரே பல படங்களில் பார்பன பெண்களை கேவளமாக சித்தரித்து படம் எடுத்தாரே
விபீஷணர் படலம் இல்லாமல் இராமாயணம் நிறைவு பெறுமா?
மாநாட்டில் பேச்சு வியாபாரி சாலமன் பாப்பையா பங்கு கொண்டு பார்ப்பனர்களைத் தலையில் தூக்கி வைத்து சதிராட்டம் போட்டு இருக்கிறார். அவாள் இல்லாமல் தமிழ் ஏது என்று அவாள் மெச்ச இச்சகம் பேசி ஆழ்வார்ப்பட்டம் பெற்றுவிட்டார். தகுந்த கூலியும் பெற்று இருப்பார் - பேச்சு
இராவணனை காட்டிக் கொடுத விபீணனை மண்ணிக்க முடியது
டோண்டு ராகவன்
ஆனால் ஒன்றை முதலிலேயே கூறிவிடுகிறேன். அரிவாளைத் தூக்கிக் காட்டுவது சற்று மிகைப்படுத்தலே ஆகும். கும்பலில் வந்த ஆக்ரோஷம் என்று கூறினாலும் சற்றே அடக்கி வாசித்திருக்க வேண்டுமென்றே நான் கூறுவேன்.
சரியாகச் சொன்னீர்கள்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் வா.வே.சு அய்யரின் பங்கு அபரிமிதமானது அதைவிட வாஞ்சினாத அய்யரின் பங்கு மேலானது. தமிழ் தாத்தா ஊ.வே.சு அய்யரின் பங்கு மறக்க முடியாது. ஐம்பெருங்காப்பியங்களை கண்டுபிடித்து உலகுக்கொடுத்து உத்தமர் ஊ.வே.சு அய்யரை அந்த காப்பியங்கள் உள்ளவரை மறக்கமுடியாது. வீரவாஞ்சிநாதனை மறக்கமுடியுமா? மேட்டூர் அணை வருவதற்கு காரணமாயிருந்த அந்த அய்யரைத்தான் மறக்க முடியுமா தமிழகத்தில் அனேக தொழிற்சாலைகள் வர காரணமாயிருந்த ஆர். வெங்கட்ராமனைத்தான் மறக்கமுடியுமா? 10ஆயிரம் பார்ப்பனர் உயிர் கொடுத்து காத்த திருவங்கத்தைத்தான் மறக்கு முடியுமா? எல்லலோரும் சங்கம் வைத்துக் கொண்டது போல் அவர்களும்சங்கம் வைத்துள்ளார்கள். அதற்கு ஏன் இத்தணை எதிர்ப்பு
அவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர் பார்பனர் சரி நீங்கள் உங்கள் ஜாதியை அவர்கள் சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. ஏன் இந்த பாகு பாடு காலங்கள் மாறுகின்றன. அனைவரும் ஒரே ஜாதி ஒரே தமிழர். அனவைரும் ஒரு தாயின் பிள்ளைகள்
யாரும் சாதிச்சங்கம் அமைக்க கூடாது பள்ளி கல்லூரிகளிலும் சான்றிதழிகளிலும் சாதிபெயர்வரககூடாத தேர்தலிலும் சாதிக்காக சீட் ஒதுக்கக் கூடாது.
20 comments:
//அவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர் பார்பனர் சரி நீங்கள் உங்கள் ஜாதியை அவர்கள் சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. ஏன் இந்த பாகு பாடு காலங்கள் மாறுகின்றன. அனைவரும் ஒரே ஜாதி ஒரே தமிழர். அனவைரும் ஒரு தாயின் பிள்ளைகள் //
ஐய்யோ! மண்டைய பிச்சுகலாம் போல இருக்கு!
"எழுத்தாளர் சுஜாதா:
நம்முடைய எண்ணிக்கை என்ன? நம்மை அவர்கள் தமிழர்கள் அல்லர் என்கிறார்கள், நமக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். (கைதட்டல்) சங்க காலத்தில் மிகச் சிறந்த புலவரான கபிலர் பிராமணர் .
