நிருபர்:- உங்க பேத்திகள் (மத்திய அமைச்சர் அன்புமணி மகள்கள்)டெல்லியில் உள்ள மேட்டர்டே கான் வெண்டில் படிக்கிறாங்களே?
ராமதாஸ்: அதுபற்றி எல்லாம் நீங்க கேட்கக்கூடாது.
நிருபர்: எல்லாரையும் கட்டாயமா தமிழ்லே படிக்கணும்னு சொல்ற நீங்க உங்க குடும்பத்தைச் சேர்நதவங்களை மட்டும் கான்வென்ட்டில்.......
ராமதாஸ்: வரம்பு மீறி பேசறீங்க
நிருபர்: கான்வெண்ட்டில உங்க பேத்திகள் .. . .
ராமதாஸ்: அதிகமா பேசறீங்க. உங்ககிட்டே தனியா பேசறேன்.
நிருபர்: ஊருக்கு உபதேசம் பண்ற நீங்க.........
ராமதாஸ் : என்ன . . . . அரசியல் பண்றியா? நீ யாரு, ஜெயா டி.வி.யா? துக்ளக்கை படிச்சிட்டு இங்கே வந்து கேள்வி கேட்கிறியா?
ஜி.கே.மணி: மேட்டர் டே ஸ்கூல்லே தமிழ் பாடம் நடத்தப்படுகிறது.
ராமதாஸ் : (ஜி.கே.மணியிடம் திரும்பி) அந்த ஆளு (நிருபர்) கேட்கிற கேள்விக்குலாம் பதில் சொல்லாதே. ஜெயா டிவியை யாருய்யா கூப்பிட்டது?
(ஜி.கே.மணி மவுனம்)
நிருபர் : பிரஸ் மீட்னு வந்துட்டா கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றது உங்க கடைமைதானே.
ராமதாஸ் : இதுக்கு மேலே எதுவும் . . . .(அப்போது பா.ம.க. பிரமுகர் ஒருவர், நிருபரின் தோளில் தட்டி,'கேள்வி கேட்காதே' என்று மிரட்டினால்)
தொடர்நது அது தொடர்பான கேள்விகளையே நிருபர் கேட்டதால் ராமதாஸ் ஆத்திரம் அடைந்தார். பேட்டியை முடித்துக்கொண்டு கடுகடுப்புடன் புறப்பட்டார். பின்னர், ஆளுங்கட்சி டிவி நிருபரை அழைத்தார்
ராமதாஸ் : என்னையா கேள்வி கேட்கிறே? ஜெயா டிவி ஒரு டிவியா? நமது எம்.ஜிஆர் பத்திரிகைலாம் ஒரு பத்திரிகையா? அந்த பத்திரிகையில் வந்த செய்ததியை துக்ளக்கில் போட்டதால இப்படிலாம் கேள்வி கேட்கிறீயா?
நிருபர் : சும்மா கேட்கல, டில்லியில் நல்லா விசாரிச்சுட்டுத்தான் கேட்கிறேன்
ஜி.கே.மணி : சரி, சரி விடுங்க. இதைத்தொடர்ந்து, மேலும் ஆவேசத்துடன் காரில் புறப்பட்டார் ராமதாஸ்.
பாவம் அந்த நிருபரை என்ன செய்யப்போகிறார்களோ பொருத்திருந்து பார்ப்போம்
13 comments:
ராமதாசு அவர்களின் பேத்திகள் மேட்டர்டே பள்ளியில் சேர்க்கப்பட்டது மே மாதத்திலேயே குமுதம் ரிப்போர்டரில் செய்தியாக வெளி வந்து விட்டது.
அதை வைத்து நான் போட்ட பதிவும் தமிழ்மணத்தில் தூள் கிளப்பிற்றே. ஆனால் இப்போதுதான் சாவகாசமாக துக்ளக்கில் போட்ட செய்திக்கு பா.ம.க. எதிர் வினை கொடுக்கிறது. ஏன்?
எது எப்படியாயினும் உங்கள் பதிவுக்கான ஆதாரத்தை குறிப்பிடுவது நலம் என்னார் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்றைய தினமலர் திருச்சி பதிப்பில் வெளியானது
நன்றி
எனனார்
விசிதா அவர்களே, press meet எல்லாம் நடக்காமல் செய்தியெல்லாம் போட மாட்டார்கள். மற்ற நிருபர்களும் பார்த்து கொண்டிருப்பார்கள் அல்லவா? ஆகவே செய்தி உண்மை என்று எடுத்து கொள்ள வேண்டியதுதான்.
