Wednesday, January 25, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் - 3 -

காந்திக்கு எதிரே இரண்டடி தூரத்தில் அந்த மணிதன் வந்து நின்று கொண்டான். சிறிய ஆட்டோமாட்டிக் பிஸ்டல் ஒன்றால் மூன்று முறை சுட்டான்.
முதல் குண்டு பாய்ந்தது; இயங்கிக் கொண்டிருந்த காந்தியின் கால் தரையில் பதிந்தது. ஆயினும் அவர் நின்று கொண்டே யிருந்தார். இரண்டாவது குண்டு பாய்ந்தது; ரத்தம் பீரிட்டுக் காந்தியின் வெண்மையான துணிகளைக் கறைப்படுத்தத் தொடங்கியது. அவருடைய முகம் சாம்பலென வெளிறிட்டது. கூப்பியகைகள் மெல்லத் தளர்ந்து தொங்கின. ஒரு புஜம் மட்டும் கணநேரம் ஆஷாவின் கழுத்தில் பதிந்திருந்தது.
"ஹே ராமா!"என்று காந்தி முணுமுணுத்தார். முன்றாவது குண்டு வெடித்தது வெளிவந்தது. துவண்ட உடல் தரையிலே படிந்து விட்டது. அவருடைய மூக்குக் கண்ணாடி மண்ணிலே விழுந்தது. பாதரட்சைள் பதங்களை விட்டு நழுவிக் கழன்றன.
ஆபா, மனு இரண்டுபேரும் காந்தியின் தலையைப் பிடித்து நிமிர்த்தினார்கள். அன்புக் கரங்கள் அவரைத் தரையில் இருந்து தூக்கி, பிர்லா மாளிகைக்குள் அவருடைய அறையில் கொண்டு போய்ச் சேர்த்தன.

Tuesday, January 24, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் - 2 -

வரிசையாகத் தூண்கள் நிற்கும் நீளமான செம்பாறாங்கல் மண்டபப் பாதையில் இரண்டு நிமிஷ நேரம் நடந்து, பிரார்த்தனை மைதானத்துகுச் செல்ல வேண்டும. தினந்தோறும் இந்த இரண்டு நிமிஷ நேரத்திலும் காந்தி தம் தொல்லைகளை யெல்லாம் மறந்து தாமாஷகப் பேசுவார். அன்று ஆபா கொண்டுவந்து கொடுத்தகாரட் கீரைச் சாறு பற்றிக் கிண்டல் செய்தார்.
" ஆகவே நீ எனக்கு மாட்டுத் தீனியைக் கொடுத்து விட்டாய்" என்று சொல்லி அவர் சிரித்தார்.
" இல்லை, இது குதிரைத் தீனி என்றல்லவா பா சொல்லுவார்கள்" என்று ஆபா பதிலளித்தாள். பா என்று அவள் குறிப்பிட்டது காந்தியின் காலஞ்சென்ற மனைவியை.
"வேறு யாருக்கும் பிடிக்காததை நான் சுவைத்துச் சாப்பிடு வதால், நான் எவ்வளவு பெரியவன்?" என்று கேலியாகச் சொன்னார் காந்தி.
"பாபு(அப்பா), உங்கள் கைக் கடிகாரம் அநாதையாகி விட்டது போல் அழுதுகொண்டிருக்கும் அதை இன்று நீங்கள் பார்க்வேயில்லை" என்றாள் ஆபா.
"அதை ஏன் நான் பார்க்க வேண்டும்? நேரத்தைக் கவனித்துக் கொள்ளும் கணக்குப் பிள்ளைகள் தான் எனக்கு இருக்கிறார்களே!" என்று பட்டென்று பதிலளித்தார் காந்தி.
" அந்தக் கணக்குப் பிள்ளைகளையுந்தான் நீங்கள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை" என்று மனு குறிப்பிட்டாள். காந்தி மறுபடியும் சிரித்தார்.
இந்த நேரத்தில் மைதானத்துக்கு அருகே உள்ள புல்தரையில் அவர் நடந்துகொண்டிருந்தார். தினந்தோறும்மாலையில் நடக்கும் பிரார்த்தனைக்காகச் சுமார் ஐந்நூறு பேர்கள் கூடியிருந்தார்கள் . " இன்று பத்து நிமிஷம் தாமதித்துவிட்டேன். இப்படித் தாமதிப்பது என்றாலே எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. ஐந்து மணி அடிக்கும் போது இங்கே நான் கணக்காய் வந்திருக்க வேண்டும்" என்று தமக்குத் தாமே பேசுவது போல் காந்தி உரக்கச் சொன்னார்.
பிரார்ததனை மேட்டுக்கு ஐந்து சிறுபடிகள் இருந்தன. அவற்றை அவர் வேகமாகக் கடந்தார். மர மேடைக்கு இன்னும்சில கஜ தூரம் தான் இருக்கும். பிரார்த்தனை நடக்கும் போது அந்த மர மேடையிலேயே அவர் உட்கார்ந்திருப்பார். கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பபாலோரும் எழுந்துநின்றார்கள். பலர் முன்னே நகர்ந்து வந்தார்கள். சிலர் அவருக்காகச் சந்தில் வழி விலக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். அவருக்கு மிக அருகே இருந்தவர்கள் அவருடைய பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். ஆபா, மனு இருவருடைய தோள்களிலுமிருந்து கைகளை எடுத்துக் குவித்து, ஹிந்து முறையில் காந்தி எல்லாருக்கும் வணக்கம் செலுத்தினார்.
அப்போது ஒரு மனிதன், முழங்கையால் இடித்துத் தள்ளிக் கொண்டு கூட்டத்திலிருந்து சந்துக்குள் வந்து சேர்ந்தான். வழக்கப்படி காந்தியின் பாதத்தில் விழுந்து வணங்க விரும்பிய ஒரு பக்தன் மாதிரி அவன் தோன்றினான். ஆனால் தாங்கள் நேரம் கடந்து விட்டதால், அவனை மனு தடுத்து நிறுத்த முயன்றால்: அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டாள். ஆனால், அவனோ அவளை உதறி ஒரு புறம் தள்ளினான். அவள் உருட்டியடித்துக்கொண்டு போய் விழுந்தாள். காந்திக்கு எதிரே இரண்டடி தூரம்........

