Wednesday, November 23, 2005

மாண்டவர் மீண்டார்

கரூர் அருகே இறந்ததாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற பெண் மீண்டும் வீ்ட்டிற்கு உயிருடன் திரும்பிவந்தார்.
கரூர் ஈரோடு மெயின் ரொடு குட்டக்கடையிலிருந்து இரண்டு கி.மீ.யில் உள்ளது ஆலம்பாளயம் என்னும் கிராமம் இக்கிராமத்தில் வசிப்பவர் நல்லுச்சாமி இவரது மனைவி பழனியம்மாள் இவருக்கு பல ஆண்டுகளாக ஆஸ்த்துமா நோய் இருந்து வந்து பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர் ; பிறகு பெரிய டாக்டர்கள் பார்த்ததும் காப்பாற்ற முடியவில்லை என்று கூறியதால் இறந்து விட்டதாகக் கருதி அனைத்து சடங்குகளும் செய்து . சுடுகாட்டிற்கு கொண்டு சென்று விறகுகள் மேல் வைப்பதற்கு இருதிச்சடங்குகள் செய்யம் பெழுது உடல்அசைவதைப்பார்த்து உயிர் உள்ளதால் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
தினமலர் செய்தி

Sunday, November 20, 2005

ஆந்திராவில் ஆற்றில் அணை

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் கிளை நதியான பாபி கொண்டலு நதி ஓடுகிறது. இந்த நதி மலைகளின் நடுவில் ஓடுகிறது.

இதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் இயற்கை எழில் மிகுந்த ஆறு ஆகும். இதை பல கவிஞர்கள் பாராட்டி பாடியிருக்கிறார்கள். பல திரைப்படமும் எடுத்து இருக்கிறார்கள்.

அத்தகைய இயற்கை எழில் கொஞ்சும் நதியின் குறுக்கே புதிய அணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்து இருக்கிறது. மராட்டியம் மற்றும் சத்தீஷ்கார் மாநில எல்லையில் சுமார் 601 கிலோ மீட்டர் (இது பிழையாக இருக்கலாம்) தூரம் இந்த அணை கட்டப்படுகிறது.

இதற்கு போலவரம் நீர்த்தேக்கம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதை கட்டி முடித்தால் ஆண்டு முழுவதும் 95 கி.மீ. வரை இங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெறும்.

ஆனால் அழகிய பாபி கொண்டலு நதி காணாமல் போய் விடும். இதன் அருகே அமைந்துள்ள பல்வேறு கிராமங்கள் அழிந்து விடும்.

ராமகிருஷ்ண பரமஹம் சரின் சீடர் பாலானந்த சுவாமி பேரண்டம் பள்ளி ஆதிவாசிகள் கிராமத்தில் கட்டிய ஆசிரமம் அழிக்கப்படும். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள்.
மாலை மலர்
தமிழ் நாட்டில் இலவச வேட்டி சேலை வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய். இங்கு எந்த நலத்தி்ட்டமும் வரப்போவதில்லை ஜெயலலிதா தொடங்கினால் கருணாநிதி கிடப்பில் போட்டுவிடுவார். கருணாநிதி தொடங்கினால் ஜெயலலிதா கண்டுக்க மாட்டார். கர்நாடகா , ஆந்திராவில் நீர் அணைகள் அதிகரிக்கிறது , இங்கு காங்கிரசாருடன் போய்விட்டது.