எனக்கு ஆங்கிலேயரை விட நல்ல ஆங்கிலம் தெரியும் என்னை ஆங்கிலேயன் என சொல்ல முடியுமா? தமிழ் தெரிந்தால் தமிழனா.. வீரமாமுனிவர் வந்து இருந்து தமிழ் கற்று காவியம் படைத்தார் அவர் தமிழன் என்ற சொல்ல முடியுமா?"
என்னார் அவர்களே, பிறப்பால் தமிழரான பார்ப்பனர்களைத் தமிழர்கள் அல்ல என்று சிலர் கூற முயல்வதுதான் சுஜாதா அவர்கள் கூறியதற்கு அடிப்படை. வீரமாமுனிவரைக்கூட தமிழர் என்று கூறினாலும் தவறில்லை.
நான் கூறுகிறேன், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர்கள் தங்களைத் தமிழன் என்று கூறிக்கொள்ள வேறு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜோ அவர்களே எதற்எடுத்தாலும் பாப்பான் பாப்பான் என்கிறார்கள் இவர்களது ஜாதியை அந்த பார்ப்பனன் சொன்னால் சும்மா விடுவார்களா? கோபம் வருகிறது அல்லவா ஏன் பார்பனர் எனச் சொல்லக்கூடாதா? ஜாதி வேண்டாம் என்று சொல்பவர்கள் ஜாதி வேண்டும் என மறைமுகமாக வருகின்றனர் யோசித்துப்பாருங்கள்
//நாம்கும்பிடுகிற தெய்வத்தை திட்டுவது யார் நமது குடும்பத்தைச்சேர்நத இந்துக்கள் தான் நம்மைத்தான் திட்ட முடியும் அடுத்த வீட்டுக்காரனை திட்டினார் அவன் உதைப்பான் அதான் நம் தெய்வங்கை திட்டுகிறார் தெய்வம் இல்லை என்று சொன்ன ஈ.வே. ராமசாமி மற்றதெய்வங்கை செறுப்பால் அடித்தாரா ?ஏன் செய்ய வில்லை? அவரது சிஷ்யர்கள் அவர்வழியை பின் பன்றுகிறார்கள்.//
என்னார் சார்,
உங்க வருத்தம் புரிகிறது .ஏன் இவங்கள்ளாம் கிறிஸ்துவ,இஸ்லாம் மதங்களை திட்டுவதில்லை என்கிற வருத்தம் உம்க்களுக்கு இருக்கிறது .பெரியாரின் பேச்சுக்கள் அடங்கிய புத்தகங்களில் நான் படித்திருக்கிறேன் .அவர் கிறிஸ்துவ மதத்தையும் ,இஸ்லாம் மதத்தையும் திட்டியிருக்கிறார் .ஆனா அதுல இட ஒதுக்கீடு மாதிரி ,தமிழ் நாட்டுல எவ்வளவு சதவீதம் மக்கள் எந்த மதத்துல இருக்காங்களோ அவ்வளவு சதவீதம் திட்டியிருப்பார் போல.
உங்க மன நிம்மதிக்கு சேலத்தில் நடந்த தி.க மாநாட்டில் தட்டியில் எடுதி வைக்கப்பட்டிருந்த வாசகங்கள் சில இதோ
"பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?"
"786(?) என்ன அல்லா வீட்டு பீரோ பூட்டு நம்பரா?'
இது போக "கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி"-றது எல்லா கடவுளுக்கும் தானே? இந்து கடவுளுக்கு மட்டும்-ன்னு சொல்லலியே..அதனால ரொம்ப வருத்தப்படாதீங்க.
//நான் கூறுகிறேன், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர்கள் தங்களைத் தமிழன் என்று கூறிக்கொள்ள வேறு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று.
//
டோண்டு சார்,
உங்களை மாதிரி எல்லோரும் உணர்வு பூர்வமா தங்களை தமிழர்-ன்னு நினைச்சா ரொம்ப நல்லது.
எனைப் பொருத்தவரை சோனியா காந்தியே இந்தியாவைச் சேரந்த இந்து என்பேன். பழநி முருகன் கோவிலுக்கு தமிழ் பெண் போல, இந்து பெண்போல சடைபோட்டு வந்த அன்றே அவர் இந்து
வாகிவிட்டார்.