நாளை மீதம்

Monday, January 23, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் -1 -

மாலை மணி 4. 30 கடைசி உணவை ஆபா உள்ளே கொண்டு வந்தாள் . இந்த உணவுக்குப் பிறகு வேறு உணவை அவர் உண்ணப் போவதில்லை. ஆட்டுப் பால், சமைத்வையும் , பச்சையுமான காய் கறிகள், ஆரஞ்சுப் பழங்கள், ஒரு பச்சடி இவைதான் அந்த உணவு எலுமிச்சம் பழம், வடித்த வெண்ணெய், இஞ்சி, கற்றாழைச் சாறு இவற்றின் கலவை அந்தப் பச்சடி. புது டில்லியில் பிர்லா மாளிகையின் பின்புறம் உள்ள தமது அறையில் காந்தி உட்கார்ந்திருந்தார். இந்த உணவை அருந்திக் கொண்டே, சுதந்திர இந்தியாவின் புதிய சர்ககாரில் உதவிப் பிரதம மந்திரியான சர்தார் வல்லப் பாய் படேலுடன் அவர் பேசிச்கொண்ருந்தார். படேலின் மகளும் காரியதரிசியுமான மணிபென் கூட இருந்தாள். நடந்த சம்பாஷணை மிகவும் முக்கியமானது. படேல், பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இந்த இரண்டு பேருக்கும் இடையே மணஸ்தாபம் ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் உலவின . வேறு எத்தனையோ விவகாரங்களைப் போலவே இந்த விவகாரத்தையும் மகாத்மாவின் காதில் போட்டிருந்தார்கள்.

காந்தியும் படேலும் அவருடைய பெண்ணும் மட்டும் தனியே இருப்பதைக் கண்ட ஆபா, தான் குறுக்கிடச் சற்றுத் தயங்கினாள். ஆனாலும் காந்திக்கு எதுவும் நேரந் தவறக்கூடாது. இது அவளுககுத் தெரியும். எனவே, கடைசியில், மகாத்மாவின்நிகல் முலாம் புசிய கைக் கடிகாரத்தை எடுத்து வெரிடம் காட்டினாள். "நான் உடனே கிளம்பியக வேண்டும்" என்று சொல்லிக் காந்தி எழுந்தார். பக்கத்துச் சிற்றறைக்குச் சென்று விட்டு, மாளிகையின் இடது பக்கத்துப் பெரிய தோட்டத்தில் உள்ள பிரார்த்தனை மைதானத்தை நேக்கிப் புறப்பட்டார். மகாத்மாவுடைய பங்காளியின் பேனான கனு காந்தியின் இளம் மனைவி ஆபா. மற்றோரு பங்காளியின் பேத்தி மனு. இந்த இரண்டு பேரும் அவருடன் சென்றார்கள். இந்த இரண்டு பேருடைய தோள்கள் மீதும் அவர் கைகளைச் சார்த்திக் கொண்டார். "இவர்கள் தான் நான் நடக்க உதவும் ஊன்று கோல்கள்" என்று காந்தி சொல்வார்.
மீதம் நாளை

Friday, January 20, 2006

நண்பர் பால சந்தர் கணேசனுக்கு

கடிதத்திற்கு பதில்

//"மாணவ_மாணவிகளுக்கு தினம் அரை வேளைதான் படிப்பு. மீதி அரை நேரம், ஏதாவது கைத்தொழில் கற்க வேண்டும்" என்பதே ராஜாஜியின் கல்வித்திட்டம்.


2 ஷிப்டுகளில் பள்ளிக்கூடம் நடத்தி, அதிகமானவர்களை சேர்க்கலாம் என்று ராஜாஜி நினைத்தார்.

