Sunday, February 26, 2006

பாலசிங்கம் பேச்சு

விடுதலைப்புலிகள்- இலங்கை அரசு இடையே முதல் கட்ட சமாதான பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் பி.பி.சி. ரேடியோவுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தை எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. அரசு ஒத்துக் கொண்டபடி தமிழர் பகுதிகளில் செயல்படும் ஆயுத குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்தால் இலங்கையில் அமைதி ஏற்படும்.

ராணுவமும் அதன் புலனாய்வு துறையினரும் தமிழர்களுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தினால் தமிழர் பகுதியில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கூடிய அதிகாரமும், செல்வாக்கும் விடுதலைப்புலிகளுக்கு உண்டு.

விடுதலைப்புலியின் கட்டளையை மீறி யாரும்செயல் பட முடியாது. தமிழர் பகுதிகள் முழுவதும் விடுதலைப் புலிகளின் அதிகாரத்தின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் செயல்படுகிறது.

இலங்கை தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத் தன்மைக்கு உதவியாக அமையும். இந்திய அரசுடன் விடுதலைப்புலிகளுக்கு மறைமுக தொடர்பு இருக்கிறது. ஆனால் இதுபற்றி பகிரங்கமாக வேறு எதுவும் கூற முடியாது.

இவ்வாறு பாலசிங்கம் கூறினார்
மாலை மலர்
என்ன இது இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது பாலசிங்கத்தின் பேச்சு.
இன்னமும் துயரத்தை மறக்க முடிவில்லையே

Saturday, February 25, 2006

நடிகர் விஜய காந்த் 'சோ'

ஊழலை ஒழிக்க முடியாது விஜயகாந்த் கனவு காண்கிறார் -எழுத்தாளர் `சோ' கிண்டல்

நடிகர் விஜயகாந்த்தின் தேர்தல் பிரசாரம் குறித்து எழுத்தாளர் சோ தெரிவித்துள்ள கருத்து:-

விஜயகாந்த், இன்னும் கனவு காண்பதிலிருந்து வெளியில் வரவில்லை. `நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து விடுவேன்' என்கிறார். ஊழலை வேண்டுமானால் குறைக்கலாம். ஒழிக்க முடியாது. உலக அளவில் ஊழலை ஒழித்தவர்கள் எவரும் கிடையாது.

பெரிய பெரிய ஊழல்கள் எல்லாம் இப்பொழுது அமெரிக்காவிலேயே வெளியில் வந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனிலும் ஊழல் இருக்கிறது. ஊழல் எல்லா இடங்களிலும் இருக்கிறது.

கவுடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் லஞ்சம் வாங்குவதற்கு தண்டனை விதிக் கப்பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்கும் நீதிபதிக்கு, அதிகாரிகளுக்கு, இந்த அளவு தண்டனை என்று கூறப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்றால், அந்தக் காலத்திலேயே லஞ்சம் இருக்கிறது என்று அர்த்தம். லஞ்சம் என்பது, தன்னுடைய உழைப்பினாலோ, திறமை யினாலோ அல்லாமல், திருட்டுத் தனம் மூலமாக சம்பாதித்து விட வேண்டும் என்கிற ஆசையினால் வந்தது.

இதை பெரிய அளவு குறைக்க வேண்டும். எப்பொழுது குறைக்க முடியும்ப பயத்தை உண்டாக்க வேண்டும். எல்லோரும் நேர்மையாக இருந்து விடமாட்டார்கள். சில பேர் நிச்சயமாக நேர்மையாக இருப்பார்கள். இந்த மாதிரி லஞ்சம் வாங்குவது அசிங்கம்.

கீழ்த்தரம் என்று சுயமரியாதை உள்ள சிலர் நினைப்பார்கள்.

இது பெரியார் சுயமரியாதை அல்ல, நிஜமான சுய மரியாதை. பெரியார் சுயமரியாதை இருப்பவர்கள் லஞ்சம் மூலம் சம்பாதித்ததை விட, வேறு யாரும் சம்பாதித்து விட முடியாது.