ஓமாந்தூர் ரெட்டியர், பக்தவச்சல முதலியார். சி.என்.அண்ணாதுரை முதலியார், கருணாநிதி முதலியார், எம்ஜியார் இவர்களது பூர்வீகம் தமிழ்நாடா? எல்லாம் தமிழர் என சொல்லும் போது அனைத்து பார்ப்பனர்களும் தமிழர் தான் தமிழகத்தை ஆண்ட முதல்வர் இரண்டு போர் தான் பச்சைத் தமிழர் காமராஜ், ஓ.பன்னீர் செல்வம்.
நான் ஏன் அப்படி சொன்னேன் என்றால் தமிழர்களை விட நன்றாக தமிழ் எழுதுவேன் என்று சொன்னதால் அப்படி சொன்னேன்.
திராவிட கட்சியினர் மேடையில் ஏறினால் தமிழன் இமயத்தின் மீது கொடியை நாட்டினான் கங்கை கடாரம் என நீட்டிக் கொண்டேன் போவார். கூட்டம் முடிந்தது எங்க தம்பி போகிறீர்கள் என கேட்டால் தஞ்சை சரபோஜி மன்னர் அரன்மனைக்கு போகிறேன் என்பார் அவர் யார் மராட்டிய மன்னன் தஞ்சையை ஆண்டவர்.
//"பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?"
"786(?) என்ன அல்லா வீட்டு பீரோ பூட்டு நம்பரா?'//
இப்படிப்பட்ட சந்தர்பங்களில் எடுத்து தங்களைப் போன்றவர்கள் என்னை போன்றவர்களுக்குச் சொல்ல. ஏன் அன்று திருச்சியில் ஒருவண்டியில் முருகன் கிருஷ்ணன் படங்கை செறுப்பால் அடித்த அந்த ராமசாமியார் மற்ற தெய்வங்களை ஏன் செய்யவில்லை. இப்தார் விருந்துக்குப் போகிறவர்கள் அங்கு அவர்களை திட்டுவார்களா? வளைகுடா நாட்டான் டங்கு வாரை அறுத்துவிடுவான். என்பதாலா?
நானும் இந்த சங்கம் பற்றிய பதிவுகளைப் படித்தேன். எல்லா ஜாதிச் சங்கம் போலத்தான் இதுவும் நடந்திருக்கு. எல்லா ஒரே குட்டைல ஊறுன மட்டைங்கதான்.
ஜாதிய விட்டு வெளிய வாங்கன்னா யாரும் வரமாட்டேங்குறாங்க. ஜாதி மதங்களைப் பாரோம் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் என்றார் பாரதி.
இன்னைக்கு அவனவன் எஞ்ஜாதி எம்மதமுன்னு அடிச்சிக்கிறாங்க.
பிராமணன் என்பதால் ஒருவன் தமிழன் இல்லை என்பதும் அபத்தம். பிராமணன் மட்டுமே உயர்ந்தவன் என்பதும் அபத்தம்.
எல்லா சாதிச் சங்கங்கள்ளயும் நடக்குற கூத்துதான் இங்கயும் நடந்துருக்கு. என்ன...தெரிஞ்சவங்க நெறைய பேரு பேசுனதால அது இவ்வளவு தூரம் வந்துருக்கு. மத்த ஜாதிகள்ள பேசுறது யாருன்னே நமக்குத் தெரிஞ்சிருக்காது. விவேக் ஒருத்தர்ர் பேசுனது தெரிஞ்சது. அதையும் சொல்லியாச்சு.
விவேக் பத்திய பதிவுலயே என்னோட கருத்தைப் போட்டிருக்கேன்.
தன்னுடைய மதம், மொழி, இனம், ஊர், மாநிலம், நாடுங்குற பாகுபாடு பாக்காதவன் யாராவது இருக்கமா? அவரவருடைய விருப்பங்களை மதித்துக் கொண்டு அடுத்தவரைத் தாழ்த்தாமல் இணைத்துக் கொண்டு அவர்களையும் மதித்துக்கொண்டு நடங்கள் என்றால் கேட்பார்தான் இல்லை. இது மட்டும் ஜாதி, மதங்களை மீறி அடுத்தவங்களுக்குப் போக மாட்டேங்குது. ஆண்டவந்தான் எல்லாரையும் காப்பாத்தனும்.
