Wednesday, January 25, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் - 3 -

காந்திக்கு எதிரே இரண்டடி தூரத்தில் அந்த மணிதன் வந்து நின்று கொண்டான். சிறிய ஆட்டோமாட்டிக் பிஸ்டல் ஒன்றால் மூன்று முறை சுட்டான்.
முதல் குண்டு பாய்ந்தது; இயங்கிக் கொண்டிருந்த காந்தியின் கால் தரையில் பதிந்தது. ஆயினும் அவர் நின்று கொண்டே யிருந்தார். இரண்டாவது குண்டு பாய்ந்தது; ரத்தம் பீரிட்டுக் காந்தியின் வெண்மையான துணிகளைக் கறைப்படுத்தத் தொடங்கியது. அவருடைய முகம் சாம்பலென வெளிறிட்டது. கூப்பியகைகள் மெல்லத் தளர்ந்து தொங்கின. ஒரு புஜம் மட்டும் கணநேரம் ஆஷாவின் கழுத்தில் பதிந்திருந்தது.
"ஹே ராமா!"என்று காந்தி முணுமுணுத்தார். முன்றாவது குண்டு வெடித்தது வெளிவந்தது. துவண்ட உடல் தரையிலே படிந்து விட்டது. அவருடைய மூக்குக் கண்ணாடி மண்ணிலே விழுந்தது. பாதரட்சைள் பதங்களை விட்டு நழுவிக் கழன்றன.
ஆபா, மனு இரண்டுபேரும் காந்தியின் தலையைப் பிடித்து நிமிர்த்தினார்கள். அன்புக் கரங்கள் அவரைத் தரையில் இருந்து தூக்கி, பிர்லா மாளிகைக்குள் அவருடைய அறையில் கொண்டு போய்ச் சேர்த்தன.

9 comments:

சந்திப்பு said...

ஹே ராம் என்றார் உண்மையான இராம பக்தர் மகாத்மா காந்தி. ஜெய் ராம் என்கிறார்கள் மனிதத்தையும், மசூதியையும் இடிப்பவர்கள். இவர்களும் ராம பக்தர்கள் என்றுதான் கூறிக் கொள்கிறார்கள். ராமர் இந்தியாவின் அடையாளம் என்று கூறுகிறார் ராஜ்நாத் சிங்.
ராமர் வாலியைக் கொன்ற சர்ச்சையே இன்னும் தீரவில்லை! தன்னுடைய சுயநலத்துக்காக இராமர் அநியாயமாக - மறைந்து நின்று வில்லெய்தி வீழ்த்தியது ராமருக்கு ஏற்பட்ட களங்கம் என்று உண்மையான பக்தர்கள் ஒப்புக் கொள்வார்கள். ராமரின் பிம்பம் இப்படி இருக்க இவர் எப்படி இந்தியாவின் அடையாளம் ஆவார்!
ராமரா, கிருத்துவா, நபியா, குருனானக்கா? என்பதல்ல! மனிதன் என்ற சிந்தனை நமக்குள் விதைக்கப்படாவிட்டால் கோட்சேக்களுக்கு கொண்டாட்டம்தான்!

Anonymous said...

//"ஹே ராமா!"என்று காந்தி முணுமுணுத்தார்//

சகோதரரே!

இப்பொழுது விஷயமே இது தானே!

தூய ராம பக்தரான காந்திஜி மரணிக்கும் பொழுது முணுமுணுத்த வாசகங்கள் "ஹேராம்" என்பதல்ல என்பதை நிறுவத் துடிக்கும் "நவீனகால ராம" பக்தர்கள், காந்திஜி இந்துக்களுக்கு எதிராக செயல் பட்டார் என்றும் அதனால் அவரை கொன்றது நியாயமே என்றும் கூற துடிப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?

அன்புடன்
இறைநேசன்

ENNAR said...

சந்திப்பு:
அன்று அவர்கள் இடித்ததும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல இன்று இவர்கள் செய்வதையும் எற்றுக்கொள்ளக் கூயதல்ல
தவறு தவறு தான்.

ENNAR said...

இறைநேசரே:
காந்தியை கொலை செய்தவருக்கு அவனது செயலுக்கு யாரும் வக்காலத்து வாங்க மாட்டார்கள். சரி எனவும் சொல்ல மாட்டார்கள். அவனும் இந்து பார்ப்பனர் என சொல்லியிருக்கலாம் அவனது செயல் ஞாயமானது என வாதிட்டால் இவர்களது வாதம் சரியில்லாத கொடூரமானது எனக்கு வேறு வார்த்தை கிடைக்க வில்லை.!!