மாலை மலர்

எதையாவது சொல்லி ஆட்சிக்குக் வரவேண்டுமே. 'ஒரு ரூபாய்கு 3 படி உச்சம் ஒரு நிச்சயம் இல்லையோல் முக்கத்தில் நிறுத்தி சவுக்ககால் அடியுங்கள்' சொல்லவில்லையா? அப்படித்தான் இதுவும்

Wednesday, February 22, 2006

நகைச்சுவை

அண்ணன் காளிமுத்து பாசத்தோடு கொடுத்த பாதை மாறிய பயணம் என்ற புத்தகத்தை ரகசியமாக படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோட்டத்திலே பாத்தி கட்டி என்ற பண்புள்ள பாடலை என்னையும் அறியாமல் பாடிவிட்டேன். இதை யாரோ ஒட்டுக்கேட்டு சொல்லக்கூடாத இடத்தில் சொல்லி விட்டார்கள்.
நான் கேட்கிறேன்... விரும்பிய தொகுதிகளையா கேட்டு விட்டேன்? விரும்பிய பாடலைத்தானே பாடினேன், இதற்கு ஏன் இவ்வளவு வருத்தம்?
பக்கத்திலேயே கனி இருக்கும்போது காயை ஏன் நாட வேண்டும் என்று பழைய வசனத்தை மெல்ல அசை போட்டேன். இது தவறா? கனி எது, காய் எது என்று தெரியாமல், புரியாமல், குழுப்பமான மனநிலையில் சொன்ன வார்த்தைகளை ஏன் கொச்சைப்படுத்த வேண்டும்?
அதற்குள் அவசரமாக ஏதேதோ அறிக்கைகளை விடுகிறார் அண்ணன். அதனால், தோட்டத்திலே பாத்தி கட்டி பாட்டும் மறந்து போய்,'பொடா' 'பொடா' புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு என்ற பாடல் அல்லவா நினைவுக்கு வந்துவிட்டது!
நாளொரு நவரசம், பொழுபொரு காமெடி என்ற ரீதியில் பாம்பரமாய் சுற்றிச் சுழல வேண்டியதுதான் என்று ஆறுதல் சொல்கிறது மனசாட்சி. அந்த திருப்தியிலேதான் இப்போது விடை பொறுகிறேன் அடுத்த காமெடி சீன் தயாரானதும் மீண்டும் சந்திக்க வருவேன், வணக்கம்
இன்று தினமலரில்

Sunday, February 19, 2006

தேவசபையில் கண்ணனும் துரியோதனனும் சந்தித்தால் என்ன பேசுவர்?- ஒரு கற்பனை

துரியோதனன் : வணங்குகிறேன் கண்ணா

கண்ணன் : என்ன துரியோதனா? அடக்கம் பணிவு எல்லாம் இங்கு வரவும் வந்து விட்டது போல் இருக்கி றது.

துரியோதனன் : எங்கு எனக்கு இல்லை? கண்ணா?

கண்ணன் : அன்று என்னிடம் குருச்சேத்திர போருக்கு உதவி கேட்க வந்தாயே அன்று?

துரி : அன்று என்ன?

கண்ணன் : என் தலைமாட்டில் அமர்ந்தல்லவா இருந்தாய் அது என்ன அடக்கமா? அவமறியாதையா?ஆனவமா?பாசமா?நேசமா? பணிவா? பக்தியா? சொல் துரியோதனா?

துரி : ஓ அதுவா நான் வந்ததைக் கண்டு தூங்குவது போல் நடித்த நடிகர் திலகமே கண்ணா நீ ஒரு மோசக்காரன், எப்பொழுதும் உனது கால்பக்கம் இருப்பது யார்?தலைபக்கம் இருப்பது யார்?

கண்ணன் : தலைமாட்டில் ஆதிசேசன்,கால்மாட்டில் என்தேவி.

துரி : அதாவது பணிவு தலைமாட்டில், சொந்தம் பாசம் கால்மாட்டில் அதாவது உன் தொண்டன் இருந்தபக்கம் நான் உனது தேவியிருந்தபக்கம் பாண்டவன் அவ்வளவுதான் இல்லையா? கண்ணா.....இது பணிவா? பாசமா?

கண் : அது போகட்டும் பாண்டவருக்காக தூதுவந்தபோது கொலுமண்டபத்தில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து என்னை வணங்கியபோது நீ மட்டும் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாயே அது உனானவத்தைக் காட்ட வில்லையா? துரியோதனா!

துரி : நான் சிம்மாசனத்தில் இருந்ததாக கூறிவிட்டாய் அங்கு அந்த இடத்தில் நீ யார்? நான் யார்? கண்ணா!

கண் : நீ அஸ்த்தினாபுற மன்னன் நான் தூதுவன்

துரி : தூதுவனுக்கு மன்னர் எங்காவது எழுந்து வணங்குவதும் வரவேற்பதும் உண்டா கண்ணா?