"என்ன தொழில் கற்பது? அரசாங்கமே தொழில் கல்விக்கு ஏற்பாடு செய்யுமா?" என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர்.

"அப்பா செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்றுக்கொள்ளலாம்" என்று ராஜாஜி பதிலளித்தார்.//

கற்றுக் கொள்ளலாம் என்று தான் சொன்னார் அதையே தொடர்ந்து செய்யச் சொல்ல வில்லை. அரசியலில் ஆதாயம் பெற மாற்றுக் கட்சியினரால் இதை பெரிது படுத்தி பூதாகாரமாக்கினர்.
ராஜாஜி அன்று சொன்னது இன்றும் நடக்கிறது கட்சித்தலைவர் மகன் அவருக்கு பின் அந்த கட்சித் தலைவர் , நடிகர் மகன் நடிகர், மந்திரி மகன் மந்திரி கிட்டத்தட்ட இதுவும் குலத்தொழில் மாதிரி அன்று எதிர்த்தவர்கள் 'நான் அன்று எதிர்த்தேன் இன்று எனது மகனுக்கு மந்திரி பதவி வேண்டாம்' என யாரும் கூறவில்லை டாக்டர் மகன் டாக்டர் தான். எஞ்சினியர் மகன் எஞ்சினியர் தான் அவர் என்ன சொன்னார் பாதி நேரம் ஏதாவது தொழில் கற்றுக்கொள்ளுங்கள் என்றார் இவர்கள் கேட்டதற்கு தந்தையுடன் கூட இருந்து உதவிசெய்யட்டும் அதை கத்துக்கொள்ளட்டும் என்றார் COLLECTOR வேலைக்குப் போக வேண்டாம் என்றா சொன்னார்?, அதாவது ஒன்று கிராமத்தில் சொல்லவார்கள் ஆகாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என. இதை பெரியார் சொல்லியிருந்தால் ஆகா ஓகொ என புகழ்ந்திருப்பார்கள் சொன்னவர் பார்ப்பணர் என்ற ஒரே காரணத்தால் அன்று எதிர்த்தனர். பார்பணிசியம் என்பது வேறு அதில் எனக்கு உடன்பாடு கிடையாது அதை இதோடு இணைக்கக்கூடாது. சொன்னதை சொன்ன கருத்து நல்ல கருத்து என்றால் யார் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ராஜாஜி சொல்வதற்கு முன்னமே நாம் அந்த வேலையைத்தான் செய்தோம் பள்ளிகூடம் விட்டது வயலுக்கு போனோம், ஒவ்வொருவரும் அப்டித்தான்.
ஒரு மாணவன் 6 மணிநேரம் தொடர்ந்து படிக்க முடியாது 4 மணிநேரம் படித்து விட்டு மீதி நேரம் ஏதாவது தொழில் கத்துக்கொள்ளட்டும் என்பது நல்ல திட்டம்தான்.



இப்போது குலகல்வி திட்டம் பற்றி என்னுடைய பதில்.
உண்மையில் பிள்ளைகள் அதுவும் ஏழை பிள்ளைகள்,பல ஜாதியிலிருந்தும் உள்ள ஏழை பிள்ளைகள் பள்ளி கூடம் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?. அதற்கு எத்தனையோ வழிகள் உண்டு.

அதனில் ஒன்று தான் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவது. இதைதான் காமராஜர் செய்தார்.(மதிய உணவு திட்டம்). பின்னர் எம்.ஜி.ஆர் விரிவாக்கினார்(சத்துணவு திட்டம்). இந்த திட்டங்கள் பெரிய வெற்றி பெற்றன என்பதும் நிறைய பிள்ளைகள் பயன்பெற்றனர் என்பதும் வரலாறு.

இது போன்று ஒன்றும் செய்யாமல் எதற்கு ஜாதி அடிப்படையில் தொழில் கல்வி கொண்டு வர வேண்டும்? இதில் என்னார் வேறு சொல்கிறார். டாக்டர் பையன் டாக்டராகிறார், வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது என்று எடுத்துகாட்டு வேறு. என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து. டாக்டர் பையன் டாக்டராக இருப்பது வெற்றியே... வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது வெற்றியே.
ஆனால் செருப்பு தைப்பவர் பையன் செருப்பு தைப்பனாகவே இருப்பது வெற்றியா?.

மேலும் டாக்டர் பையன் டாக்டராக வருவது குல தொழிலாக அல்ல. ஏனெனில் எல்லா ஜாதியிலும் டாக்டர்கள் இருக்கிறார்கள். அதை குடும்பத் தொழில் என்று கூறுங்கள்.

ஆக்க பூர்வமான எடுத்த காமராஜரையோ, எம்.ஜி.ஆரையோ யாரும் குறை கூறி எழுதுவதில்லை என்றும் இராஜாஜி இதை செய்திருந்தால் அவரையும் சமுகம் பாராட்டியிருக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.

