Friday, August 26, 2005

மாயக் கண்ணன் பிறந்தநாள்

கண்ணன் பிறந்தான் மாயக் கண்ணன் பிறந்தநாள்
கெளரவ பண்டவர்களைஅழிக்க பிறந்தவனே
கர்ணன் புண்ணியமனைத்தும் கவர்ந்ததால்
புவியில் யாரும் புண்ணியம் செய்வதில்லை
தர்மனை பொய் சொல்ல வைத்ததால்
புவியில் அனைவரும் பொய் சொல்கின்றனர்
சகோதர சண்டையை ஏற்படுத்தியதால்
இன்னும் அது வளர்கிறது, வீட்டுக்கு வீடு நாட்டுக்கு நாடு
வெண்ணையை திருடியதால் நாடெங்கு திருட்டு
சிசுபாலன்,அரக்கியயை நீ கொன்றதால் கொலைகள் நடக்கிறது
நீ அன்று மண்ணைத்தின்றதால் எங்கள் குழந்தைளும் தின்கின்றனர்
மழையில் பசுக்களைக் காக்க மலையை குடையாகப் பிடித்ததால் மழையில்லை

Sunday, August 07, 2005

சொத்துகளை இணைய தளத்தில் காணவேண்டும்

150 இணைபதிவகங்களை கணினி மயமாக்க ரூ.19கோடி
சார்பதிவகங்கள்மற்றும் பதிவுதுறை உயர் அலுவலகங்களை கணினிமயமாக்க 19 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை.
RASI திட்டம் எனறு ஒன்று இருந்தது துத்துக்குடி மாவட்டத்தில் . அது முதலில் செயல்பட்டது; இன்று காணவில்லை அல்லது என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,அதாவது வெளிநாடுகளில் இருக்கும் நபர் தனது நிலங்களை இணைய தளத்தில் பார்துக்கொள்ள பயனுள்ளதாக இருந்தது. ஒரு பட்டாரர் தனது குறிப்பிட்ட சர்வே எண்ணை விலைக்கு வாங்கினால் அதை தனது பெயருக்கு பட்டாமாற்றம் செய்துகொண்டால் அந்த சர்வே எண் விற்றவர் பெயரிலிருந்து கிரயம் பெற்றவர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டதை தெரிந்து கொள்ளலாம். உள்ளூரில் இருப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று அதை நேரடியாக பாத்துக்கொள்ளலாம். வெளியில் இருப்பவர்கள் ? அந்தவசதியையும் தமிழக முதல் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

Friday, August 05, 2005

வீரப்பன் பணம் எங்கே?

பல ஆண்டுகளாக மாநில அரசுகளின் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் காட்டு ராஜா மான்புமிகு வீரப்பன் அவர்கள் நாட்டிலும் காட்டிலும் கொள்ளையடித்த மாபெருந்தொகை என்னவாயிற்று? வனராஜாவிடமிருந்து எந்த புவிராஜாவிடம் அல்லது ராணிடம் சென்றது.
தலைவர் பல ஆண்டுகளாக சந்தனமரம் , யானையின் தந்தம், நடிகர் ரஜ்குமாருக்காக கொடுத்த சிறு தொகை ரூபாய் 20 கோடி. விடுதலைப்புகளிடம் ஏதாவது கிடைத்திருக்கும் அது.
வீரப்பன் கொள்ளப்பட்டவுடன் நிலவறையில் பணம் இருப்பதாகக் கூறினார்களே அதுவல்லாம் என்னவாயிற்று. அரசியல் வாதிமுதல் பத்திரிக்கையாளர் வரை யாரும் வாய்திறக்க வில்லையே. ஓ அந்த தொகையில் சிறு பகுதி கொண்டு தான் வாய் அடைக்கப்பட்டு விட்டதோ.

Wednesday, August 03, 2005

ராமதாஸ் VS நிருபர்


நிருபர்:- உங்க பேத்திகள் (மத்திய அமைச்சர் அன்புமணி மகள்கள்)டெல்லியில் உள்ள மேட்டர்டே கான் வெண்டில் படிக்கிறாங்களே?

ராமதாஸ்: அதுபற்றி எல்லாம் நீங்க கேட்கக்கூடாது.


நிருபர்: எல்லாரையும் கட்டாயமா தமிழ்லே படிக்கணும்னு சொல்ற நீங்க உங்க குடும்பத்தைச் சேர்நதவங்களை மட்டும் கான்வென்ட்டில்.......


ராமதாஸ்: வரம்பு மீறி பேசறீங்க


நிருபர்: கான்வெண்ட்டில உங்க பேத்திகள் .. . .


ராமதாஸ்: அதிகமா பேசறீங்க. உங்ககிட்டே தனியா பேசறேன்.

நிருபர்: ஊருக்கு உபதேசம் பண்ற நீங்க.........

ராமதாஸ் : என்ன . . . . அரசியல் பண்றியா? நீ யாரு, ஜெயா டி.வி.யா? துக்ளக்கை படிச்சிட்டு இங்கே வந்து கேள்வி கேட்கிறியா?

ஜி.கே.மணி: மேட்டர் டே ஸ்கூல்லே தமிழ் பாடம் நடத்தப்படுகிறது.

ராமதாஸ் : (ஜி.கே.மணியிடம் திரும்பி) அந்த ஆளு (நிருபர்) கேட்கிற கேள்விக்குலாம் பதில் சொல்லாதே. ஜெயா டிவியை யாருய்யா கூப்பிட்டது?

(ஜி.கே.மணி மவுனம்)


நிருபர் : பிரஸ் மீட்னு வந்துட்டா கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றது உங்க கடைமைதானே.

ராமதாஸ் : இதுக்கு மேலே எதுவும் . . . .(அப்போது பா... பிரமுகர் ஒருவர், நிருபரின் தோளில் தட்டி,'கேள்வி கேட்காதே' என்று மிரட்டினால்)

தொடர்நது அது தொடர்பான கேள்விகளையே நிருபர் கேட்டதால் ராமதாஸ் ஆத்திரம் அடைந்தார். பேட்டியை முடித்துக்கொண்டு கடுகடுப்புடன் புறப்பட்டார். பின்னர், ஆளுங்கட்சி டிவி நிருபரை அழைத்தார்

ராமதாஸ் : என்னையா கேள்வி கேட்கிறே? ஜெயா டிவி ஒரு டிவியா? நமது எம்.ஜிஆர் பத்திரிகைலாம் ஒரு பத்திரிகையா? அந்த பத்திரிகையில் வந்த செய்ததியை துக்ளக்கில் போட்டதால இப்படிலாம் கேள்வி கேட்கிறீயா?

நிருபர் : சும்மா கேட்கல, டில்லியில் நல்லா விசாரிச்சுட்டுத்தான் கேட்கிறேன்


ஜி.கே.மணி : சரி, சரி விடுங்க. இதைத்தொடர்ந்து, மேலும் ஆவேசத்துடன் காரில் புறப்பட்டார் ராமதாஸ்.



பாவம் அந்த நிருபரை என்ன செய்யப்போகிறார்களோ பொருத்திருந்து பார்ப்போம்