Sunday, September 11, 2005

உண்மையான தலைவர்


பெருந்தலைவர் காமராஜரை கட்சி கண்ணோட்டத்தோடு பார்க்ககூடாது. அவர்
மாபெரும் சகாப்தம்.அவரை சிலர் சர்வாதிகார போக்கு கொண்டவர் என்பார்கள். அது
தவறு. அவர் எல்லோர் கருத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டவர்.
அன்றைக்கு பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு மறைந்த போது
நேருவுக்கு பிறகு யார் பிரதமர் பொறுப்பை ஏற்பது என்று வந்தது.
அப்போது பெருந்தலைவர் அத்தனை எம்.பி.க்களையும் கலந்து ஆலோசித்து
லால்பகதூர் சாஸ்திரியை தேர்வு செய்தார். அது, எல்லோருடைய கருத்தையும் கேட்டு
அவர்கள் மனநிலை அறிந்து எடுத்த முடிவு.
அதே நேரத்தில் பெருந்தலைவர், காலத்துக்கு ஏற்ப முடிவெடுக்கும் தன்மை
கொண்டவர். நேரு மறைந்த போது, பெருந்தலைவர் அனைத்து காங்கிரஸ்
எம்.பி.க்களின் கருத்துகளையும் அறிந்து முடிவெடுத்தது போல லால்பகதூர் சாஸ்திரி
இறந்த போது அந்த முறையை கையாளவில்லை.
தேர்தல் மூலம்தான் பிரத மரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
அதை பெருந்தலைவர் ஏற்றுக் கொண்டார். இந்திரா காந்தி பிரதமராக வந்தார்.
பெருந்தலைவர் தோல்வியை கண்டு துவளாத மனம் கொண்டவர்.
இந்தியாவுக்கே வழி காட்டியாக இருந்து நேருவுக்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரியை
தேர்வு செய்து விட்டு தமிழகத்துக்கு வந்து தேர்தலை சந்தித்த பெருந்தலைவர்
தோல்வியை தழுவினார் .
ஆட்சி தி.மு.க.வுக்கு கை மாறியது. அப்போது இமயத்தின் உச்சியில் இருந்து அதள
பாதாளத்தில் தள்ளப் பட்ட நிலை பெருந்தலைவருக்கு ஏற்பட்டது. ஆனால் அவர்
தோல்வியை கண்டு துவண்டு போய் விடவில்லை.
``மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு''. இதை மனமுவந்து ஏற்று கொள்கிறேன். என்று
சொல்லி தோல்வியை ஏற்றுக் கொண்டார். அந்த பக்குவத்தை வேறு எந்த
தலைவரிடமும் நான் பாக்க வில்லை.
காமராஜர் காங்கிரஸ் கட்சியில் பலதரப்பட்டவர்களுடனும் இணைந்து ஒன்றர கலந்து
விட்டவர்.
தேர்தலில் தோற்றபிறகு சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
அப்போது எல்லோரும், மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுகள் இல்லை
என்று யாருடனாவது கூட்டு சேரவேண்டும் என்று பேசினார்கள்.
அப்போது காமராஜருக்கு கோபம் வந்தது. ஏல, போறவனெல்லாம் போங்க! என்னை
ஆளை விடுங்க யார் வேணுமானாலும் எங்கேயும் போய் சேருங்க என்று கோபமாக
பேசினார்.
அந்த கூட்டத்தில் நானும் பங்கு கொண்டிருந்தேன். பெருந் தலைவர் ஆத்திரப்பட்டு
பேசி விட்டதால் எல்லோரும் வெளியே போயிருவாங்க என்று நான் தலையை
தொங்க போட்டுக்கொண்டு இருந்தேன். சுமார் 15 நிமிடம் அமைதி நிலவியது.
திடீரென பெருந் தலைவரே பேச ஆரம்பித்தார். நான் எதுக்கு சொல்றேன் தெரியுமா!
என்றார். அவரை யாரும் பேச விடல்லை. 10 பேர் எழுந்து தேம்பி, தேம்பி அழுதனர்.
அதில் பணக்காரர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் உண்டு.
அவர்கள் எங்களுக்கு பதவி வேண்டாம் ஒன்றும் வேண்டாம் உங்களை விட்டு போக
மாட்டோம். தப்பா பேசினால் மன்னியுங்கள் என்று சொன்னதும் கூட்டமே அழுதது.
இது கட்சியில் பலதரப்பட்டவர்களுடனும் காமராஜர் இணைந்து ஒன்றர கலந்து
இருந்தார் என்பதற்கு சிறந்த சான்றாகும்.
கட்சியின் வெற்றி தோல் வியை விட மக்களின் வளர்ச்சியிலேயே காமராஜர்
கண்ணும் கருத்துமாக இருந்தார்.
காமராஜர் அவருடைய ஆட்சி காலத்தில் சிமெண்டு ஸ்டீல், மின்சாரம் போன்ற
அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதற்குரிய வகையில் இது போன்ற
தொழிற்சாலைகளை தமிழ் நாட்டில் பல இடங்களில் தொடங்கினார்.
அன்றைய திட்ட கமிஷனிடம் போராடி பெல் நிறுவனத்தை பெற்றார்.
அன்றைக்கு காமராஜரின் வற்புறுத் தலின் பேரில் பெல் நிறுவனத்தை அமைப்பது
தொடர்பாக மத்திய அரசில் இருந்து நிபுணர் குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்ய
வந்தார்கள்.
தமிழகம் முழுவதும் ஒரு வார காலம் சுற்றுபயணம் செய்து விட்டு தங்கள்
அறிக்கையில் அதற்குரிய இடம் இல்லை என்று தெரிவிப்பதற்கான நிலை இருந்ததால்
அதை அன்றைய முதல்வராக இருந்த பெருந் தலைவரை நேரில் சந்தித்து கூறி
னார்கள்.
அவர் ஏன்? என்ன சாத்தியகூறுகள் இல்லை? என்ன வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் தண்ணீர் நிறைய கிடைக்க வேண்டும். போக்குவரத்து வசதி
