Monday, January 23, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் -1 -

மாலை மணி 4. 30 கடைசி உணவை ஆபா உள்ளே கொண்டு வந்தாள் . இந்த உணவுக்குப் பிறகு வேறு உணவை அவர் உண்ணப் போவதில்லை. ஆட்டுப் பால், சமைத்வையும் , பச்சையுமான காய் கறிகள், ஆரஞ்சுப் பழங்கள், ஒரு பச்சடி இவைதான் அந்த உணவு எலுமிச்சம் பழம், வடித்த வெண்ணெய், இஞ்சி, கற்றாழைச் சாறு இவற்றின் கலவை அந்தப் பச்சடி. புது டில்லியில் பிர்லா மாளிகையின் பின்புறம் உள்ள தமது அறையில் காந்தி உட்கார்ந்திருந்தார். இந்த உணவை அருந்திக் கொண்டே, சுதந்திர இந்தியாவின் புதிய சர்ககாரில் உதவிப் பிரதம மந்திரியான சர்தார் வல்லப் பாய் படேலுடன் அவர் பேசிச்கொண்ருந்தார். படேலின் மகளும் காரியதரிசியுமான மணிபென் கூட இருந்தாள். நடந்த சம்பாஷணை மிகவும் முக்கியமானது. படேல், பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இந்த இரண்டு பேருக்கும் இடையே மணஸ்தாபம் ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் உலவின . வேறு எத்தனையோ விவகாரங்களைப் போலவே இந்த விவகாரத்தையும் மகாத்மாவின் காதில் போட்டிருந்தார்கள்.

காந்தியும் படேலும் அவருடைய பெண்ணும் மட்டும் தனியே இருப்பதைக் கண்ட ஆபா, தான் குறுக்கிடச் சற்றுத் தயங்கினாள். ஆனாலும் காந்திக்கு எதுவும் நேரந் தவறக்கூடாது. இது அவளுககுத் தெரியும். எனவே, கடைசியில், மகாத்மாவின்நிகல் முலாம் புசிய கைக் கடிகாரத்தை எடுத்து வெரிடம் காட்டினாள். "நான் உடனே கிளம்பியக வேண்டும்" என்று சொல்லிக் காந்தி எழுந்தார். பக்கத்துச் சிற்றறைக்குச் சென்று விட்டு, மாளிகையின் இடது பக்கத்துப் பெரிய தோட்டத்தில் உள்ள பிரார்த்தனை மைதானத்தை நேக்கிப் புறப்பட்டார். மகாத்மாவுடைய பங்காளியின் பேனான கனு காந்தியின் இளம் மனைவி ஆபா. மற்றோரு பங்காளியின் பேத்தி மனு. இந்த இரண்டு பேரும் அவருடன் சென்றார்கள். இந்த இரண்டு பேருடைய தோள்கள் மீதும் அவர் கைகளைச் சார்த்திக் கொண்டார். "இவர்கள் தான் நான் நடக்க உதவும் ஊன்று கோல்கள்" என்று காந்தி சொல்வார்.
மீதம் நாளை

2 comments:

குமரன் (Kumaran) said...

ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஐயா அடுத்தப் பதிவை.

ENNAR said...

நன்றி குமரன் வரும்