Thursday, November 17, 2005

50 கோடி செலவு அபு, மோனிகாவை கொண்டுவர

மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய தாதா அபு சலீமையும், மோனிகாவையும் இந்தியாவிற்கு கொண்டுவர இதுவரை ஆன செலவு ரூ.50 கோடி.
  1. போர்ச்சுகல் நீதி மன்றத்தில் வாதாட சீனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் ஒரு மணிநேரத்திற்கு. இரண்டு ஜுனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் ஒரு மணி நேரத்திற்கு. ஒரு நாளைக்கு ஒரு சீனியர் இரண்டு ஜுனியர் வாதாடினர். ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணிவரை விசாரணை நடந்தது. தினமும் ரூ. 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை வக்கீல் கட்டணமாக செலவு செய்யப்பட்டதாம். மொத்தம் 15 நாட்கள் விசாரணை நடந்ததில் சி.பி.ஐ.க்கு ரூ.15 கோடி செலவு ஆனது.
  2. சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் இந்திய வக்கீல்களுக்கு போக்குவரத்து, தங்கும் செலவு ரூ. 3 கோடி, இவ்வாறு செஷன்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு மொத்தம் ரூ12 கோடி செலவு செய்யப்பட்டது.
  3. உச்சநீதிமன்றத்தில் வாதாட போர்ச்சுகல் சீனியர் வக்கீல் சீனியர் வக்கீல் மணிக்கு ரூ.10 லட்சம் கட்டணம் வாங்கினார். ஜுனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் கட்டணம் 2 சீனியர் வக்கீல்களையும் 2 ஜுனியர் வக்கீல்களையும் அமர்த்திக் கொண்டதில் ஒரு மணி நேர விசாரணைக்கு ரூ.30 லட்சம் செலவு. உச்சநீதிமன்றத்தில் தினமும் 6 மணி நேரம் வீதம் 6 நாட்கள் விசாரணை நடந்தது. இதனால் தினமும் ரூ.1.80 கோடி வக்கீல் கட்டணம் கொடுக்கப்பட்டதாம்.
  4. உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல்களையே அரசியல்சாசன நீதிமன்றத்துக்கும் சி.பி.ஐ. பயன்படுத்திக் கொண்டது. அங்கு 4 நாட்கள் விசாரணை நடந்தது. தினமும் ரூ.1.80 கோடி வீதம் 4 நாட்களுக்கு மொத்தம் ரூ7.2 கோடி வக்கீல் கட்டணம் கொடுக்கப்பட்டதாம்.
  5. நாடு கடத்தல் உத்தரவை அரசியல் சாசன நீதிமன்ற் பிறப்பித்ததும், டில்லியில் இருந்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று லிஸ்பனில் 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தனர். இதற்கான போக்குவரத்து மற்றும் தங்கும் செலவு ரூ.3 கோடி லிஸ்பனில் இருந்து அவர்களை அழைத்து வர தனி விமானத்துக்கு வாடகை ரூ.75 லட்சம்.
  6. மற்றும் இதர செலவுகள் ஆவணங்கள் தயாரிப்பு வாகனங்கள் வாடகை, சாப்பாட்டுச் செலவு மற்றும் இதர செலவுகளையும் சேர்த்தால் மொத்தம் ரூ.50 கோ.............டி.......
இவர்களுக்கு தூக்குத்தண்டணை கூடாதாம் . நாட்டின் பணம் எவ்வளவு சேதம் பாருங்கள்.
தகவல் தினமலர்