கண் : சரி அதுபோகட்டும்,

துரி : நான் படையுதவி கேட்டு வந்தபோது '' நான் ஆயுதமேந்தமாட்டேனெற்று'' பகன்றனை பின் ஏனிந்த சக்ராயுததத்தை எடுத்தனை கண்ணா?

கண் : அது வந்து வேறு வாழியில்லை

துரி : கர்ணன் நல்லவன், வல்லவன், வள்ளல், வீரன், சூரிய குமாரன் உண்மையான எனது நண்பன் அவனை பாவி கொன்று விட்டாயே!!! பாவி...

கண் : சண்டை வேண்டாம் சமாதானமாக போங்கள் என்று பிதாமகர் செல்லும் போது, ''வயதான காலத்தில் வாய்மூடி கிடக்காமல் உபதேசம் செய்கிரீர்கள் என்று கர்ணன் சொன்னதற்கு பிதாமகர்,''உபதேச தர்மம் உனக்குப் பிடிக்காதா?'' என்று கேட்டதற்கு உபதேச தர்மம் ஒருவனை பலர் முன்னே கோழையாக்கிவிடும். என்றான்,''வீராவேச தர்மம் பலர் முன்னே ஒருவனை பகைவனாக்கிவிடும் கர்ணா!! நாடு கொடுத்தான் என்பதற்காக நன்றியுணர்வோடு பேசுகிறாயே தவிர நல்லதை பேசவில்லையே?'' ,'' நன்றி என்பதையே நிறையபேர் என்னெற்று தெரியாமால் இருக்கின்றனரே'' என்ற கர்ணனுக்கு,'' என் பேரன் ஒருவனால் அரசவாழ்வு கண்ட உன்னால் புண்படுத்தப்பட்டேன் '' என்று பிதாமகர் மிக துயரப்பட்டு வருத்தப்பட்டு சொன்னாரே சரியா?

துரி : என்னுயிர் நண்பர் கர்ணனை தேரோட்டி மகன் என அவனை எல்லோரும் தாழ்த்திப்பேசினர். அவனது வீரத்தை யாரும் போற்றிலர் அதில் பிதாமகருக்கும் பங்குண்டு. பாவி ! பாவி !! சண்டாளா !! என் நண்பன் பல ஆண்டுகளாக செய்த தர்மத்தின் பலனை ஒரே நாளில் இரந்து விட்டாயே வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை தான் செய்த புண்ணி, தர்மங்கள் என்று சொல்வார்களே அதையும் கவர்ந்து விட்டாயே கள்வா, அதை விட கொடுமை அவன் செய்த புண்ணியங்களை பெற்று அதனால் ஒரு புண்ணியம் கிடைக்குமல்லவா அதையும் என் நண்பர் உனக்கு கொடுத்து உயர்ந்து விட்டான் தர்மங்களையே யாசகம் பெற்ற யாசகா. இதனால் தான் தற்போது பூவுலகில் யாரும் தர்மம் செய்வதில்லை போலும் நீதான் பொய்யன் மாயவி மோசக்காரன் திருடன் நீ பொய் சொன்னது போதாதென்று பொய்யே பேசாத தர்மமையுமல்லவா? பொய் சொல்ல வைத்து விட்டாய் ''அசுவத்தாமா அதகா குஞ்சரா''.என்று நீ அன்று சொல்ல வைத்த பொய் இன்றும் ஆழ் போல் தலைத்து அறுகு போல் வேரூன்றி நன்றாக பரவிவருகிறது. யுத்த தர்மம் என்று ஒன்று இருக்கிறது அதை மீறி என்னை அடிக்ககூடாத இடத்தில் பீமனை அடிக்க வைத்தாயே கண்ணா இன்றும் பூலோகத்தில் நடக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நீ தான்.

கண் : முடிந்ததா அரவக்கொடியேனே! பாஞ்சாள நாட்டு மகள், உன் தந்தைக்கும் மருமகள், சபை நடுவே பொதுமக்கள், படைவீரர்கள்,பணிப்பொண்கள் மந்திரி இவ்வளவு பேருக்கு மத்தில் அவள் சேலையை நீக்க ஆணையிட்டது சரியா? முறையா?