நான் முட்டால் தான் புத்தியுள்ள புத்திமான்கள் எனது பின்னுட்டத்தையம் தங்கள் பதிலை ஒரு முறையல்ல பல முறை படித்து பாருங்கள் அடுத் பதிவில் சற்று விளக்கமாக எழுதுகிறேன்.
குலத்தொழில் தான் செய்ய வேண்டும் என்று ராஜாஜி சொன்னாரா? அல்லது தந்தை செய்யும் தொழில் உடன் கூட இருக்கச் சொன்னாரா?அதை முதலில் தெரிந்து கொண்டு பேசுங்கள்.
அப்பாவுக்கு பக்கபலமா உறுதுணையா இருக்கச் சொன்னால் நான் ஊர்சுத்தத்தான் போவேன் என்றால் போங்கள். இந்தி படித்தால் நல்லது என்றார்கள் முடியாது என்றால் போங்கள் யாருக்கென்ன . மது கடை திறக்க வேண்டாம் !!,லாட்டரி சீட்டு ம் நடத்த வேண்டாம் என்று நல்லதை சொன்னால் முடியது என்றால் போங்கள் யாருக்கென்ன .

Sunday, January 15, 2006

வருவாய்த்துறை 2

வருவாய்த் துறை என்பது எப்படி வளர்ந்தது என்பதை பார்த்து விட்டு பிறகு பேசுவோம்
அந்த காலங்களில் நிலவரி வசூல் தான் நாட்டின் முக்கிய வருமானம். அதுவும் இன்றைய கால கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிக அதிகம் தான் நில வரி செலுத்த முடியாமல் கூட நிலத்தை அரசிடமே ஒப்படைத்தவர்களும் உண்டு. நிலவரி வசூல் செய்ய கிட்டி என்ற ஒரு கருவியை வைத்து விரல்களை நெரித்ததும் உண்டு; விரல்களில் துணியை சுற்றி எண்ணெய் ஊற்றி நெருப்பை வைத்தும் வசூல் செய்த காலங்களும் உண்டு . திமுக ஆட்சிக்கு வந்த ஆண்டே லெவி என்ற பெயரில் விவசாயிகளிடம் வலுக் கட்டாயமாக நெல்லை பெற்றதும் உண்டு . இவற்றையெல்லாம் பிறகு பார்ப்போம்.
கிபி. 985 – 1011 ராஜராஜ சோழன் ஆண்டு வந்தபோது வருவாய் நிர்வாகத்தை சீர் அமைத்தார்

கி.பி. 1175 – 1194 முகமது கோரி என்ற முஸ்லீம் மன்னர் இந்தியாவை அரசாட்சி செய்தார் அவருடைய காலத்தில்தான் மொகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு வழி வகுக்கப்ட்டது.

கி.பி. 1539 – 1545 அரசாட்சி செய்த ஷெர்ஷா சூரி (டைகர்) வருவாய் நிர் வாகத்தை மேலும் சீர் அமைத்தார் அவருடைய காலத்தில்தான் சென்னைக்கும் கல்கத்தாவிற்கும் இடையே கிரண்ட் ட்ரங் ரோடு அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் தான் முதன் முதலில் ஒரு ரூபாய் நாணயம் உலோகத்தில் கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1556 – 1605 அக்பர் அரசாட்சி செய்த போது இடைப்பட்ட காலத்தில் இந்துக்கள் மீது விதிக்கப்ட்ட சிசியா என்ற வரியை ரத்து செய்தார்.

கி.பி. 1792 – ஆம் ஆண்டில் லார்டு காரன் வாலிஸ் என்பவரால் அனுப்பப் பட்ட கர்ணல் (Red) என்பவர் ரயத்துவாரி அல்லது குல்பி சிஸ்டம் என்ற முறையை ஏற்படுத்தனார் .

கி.பி. 1793 – ஆண்டு லார்டு காரன் வாலீஸ் என்பவர் முதன் முதலாக வங்காளத்தில் நிலையான நிலவரித்திட்டத்தை அமுல் படுத்தினார். மேலும் அவர் முதன் முதலாக சிவில் சர்வீஸ், ஜுடிசியல் சர்வீஸ் ஆகிய பதவிகளுக்கு போட்டி தேர்வுகள் மூலம் தேர்ந் தெடுக்க உத்திரவு பிரப்பித்தார், அதற்கு முன்பு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபையினரால் பதவி சம்பந்தப்பட்ட எந்த வரை முறையின்றி விருப்பம் போல் அளிக்கப்பட்டது.

கி.பி. 1802 ல் தமிழ் நாட்டில் நிலையான நிலவரித்திட்டம் கொண்டு வரப்பட்டது

கி.பி.1806 ல் Lord William Benedict என்பவர் சென்னையில் கவர்ணராக இருந்த போது நிலையான நிலவரித்திட்டத்தை பாளையம் அல்லது ஜமீன் பகுதிகளுக்கு அமுல்படுத்துவதை ஆட்சேபித்தார்.