Sunday, November 13, 2005

திருவெறும்பூரில் காமராஜர்

ஒரு முறை திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது அதில் பெருந்தலைவர் காமராஜர் கலந்து கொண்டார். வந்து அரை மணிநேரம் ஆனது மற்றவர்கள் பேசினர் பாராளுமண்ற வேட்பாளர் எஸ்.பி.தங்கவேல் முத்துராஜா அவர்கள் போசுவார் என விழாத்தலைவர் கூறி உட்காரபோனார், என்ன நினைத்தாரோ காமராஜர் எழுந்தாதர், "முத்துராஜாவும் பேசவேண்டாம் ஒன்னும் பேசவேண்டாம் நா எங்கடுப்ப தீத்துத்துட்டுப்போறேன்"( இந்த சொல் முன்பக்கம் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்) என மைக்கின் முன்னிற்று, "நீங்க யாரும் கோவிச்சுக்கக் கூடாது நான் திருச்சினாப்பள்ளி போய் அங்கிருந்து ட்ரெய்ன் பிடித்து கொள்ளம் (கேரளா) அவசரமாக போக வேண்டும் திருச்னாபள்ளி போவதற்குள் இரண்டு ரயில்வே கேட் இருக்கு வருத்தப் படவேண்டாம் உங்கள் வாக்குகளை எஸ்.பி.முத்துராஜா வக்கில் அவர்களுக்கு போட்டு ஜெயிக்க வைத்து டெல்லிக்கு அனுப்பிவையுங்கள்." என சொல்லிவிட்டு சென்று விட்டார். எங்கு BHEL கொண்டு வந்தாரோ அதே இடத்தில்.
இதை நான் நேரிடையாக கேட்டது.
ஒரு முறை மாற்றுக் கட்சியினர் காமராஜருக்கு கல்யாணம் ஆகவில்லை குடும்பத்தப் பத்தி அவருக்கு என்ன தெரியும் என்றனர். அதற்கு காமராஜர் கலந்து கொண்ட கூடத்தில் இருவர்
ஒருவர்: ஏன்யா உங்க தலைவர் காமராஜருக்கு கல்யாணமேஆகல குடும்பத்திப் பத்தி அவருக்கு என்ன தெரியும்?
இரண்டாமவர்: ஏன்யா உங்க அண்ணாதுரைக்கு கலயாணஆயிடுச்சே ஒரு புழு பூச்சி உண்டா? என்று அவர் கேட்க
எழுந்தார் தலைவர் இருவர் சட்டையையும் பிடித்து ,"நீங்க ரொம்ப பேசீட்டிங்க உட்காருங்க." என அனுப்பிவிட்டார்.
இதை நான் படித்தது காமராஜர் வரலாற்றில்.

Saturday, November 12, 2005

கொம்பன் (கொம்புமுளைத்தவன்)

கொம்பன் என்றால் தலைவன், பலம் பொருந்தியவன், திறன்மிகுந்தவன்; இவர் கையில் ஒரு கொம்பு ,அதாவது குச்சி,தடி, கம்பு வைத்திருப்பார் அந்த கால வழக்கம்; அதாவது நாடாளும் மன்னருக்கு செங்கோல் கிராமதலைவனுக்கு அம்பலக்கோல். பேச்சு வாக்கில் நீ என்ன கொம்பு உள்ளவனோ? என்பதை கொம்பனோ! என்பது தான் மாறி கொம்பு முளைத்தவனோ ஆனது .
இதைத்தான் சனிபகவானுக்கு தனது நாவை அடகுவைத்த நமது நடிகை சுகாசினியம்மையார் கூறியது. ஒரு நிகழ்சியில் 100 நபர்கள் வந்தால் அதில் 10 நபர்கையில் கொம்பிருக்கும் அந்த பத்துபேர்தான் அவர்களது தலைவன் என அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இந்த பத்து நபர் எடுக்கும் முடிவை அந்த கிராமமே ஏற்றுக் கொள்ளும் இந்த வழக்கம் பழங்காலந்தொட்டு வழிவழியாக தொடர்ந்து வருகிறது இன்றும் கூட சில கிராமங்களில் உண்டு.
அந்த கோல் பெரும்பாலும் கருப்பாக இருக்கும் அது எப்படி கருப்பானது . விறகு அடுப்புவைத்து சமையல் செய்யும் அடுப்படிக்கு மேல் வைத்திருப்பார்கள் அந்த புகை பட்டு பட்டு அது கருப்பாகிவிடும்.

