தமிழ் நாடு ஆண்டு தோறும் தண்ணீர்ப் பற்றாக் குறையினால் பரிதவித்து வருகிறது. ஜீவ நதியாக விளங்கிய காவிரி வறண்டு விட்டது. கர்நாடக மாநிலம் தண்ணீர் விட மாட்டேன் என்று முரட்டுப் பிடிவதாம் பிடித்து வருகிறது. நடுவர் மன்றம் சொன்னாலும், உச்ச நீதிமன்றம் சொன்னாலும் பாரதப் பிரதமரே சொன்னாலும் கீழ்ப்படிய மாட்டேன் என்று கூறுவது முரட்டுப் பிடிவதாம் தானே! அம்மாநிலத்தினை கீழ்ப்படிய வைப்பதற்கு பலமான மத்திய அரசு இல்லை.
இப்போது கர்நாடக மாநிலத்தில் எவ்வளவு மழை பெய்கிறதோ, அந்த அளவுக்கு மேலேயே பயன்படுத்தக்கூடிய விளைநிலங்களை அது தாயர் செய்து விட்டது. எனவே கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் வரும் என்று நாம் எதிர் பார்ப்பதற்கு இடமில்லை . அவர்கள் பிடித்து வைத்துக் கொள்ள முடியாமல், பயன்படுத் தமுடியாமல் வழிந்து வரும் தண்ணீர்தான் நமக்கு வந்து சேரும். கடந்த சில ஆண்டுகளாகவே அப்படித் தான் நடந்து வருகிறது. கர்டநாடகத்திற்கு வடிகால் பூமியாகத்தான் தமிழ்நாடு விளங்கிவருகிறது.
இயற்கையின் பாரபட்சம் காவிரிப் படுகையின் மொத்த நிலப்பரப்பில் 42.2 சதவீதம் கர்நாடகத்திலும், 3.5 சதவீதம் கேரளத்திலும் , மீதி 54.3 சதவீதம் தமிழ் நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் உள்ளது ஆனால் இற்கை அமைப்பினால் கர்நாடக, கேரள மாநிலங்களிலும் சராசரி ஆண்டு தோறும் 3015 மி.மீ. மழையும் தமிழ் நாட்டில் சராசரி 981 மி.மீ. மழையும் தான் பொழிகிறது. இதனால் கர்நாடக கேரளத்தில் பெய்யும் மழை அங்கு பயன் படுத்தாமையினால் தமிழ் நாட்டுக்கு ஓடி வந்து இங்கு ஏராளமான விளைநிலங்களுப் பயன் படுகிறது.
இது ஆயிரகணக்கான ஆண்டுகளாக நடந்து வந்தது . கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டில் கட்டிய கல்லணைதான் உலகிலேயே முதன் முதலாக கட்டப்பட்ட பாசன அமைப்பாகும் காவிரியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் பெரும்பகுதியை தமிழ் நாடு தான் பயன் படுத்திவந்தது. 1971 – 1972 வரை இந்த நிலை நீடித்தது அந்த ஆண்டு கிடைத்த நீரினைக் கொண்டு தமிழ் நாடடில் 28.2 இலட்சம் ஏக்கர் பாசனம் நடந்தது. கர்நாடகத்தில் 6.68 இலட்சம் ஏக்கர் தான், கேரளத்தில் வெறும் 6300 ஏக்கர் மட்டுமே. நாளாவட்டத்தில் இந்த நிலை மாறிவிட்டது. எங்கள் மாநிலத்தில் பெய்யும் மழை எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறிக்கொண்டு கர்நாடகம் அதன் பாசன பரப்பினை 19.6 லட்சம் ஏக்கருக்கு அதிகரித்து விட்டது. அதற்கு மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. காவிரி நடுவர் நீதி மன்றம் கர்நாடகத்தில் காவிரி பாசனம் 11.2 இலட்சம் ஏக்கருக்குமேல் அதிகரிக்கக்கூடாது என்று 1991ல் ஆணை பிறப்பித்தது.
கர்நாடகத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு 205 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்றும் இடைக்கால ஆணையிட்டது. கர்நாடகம் எதையும் பின்பற்றவில்லை. இனிமேல் பின்பற்றும் என்ற நம்பிக்கையும் இல்லை.