துரி : ஏன் என்ன நடக்கும் அடிமையென்றால் என்று அந்த தர்மனுக்குத் தெறியாதா? ராஜ நீதி என்ன? அடிமையை நாம் எப்படியும் நடத்தலாம் என விதியிருக்கிறதே மேலும் அடிமையான பின் ஏன் பாண்டவர்கள் தங்கள் மார்பில் துணியேந்தியிருந்தனர் மணிகளையும் போட்டிருந்தனர் அடிமைகளுக்கு மார்பில் துணியேந்தும் வழக்கமில்ல என்பது தெறியாதா? அப்போதே கர்ணன் சொன்னானே,'' அடிமைகளுக்கு மார்பிலே துணியேந்தும் வழக்கமில்லை என்றவுடன் பாண்டவர்கள் தங்கள் மேல்துண்டையும் அணிகளன்களையும் எடுத்து வைத்து விட்டனரே பிராட்டியார் மாட்டும் செய்யாததால் தான் நான் ஆணையிட்டேன். இதில் என்ன தவறு?
இங்கு வந்து தெரிந்து கொண்டேன் நீயும் சகுனியும் சேர்ந்து தான் இந்த நாடகத்தை நடத்தினீர்கள் என்று. எது எப்படியோ தர்மனை பொய் சொல்லவைத்து பூலோக மக்களை பொய் சொல்லவைத்து விட்டாய் கொடையால் கிடைத்த புண்ணியங்கள் அனைத்தையும் பெற்று பூவுலகில் யாரையும் புண்ணியம் செய்யாமால் வைத்த புண்ணியன் நீ.

Sunday, February 12, 2006

ஜாலியன் வாலாபாக் - 2 -

பதில்: "ஆமாம்; அப்படித்தான் சொன்னேன்."

இருப்பதற்குள் மிகவும் குட்டையான சுவரை நோக்கி மக்கள் ஓடினார்கள். அதுவே ஜாதியடியால் ஐந்தடி உயரம் இருந்தது. அங்கே தான் மக்களில் பலரைக் குண்டுகள் தாக்கி வீழ்த்தின.

கேள்வி: "கவச மோட்டார்கள் உள்ளெ புகப் போதிய வழி இருந்ததாக வைத்துக்கொள்ளுவோம். அப்போது யந்திரத்துப்பாக்கி (மெஷின்கன்) கொண்டு நீர் சுட்டிருப்பீரோ?.

பதில்: "ஆமாம்; அநேகமாக அப்படித்தான் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்."

ஹண்டர் அறிக்கை அழுத்தமாய்ச் சொல்லுகிறது: "டையரை எங்கள் முன்னிலையில் விசாரித்த போது, அவர் இந்த விஷயத்தை விளக்கமாய்ச் சொன்னார்: தம் மோட்டார்க் காரில் வரும்போதே ஒரு தீர்மானம் செய்து விட்டாராம்; கூட்டம் போடக்கூடா தென்று தாம் விதித்த தடையுத்திரவை மீறிமக்கள் கூடியிருந்ததால், உடனே அவர்களைச் சுடுவ தென்று முடிவு செய்தாராம்."

விசாரணையில் டையர் கூறினார்:"அத்தனை மனிதர்களையும் கொன்று விடுவ தென்று நான் முடிவு செய்திருந்தேன்...."

டையர் தம் ராணுவமேல் அதிகாரிக்கு ஓர்அறிக்கை (டிஸ்பாட்ச்) அனுப்பியிருக்கிறார். தம்முடைய இந்தச் சொந்த அறிக்கையில் சில வார்த்தைகளைத் தடித்த எழுத்தில் (ஐட்டலிக்ஸ்) அவரே வரைந்திருக்கிறார். அவருடைய இந்த வாசகத்தை ஹண்டர் அறிக்கை அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறது. டையர் எழுதியிருக்கிறார், "நான் சுட்டேன் , மக்கள் கூட்டம் கலையும் வரையில் சுட்டுக்கொண்டே யிருந்தேன், ஒரு பலனை விளைவிப்பது அவசியம், அதை விளைவிப்பது என் கடமை என்று நான் கொண்டேன். என் செயல் நியாயம் என்று காட்ட இந்த அளவு சுட்டதே மிகவும் குறைந்த பட்சமானது என்று நான் கருதுகிறேன். கேவலம் கூட்த்தைக் கலைப்பது ஒன்றே அப்போது முக்கியம் என்று நான் கருதவில்லை; அங்கே கூடியிருந்த மக்களுக்கு மட்டும் அல்ல; இதைவிட முக்கியமாக, பஞ்சாப் எங்கும் உள்ள மக்களுக்கெல்லாமே போதிய அளவு பய பக்தியை (மாரல் எஃபெக்ட்) உண்டாக்கவேண்டியிருந்தது. ராணுவ நோக்கில் பார்த்தால் இது புலப்படும். மித மிஞ்சிய அளவு கடுமையாகச் சுட்டதாக இதைச் சொல்லமுடியாது...