Friday, November 11, 2005

எங்கள் ஊரில் காமராஜ்

அப்பொழுது நான் பள்ளி மாணவன் எனக்கு வயது 8 அல்லது 9 இருக்கும் 1959 அல்லது 1960 இருக்கும், என நினைக்கிறேன் சரியாக ஞாபகம் இல்லை; எங்கள் ஊருக்கு பெருந்தலைவர் காமராஜரும், கக்கன்ஜியும் வருகிறார்கள் என சிறிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சொல்லப்போனால் கிராமமே விழாக்கோளம் பூண்டிருந்தது என்று சொல்லலாம்; அந்த அளவிற்கு மாவிலை வேப்பிலை தோரணங்கள் கூடவே காங்கிரஸ் கொடிகள்; எனது மாமா வேம்புராஜ் தொண்டமார் தான் பஞ்சாயத்து போர்டு தலைவர் அன்று. அவர் வீட்டு விஷேசம் போல விருந்து; வெளியூரிலிருந்து வந்த கட்சிக்காரர்களுக்கு அங்கு தான் சாப்பாடு. ஏன் என்றால் 5 மைல் சென்றால் தான் சுமாரான சாப்பாட்டுக்கடை BHEL வரவில்லை. ஊரில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் சட்டை போட மாட்டார்கள் வேட்டி துண்டுதான் அணிவது வழக்கம். ஒருவர் ஊரின் முக்கியஸ்த்தர் தனது வெள்ளை வேட்டையை இடுப்பில் கட்டி அதை இறக்கிவிட்டால் காமராஜர் வருவதற்குள் அழுக்காகிவிடுமாம் அதற்கா சுற்றிவைத்துக் கொண்டிருந்தார் கையில் ஒரு வெள்ளைத்தாள் அதில் எங்களது நீர் நிலைகளுக்கு பெருந்தலைவர் கொண்டு வந்த புதிய மேட்டுக் கட்டளைக் கால்வாயிலிருந்து தண்ணீர் கேட்டு எழுத்திய மனு அதில் என்னால் காணமுடிந்த வாசகம் மஹா ரா ரா ரா ஸ்ரீ காமராஜ் அய்யவுக்கு
மட்டும்தான் படிக்க முடிந்தது. மாலை சுமார் 6 மணி இருக்கும் மூன்று கார்களில் காமராஜர் கக்கன்ஜி வந்தனர். அப்பொழுத மனுக்களை முண்டியடித்துக்கொண்டு கொடுக்க முன்வந்தவர்களை காமராஜ், "ஏ ஏ ஏய்யா இப்படி தள்ளுறீங்க எல்லா மனுவையும் பொருமையாக நான் வாங்கிக்கொண்டுதான் போகப்போகிறேன்" என்றார். அப்பொழுது மனுக்களை ஒருவர் மற்றவர்களிடமிருந்து மொத்தமாக வாங்க முயற்சிக்கும் போது நான் சொன்ன அந்த பெரியவர். அவரிடம் கொடுக்காமல்," காமராஜிடம் தான் கொடுப்பேன்" என சத்தமாகச் சொல்லவும். காமராஜரின் பார்வை அங்கு திரும்பியது," யாராப்பா அங்கு விடுப்பா அவரை" என எழுந்து அங்கு போய் அந்த பெயரியவரிடம்," என்ன குறை" என கேட்க அந்த பெரியவர்," ஏங் கொளத்துக்கு ஆத்துத்தண்ணீர் வேணும்யா இஞ்சினீர் முடியாதுங்ரார்" என சொல்ல. இந்த பகுதி காரர்களுக் காகத்தானேய்யா தண்ணீர் கொண்டு வருகிறோம் உங்களுக்கு எப்படி முடியதுன்னு அந்த இஞ்சினீயர் சொன்னார் நாளையே நான் கேட்கிறேன் என அடுத்த நாள் கேட்டு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

Tuesday, November 08, 2005

கக்கன்ஜி

நல்லவர் வல்லவர் காவல்துறை அமைச்சராக எட்டு ஆண்டுகள் பணியாற்றியவர் தனக்கென

எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர் காமராஜரின்நிழல் போவே இருந்தவர் ஒரு முறை