சாலமன் பாப்பையாவையும் குத்தம் சொல்றாங்க. அவர் என்ன சொன்னாருன்னு சரியாத் தெரியலை. பார்ப்பனர்களும் தமிழுக்கு தொண்டு செய்துள்ளார்கள்னு அவர் சொல்லியிருந்தா அது சரிதான். அதுக்காக அவரை வீடணன் அளவுக்கு இறக்கக் கூடாது. அவரு என்ன சொன்னாருன்னு தெரியாம கருத்து சொல்ல முடியாது என்னால.
காமெடியில பயங்கர காமெடி சுஜாதாவோட பேச்சுதான். அவருடைய சிலப்பதிகாரம் ்நூலை நான் படிச்சதில்லை. ஆனால் திருக்குறள் விளக்க நூலை நான் படித்திருக்கிறேன். ரொம்பவும் சாதாரணமான நூல்தான் அது. அதுலயும் தன்னோட கருத்தைப் பல இடங்களில் ஏற்றியிருக்கிறார்.
ஆண்டவா! எல்லாரும் நல்லாருந்தாச் சரி.
நீங்க எழுதினதெல்லாம் உண்மையிலேயே அவர்கள் கூறியதா என்னார்.
I just can't believe it. How could people like Sujatha, speak like this.
Is there any explanation for these stupid statements. Please Dondu Sir, don't try to justify these statements. It is simply rubbish.
I am fuming with anger. I am just unable to write in Tamil.
கோபத்துல எதையாச்சி தப்பா எழுதிருவேனோன்னு பயமா இருக்கு.
ராகவன் சொன்னா மாதிரி எல்லாரும் நல்லா இருந்தா சரி..
இந்த மாதிரி I am sorry. Before I write something stupid.. நான் இத்தோட நிறுத்திக்கறேன்.
ஜோசப் சார் இந்த தளத்தைப் பாருங்கள் பொருமையாக சிறப்பாக எழுதுங்கள்
http://bhaarathi.net/sundara/?p=251
http://thoughtsintamil.blogspot.com/2006/01/blog-post_113700138250738964.html
ராகவன்; நான், எனது குடும்பம், எனது ஊர், எனது ஜாதி, எனது மதம், எனது நாடு என்ற எண்ணம் இருக்க வேண்டியது தான் அது வெறியாக இருக்கக் கூடாது மற்றவர் மனம் துண்பப்படுகிற அளவிற்கு நடந்து கொள்ளனவும் கூடாது. நன்றி
விவேக் பதிவு எதில் உள்ளது
ஜோசப் சார். உங்களுக்குக் கோவம் வருது. எனக்கு வரலை. ஏன்னா....எல்லாப் பயகளும் இப்பிடித்தான் பேசுறாங்க. ஒருத்தருக்கு ஜாதீன்னா...இன்னொருத்தருக்கு மதம்...இன்னொருத்தருக்கு மொழி....ஊரு நாடு வட்டம் மாவட்டமுன்னு இன்னும் நெறைய இருக்கு. நம்மளும் அதுல ஒன்னுதான. அட போங்கய்யா...இந்த ஒலகத்துல நீங்க ஒன்னுமே இல்லைன்னு புரிஞ்சுக்கோங்கன்னு மட்டும் மனசுல நெனச்சுக்குவேன்.
நம்மளப் போல இல்லாம எந்த விதத்துலயாவது வேற மாதிரி இருக்குறவங்கள நம்ம எப்படி நடத்துறோம்? அவங்கள விட நம்ம ஒசத்தின்னு நெனைக்காம இருக்குறோமா? அதுதான் இங்க நடக்குது. ஒவ்வொரு எடத்துலயும் நடக்குது.
ஒவ்வொன்னுக்கும் இடையில இருக்குற ஒத்துமைகள வைச்சு அரவணைக்க ஏதாவது பண்ணுங்கன்னா...யாரும் கேக்குறதில்லை.
கொஞ்ச நாள் முன்னாடி தமிழ்மணத்துல இந்து-இஸ்லாமியச் சண்ட. இத குப்பைன்னு ஒருத்தரும். அதைக் குப்பைன்னு இன்னொருத்தரும் சொல்றாரு. சூழ்நிலைக்கு இதமா நானும் கூட கந்தரலங்காரப் பாட்டுக்கு விளக்கம் எழுதும் போது சூர் கொன்ற ராவுத்தரேங்குற தலைப்புல எழுதுனேன். ரெண்டு பேருதான் படிச்சது.
