Sunday, August 07, 2005

சொத்துகளை இணைய தளத்தில் காணவேண்டும்

150 இணைபதிவகங்களை கணினி மயமாக்க ரூ.19கோடி
சார்பதிவகங்கள்மற்றும் பதிவுதுறை உயர் அலுவலகங்களை கணினிமயமாக்க 19 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை.
RASI திட்டம் எனறு ஒன்று இருந்தது துத்துக்குடி மாவட்டத்தில் . அது முதலில் செயல்பட்டது; இன்று காணவில்லை அல்லது என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,அதாவது வெளிநாடுகளில் இருக்கும் நபர் தனது நிலங்களை இணைய தளத்தில் பார்துக்கொள்ள பயனுள்ளதாக இருந்தது. ஒரு பட்டாரர் தனது குறிப்பிட்ட சர்வே எண்ணை விலைக்கு வாங்கினால் அதை தனது பெயருக்கு பட்டாமாற்றம் செய்துகொண்டால் அந்த சர்வே எண் விற்றவர் பெயரிலிருந்து கிரயம் பெற்றவர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டதை தெரிந்து கொள்ளலாம். உள்ளூரில் இருப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று அதை நேரடியாக பாத்துக்கொள்ளலாம். வெளியில் இருப்பவர்கள் ? அந்தவசதியையும் தமிழக முதல் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

2 comments:

அதிரைக்காரன் said...

ஆங்கிலத்திலும்
தமிழிலும் இந்த தளத்தில் சொத்து மதிப்பு, சர்வே என் விபரங்கள் இருக்கின்றன. ஆனால் 2003 வரையிலான வழிகாட்டு மதிப்புகள் மட்டுமே உள்ளன.

எங்களூர் நிலங்களின் அதிகபட்ச வழிகாட்டு மதிப்பு ரூ.120 ஒரு சதுர அடி!

ENNAR said...

நண்பர் அதிரைக்காரன்,
தாங்கள் சொன்னது http://www.tnreginet.net/
ல் இருக்கிறது. நான் சொல்வது ஒவ்வொருவருடைய கணக்கும் புல எண்ணையே பட்டா எண்ணையே கொடுத்தால் அதன்உரிமையாளர் பெயர் தெரியவேண்டும் RASI திட்டத்தில் கொண்டுவந்தார்கள் அது தூத்துக்குடிக்குமட்டும் சில நாட்கள் தெரிந்தது இப்பொழுது இல்லை.
நன்றி
என்னார்