வேண்டும், பல ஊர்களுக்கு ரெயில்வே தொடர்பு வேண்டும், மின்சார வசதி வேண்டும்.
பெருமளவுக்கு காலி இடம் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை கேட்ட
காமராஜர் அப்படியா! என்று கூறி விட்டு சற்று நேரம் மவுனமாக இருந்தார். பிறகு
அவர்களிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்.
நாளைக்கு திருச்சி போகி றீர்கள். அங்கு இருந்து தஞ்சை சாலையில் தஞ்சை வரை
செல்கிறீர்கள். அங்கு போய் பார்த்து விட்டு வந்து என்னிடம் பேசலாம்! முடிவு
பண்ணலாம் என்றார்கள்.
நிபுணர்களும் மறுநாள் திருச்சியில் இறங்கி தஞ்சை வரைக்கும் சென்று பார்த்து
பிரமிப்படைந்தார்கள். பெருந் தலைவரிடம் தொடர்பு கொண்டு நாங்கள் நினைத்த
இடம் அப்படியே இருக்கிறது என்று சொல்லி, ஏற்றுக் கொண்டார்கள்.
இப்படியாக மக்களின் வளர்ச்சி யிலேயே கண்ணும் கருத்தையும் செலுத்தினாரே தவிர
காங்கிரஸ் கட்சியின் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாத தலைவர் அவர்.
அவர் பதவியில் இருந்த போதும் சரி இல்லாத போதும் சரி அனைவரிடமும் மனித
நேயத்தோடு பழகி வந்தார். மற்ற வர்களும் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும்
சரி ஒன்று போலவே நடத்தினார்.
இதையெல்லாம் எண்ணி தான் டெல்லியில் காமராஜர் சிலையை ராஜீவ்காந்தி திறந்து
வைத்து பேசிய போது பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்தாலும் சரி,
இல்லாவிட்டாலும் சரி காமராஜ் காமராஜ் தான் என்று கூறினார்.
ஆம் காமராஜருக்கு நிகரான தலை வரில்லை அவருக்கு நிகர் அவரே. ஒப்பில்லாத
பெருந் தலைவருடைய எளிமையை கடைபிடிப்பதுதான் அவருக்கு நாம் செலுத்தும்
சிறந்த அஞ்சலியாகும்.
ராஜ்யசபா முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.டி. ராமச்சந்திரன் பெருந் தலைவரோடு
பழகிய நாட்களில் கண்ட காமராஜரின் நற்பணபுகளை வாசகர்களிடம் நினைவு
கூறுகிறார் எஸ்.கே.டி.ராமச்சந்திரன் இருந்தது. ஆனால் அவரை பார்க்க பரோலில்
வரக்கூட மறுத்து, சுதந்திர போராட்டத்தில் உறுதியாக இருந்தார் காமராஜர்.
இதன்பின்னர் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கைதான அனைவரும் விடுதலை
செய்யப்பட்டனர். காமராஜரும் விடுதலையானார். விருதுநகருக்கு வந்த அவரை ஊர்
மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அவர்களிடம் பேசிய காமராஜர் ``உங்களின் அளவற்ற அன்பை பெற்று இருப்பதால்
நான் தலைக்கனம் பிடித்தவனாக மாறினாலும் மாறலாம் அல்லவா? அந்த மனநிலை
ஏற்படாமல் இருக்க எனக்காக நீங்கள் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்'' என்றார்.
அவரது அடக்கத்தை கண்டு மக்கள் வியந்து பாராட்டினார்கள். பின்பு, வீட்டுக்குள்
சென்று தனது பாட்டியை பார்த்தார்.
பேரனை கண்டு மகிழ்ந்த பார்வதி அம்மையார் 2 நாட்களுக்கு பிறகு மரணம்
அடைந்தார். பாட்டியின் மறைவு காமராஜரை பெருந்துயரில் ஆழ்த்தியது.
இதன்பின்னர் காமராஜர் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பிரதிநிதியாக
தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே காம ராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முதன்
முதலாக ஏற்ற முக்கிய பதவி.
காந்தி_இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்கள் தேவைக் கான
உப்பை தயாரித்து கொள்ள அரசு சம்மதித்தது. இதன்பின்னர் ஆங்கிலேய அரசு
பிரதிநிதியாக இந்தியாவுக்கு வந்த வெலிங்டன் பிரபு இந்த ஒப்பந்தத்தை
ஏற்கவில்லை.
அப்போது வெளிநாடு சென்று திரும்பிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.
காரணமே இல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது, காமராஜரும்
கைதானார்.
இதைத்தொடர்ந்து 1933_ம் ஆண்டு சென்னை மாகாண சதி வழக்கு ஒன்று பதிவு
செய்யப்பட்டது. இந்த வழக்கில் காமராஜரும் சேர்க்கப்பட்டார். ஆனால்,
விசாரணையில், காமராஜர் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டதால் வழக்கில்
இருந்து விடுவிக்கப்பட்டார்.
இது போலவே, விருதுநகர் வெடிகுண்டு வழக்கிலும் காமராஜர் அவரது நண்பர்கள்
முத்துச்சாமி, மாரியப்பன் ஆகியோரை சேர்த்து வழக்குகள் ஜோடிக்கப்பட்டன. இந்த
வழக்கிலும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது தெரிய வந்ததும் விடுவிக்கப்பட்டனர்.
காமராஜர் மீது ஆங்கிலேய அரசு வழக்குகள் போட்டு சலித்து போனது. ஆனால்,
காமராஜர் எதை பற்றியும் கவலைப்படாமல் சளைக்காமல் விடுதலை போராட்டத்தில்