எனவே தமிழ் நாட்டில் பெய்யும் மழையினைக் கொண்டு தான் நாம் பிழைக்க வேண்டும் என்ற நிலமை உருவாகி வருகிறது. உண்மையில் பார்க்கப் போனால் பல நூற்றாண்டுகளாக காவிரி நீரைப்பயன்படுத்தி வந்த நமக்கு முன்னுரிமை உண்டு. நமது தேவைகளை பூர்த்தி செய்து விட்டுதான் புதிய பயன் பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது சர்வதேச சட்டம். ஆனால் எதற்கும் கட்டுப்படாத கர்நாடத்தை என்ன செய்வது?.
தமிழ் நாட்டில் நதிகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதனையும் அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதனையும் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகள் அளிப்பதற்காக நான்காண்டுகளுக்கு முன் ஒரு தொழில் நுட்பக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆறு மாதங்கள் ஆய்வுநடத்தி அரசுக்கு ஓர் அறிக்கையளித்தது. அக்குழுவில் திரு. சி.எஸ். குப்புராஜ் அவர்கள் ஒரு அங்கத்தினராக இருந்தார்கள்.
குழு அளித்த பயனுள்ள பரிந்துரைகளில் ஒன்று கொள்ளிடத்தில் மேலணைக்கும் அணைக்கரைக்கும் (ஒரு ஊரின் பெயர்)இடையே ஏழு கதவணைகள் அமைக்ப்படவேண்டும் என்பது . இதனால் கீழ் அணை என்று கூறப்படும் அணைக்கரையின் மூலமாக கடலில் கலக்கும் 100 டிஎம்சி தண்ணீரில் பெரும் பகுதியை பயன் படுத்தலாம் என்பதாகும். இந்த 100 டிஎம்சி என்பது கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
வரும் ஆண்டுகளில் இது குறையலாம் , கர்நாடகத்தின் செயல்பாடுகளால் ! இருப்பினும் கணிசமான அளவு இந்தக் கதவணைகள் மூலமாக சேமிக்க முடியும். மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் . இந்தக் கதவணைகள் (மொத்தக் கொள்ளளவு 14.0 டிஎம்சி) காவிரி நீருக்காக மட்டுமல்ல கொள்ளிடத்தின் வடபால் உள்ள நீர்பிடிப்பகுதியில் இருந்து கிடைக்கும் நீருக்காகவும் கூடத்தான்.
தமிழ் நாட்டில் பெய்யும் ஒவ்வொரு துளி மழைநீரினையும் சேமிக்க வேண்டடிய நிர்ப்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே தான் இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. .
இந்தக்கதவணைகள் கட்டப்படவேண்டிய இடங்களும் மற்ற விபரங்களும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான தோராய மதிப்பீடு ரூ.250 கோடி. பயன்கள் அளவிடமுடியதன. முக்கியமானது கொள்ளிடத்தின் இருகரைகளிலும் நூரு கி.மீ.வரை நிலத்தடி நீர் மட்டம் உயரும் .
அன்மைக்காலத்தில் தமிழ் நாடு அரசு வெளியிட்டு பின்னர் கிராம மக்களின் எதிர்ப்பினால் வாபஸ் வாங்கப்பட்ட வீரானம் விரிவாக்கத்திட்டதுடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம் .
தலைமைச் செயலகத்தில் வழக்கம் போல் தூசி படிந்து கொண்டிருக்கும் சி.எஸ். குப்புராஜ் அவர்களது குழுவின் அறிக்கையினை எடுத்து, தூசி தட்டி, இந்த ஒரு பரிந்துரையினையாவது நிறைவேற்றினால், மக்களுக்கு பெரும் பலனளிக்கும்.
கடலில் கலந்து வீனாகும் தண்ணீர் ஓரளவு சேமிக்கப்படும்.
சேது சமத்திரத்திட்டத்திற்கு 2400 கோடி நம் கொள்ளிடத்திற்கு 240 கோடி
கடலில் 2400 கோடியைப் போட வேண்டாம் எனச் சொல்லவில்லை ஆற்றிலும் ஒரு 240 கோடியைப் போட்டல் திருமானூர் தண்ணீர் சென்னைக்கு தங்கு தடையின்றி கொண்டு செல்லலாமே.
எந்த பிதிபலனும் எதிர் பார்க்காத பெருந்தலைவர் இருந்தால் இது நடக்கலாம். ஆட்சியில் இருந்தால்தான் !! ம்...ஆகட்டும் ..பா..ர்..க்..க...லா...ம்..ம்..ம்.
வெவசாயி பெருமூச்சு இது தான் என்ன பன்றது
1 comment:
Thanks for this valuable post.
>>கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டில் கட்டிய கல்லணைதான் --
Kallanai 'ulaga athisayangalil' onraaga irukka vendum :-)
Post a Comment