இதைப்பற்றி ஹண்டர் அறிக்கை கூறுகிற முடிவு இது:

"தமது கடமைபற்றி டையர் இப்படிக் கொண்ட கருத்து, துரதிருஷ்ட வசமானது.... அவர் அவ்வளவு நேரம் சுட்டதன் மூலம் மகத்தான பிழை (க்ரேவ் வரர்) புரிந்து விட்டார் என்று எங்களுக்குத் தோன்றுகிறது"

அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது: "ஜலியன்வாலா பாக்கில் காயம் அடைந்தவர்களைக் கவனிக்க, டையர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை; இதைப்பற்றி எல்லாரும் குறை கூறுகிறார்கள்." விசாரணையில் டையர் சொன்னார்:"தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் மனுச் செய்துகொண்டிருந்தால், அப்படி உதவ நான் தயாராக இருந்தேன்."

பஞ்சாபில் பிரிட்டிஷ் ஆக்டிங் கவர்னராக அப்போது ஸர் மைக்கேல் ஓட்வியர் என்பவர் வேலைபார்த்து வந்தார். டையரின் செயலை அவர் ஆமோதித்தார்;கலவரங்களைப் புரட்சி எழுச்சி (ரிபெல்லியன்) என்று அவர் குறிப்பிட்டார். ஹண்டர் கமிஷன் இப்படி அபிப்பிராயம் கூறுகிறது; "பஞ்சாபில் ஒரு நெருக்கடியை டையர் காப்பாற்றழி விட்டார் என்றும், சிப்பாய்க் கலகம் போன்ற பெரிய கலக எழுச்சியைத் தடுத்துவிட்டார் என்றும் வேறு சிலர் கூட வர்ணிக்கிறாரக்கள். ஆயினும் இந்த மாதிரி முடிவு செய்வது சாத்தியம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பிரிட்டிஷ் ஆட்சியைக்கவிழ்க்க வேண்டும் என்று, கலவரங்களுக்கு முன்னதாக எந்த விதமான சதியும் (கான்ஸ்பிரஸி) நடக்கவில்லை".

புரட்சி செய்து எழும்(இன்ஸரெக்ஷன்) நோக்கம் எவருக்கும் இல்லை; அப்படி யாரும் திட்டமிவும் இல்லை. இது மட்டும் அல்ல; மேலும் ஒன்று கூறுகிறது ஹண்டர் அறிக்கை: " 10-ஆம் தேதி எழுந்த கலவரம் சில மணி நேரத்துக்குள்ளே அடங்கிவிட்டதாக சம்பவம் எதுவும் மீண்டும் நிழவில்லை. 10-ஆம் தேதியிலே கூட, பொறுப்பு (சார்ஜ்) வகித்த அதிகாரி தம் கடமையைப் புரிந்திருந்தால் அந்தக் கொடுங் குற்றங்களையும் - பாங்க் உத்தியோகஸ்தர்களைக் கலகக்காரர் கொன்ற கொலைகளை - அவர் அநேகமாகக் தடுத்திருக்க முடியும்".

இரண்டரை நாட்கள் அமிர்தசரஸில் அமைதியே நிலவியது. அதற்குப் பிறகே டையரின் கசாப்பு வேலை (புச்சரி) நடந்திருக்கிறது. அநாவசியமாக அவர் படுகொலை (மாஸக்கர்) புரிந்தார். அந்த நாளில் இந்தியாவிலி ஓங்கியிருந்த பரிட்டிஷ் ராணுவ மனோபாவத்திலே பிறந்ததுதான் இந்தப் படுகொலை. இந்த மனோபாவத்தை விளக்க, ஹண்டர் அறிக்கை ஒரு மேற்கோள் தருகிறது. டில்லியில் பதவி விகத்த ஜெனரல் ட்ரேக்-ப்ராக்மான் என்பவரல் சொன்ன இந்த வாசகந்தான் அந்த மேற்கோள்: " ஆசியாக்காரன் எதையும் மதிக்கமாட்டான்; வலிமை (ஃபோர்ஸ்) ஒன்றைக் கண்டால் மட்டுமே மதிப்பான்."