சந்திப்பு said...

இறைநேசன், என்னார்

மனிதத்தை விரும்பும் நாம் பெரும்பான்மையாக இருந்தாலும், இடிப்பவர்களின் குரல்களும், அதனைச் சார்ந்த விவாதங்களும் அடிக்கடி தமிழ்மணத்தில் வருவதை பார்க்க முடிகிறது. இடிப்பவர்களுக்கு எதிராய் வெடிப்பாய் எழ வேண்டிய காலம் இது என நினைக்கிறேன். டோண்டுவின் கோட்சே குறித்த பதிவு இன்றைக்கு முன்னணியில் நிற்கிறது. அவர்கள் எப்பபோது நினைத்தாலும் நம்மை நிகழ்கால விஷயங்களில் இருந்து திசை திருப்புவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

வள்ளலார் ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்று கூறினாரே! அது போல் இல்லாமல் நம்முடைய மனிதத் தன்மை வாய்ந்த கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டியுள்ளது.

நன்றி, வாழ்த்துக்கள்!

நல்லடியார் said...

மலர் மன்னன் என்பவரிடம் காந்தியின் டைப்பிஸ்டாக வேலைபார்த்த கல்யாணம் அவர்கள், "காந்தி கடைசி நேரத்தில் ஹே ராம்! என்று சொல்லவில்லை" என்று சொன்னதாகச் சொன்னார். ஆனால் கல்யாணம் அவர்கள் ரீடிப்.காமிற்கு அளித்த பேட்டியில் எனக்கு நினைவில்லை அல்லது சரியாகத் தெரியவில்லை என்றே சொன்னார்.

காந்தி கொலையின் போது இருந்த, இன்றும் இருக்கும் ஒரே சாட்சியான கல்யாணம் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இந்த வரலாற்று திரிபுகளைச் செய்யத் துணிந்தவர்கள். எந்த சாட்சியமும் இல்லாவிட்டால் என்னவெல்லாம் எழுதுவார்களோ?

ENNAR said...

நல்லடியார்
குமரி அணந்தன் ஒரு முறை பேசும் போது சொன்னார்,' காந்திஜி இறப்பதற்கு நான்கு (சரியாக தெரியவில்லை) சொன்னாராம் என்னை எதிரி கொலை செய்யும் போது கூட அவனை வைய மாட்டேன் ஏ ராமா எனத் தான் சொல்வேன் என்று சொன்னார் சொன்னபடியே சொல்லிவிட்டார்.' என்று சொன்னார்

dondu(#11168674346665545885) said...

கல்யாணம் அவர்கள் ரீடிஃப்ஃபுக்கு சொன்னது இதோ:

"I am the only living witness to the incident today. I was just a few inches behind him when he was shot at. The bullet missed me by six inches. His death was instantaneous. People say, he said 'Hey Ram'. I don't know. I don't remember having heard anything. Maybe all of us were shocked. I do not know how somebody could think of shooting a good man like him (http://in.rediff.com/news/2002/aug/15spec.htm)"

மலர் மன்னன் அவர்கள் எழுதியது:
"காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே சாய்ந்தார். அந்த முனகலைத்தான் பிற்பாடு "ஹே ராம்' என்ற அழைப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள்! காந்திஜி "ஹே ராம்' என்றெல்லாம் சொல்லவில்லை என்பதற்கு கல்யாணம் சாட்சி! மக்கள் மத்தியில் காந்திஜியை ஒரு மஹானாக நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கற்பிதங்களுள் இந்த "ஹே ராம்' சமாசாரமும் ஒன்று!"

இரண்டுக்கும் இடையில் என்ன முரண்பாடு இருப்பதாகக் கூறுகிறார்கள்? ரிடிஃப்ஃபில் கல்யாணம் ஹே ராம் பற்றி கூறியது ஒரு வித சங்கடத்துடந்தான் என்று எனக்கு படுகிறது. சரித்திர புத்தகங்களில் எல்லாம் வந்து விட்ட ஒரு விஷயத்தை அப்படி ஒரேயடியாக மறுக்கத் தயங்கியுள்ளார். அவர் வரிகளைக் கூர்ந்து கவனித்தால் அவர் கூறியது விளங்கும். மலர் மன்னன் அவருடன் சில நாட்கள் தங்கியிருந்து விவரம் சேகரித்திருக்கிறார்.