இரயிலில் ஒரு குறிப்பட் ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுத்து இரயில் தூங்கி விட்டார்

அவர் இறங்க வேண்டிய ஸ்டேசனைத் தாண்டி வண்டி சென்று அடுத்த ஸ்டேசனில் நின்றது

அங்கு இறங்கிய அவரை டிக்கெட் பரிசோதகர் சோதணை செய்து அபராதம் கட்டும்படி கூற

அவ்வழியே வந்த ஒரு காங்கிரஸ் தொண்டர் இச்சம்பவத்தைப் பார்த்து," ஐயா இவரை

யாருன்னு தெரியலையா? இவர் தான் முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி" எனச் சொல்ல ; அந்த

பரிசோதகர்," கேள்விப்பட்டிருக்கேன் இவர் எனத்தெரியாது" என தனது வருத்தத்தை

தெரிவித்து; அபராதம் வாங்காமல் அனுப்பியுள்ளார்.

ஒரு முறை எம்.ஜி.யார். முதல்வராக இருக்கும் போது மதுரை அரசு மருத்துவமனையில்

கக்கன்ஜி சாதாரண மக்களுடன் மக்களாக தரையில் படுத்து மருத்துவ சிகிச்சை செய்து

கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு உடனே அவரை பார்த்து சென்னைக்கு அனுப்பிவைத்து

நல்ல முறையில் வைத்தியம் பார்க்க ஏற்பாடு செய்தார்.

வெள்ளையர் ஆட்சியில் சிறையில் அடைப்பதற்கு முன் நீதிபதி விசாரணை செய்வாராம்.

என்ன சாப்பிடுவார்கள் விசாரணை செய்வது வழக்கம் அதற்கு அரிசி சோறுதான் என

எல்லோரும் கூறவர்.

அவ்வாறு கேட்கும் போது ஒரு நபரை நீதிபதி கேட்டிருக்கார்," உணக்கு கேள்வரகு கூழ்

கொடுக்கச் சொல்கிறேன்" என்றாராம் அதற்கு அவர்," அது எனக்குத் தெரியாதே" என்றாராம்.

"சரி அப்படியனால் வாரம் இரண்டு நாள் உணக்கு அரிசி சோறு தரச்சொல்கிறேன்"

என்றாராம். கக்கன்ஜியிடம் கேட்டதற்கு எதைக்கொடுத்தாலும்சரி என்று ஏற்றுக்

கொண்டாராம்.

அவர் மராமத்து இலாக பார்த்தபோது ஒரு முறை மதுரையில் பாலம் கட்ட ஒரு

தொகையை மதிப்பீடு செய்து ஒதுக்கப்பட்டதாம் கக்கன்ஜி அந்த தொகைக்குள் மேற்படி

வேலையை முடித்து விட்டார் காமராஜர்," என்ன செலவு இன்னும் எவ்வளவு பணம் தேவை"

என கேட்க கக்கன்ஜி,"ஐயா ஒதுக்கிய தொகையிலே மீதம் இருங்குங்க" என்றாராம்

இன்று அந்த தொகையும் பத்தாமல் மறுபடியும் மதிப்பீடு செய்து அதிகமாக சுருட்டக்கூடிய

காலத்தில் அவர் நாட்டிற்காக அவ்வாறு பாடு பட்ட மக்கள் தலைவரை இம்மக்கள் மறந்து

விட்டனரே.

பார்த்ததுண்டா இப்படி பெரிய மனிதரை

கேட்டதுண்டா இவர் பெயரை

சொன்னதுண்டா இவரது செயலை

அனுபவித்துக் கொண்டே மறந்து விட்டோமோ அம்மாமனிதரை

இப்படிப்பட்ட தன்னலங்கருதா தங்கங்களை மறந்ததால் போற்றாததால் தான் அப்படிப்பட்ட

நல்லவர்கள் இப்பூமியில் தோன்ற வில்லை போலும்