ஜலியன்வாலாவில் தாம் செய்த படுகொலை குறித்துப் பெருமையோடு ரத்னச் சுருக்கமாக டையர் சொன்னார்:"ஜோரான நல்ல காரியம் ஒன்றைச் செயயப் போவதாகத்தான் நான் எண்ணினேன்."

செய்தகொடுமை போதாது எனறு,மக்களுக்கு ஜெனரல் டையர் ஓர் அவமானமும் இழைத்தார்; இகழ்ச்சிக்குரிய ' தவழும் உத்திரவு' (க்ராலிங் ஆர்டர்) ஒன்றைப் பிறப்பித்தார். அமிர்தசரஸ் பெண் பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக இருந்த மிஸ் ஷெர்வுட் என்ற பெண்ணை ஏப்ரல் 10-ஆம் தேதி ஒரு கலகக் கூட்டம் காட்டுமிராண்டித்தனமாக் கொலை செய்து விட்டது. ஜலியன்வாலா பாக் ரத்தமுழுக்கு நடந்து பல நாள் சென்ற பின்பு, டையர் ஓர் உத்திரவு போட்டார். மிஸ் ஷெர்டவுட்டைக் கலகக் கூட்டம் எங்கே தாக்கியதோ அந்தத் தெருவில் எந்த இந்தியன் போனாலும் சரிதான; அவன் மண்டியிட்டுத் தவழ்ந்து கோண்டே போகவேண்டும் - இது அந்த உத்திரவில் ஒரு ஷரத்து. சில குடும்பத்டதினர் தங்கள் வீடுகளுக்குப் போக இந்தத் தெரு ஒன்றே வழியாக இருந்தது. அவர்களுங்கூட இப்படித் தவழ்ந்து கொண்டு தான் போகவேண்டும்.

ஷெர்வுட் அடிபட்ட இடத்தில், கசையடி மேடை (விப்பிங் போஸ்ட்) ஒன்றையும் டையர் அமைத்தார்: தம் உத்திரவை எந்த இந்தியனாவது மீறினால், அவனை இங்கே கொண்டு வந்து நிறுத்திப் பகிரங்கமாய் அவனுக்குக் கசையடி கொடுக்கச் சொன்னார். அமிர்த சரஸில் சில ஜில்லாக்களில் வழியிலே போகும்போது பிரிட்டிஷ் அதிகாரிகளுள் எவனையாவது கண்டால் வண்டியிலோ குதிரை போன்ற விலங்கின் மீதோ சவாரி செய்கிற இந்தியன் எவனும் கீழே இறங்கி விடவேண்டும் ; பெருங்குடையோ குட்டைக் குடையோ பிடித்துக்கொண்டு போகிற எவனும் அதை இறக்கி விடவேண்டும்; அந்தப் பிரிட்டிஷ் அதிகாரிக்குச் 'சலாம்' வைக்கவேண்டும் - இது டையரின் கட்டளை.

பிரிட்டிஷ் இந்தியா மந்திரி(ஸெக்ரட்டரி அவ் ஸ்டேட் ஃபார் இண்டியா) பதவியல் இருந்த ஸர் எட்வின் மாண்டேகு உத்தியோக ரீதியில் வைஜிராயலார்டு செம்ஸ் ஃபோர்டுக்கு 1920 மே 26-ல் ஒரு கடிதம் எழுதினார். "ஜலியன்வாலா பாக்கில் ப்ரிகடீர் ஜெனரல் டையர் தம் செயலுக்கு அடிப்படையாகக் கொண்ட கோட்பாட்டை மன்னர் பிரானின் சர்க்கார் அழுத்தமாக மறுக்கிறது" என்று அதில் கூறினார்.மேலும் "நாகரிக சர்க்காருக்குரிய எந்த லட்சணத்தையும் டையர் போட்ட 'தவழும் எத்திரவு' மீறிவிட்டது" என்று எழுதினார்.டையரின் செயல் கண்டு எண்ணற்ற ஆங்கிலேயர் வெட்க மடைந்தார்கள். ஆனால் அதை ஆதரிக்காமலும் இல்லை.

டையரைச் சர்க்கார் ராஜீனாமாச் செய்யச் சொல்லியது. விமாங்களைக்குறி பார்க்க உதவியாகத் தூரம்காணும் கருவி(ரேஞ்ஜ் ஃபைண்டர்) ஒன்றைத் தமது ஆயுளின் இறுதிக் காலத்தில் டையர் கண்டு பிடித்தார். ப்ரிஸ்டல் நகரில் ஓய்வு பெற்று வாழ்ந்து,1927 ஜுலை 23-ல் அவர் இறந்தார்.