ராவுத்தன்னு முருகனைச் சொல்ல முடிஞ்ச அருணகிரியோட நல்ல உள்ளம் எல்லாருக்கும் வரனுமுன்னு வேண்டிக்கிட்டு என்னோட வேலையப் பாக்குறேன்.
// ராகவன்; நான், எனது குடும்பம், எனது ஊர், எனது ஜாதி, எனது மதம், எனது நாடு என்ற எண்ணம் இருக்க வேண்டியது தான் அது வெறியாக இருக்கக் கூடாது மற்றவர் மனம் துண்பப்படுகிற அளவிற்கு நடந்து கொள்ளனவும் கூடாது. நன்றி
விவேக் பதிவு எதில் உள்ளது //
என்னார், விவேக் பற்றி நான் எங்கும் பதிவு போடவில்லை. யாரோ விவேக் தேவர் இன மாநாட்டில் கலந்து பேசியதைப் பற்றித் திட்டிப் பதிவு போட்டிருந்தார்கள். அங்கு என்னுடைய கருத்தைப் போட்டிருந்தேன். அது யாருடைய பதிவு என்று கூட நினைவு இல்லை.
சுஜாதாவின் பேச்சில் கொஞ்சம் யாதார்த்தமும் கொஞ்சம் அபத்தமும் கலந்து தென்படுகிறது.
நம்மைத் தமிழர் அல்லர் என்கிறார்கள் என்ற இடத்தில் ஆதங்கம்.
ஆனால் அவர்களை விட நன்றாகவே எழுதுகிறேன் என்று சொல்லும் பொழுது பயங்கர சறுக்கல். அவரது திருக்குறள் உரையின் தன்மையை நான் அறிவேன். கொஞ்ச நாளைக்கு முன்னால் கூட சிலப்பதிகாரம் பற்றிச் சின்னதொரு தவறான தகவல் சொன்னார். அவருடைய கதைகள் நன்றாக இருக்கும். விறுவிறுப்பான எழுத்து அவருடையது. ஆனால் இலக்கியம் என்று வருகையில் சற்று மாற்றுக் குறைவுதான். ஆனால் அவருடைய ஆழ்வார்கள் ஒரு அறிமுகம் நல்ல பதிவு.
பாலச்சந்தர் விஷயத்தில் நான் பெரிதாக தவறு காணவில்லை. இந்தக் கூட்டத்தில் தானும் இருப்பதைப் பெருமையாக் கருதுகிறார். இது சாதி, மத, மொழிக் கூட்டத்தில் கலந்து கொள்கிற எல்லாரும் சொல்வதுதான்.
சாலமன் பாப்பையா என்ன பேசினார் என்பதையே எங்கும் காணவில்லை.
முத்தமிழ் மன்றத்தில் பார்த்திருப்பீர்கள் இந்தியா யாருடையது என ஒருமுறை படித்துப்பாருங்கள் தமிழ் நாடு யாருடையது தமிழர் எங்கிருந்து வந்தனர் என்பதெல்லாம்எழுதியிருந்தேன் எது எப்படியோ நாம் எல்லாம் தமிழர்கள். பார்ப்பனரையும் சேர்த்து தான்.
எல்லோரும் தமிழர் என்றால் - பார்ப்பனர்களுக்கு மட்டும் எப்பிடிங்க சமஸ்கிருத மொழி கண்டுபிடிச்சுப் பேசத் தோனிச்சு?!!
கனவுல வந்துச்சா 'பென்சீன்' வளையத்தின் அமைப்பு விஞ்ஞானிக்கு வந்தது போல?!!
Indo-european Mஒழியில சமஸ்கிருதமும் ஒன்று; அதன் வேர் இன்றைய 'மால்டோவா', 'ரொமானியா', 'உக்ரைன்' பக்கத்தில 'காகேசியன்' மலைத் தொடர் பக்கம் உள்ளது என Linguists நிரூபித்தாச்சு!
இன்னமும் ஏனுங்க பம்மாத்து வேலை?
// எல்லோரும் தமிழர் என்றால் - பார்ப்பனர்களுக்கு மட்டும் எப்பிடிங்க சமஸ்கிருத மொழி கண்டுபிடிச்சுப் பேசத் தோனிச்சு?!!