கி.பி. 1828 ல் - 1835ல் இதே Lord William Benedict இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொருப்பேற்ற போது ஆங்கிலம் கட்டாய பாடமாக்க வழிவகை செய்யப்பட்டது.

கி.பி.1812 ல் தமிழ் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் பாளையம் மற்றும் ஜமீனை சேர்த்து நிலையான நிலவரித்திட்டம் திரும்பவும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1817 ல் சர் தாமமஸ் மண்ரோ என்பவர் முழுமையான நிலவரிதிட்டம் அமுலுக்கு வந்துள்ளதா என்பதை கண்காணித்தார்.

கி.பி. 1858 ல் நிலவரி திட்ட இயக்குணராக இருந்த திரு.நெவிஸ் (Nevis) என்பவர் முதன் முதலாக மண் வயணம், பாகு பாடு, தமிழ் நாட்டிற்கு நிலவரி திட்டத்தை கொண்டு வந்தார், ரெகுலர் செட்டில் மெண்ட் - ஒரிஜினல் செட்டில் மெண்ட் - மெயின் செட்டில் மெண்ட் கொண்டு வந்தார்.

கி.பி. 1867 ல் பிரதி 30 வருடங்களுக் கொருமுறை மறு நிலவரித் திட்டம் (Resettlement) நடத்தப்பட வேண்டுமென அரசு ஆணைபிரப்பித்து Resettlement என்பது Resurvey செய்தபிறகு தான் செய்யப்படவேண்டும் அதேபோல் ஒரிஜினல் செட்டில்என்பது (Initial) ஆரம்ப சர்வே செய்தபிறகு தான் ஒரிஜினல் செட்டில் செய்யப்படவேண்டும்.

கி.பி. 1937 – இருதியாக இந்த ஆண்டில் தான் மறு நிலவரித்திட்டம் நடை பெற்றது 1937க்குப் பிறகு நாளது வரை மறுநிலவரித் திட்டம் நடை பெறவில்லை. 1937ல் ஆங்கிலேயரகள் ஆட்சி செய்த போது எதிர் காலத்தில் மறு நிலவரித்திட்டம் குறித்து ஏதும் ஆணைகள் பிறப்பிக்கக் கூடாதென அரசு ஆணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேய ஆட்சிக்குப்பிறகு சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சி பொருப்பில் உள்ளவர்களால் மறு நிலவரித் திடம் குறித்து ஆணைகள் ஏதும் பிறப்பிக்கவில்லை

வருவாய்த் துறை

.அரசு திட்டம்!* இயற்கை சீற்ற நிவாரண பணிகளுக்குத் தனித்துறை* வருவாய்த்துறையை இரண்டாக பிரிக்க ஆலோசனை

தமிழக அரசில் மிகப் பெரிய துறையான வருவாய்த் துறை நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அமைப்பிலேயே இன்னும் செயல்பட்டு வருகிறது. சுனாமி, வெள்ள நிவாரணம் போன்றவற்றை சமாளிக்க பேரிடர் மேலாண்மைத் துறை தனியாக இல்லாததால் வருவாய்த் துறை இதர பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறது.
அரசில் மிக முக்கியமான துறை வருவாய்த் துறை. இத்துறைச் செயலரின் கீழ் பல்வேறு பெரிய துறைகள் உள்ளன. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை, நில நிர்வாகம், நில சீர்திருத்தம், சர்வே, பதிவுத் துறை, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு என பல துறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஐ..எஸ்., அதிகாரி தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு துறை கமிஷனரின் கீழும் ஐ..எஸ்., அந்தஸ்தில் பல இணை கமிஷனர்கள் உள்ளனர். இதுதவிர, டி.ஆர்.., அந்தஸ்திலான அதிகாரிகளும் பலர் உள்ளனர்.
மாவட்டங்களை பொறுத்தவரை அனைத்து துறைகளுமே கலெக்டரின் கட்டுப்பாட்டில் வருகின்றன. எனவே, நிவாரணம் வழங்குவது என்றாலும், இலவச வேட்டி, சேலை போன்ற திட்டங்களை செயல்படுத்துவது என்றாலும் அனைத்து துறை ஊழியர்களையும் ஒருங்கிணைத்து கலெக்டர்கள் இப்பணிகளை மேற்கொள்வர். ஆனால், மாநில அளவில் அதிகாரிகள் மட்டத்தில் இத்துறை சரிவர பிரிக்கப்படவில்லை. இதனால், பல திட்டங்களை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து வறட்சி, சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நிலவுவதால் இதற்கான பணிகளில் வருவாய்த் துறை கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், தற்போது வருவாய்த் துறையே முடங்கிப் போயுள்ளது. பல மாநிலங்களில் பேரிடர் மேலாண்மைக்கு என தனித் துறை உள்ளது. குஜராத்தில் இத்துறையின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ..எஸ்., அதிகாரி இறையண்புவின் சகோதரர் உள்ளார்.
தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைக்கு என தனித் துறையும் இல்லை. வருவாய் நிர்வாகம் மற்றும் நிவாரண, மறுவாழ்வுப் பணிகள் கமிஷனரின் கீழ் இத்துறை வருகிறது. வருவாய் கமிஷனரின் கீழ் ஐ..எஸ்., அதிகாரிகளான மூன்று கூடுதல் கமிஷனர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரின் கீழ் பேரிடர் மேலாண்மை வருகிறது. சுனாமி ஏற்பட்ட போது இதற்காக தனி அதிகாரி மற்றும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டனர்.
சுனாமிக்கு பிறகு பேரிடர் மேலாண்மைத் துறை தேசிய அளவிலும், மாநில அளவிலும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு ஆகியும் மாநில அளவில் இத்துறை தனியாக அமைக்கப்படவில்லை. தற்போது வெள்ள நிவாரணப் பணிகளை மிகப் பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் போதிய அதிகாரிகள் மற்றும் நிர்வாக அமைப்பு இல்லாமல் அரசு தடுமாறுகிறது.
அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றங்களை சமாளிக்கவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் தனியாக துறை அமைக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. தனி செயலர் கட்டுப்பாட்டில் வருவாய்த் துறையும், மற்றொரு செயலர் கட்டுப்பாட்டில் பேரிடர் மேலாண்மைத் துறையும் உருவாக்கப்பட வேண்டும். அல்லது வருவாய்த் துறை செயலரின் கீழ் வருவாய் நிர்வாக கமிஷனர் மற்றும் பேரிடர் மேலாண்மை கமிஷனர் என இரு கமிஷனர் பதவிகளை உருவாக்கி, தனித் துறையாக செயல்படுத்த வேண்டும்.
அவ்வாறு வருவாய்த் துறையை மாற்றி அமைத்தால் மட்டுமே இது போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிவாரணப் பணிகளை அரசு சிறப்பாக கண்காணிக்க முடியும்.
இது தினமலர் செய்தி இதைப் பற்றி சற்று சிந்திப்போம்