ஈடுபட்டார்.
1936_ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக சத்தியமூர்த்தி
தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காமராஜர் கட்சியின் செயலாளர்களில் ஒருவராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருவரும், தோளோடு தோள் நின்று கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
1937_ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு சாத்தூர்
எம்.எல்.ஏ. ஆனார். 1940_ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக
காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941_ம் ஆண்டு இந்திய மக்களை கேட்காமலேயே இந்தியாவை 2_வது உலகப்
போரில் ஆங்கிலேய அரசு ஈடுபடுத்தியதை கண்டித்து, போராட்டம் நடந்தது. இந்த
போராட்டத்தின்போது காமராஜர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில்
அடைக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் விருதுநகர் நகரசபைக்கு தேர்தல் நடந்தது. சிறையில் இருந்தபடியே
இந்த தேர்தலில் போட்டியிட்டு, காமராஜர் நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டார். காமராஜர் விடுதலை செய்யப்படும் வரை துணை தலைவராக இருந்து
நகரசபை கூட்டத்தை நடத்தி வந்தார்.
பின்பு, காமராஜர் விடுதலை செய்யப்பட்டு விருதுநகர் திரும்பினார். நகரசபைக்கு அவர்
வந்தபோது அங்கு நகரசபை கூட்டம் நடந்து கொண்டு இருந்தது.
துணைத்தலைவர் கூட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தார். காமராஜரை கணடதும்
அவர் எழுந்து நகரசபை தலைவர் இருக்கையில் அமரும்படி காமராஜரை கேட்டுக்
கொண்டார். தலைவர் இருக்கையில் காமராஜரும் அமர்ந்தார்.
அவரை பலரும் பாராட்டி பேச காமராஜரோ ``என் குறிக்கோள் இந்திய
விடுதலைக்காக பாடுபடுவதுதான். உள்ளூரில் இந்த பதவியில் இருந்து கொண்டு
செய்ய நான் விரும்பவில்லை. இதை நீங்களே கவனித்து கொள்வது நல்லது.நீங்கள்
அன்போடு அளித்த தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னை தவறாக
நினைக்க வேண்டாம்'' என்று கூறி பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார்.
விடுதலை போராட்டத்தில் அவர் கொண்டு இருந்த வேட்கை இதன்மூலம் தெரிய
வந்தது. அவரை பாராட் டாதவர்களே இல்லை.
``வெள்ளையனே வெளியேறு'' போராட்டத்தில் சிறை சென்ற காமராஜர் தனக்கு
கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி நிறைய புத்தகங்கள் படித்தார். இயற்கையாக
அவரிடம் சேர்ந்திருந்த நுண்ணறிவுடன் நூலறிவும் சேர்ந்ததால் அவர் சிறந்த அரசியல்
அறிஞர் ஆனார். காமராஜர் சிறையில் இருந்தபோதுதான் அவரது அரசியல் குரு
சத்தியமூர்த்தி மறைந்தார்.
காமராஜர் திருமணமாகாதவர். அவருக்கென்று எந்த தொழிலும் கிடையாது. நாட்டு
விடுதலைக்காக உழைப்பதையே அவர் தனது தொழிலாக கொண்டு இருந்தார். சிறந்த
லட்சியவா தியான அவரை பொது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் மிகவும்
மதித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி யில் காமராஜருடைய செல்வாக்கு உயர்ந்திருந்ததை
போலவே, சட்ட சபையிலும் அவரது செல்வாக்கு உயர்ந்தது. காமராஜர் நினைத்தால்
யாரையும் முதல்_அமைச்சராக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
அப்போது நடந்த தேர்தலில் அமைச்சரவை அமைக்கப்பட்டு ஆந்திர கேசரி பிரகாசம்
முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்குள் அவர் காங்கிரஸ்
கட்சியினரின் வெறுப்புக்கு ஆளானதால் அடுத்த ஆண்டே ஓ.பி. ராமசாமி என்பவரை
காமராஜர் முதல் அமைச்சராக்கினார். இதன்பிறகு அவரது போக்கும் பிடிக் காமல்
குமாரசாமி ராஜாவை முதல் அமைச்சராக்கினார், காமராஜர்.
இப்படி 4 ஆண்டுகளில் 3 பேரை முதல் அமைச்சராக்கும் அளவுக்கு காங்கிரசில்
காமராஜரின் செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. ஆனால், காமராஜர் வழக்கம்போல
எளிமை யாகவே வாழ்ந்தார். அனைவரிடமும் இனிமையாக பழகினார்.
1947_ம் ஆண்டு மார்ச் மாதம் பிரகாசம் முதல் அமைச்சர் பதவியை இழந்தார். அந்த
ஆண்டு ஆகஸ்டு 15_ந் தேதி தான் இந்தியாவுக்கு சுதந்திரமும் கிடைத்தது. இதற்கு
பிறகுதான் காமராஜரின் செல்வாக்கும் ஓங்கியது. அவர் யாரை ஆதரித்தாரோ அவர்கள்
முதல் அமைச் சரானார்கள். அவர் யாரை விரும்பவில்லையோ, அவர்கள் முதல்
அமைச்சர் பதவியை இழந்தனர். அடுத்த தேர்தல் வரை இந்த நிலை நீடித்தது.
நன்றி மாலை மலர்