கனவுல வந்துச்சா 'பென்சீன்' வளையத்தின் அமைப்பு விஞ்ஞானிக்கு வந்தது போல?!!
Indo-european Mஒழியில சமஸ்கிருதமும் ஒன்று; அதன் வேர் இன்றைய 'மால்டோவா', 'ரொமானியா', 'உக்ரைன்' பக்கத்தில 'காகேசியன்' மலைத் தொடர் பக்கம் உள்ளது என Linguists நிரூபித்தாச்சு!
இன்னமும் ஏனுங்க பம்மாத்து வேலை? //
நியோ! ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிருக்கீங்க.
பார்ப்பனர்களுடைய மூலம் காகேசியம் மலையாவோ அல்லது கௌசிக மலையாவோ இருக்கட்டும். ஆனால் எப்படி அந்தணன் என்பதைப் பிறப்பால் தமிழ் ஏற்றுக் கொள்ளவில்லையோ. அதே போல தமிழன் என்பதையும் பிறப்பால் ஏற்றுக் கொள்ள முடியாது.
கலப்புகள் ஏற்படுவது எந்தப் பண்பாட்டிலும் தவிர்க்க முடியாது. வடமொழி உயர்ந்தது என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தமிழ் தாழ்ந்தது என்று சொல்கின்றவன் தமிழனாக இருக்கத் தகுதியே இல்லாதவந்தான்.
உவேசா தமிழுக்குச் செய்யாததையா நீங்கள் செய்திருக்கின்றீர்கள். அவர் தமிழரில்லையா? அவர் நிச்சயமாக உறுதியாகத் தமிழர்தான். ஆனால் தமிழ் வழிபாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் திருக்கோயில்களில் இடைஞ்சலாக இருப்பவர்கள் நிச்சயம் தமிழர்கள் அல்லர்.
ஆக அந்தணப் பண்பை திருக்குறளும் மற்ற தமிழ் நூல்களும் ஒருவரின் நடப்பை வைத்தே கொள்வது போல தமிழன் என்ற பதவியும் ஒருவனின் நடத்தையைப் பொறுத்தே.
பிறப்பால் மட்டும் ஒருவன் தமிழன் என்று சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. என்ன செய்தோம்? உச்சரிப்பிலாவது தெளிவு கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும். தமிழை ஒழுங்காக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் நூல்களைக் கற்க வேண்டும். இதை அத்தனையும் செய்யாமல் விட்டு விட்டு நான் தமிழன் நான் தமிழன் என்று பலர் கூச்சலிடும் நிலைதான் இன்றிருக்கிறது. இதுவும் மாற வேண்டும் என்பதில் ஐயமில்லை.
பார்ப்பனர்கள் 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்கிறார்களே . அப்படியென்றால் 15 சதவிகிதம் தருகிறோம் . இனிமேல் பார்ப்பனர்கள் 15 சதவிகிதத்திற்கு மேல் இருந்தால் எல்லா அரசு சார்ந்த சாராத அலுவலகங்களிலிருந்து விடுபட்டு விடுவார்களா..?
பார்ப்பனர்கள் சமக்கிருதம்(சமஸ்கிருதம்) மொழியை கண்ணும் கருத்துமாக காத்து பேசி வருகின்றனர். நாம் நமது தமிழ் மொழியை பிழையின்றி(உண்மையில் எனக்கு நிறைய எழுத்துப் பிழை உச்சரிப்பு பிழை வரும்) பேச எழுத முடியுமா?
//ஆனால் தமிழ் வழிபாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் திருக்கோயில்களில் இடைஞ்சலாக இருப்பவர்கள் நிச்சயம் தமிழர்கள் அல்லர்.//
நல்ல கருத்து இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்
நிலவு நண்பன்
மற்றவர்களுக்கு என்ன முறையே அதைத்தான் தங்களுக்கும் கேட்பர்.
பார்ப்பனர்களில் படு ஏழையில்லையா? மற்றவர்களில் உயர்ந்த பணக்காரர்கள் இல்லையா? அந்த வாழ்க்கைத் தரத்தில் தாழ்ந்தவர்களுக்கு கேட்கிறார்கள். அவ்வளவுதான்.