http://www.dinamalar.com/2006jan14/frontpage.asp

Friday, January 13, 2006

பிராமன சங்கம்

மணிகண்டன்

2006-ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படணும் .

யாரும் பயப்படத்தேவையில்லை எதற்காக பயப்படணும் இது எல்லாம் ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து அல்ல. மண்ணையாண்டவர் யாரோ மனையை ஆண்வர்கள் யாரோ. இமய மலையில் கொடியை நாட்டியவனும் இலங்கையின் மீது படையெடுத்தவனும் தமிழன்

எச். ராஜா எம்.எல்..,(பா...):

மாற்றங்களை நமதாக்கிக் கொள்ள வேண்டும். நாம் கும்பிடுகிற தெய்வத்தை நிந்திக்கிறவர்களை பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தால் நம் பக்தியிலே குறையிருக்கிறது என்று அர்த்தம். எதற்கு பொறுத்திருக்க வேண்டும்.? இத்தனை கோடி மக்கள் இருக்கும் இந்தியாவிலே இந்துக்களை மட்டும் நிந்திக்க காரணம் என்ன?

நாம்கும்பிடுகிற தெய்வத்தை திட்டுவது யார் நமது குடும்பத்தைச்சேர்நத இந்துக்கள் தான் நம்மைத்தான் திட்ட முடியும் அடுத்த வீட்டுக்காரனை திட்டினார் அவன் உதைப்பான் அதான் நம் தெய்வங்கை திட்டுகிறார் தெய்வம் இல்லை என்று சொன்ன ஈ.வே. ராமசாமி மற்றதெய்வங்கை செறுப்பால் அடித்தாரா ?ஏன் செய்ய வில்லை? அவரது சிஷ்யர்கள் அவர்வழியை பின் பன்றுகிறார்கள்.

ஆமாம் உண்மைதான் திராவிட பாரம்பரியம் இந்துக்களை மதிப்பதில்லை இந்துகோயில் களுக்க அரங்காவளர்களாக இருப்பார்கள் இந்துகளையே திட்டுவர் ஒருவர் இந்து வை திருடன்என்பார் (ஒரு வேலை வெண்ணை திருடன் கண்ணனைச் சொன்னாரோ)

நடிகர் டெல்லி கணேஷ்:
நாமெல்லாம் உதாரணப் புருஷர்கள். நாசாவில் ராக்கெட் பறப்பதற்கு நாம்தான் காரணம். பிராமண இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது. ஒரே மனித இனமா வாழ்ந்துவிடலாம் என்று பார்த்தோம் முடியவில்லை. இப்போ ஜாதி ரீதியாகத்தான் வாழமுடியுது. தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா அது ஒரு சுலோகம். பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன்.