Monday, September 05, 2005

வெள்ளையரில் ஒரு நல்லவர்



கர்னல் பென்னி குக்:
21ம் நூற்றாண்டின் அசாத்திய மாகத் தெரிகிற நதி நீர் இணைப்பை 1895ல் நிகழ்திக் காட்டியவர் ஆங்கிலேய எஞ்சினியர் கர்னல் பென்னி குக். பெரும் சவால்களுக்கு இடையில் கேரளா நோக்கிப் பாய்ந்து கடலில் வீணான முல்லை - பெரியாறு நதிகளின் உபரி நீரை தமிழகத்தை நோக்கித்திருப்பிவிட்டார். இந்த அணை பல முறை நதிநீர் ஓட்டத்தால் தகர்க்கப்பட்டது. ஆங்கிலேய அரசு திட்டத்தைக் கை விட்டது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள
வீடு, உடமைகளை விற்று சொந்த முயற்சியால் அணையைக் கட்டினார் குக். அணையிலிருந்து சுரங்கம் அமைத்து முல்லை பெரியாரின் உபரிநீரை வைகை நதியில் பாயச்செய்தார்.

நன்றி இந்தியா டுடே

வெள்ளையன் கொள்ளையன் என ஏக வசணத்தில் வைதாலும்
இப்படியும் வெள்ளையுள்ளம் கொண்ட நல்லவர்களும் உண்டு

இப்படித்தான் திருச்சிராப்பள்ளி நகருக்கு தனது சொந்த பணத்தைக்கு கொண்டு தண்ணீர் கொண்டு வந்தார் இரத்தினவேலு தேவர். ஆனால் இவர் நம்ம ஊர்காரர்