Friday, January 20, 2006

நண்பர் பால சந்தர் கணேசனுக்கு

கடிதத்திற்கு பதில்

//"மாணவ_மாணவிகளுக்கு தினம் அரை வேளைதான் படிப்பு. மீதி அரை நேரம், ஏதாவது கைத்தொழில் கற்க வேண்டும்" என்பதே ராஜாஜியின் கல்வித்திட்டம்.


2 ஷிப்டுகளில் பள்ளிக்கூடம் நடத்தி, அதிகமானவர்களை சேர்க்கலாம் என்று ராஜாஜி நினைத்தார்.

"என்ன தொழில் கற்பது? அரசாங்கமே தொழில் கல்விக்கு ஏற்பாடு செய்யுமா?" என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர்.

"அப்பா செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்றுக்கொள்ளலாம்" என்று ராஜாஜி பதிலளித்தார்.//

கற்றுக் கொள்ளலாம் என்று தான் சொன்னார் அதையே தொடர்ந்து செய்யச் சொல்ல வில்லை. அரசியலில் ஆதாயம் பெற மாற்றுக் கட்சியினரால் இதை பெரிது படுத்தி பூதாகாரமாக்கினர்.
ராஜாஜி அன்று சொன்னது இன்றும் நடக்கிறது கட்சித்தலைவர் மகன் அவருக்கு பின் அந்த கட்சித் தலைவர் , நடிகர் மகன் நடிகர், மந்திரி மகன் மந்திரி கிட்டத்தட்ட இதுவும் குலத்தொழில் மாதிரி அன்று எதிர்த்தவர்கள் 'நான் அன்று எதிர்த்தேன் இன்று எனது மகனுக்கு மந்திரி பதவி வேண்டாம்' என யாரும் கூறவில்லை டாக்டர் மகன் டாக்டர் தான். எஞ்சினியர் மகன் எஞ்சினியர் தான் அவர் என்ன சொன்னார் பாதி நேரம் ஏதாவது தொழில் கற்றுக்கொள்ளுங்கள் என்றார் இவர்கள் கேட்டதற்கு தந்தையுடன் கூட இருந்து உதவிசெய்யட்டும் அதை கத்துக்கொள்ளட்டும் என்றார் COLLECTOR வேலைக்குப் போக வேண்டாம் என்றா சொன்னார்?, அதாவது ஒன்று கிராமத்தில் சொல்லவார்கள் ஆகாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என. இதை பெரியார் சொல்லியிருந்தால் ஆகா ஓகொ என புகழ்ந்திருப்பார்கள் சொன்னவர் பார்ப்பணர் என்ற ஒரே காரணத்தால் அன்று எதிர்த்தனர். பார்பணிசியம் என்பது வேறு அதில் எனக்கு உடன்பாடு கிடையாது அதை இதோடு இணைக்கக்கூடாது. சொன்னதை சொன்ன கருத்து நல்ல கருத்து என்றால் யார் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ராஜாஜி சொல்வதற்கு முன்னமே நாம் அந்த வேலையைத்தான் செய்தோம் பள்ளிகூடம் விட்டது வயலுக்கு போனோம், ஒவ்வொருவரும் அப்டித்தான்.
ஒரு மாணவன் 6 மணிநேரம் தொடர்ந்து படிக்க முடியாது 4 மணிநேரம் படித்து விட்டு மீதி நேரம் ஏதாவது தொழில் கத்துக்கொள்ளட்டும் என்பது நல்ல திட்டம்தான்.



இப்போது குலகல்வி திட்டம் பற்றி என்னுடைய பதில்.
உண்மையில் பிள்ளைகள் அதுவும் ஏழை பிள்ளைகள்,பல ஜாதியிலிருந்தும் உள்ள ஏழை பிள்ளைகள் பள்ளி கூடம் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?. அதற்கு எத்தனையோ வழிகள் உண்டு.

அதனில் ஒன்று தான் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவது. இதைதான் காமராஜர் செய்தார்.(மதிய உணவு திட்டம்). பின்னர் எம்.ஜி.ஆர் விரிவாக்கினார்(சத்துணவு திட்டம்). இந்த திட்டங்கள் பெரிய வெற்றி பெற்றன என்பதும் நிறைய பிள்ளைகள் பயன்பெற்றனர் என்பதும் வரலாறு.

இது போன்று ஒன்றும் செய்யாமல் எதற்கு ஜாதி அடிப்படையில் தொழில் கல்வி கொண்டு வர வேண்டும்? இதில் என்னார் வேறு சொல்கிறார். டாக்டர் பையன் டாக்டராகிறார், வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது என்று எடுத்துகாட்டு வேறு. என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து. டாக்டர் பையன் டாக்டராக இருப்பது வெற்றியே... வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது வெற்றியே.
ஆனால் செருப்பு தைப்பவர் பையன் செருப்பு தைப்பனாகவே இருப்பது வெற்றியா?.

மேலும் டாக்டர் பையன் டாக்டராக வருவது குல தொழிலாக அல்ல. ஏனெனில் எல்லா ஜாதியிலும் டாக்டர்கள் இருக்கிறார்கள். அதை குடும்பத் தொழில் என்று கூறுங்கள்.