அங்கே ஒரு வாவேசு அய்யரும் இல்லை , வாஞ்சிநாதனும் இல்லை.

தொடரும்.......

Saturday, February 11, 2006

ஜாலியன்வாலா பாக்

ஜலியன்வாலா பாக் என்ற இடத்திலே கூட்டம் நடந்தது.' பாக்' என்றால்

தோட்டம் என்று அர்த்தம். அறிக்கை கூறுகிறது:"பெயரைப் பார்த்தால் தோட்டம் என்று தோன்றும்: ஆனால், ஜலியன்வாலா பாக் எந்த விதத்திலும் தோட்டம் அல்ல. உபயோகத்தில் இல்லாத ஒரு நிலம் அது. நீண்ட சதுர (ரெக்டாங்குல்) வடிவம் கொண்டது. அங்கங்கே பாழடைந்த கட்டிட இடிபாடுகள் மூடிக்கிடந்தன. அநேகமாய் முழுவதுமே அதைக் கட்டிடச் சுவர்கள் சூழ்ந்திருந்தன. அதற்குள்ளே வரப்போகச் சில வழிகளே இருந்தன. அந்த வழிகளும் நன்றாயில்லை. அடிக்கடி மக்களின் பெருங்கூட்டங்கள் அதில் நடப்பது வழக்கம் என்று தெரிகிறது. அதன் ஒரு கோடி வழியாக ஜெனரல் டையர் நுழைந்தார். அந்தக் கோடியின் நுழைவாயிலுக்கு இரண்டு புறமும் தரை மேடாக இருக்கிறது. டையர் நுழைந்த கோடிக்கு எதிர்க்கோடியில் ஒரு பெரிய கூட்டம் இருந்தது. ஜெனரல் டையர் தம் துருப்புக்களை நிறுத்திய இடத்திலிருந்து 150 கஜ தூரத்தில் உயரமாக அமைந்த மேடை ஒன்றின் மீது ஒரு மினதன்ட நின்றுகொண்டு அந்த மக்கள் கூட்டத்துக்குப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்." பாக்கில் பத்தாயிரத்துக்கு மேல் இருபதாயிரம் மக்கள் வரையில் கூடியிருந் திருக்கிறார்கள் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.

இருபத்தைந்து கூர்க்காக்கள் (அதாவது நேப்பாளப் போர் வீரர்கள்), பலூச்சி்ஸ்தானத்திலிருந்துவந்த இருபத்தைந்து பலூச்சிகள் இந்த இரு கூட்டத்தினரும் ரைஃபிள் (சிறு துப்பாக்கி) தங்கியிருந்தார்கள்; நாற்பது கூர்க்காக்கள் கத்திமட்டுமே வைத்திருந்தார்கள். இவர்களோடும் இரண்டு கவச (ஆர்மர்டு) மோட்டார்களோடும் டையர் வந்தார்."ஜலியன்வாலா பாக் பக்கமாக வந்ததும், குறுகிய நுழைவாயில் வழியாக அதனுள் இந்தப் படையுடன் டையர் புகுந்தார். கவச மோட்டார்கள் புகப் போதிய அகலமாக அந்த வாயில் இல்லை, எனவே, வெளியே தெருவிழலேயே அவற்றை டையர் விட்டு வைத்தார்". என்று அந்த அறிக்கை அறிவிக்கிறது.

மேலும் அது தொடர்ந்து சொல்கிறது: "பாக்கினுள் நுழைந்தவுடனே, நுழைவாயிலின் ஒரு பாக்கம் உள்ள மேட்டில் இருபத்தைந்து துருப்புக்களையும் மறு பக்கம் உள்ள மேட்டில் இன்னோர் இருபத்தைந்து துருப்புக்களையும் டையர் நிறுத்திவைத்தார். மக்கள் கூட்டத்துக்கு எந்த வித எச்சரிகையும் செய்யாமலே அவர்களைச் சுடத் தம் துருப்புக்களுக்குக் கட்டளையிட்டார். தடை உத்தரவுப் பிரகடனத்தை மீறி மக்கள் கூடியிருந்ததால், அவர்களுக்கு அப்படி எந்த எச்சரிக்கையும் செய்யத் தேவையில்லை என்று அவர் கருதினாராம். துருப்புக்கள் சுமார் பத்து நிமிட நேரம் தொடர்ந்து சுட்டார்கள். என்ன விதமான பிரசங்கத்தை மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவில்லை. மக்களில் எவரும் துப்பாக்கி தாங்கியிருக்க வில்லை. ஆனால், அவர்களில் சிலர் தடிகள் வைத்திருந் திருக்கக் கூடும்.....துருப்புகள் சுட ஆரம்பித்வுடனே, கூட்டம் கலையத் தொடங்கியது. மொத்தம் 1650 தடவை(ரவுண்டு) துருப்புக்கள் சுட்டார்கள்.... தனித் தனினயே சுட்டார்கள்; சரமாரி (வால்லி) ஆகச் சுடவில்லை....சுமார் 379 பேர் மாண்டதாக, கமிஷனின் இந்த விசாரணையில் புலனாகிறது."