மற்றப்படி சங்கராச்சாரியார் விஷயம் இப்பதிவுக்கு அப்பாற்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்றைய தினமலர் இதழில் வந்த "டீக்கடைப் பெஞ்சு"பகுதியிலும் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
www.dinamalar.com ->இன்றைய தினமலர்->டீக்கடைப் பெஞ்சு
"சட்டையை பிடிச்சு இழுத்து... "வா... நான் தனியா பதில் சொல்றேன்'ன்னு சொன்னாங்களாம் பா...!'' என்று புதிரோடு துவங்கினார் அக்பர்பாய்.
""என்னது வே வில்லங்கமா ஆரம்பிக்கீரு... என்ன விவகாரம்...'' என்று விசாரித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
""நம்ம பா.ம.க., தலைவரோட நிருபர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று சென்னை பிரஸ் கிளப்புல நடந்ததாம் பா... தமிழ் தமிழ்ன்னு அவரு முழங்கிட்டிருந்தாராம்... ஆளுங்கட்சி "டிவி' நிருபர் ஒருத்தர் சூடா ஒரு கேள்வி கேட்டாராம் பா... "நீங்க தமிழ் தமிழ்ன்னு சொல்றீங்க... உங்க பேரன், பேத்தியெல்லாம் கான்வென்ட்ல இங்கிலீஷ் படிக்குதே'ன்னு கேட்டாராம்... அவருக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறிருச்சாம் பா...'' என்றார் அக்பர்பாய்.
""என்ன வே... கிளைமாக்ஸ்ல வந்து நிறுத்திட்டீரு... மேல சொல்லும்...'' என்று கேட்டார் அண்ணாச்சி.
""நீ எந்த பத்திரிகை... யாரு உன்னை இங்க கூப்பிட்டது... முதல்ல வெளியில போய்யா... அப்படி இப்படின்னு அந்த நிருபர் மேல ஏக வசனத்துல பாய்ஞ்சுட்டாராம் பா... அதுக்குள்ள அந்தக் கட்சி மா.செ., அந்த நிருபரோட சட்டையை பின்பக்கமா பிடிச்சு இழுத்தாராம்... "வெளியில தனியா வா... நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன்'ன்னு கூப்பிட்டாராம்... அவர் விசும்பிட்டு அங்க இருந்து தப்பிச்சு வர்றதுக்குள்ள பெரும்பாடா ஆயிருச்சாம்... பிரஸ் கிளப்பிலேயே இந்த கதின்னா வேற எங்கேயாவது பிரஸ் மீட் நடந்தா அந்த நிருபர் கதி
என்னன்னு பார்த்துக்கோங்க பா... நிருபர் மேல கை வைச்ச மா.செ., மேல கேஸ் போடலாமான்னு ஆளுங்கட்சி வட்டாரத்துல யோசிச்சுட்டு இருக்காங்களாம் பா...''
என்றார் அக்பர்பாய்.
(நன்றி, டீக்கடை பெஞ்ச், தின மலர்)
அன்புடன்,
டோண்டு ராகவன்
"டில்லில அந்த ஸ்கூல்ல மட்டும்தான் தமிழ் சொல்லித்தராங்க. அதனாலதான் அங்க சேர்த்தேன்."
இது பச்சைப் பொய். தில்லி தமிழ் கழகம் பல பள்ளிகளை தில்லியின் பல இடங்களில் நடத்தி வருகிறது. அவற்றுள் ஒன்றான லோதி எஸ்டேட் பள்ளிக்குத்தான் அன்புமணியின் பெண்கள் தமிழ் படிக்கச் செல்கிறார்கள். அப்பள்ளியில் முதல் நான்கு வகுப்புகள் தமிழ் மீடியத்தில்தான். நல்லத் தமிழ் சூழ்நிலை. ஆனால் சேலத்துப் பசங்கள் அங்கு படிக்கிறார்கள் என்ற ஸ்னாப்பிஸ மனப்பான்மையினால்தான் மேடர்டே பள்ளியில் அக்குழந்தைகள் சேர்க்கப் பட்டனர். D.T.E.A. பள்ளிகச்ளைப் பற்றி நான் தனியாகப் பதிவு போட்டிருக்கிறேன். அங்கு சென்று பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்க ஜனநாயகம்
ராமதாஸ் தலைவராக இருக்க தகுதியற்ற ஒரு இரண்டாம் தர ஆள் என்பதை அவரின் பல ப்ரஸ் மீட்டில் நிரூபித்திருக்கிறார்.