ஒன்று செய்யலாம், ரிடிஃப் சார்பில் கல்யாணம் அவர்களை பேட்டி கண்டவரையே சந்தித்துக் கேட்கலாம்.

"குமரி அணந்தன் ஒரு முறை பேசும் போது சொன்னார்,' காந்திஜி இறப்பதற்கு நான்கு (சரியாக தெரியவில்லை) சொன்னாராம் என்னை எதிரி கொலை செய்யும் போது கூட அவனை வைய மாட்டேன் ஏ ராமா எனத் தான் சொல்வேன் என்று சொன்னார் சொன்னபடியே சொல்லிவிட்டார்.' என்று சொன்னார்."
குமரி அனந்தன் அவர்கள் நேரடியாகக் கேட்டாராமா? ஆனால் அவர் கூறியதிலிருந்து இந்த ஹே ராம் வெர்ஷன் எப்படி வந்தது என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது.

அது சரி, கோட்ஸே ஏதோ இஸ்மாயில் என்றெல்லாம் கையில் பச்சை குத்தியிருந்ததாகக் கூறப்பட்டதே? அது என்ன ஆயிற்று? நீதிபதி கோட்ஸேயையும் ஜூரிகளையும் வைத்து ஏதோ கூறினாரே, அது பற்றி நானும் மலர் மன்னன் எழுதியிருந்ததிலிருந்து குறிப்பிட்டிருந்தேனே? அது பற்றி ஏதாவது எதிர் வினைகள்?

நான் மறுபடியும் கூறுவேன், மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்ஸே கொலையாளிதான். அவன் செய்தததை நியாயப்படுத்தவே முடியாது. அதற்கான தண்டனையும் அவன் அனுபவித்தாகி விட்டது. என்னுடைய கேள்வியெல்லாம், அரசு ஏன் எல்லாவற்றையும் இத்தனை நாட்கள் மூடி மறைத்தது என்பதுதான். மேலும் இப்போது எல்லாவற்றையும் நன்கு கூர்ந்து கவனித்து ஒரு பழம்பெறும் பத்திரிகையாளர் எழுதும் போது ஏன் இந்தக் கூச்சலெல்லாம்?

இப்பின்னூட்டம் என்னுடைய "காந்தியும் கோட்ஸேயும்" பற்றிய இரண்டாம் பகுதியிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ENNAR said...

டோண்டு சார்
சதா காலமும் அவர் ராமா ராமா என சொல்லுவாரா? (எனக்குத் தெரியாது)
//குமரி அனந்தன் அவர்கள் நேரடியாகக் கேட்டாராமா? ஆனால் அவர்//
தெரியவில்லை இருக்காது அவரும் என்னைப்போல் படித்தது கேட்டதுதான்.
சார் ஒரு முறை காமராஜர் திருவெறும்பூரில் தேர் பிரச்சாரத்தில் இருக்கும் போது பொது கூட்டம் போட்டார்கள் அப்போது விழாத்தலைவர் ." தங்கவேல் முத்துராஜா போசுவார்" என்றார் தலைவர் இருக்கும் போது. தங்கவேலும் எழுந்தார் உடனே காமராஜர் எழுந்து கொண்டே "முத்துராஜாவும் பேச வேண்டாம் ஒன்னும் வேண்டாம் நா ஏங் கடுப்ப தீத்துட்டு போரேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்து பேசினார் அது யாருக்கும் தெரியாது. அங்கு எனது மாமா மேடையில் இருந்தார். கூட்டம் கலைந்த பின் எனது மாமாவிடம் சென்று என்ன தலைவர் இப்படி சொல்லிவிட்டு போரார் என்றேன் அவர்." உடனே டேய் போடா அதொல்லாம் அவர் ஒன்னும் சொல்ல வில்லை யாரிடமும் சொல்லாதே போ" என்றார்.
பெரியவர்களை பெரியவர்களாக்க அது தான் வழி .இதையெல்லாம் கண்டுக்கொள்ளக்கூடாது எது நடந்தது என யாருக்குத் தெரியும்.
சரி எதற்காக காந்தி கொலைசெய்யப் பட்டார்.