ஆக்க பூர்வமான எடுத்த காமராஜரையோ, எம்.ஜி.ஆரையோ யாரும் குறை கூறி எழுதுவதில்லை என்றும் இராஜாஜி இதை செய்திருந்தால் அவரையும் சமுகம் பாராட்டியிருக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.

நான் முட்டால் தான் புத்தியுள்ள புத்திமான்கள் எனது பின்னுட்டத்தையம் தங்கள் பதிலை ஒரு முறையல்ல பல முறை படித்து பாருங்கள் அடுத் பதிவில் சற்று விளக்கமாக எழுதுகிறேன்.
குலத்தொழில் தான் செய்ய வேண்டும் என்று ராஜாஜி சொன்னாரா? அல்லது தந்தை செய்யும் தொழில் உடன் கூட இருக்கச் சொன்னாரா?அதை முதலில் தெரிந்து கொண்டு பேசுங்கள்.
அப்பாவுக்கு பக்கபலமா உறுதுணையா இருக்கச் சொன்னால் நான் ஊர்சுத்தத்தான் போவேன் என்றால் போங்கள். இந்தி படித்தால் நல்லது என்றார்கள் முடியாது என்றால் போங்கள் யாருக்கென்ன . மது கடை திறக்க வேண்டாம் !!,லாட்டரி சீட்டு ம் நடத்த வேண்டாம் என்று நல்லதை சொன்னால் முடியது என்றால் போங்கள் யாருக்கென்ன .

3 comments:

dondu(#11168674346665545885) said...

விடுங்கள் என்னார் அவர்களே. தூங்குபவர்களை எழுப்பலாம், அம்மாதிரி பாவனை செய்பவர்களை எழுப்பவே முடியாது.

அரசு அப்போதிருந்த (1953) காலக் கட்டத்தில் கண்டிப்பாகத் தொழில் கல்வி கொண்டு வந்திருக்க முடியாது. தந்தை செய்யும் தொழிலில் துணையாக இருந்தால் அதற்கு கட்டணம் கிடையாது. தந்தையும் தன் மகனுக்கு நன்கு தொழில் கற்றுக் கொடுப்பான்.

ஐயா உங்கள் குழந்தைகளை அம்மாதிரி முழு நாளும் வைத்துக் கொள்ளாதீர்கள், ஒரு வேளையாவது பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கேட்டதில் என்ன அநீதியை கண்டு விட்டார்களாம்? உண்மையைக் கூறப்போனால் அத்திட்டம் முதலில் நடந்த கல்வியாண்டு 1953-54. அடுத்தக் கல்வியாண்டில் அதை மேலும் அதிக இடங்களுக்கு விரிவாக்க பல கோரிக்கைகள் இருந்தன. ராஜாஜி அவர்கள் பதவி துறந்து சென்றதும் அத்திட்டத்துக்கே மங்களம் பாடி விட்டார்கள்.

அவர் இருந்ததே இரண்டு ஆண்டுகள்தான். அதிலும் பெரும் பகுதி அரசை நிலையாக வைப்பதிலேயே கழிந்தது. இருப்பினும் அக்கிழவர் செய்த சாதனை அதிகம்.

அதெல்லாம் இப்போதையத் தலைமுறைக்கு புரியாதுதான்.

இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிங். செயகுமார். said...

நண்பரே நீங்கள் குறிப்பிடும் அந்த நபரின் சில பதிவுகளை படித்துவிட்டு நான் ஒரு பதிவில் மட்டும்தான் நானளித்த பின்னூட்டத்திற்கு என்னவோ பதில சொல்லி இருக்கிறார். இன்னும் விளக்கமா எழுத நினைத்தேன். வேண்டாம் ஆரோக்கியமான விவாதம் என்றால் பதில் சொல்லலாம், வேண்டாம் என்று விட்டு விட்டேன். மன்னிக்க இதை உங்கள் பதிவில் வந்து கூறுவதற்கு.

ENNAR said...

நன்றி டோண்டு சார் முழுநேரம் என்ன அரை நேரம் கூட பள்ளிக்கு அனுப்பமுடியாமல் இருந்தார்கள் அவர்கள் வாழ்வும் வசதியும் அப்படி. சரி காலையில் பள்ளிக்கு அனுப்புங்கள் மலையில் உங்கள் வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள் எனவும் அவர் நிணைத் திருக்கலாம்.

நன்றி செயகுமார்
நல்ல வார்த்தைகளைப் போசி மண உளைச்சல் இல்லாமல் இருப்பது நன்று.
வேகமாகவும் அசிங்கமாகவும் பேசி மணக் கஷ்டங்கள் இல்லாமல் இருப்பது தான் நல்லது. தெரிந்ததை உள்ளதை சொல்லுவோம் அவ்வளவுதான் யாருக்காகவும் யாரும் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது .
நாம் இதில் ஈடுபடுவதே மணசாந்திக்கும் கவலை மறக்கவும் தானே?
அதை விடுத்து இங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்தால் என்னாவது.