மாண்டவர்களைப் போல் மூன்று மடங்கு மக்கள் காயமுற்றிருக்க வேண்டும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது. ஆகவே செத்தவர் 379 பேர்; காயமுற்றவர் 1137 பேர். இந்த இரண்டு எண்ணிக்கையையும் கூட்டிப் பார்க்கும் போது, 1650 துப்பாகிக் குண்டினால்1516 ஆள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. தாழ்வான 'தோட்ட'த்தில் பட்டியில் அடைபட்ட ஆடு மாடுகள் போல் மக்கள் சிக்கியிருந்திருக்கிறார்கள்; வீரர்களின் குண்டுகளுக்குச் சரியான இலக்காகியிருக்கிறார்கள்.

டையரை ஹண்டர் கமிஷன் முன் குறுக்கு விசாரணை செய்தார்கள். தம்முடைய மனப்பான்மையையும் நோக்கத்தையும் அப்போது அவர் வெளியிட்டார்.


கேள்வி: "சுடுவதை அடிக்கடி நீர் திசை மாற்றினீரா? மக்கள் எங்கே அடர்த்தியாய் நின்றார்களோ அங்கே பார்த்துச் சுடச் சொன்னீரா?"

தொடரும்.......

Friday, February 03, 2006

N.S. கிருஷ்ணன்

திருச்சி தென்னூரில் குதிரை வண்டி ஸ்டாண்ட் கட்டுவதற்காக

மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் கிந்தனார் கதாகாலச்ட்சேபம் நிகழ்சிசயை என்.எஸ். கிருஷ்ணன் நடத்தினார். இதில் வசூலான தொகை ரூ.1360துடன் தன்னுடைய நன்கொடையாக ரூ.1640 ம் சேர்த்து ரூ.3000 த்தை அன்றைய நகரசபைத் தலைவரிடம் கொடுத்து கிந்தனார் குதிரை வண்டி ஸ்டாண்ட் கட்டவைத்தார். பிறகு போக்கு வரத்துக்கு இடஞ்சலாக இருப்பதால் அந்த வண்டி ஸ்டாண்டை எடுத்து மேற்கு பக்கம் கட்டினார்கள் . சென்ற ஆண்டு அந்த வண்டி ஸ்டாண்டை மாநகராட்சி முழுவதும் அப்புறப்படுத்திவிட்டது.

"முன்னுக்கு வாங்க .....முன்னுக்கு வாங்க....... கேய் .....கேய் ....கேய் "

என குதிரை வண்டடிக்காரன் சொன்ன வார்த்தை அவருக்கு பிடித்தது. யாரும் முன்னுக்கு வாங்க முன்னுக்கு வாங்க என நம்மை முன்னேரச்சொல்ல மாட்டார்கள் அந்த குதிரைவண்டிக்காரன் தான் அப்படிச் சொல்வான் என்பதற்காக அவர்களுக் அதை ஏற்படுத்திக் கொடுத்தார்.


Thursday, February 02, 2006

வைரஸ் தாக்குதல்

எனக்கு வந்த மின்னஞ்சல் பார்த்தக்கொள்ளுங்கள் தடுக்கவழி தேடுங்கள் எனக்கும் சொல்லுங்கள் எப்படி என
From: View message header detail customerservice@vsnl.co.in
To: vsnlusers@vsnl.net
Subject: Immediate attention - New Virus Alert
Date: Thursday, February 2, 2006 10:42 am
Dear Tata Indicom Broadband Customer,
A new mass-mailing worm has appeared that can destroy files on your computer. The

MyWife/Blackworm virus can arrive on your computer in the form of an attachment to an

e-mail or through a file transfer, often from a known and trusted friend.

On February 3rd, all Word, Excel, PowerPoint and PDF documents are likely to be

deleted from the hard drives of computers infected by the virus.

We recommend that you implement and follow these protection measures to keep your