அப்படி போடு அறுவாள (ஏப்ரல் மாத டாப் 10) பதிவின் டாப் 3
தமிழ்ப் பத்திரிக்கைகள் தமிழுக்கு எதிராக செயல்படுகின்றன. பத்திரிக்கைகளை எடுத்துப் பார்த்தால், அதில் 100 வார்த்தைகளில் 60 வார்த்தைகள் ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழியிலோ தான் உள்ளன. அந்த சண்டாளர்களைக் கேட்கிறேன். நேருக்கு நேர் பேச வாருங்கள். ஆனால் ஒருத்தரும் வர மாட்டேன் என்கிறார்கள். எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் அவர்களுக்கு? எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும் அவர்களுக்கு? - ராமதாஸ்... ஏப்ரல் 25, 2005 ("தலைவர்" தகுதிக்கு இன்னா கண்ணியம் இன்னா பண்பாடு... )
கூட்டணி அண்ணன் திரு.கருணாநிதி அவரது எதிரிக்கட்சியை பற்றி சொல்லிய :: "ஏனோதானோ என்று பேசுவதும், அறிக்கை விடுவதும், எமர்ஜென்சி காலத்தில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கலாம். ஆனால் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தக் கால கட்டத்தில் இதை ஏற்க முடியுமா என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்ற விஷயம் தம்பி ராமதாஸுக்கும் பொருந்தும் என்பதை நெஞ்சழுத்தம் உள்ள யாராவது சொல்ல முயற்சிக்கலாம்...
மற்றபடி உங்க பதிவு சாமான்யனின் தலைவனான, உள்ளொன்று வைத்து புறமொன்று பேச தெரியாத அண்ணன் ராமதாஸ் மீதான ஊடக வன்முறை...
ஜனநாயகம் வாழ்க
வாசகர் கடிதங்களுக்கும் இது உங்கள் இடத்திற்கும் டீ கடை பெஞ்சிற்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் சொல்லிக்கொண்டே போக வேண்டியது தான்,
மந்திரி பதவியை வைத்து சலுகை வாங்கினார் என்று குற்றம் சாட்டினார் தகுந்த பதில் கொடுத்தவுடன் அதை விட்டு விட்டு வேறு கேள்வி,
நிருபரிடம் கடுமையாக நடந்திருந்தால் அதை கண்டிக்க வேண்டியது தான் நிதானமாக பதில் சொல்லவில்லையென்றால் தன் பக்கம் நியாயமே இருந்தாலும் அது வேறு விதமாக திரிக்கப்படும் என்பதில் உண்மை உள்ளது. அதை மருத்துவரும் அன்புமணியும் கடைபிடிக்காதது தவறுதான், என்ன செய்வது அவர்களுக்கு நடிக்கத் தெரியவில்லை.
நாக்கில் தேன் தடவுவது போல பேசும் அய்யோக்கியத் தனம் தெரியவில்லை...
அது ஒரு மிகப் பெரிய பலவீனம் அவருக்கு, என்ன செய்வது மற்றவர்களுக்கெல்லாம் செய்தி கொடுக்க வேண்டுமே...
அடுத்ததாக இந்த பத்திரிக்கைகளுக்கு என்ன உரிமை இருக்கின்றது கேள்வி கேட்க? எத்தனை பத்திரிக்கைகள் நடுநிலையாக நடக்கின்றன...
தினம் தினம் மருத்துவரையும் பாமக வையும் காழ்ப்புணர்ச்சியோடு கேவலமாக விமர்சிக்கும் பத்திரிக்கைகளுக்கு என்ன மரியாதை தரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்?
--
முகமூடி ஒரு வினாடியில் முந்திவிட்டார்
என்னார் அவர்களே உங்களுக்கு நினைவிருக்கின்றதா? சில நாட்களுக்கு முன் பள்ளியில் படிக்கும் பெண் பாமக பயிலரங்கத்திற்கு ஆசிரியை கூட்டிச்சென்றதாக ஒரு பதிவு போட்டீரே ஞாபகம் இருக்கா இந்த பிரச்சினையையும் வழக்கம் போல கிளப்பியது தினமலரும் ஜெயாடிவியும் தான், இதை குறிப்பிட்டு நீங்கள் பதிவு போட்ட போது மற்ற பிள்ளைகள் பயிலரங்கிற்கு சென்று வந்ததைக் கண்டு தானும் போகவேண்டுமென விருப்பப்பட்டு சென்ற அந்த விடயம் எப்படி திரிக்கப்பட்டது என அந்த பெண்ணின் பேட்டியையும் அந்த பெண்ணின் தந்தையின் பேட்டியும் வந்த சுட்டி தந்தேனே? அதன் பிறகு நீங்களும் பதில் தரவில்லை...