// பார்ப்பனர்கள் 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்கிறார்களே . அப்படியென்றால் 15 சதவிகிதம் தருகிறோம் . இனிமேல் பார்ப்பனர்கள் 15 சதவிகிதத்திற்கு மேல் இருந்தால் எல்லா அரசு சார்ந்த சாராத அலுவலகங்களிலிருந்து விடுபட்டு விடுவார்களா..? //
ரசிகவ், இது அவர்களுக்கு மட்டுமல்ல....நமக்குமே நன்மையாக முடியாது. ஒவ்வொரு சாதியினரும் மதத்தவரும் இப்பொழுது % கேக்குற நெலமைல இருக்குது இந்த இட ஒதுக்கீடு. அவங்க 15% கேக்குறது சரி தப்பூன்னு நான் வாதாட வரலை. ஆனால் எல்லாரும் கேக்குறோம். ஒவ்வொருத்தரும் அந்த %க்கு மேல இருந்தா வெளிய வந்துரனுமா? இந்த மாதிரி சிந்திப்பது யாருக்கும் பயன் தராது. அவர்களது சிந்தனை மட்டுமல்ல...இந்த மாதிரி சிந்தனைகளும் மாற வேண்டும் என்பது என் கருத்து.
// நிலவு நண்பன்
மற்றவர்களுக்கு என்ன முறையே அதைத்தான் தங்களுக்கும் கேட்பர்.
பார்ப்பனர்களில் படு ஏழையில்லையா? மற்றவர்களில் உயர்ந்த பணக்காரர்கள் இல்லையா? அந்த வாழ்க்கைத் தரத்தில் தாழ்ந்தவர்களுக்கு கேட்கிறார்கள். அவ்வளவுதான். //
என்னார், இந்த இடத்தில் சிறிது மாறுபடுகிறேன். பார்ப்பனர்கள் மட்டுமல்ல, இட ஒதுக்கீட்டை ஒவ்வொரு சாதியினரும் தங்களது சாதியில் உள்ள ஏழைகளுக்கே கேட்கிறார்கள். ஆனால் பாருங்கள் அதைப் பயன்படுத்துவதில் பெரும்பான்மையானவர்கள் ஓரளவு வசதி படைத்தவர்களும் வசதி படைத்தவர்களும்.
ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். தூத்துக்குடியில் பிற்படுத்தப்பட்டவர்களான எங்களுக்குப் பள்ளியில் எந்தச் சலுகையும் இல்லை. ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருடத் தொகை உண்டு. அவர்களில் ஏழைகளும் உண்டு. பெரும் பணக்காரர்களும் உண்டு. ஏழைகளுக்கு நல்லவிதமாகப் பணம் போய்ச் சேரும். ஆனால் பெரும் பணக்கார வீட்டுப் பையன்கள் அந்தப் பணத்தில் துணி வாங்குவதையும் செலவு செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். அப்பொழுது பள்ளி வாசலில் நெல்லிக்காய் வாங்கக் கூட என்னால் முடிந்ததில்லை. எங்கேயோ ஏதோ தவறு இருக்கிறது என்று தெரிகிறது. என்ன செய்ய வேண்டுமென்றுதான் தெரியவில்லை.
கல்லூயில் எனக்கு கிடைத்த உதவித்தொகையை நான் எனது சொந்த செலவு செய்து விட்டேன் வீட்டில் கேட்டர்கள் சூ எடுத்தென் பேட் பிட் எடுத்தேன் என்றேன் ஒன்றும் சொல்லவில்லை. தண்டச்செலவு செய்தால் தான் பாட்டு கிடைக்கும்.
//எங்கேயோ ஏதோ தவறு இருக்கிறது என்று தெரிகிறது. என்ன செய்ய வேண்டுமென்றுதான் தெரியவில்லை.//
கல்வி வேலை வாய்ப்புகளுக்கு ஜாதி அடிப்படை யில்லாமல் தகுதியடிப்படை என ஒன்று கொண்டு வந்தால் எல்லாம் அடிபட்டுப்போகும் ஜாதிபிரச்சணையே வராது. ஆனால் பள்ளதில் இருப்பவன் கண்டிப்பாக மேலே வரமுடியாது அவனுக்கு படிப்பும் வராது திறமையும் இருக்காது அதற்காகத்தான் ஜாதிஅடிப்படை என கொண்டுவந்தார்கள் அதையும் நீட்டிக்கொண்டே போகிறார்கள்.
Post a Comment