உண்மைதான் நாட்டை ஆள்வது நாட்டை பாது காப்பது உணவு உற்பத்தி செய்வதுரோடு போடுவது நாத்து நடுவது அறுவடை செய்வது தொழிற்சாலையில் உழைப்பது எல்லாம் மற்றவர்கள். குடியனவன் சேற்றில் கை வைக்காவிட்டால் சோற்றில் நீங்கள் கைவைக்க முடியுமா?. ராக்கெட் விடாமல் சாப்பிடலாம் !வயலில் பாடுபடாமால் உண்ணமுடியுமா?

சரசுவதி ராமநாதன்:

அங்கு 10 வீடுகளுக்குப் போனேன். மூன்று வீடுகளில் பிராமண பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கலப்பு மணங்கள் நமது கலாச்சாரத்தை சீரழிக்கிறது. பிராமின் என்று ஒரு கலாச்சாரம் இருந்தால் போதும், உட்பிரிவுகள் கூடத் தேவையில்லை என்று ஆச்சார்ய சுவாமிகள் கூறியிருக்கிறார்.

அவர்கள் சொல்வது தெரிகிறது இது காலத்தின் கட்டாயம் இதை யாராலும் மாற்ற முடியாது

மற்றவர்கள் பொறுப்பேற்க முடியாது

எழுத்தாளர் சுஜாதா:
நம்முடைய எண்ணிக்கை என்ன? நம்மை அவர்கள் தமிழர்கள் அல்லர் என்கிறார்கள், நமக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். (கைதட்டல்) சங்க காலத்தில் மிகச் சிறந்த புலவரான கபிலர் பிராமணர் .

எனக்கு ஆங்கிலேயரை விட நல்ல ஆங்கிலம் தெரியும் என்னை ஆங்கிலேயன் என சொல்ல முடியுமா? தமிழ் தெரிந்தால் தமிழனா.. வீரமாமுனிவர் வந்து இருந்து தமிழ் கற்று காவியம் படைத்தார் அவர் தமிழன் என்ற சொல்ல முடியுமா?

சினிமா இயக்குநர் பாலசந்தர்:

லவுகீக பார்ப்பானாக இருந்தாலும், வைதீகப் பார்ப்பானாக இருந்தாலும், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். பார்ப்பனர் வெறி என்பது அவர்களின் ரத்த ஓட்டமாக இருக்கிறது என்பதற்கு இன்னும் என்ன ஆதாரம் வேண்டும்? மாநாட்டில் பார்ப்பனர் சிலர் அரிவாளைச் சுழற்றிக் காண்பித்துள்ளனர். இதன் பொருள் வெளிப்படையானது.

இவரே பல படங்களில் பார்பன பெண்களை கேவளமாக சித்தரித்து படம் எடுத்தாரே

விபீஷணர் படலம் இல்லாமல் இராமாயணம் நிறைவு பெறுமா?
மாநாட்டில் பேச்சு வியாபாரி சாலமன் பாப்பையா பங்கு கொண்டு பார்ப்பனர்களைத் தலையில் தூக்கி வைத்து சதிராட்டம் போட்டு இருக்கிறார். அவாள் இல்லாமல் தமிழ் ஏது என்று அவாள் மெச்ச இச்சகம் பேசி ஆழ்வார்ப்பட்டம் பெற்றுவிட்டார். தகுந்த கூலியும் பெற்று இருப்பார் - பேச்சு

இராவணனை காட்டிக் கொடுத விபீணனை மண்ணிக்க முடியது

டோண்டு ராகவன்

ஆனால் ஒன்றை முதலிலேயே கூறிவிடுகிறேன். அரிவாளைத் தூக்கிக் காட்டுவது சற்று மிகைப்படுத்தலே ஆகும். கும்பலில் வந்த ஆக்ரோஷம் என்று கூறினாலும் சற்றே அடக்கி வாசித்திருக்க வேண்டுமென்றே நான் கூறுவேன்.

சரியாகச் சொன்னீர்கள்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் வா.வே.சு அய்யரின் பங்கு அபரிமிதமானது அதைவிட வாஞ்சினாத அய்யரின் பங்கு மேலானது. தமிழ் தாத்தா ஊ.வே.சு அய்யரின் பங்கு மறக்க முடியாது. ஐம்பெருங்காப்பியங்களை கண்டுபிடித்து உலகுக்கொடுத்து உத்தமர் ஊ.வே.சு அய்யரை அந்த காப்பியங்கள் உள்ளவரை மறக்கமுடியாது. வீரவாஞ்சிநாதனை மறக்கமுடியுமா? மேட்டூர் அணை வருவதற்கு காரணமாயிருந்த அந்த அய்யரைத்தான் மறக்க முடியுமா தமிழகத்தில் அனேக தொழிற்சாலைகள் வர காரணமாயிருந்த ஆர். வெங்கட்ராமனைத்தான் மறக்கமுடியுமா? 10ஆயிரம் பார்ப்பனர் உயிர் கொடுத்து காத்த திருவங்கத்தைத்தான் மறக்கு முடியுமா? எல்லலோரும் சங்கம் வைத்துக் கொண்டது போல் அவர்களும்சங்கம் வைத்துள்ளார்கள். அதற்கு ஏன் இத்தணை எதிர்ப்பு


அவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர் பார்பனர் சரி நீங்கள் உங்கள் ஜாதியை அவர்கள் சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. ஏன் இந்த பாகு பாடு காலங்கள் மாறுகின்றன. அனைவரும் ஒரே ஜாதி ஒரே தமிழர். அனவைரும் ஒரு தாயின் பிள்ளைகள்

யாரும் சாதிச்சங்கம் அமைக்க கூடாது பள்ளி கல்லூரிகளிலும் சான்றிதழிகளிலும் சாதிபெயர்வரககூடாத தேர்தலிலும் சாதிக்காக சீட் ஒதுக்கக் கூடாது.



Thursday, January 12, 2006

விவேகானந்தரின் பிறந்த நாள

"எழுமின்.....விழிமின்"

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று
1863 ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிறந்தார்.

சிகாகோ சொற்பொழிவுகள்


1. வரவேற்புக்கு மறுமொழி
செப்டம்பர் 11, 1893
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!


இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். (ஒரு பகுதி மட்டும்).
கம்பரைப் பற்றிச் சொல்லும் பொழுது சடையப்பவள்ளலைப் பற்றியும் சொல்லித்தானே ஆகனும் அது போல.

இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்றால் விவேகாந்தரை உலகறிய செய்தவர் பாஸ்கரசேதபதியே ஆவார். 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்து சமயங்களின் மாநாட்டில் தான் கலந்து கொள்வதாக இருந்த முடிவை மாற்றி விவேகானந்தரை அங்கு அனுப்பி வைத்தது மட்டுமின்றி அவர் 4 ஆண்டுகள் அங்கு தங்கி இந்து மதத்தின் அருமை பெருமைகளை உலகளவில் பறை சாற்றி விட்டு வருவதற்கு உதவி புரிந்தவர் இவர்! விவேகானந்தர் தாயகம் திரும்பிய போது தாயகத்தில் பதிக்கும் முதல் காலடி, என் தலை மீது தான் இருக்க வேண்டும் என வேண்டி, அத்துறவியின் பாதத்ததை தன் தலையில் தாங்கியதோடு அவரை ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று அந்த ரதத்தை தானெ இழுத்து சென்ற அரச பெருமான் அவர். விவேகானந்தர் கால் பதித்த இடத்தில் கல்வெட்டு ஏற்படுத்தி அதில் அன்று அவர் பொறித்த "சத்திய மேவ ஜெயதே"(வாய்மையே வெல்லும்) இன்றும் இந்திய அரசின் தேசிய வாசகமாக உள்ளது!
ஒரு நாட்டின் மன்னர் ஒரு துறவிக்கு கொடுத்த மரியாதை அது.
நாம் கொடுக்கும் மரியாதை இன்று அவர் பிறந்த நாளில் அவரை நினைத்துப் பார்ப்பது.

Wednesday, January 11, 2006

இலங்கை போர்

இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போர் நிறுத்தம் எந்த நேரத்திலும் வாபஸ் ஆகிஅரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் பெரிய அளவில் போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகிறது.

போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறாவிட்டாலும் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஆங்காங்கே அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மன்னார், யாழ்ப்பாணம், திரிகோணமலை பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 115 பேர் பலியாகி விட்டனர்.ராணுவத்தின் கெடுபிடி காரணமாக தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அதிரடி தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினரும் கொழும்பு நகருக்குள் ஊடுருவி உள்ளனர்.(செய்தி)

இரண்டாம் உலகப் போரில்

இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால், இந்தியாவை சுலபமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தார் ஹிட்லர். ஆனால் அவருடைய முயற்சி பலிக்கவில்லை. "இந்தியா இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்து கஷ்டப்படுகிறது. நாங்கள் இந்தியாவை விடுவிப்போம்" என்று 1942 ஏப்ரலில் ஜப்பான் அறிவித்தது.

அதற்கு உடனடியாக நேரு பதில் அளித்தார். "இந்திய மக்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வார்கள். அதற்கான வீரமும், விவேகமும் இந்திய மக்களுக்கு உண்டு. எனவே இந்திய மக்களின் விடுதலைக்கு ஜப்பான் உதவி தேவை இல்லை" என்று அறிவித்தார். இந்தியாவுக்கு இங்கிலாந்து எதிரி என்றபோதிலும் ஹிட்லரும், ஜப்பானும் உலகத்துக்கே எதிரிகளாக இருந்தார்கள். எனவேதான் ஜப்பானின் உதவி தேவை இல்லை என்று நேரு கூறினார்.

இதனால் உலகப்போர்களில் இந்தியாவிற்கு நேரடியான பாதிப்பு ஒன்றும் இல்லாமல் போனது.

எப்படியோ அமெரிக்கா தலையிடாமல் இருந்தால் சரி .ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம் என்பர்.