இது தான் தினமலரின் நடுநிலமை, ஹி ஹி ஜெயாடிவியெல்லாம் நான் கணக்கிலேயே எடுக்க மாட்டேன், அதான் எப்படியென்று எல்லோருக்கும் தெரிந்தது தானே...
உங்கள் பதிவின் அந்த சுட்டியை கொஞ்சம் கொடுங்களேன், எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்
முன்பு பார்த்தது பதிவை, பதிலளிக்க வந்த போது கவனிக்கவில்லை...
//தினமலரே ஆனாலும் சொல்ல வந்த செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராயாமல்
அது தினமலர் என்பதற்காக......ம்...ம்ம்...விடுங்க //
கணேசன் அண்ணாத்தே அதேதான் அதேதான் சரியா சொன்னீங்க போங்க.
நானும் என்ன சொல்றேன்னா கண்ணை மூடிக்கொண்டு பாமக, மருத்துவர், அன்புமணி என்பதினாலேயே செய்தியில் உண்மையுள்ளதா என்ன ஏதென்று நிதானிக்காமல் அடிச்சி தூள் கிளப்பாதிங்கனு தான்,
பின்னாடி உண்மை தெரியவரும்போது நேத்து பெய்த மழையில் இன்னைக்கு முளைச்ச காளான்லாம் (என்னியத்தாண் சொல்லிக்கினேன்) கேள்வி கேட்கும்...
நன்றி
அன்புள்ள நண்பர்களே,
நான் என்ன சொல்லவந்தேன் என்றால் அன்று பள்ளி மாணவனாக நான் இருக்கும் போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கலகக்காரர்கள்(திமுக) நடத்தி அன்றை மாணவர் முதல் இன்றை மாணவர்கள் வரை இந்தியை படிக்க முடியமால் செய்து விட்டார்கள். ஆனால் முரசொலிமாறன், நாஞ்சில் மனோகரன் மற்றும் சிலரும் நன்கு இந்தியைப் படித்து தில்லியில் திமுக வின் பிரதிநியாக செயல்பட்டு அவர்கள் குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவந்தனர்
இந்தி தெரிந்தால் நம்மவர்கள் வடநாட்டில் குப்பை கொட்டலாமே நாம் இந்தியை எதிர்த்ததால் வடநாட்டவருக்கும் நம்மீது சற்று கேபமும் உண்டு இதை நான் தில்லி சென்றிருந்தபோது இரயில் நிலையத்தில் ஒருவர் என்னிடம் வருத்தத்துடன் கேட்டார். தமிழ் தமிழ் என்பவர் வீடுகளில் தமிழைக் காணோமே?
நண்பர் kuzhali அவர்களுக்கு
இதோ அந்த தொடுப்பு
www.ennar.blogspot.com
என்னார் அவர்களே நான் கூறியது
http://ennar.blogspot.com/2005/07/blog-post_16.html
இந்த பதிவு...
நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் ,
அன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற போர்வையில் ஆட்சியைப்பிடிக்க
திமுக பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் நாஞ்சிலார், முரசொலிமாறன் போன்றவர்கள் இந்தி படித்ததால் தானே தில்லியில் திமுக வின் பிரதிநிதியாக செய்லபட முடிந்தது. இதனால் யாருக்கு லாபம் கருணாநிதியின் குடும்பத்துக்கு.. பாதிக்கப்பட்டது நாம். இந்தி படித்திருந்தால் வடிநாட்டிற்கு நம்மவர்கள் வேலை தேடி பேயிருப்பார்கள்.
இன்று கிட்டத்தட்ட மருத்துவரும் அதையே செய்யச்சொல்கிறார். தமிழில் இல்லாத பெயர் பலகைகளை தார் கொண்டு அழித்தல் . இது தேவையில்லத வேலைதானே தமிழ் மொழி தெரியாத வேற்று மாநில , நாட்டவர்கள் வந்தால் அதற்கு மொழிபெயர்க்க ஒரு ஆள் தேவையாகுமே.
நண்பர் kuzhali கேட்ட தொடுப்பு
www.ennar.blogspot.com
என்னார்
Post a Comment