Tuesday, March 21, 2006

தொல்காப்பியன்

தீராத தலைநோயால் துடித்துக்கொண்டிருந்த திரணாக்கிய முனிவரைக் காப்பாற்ற வேண்டும் என்று அகத்தியரைக கேட்டுக் கொண்டார்கள், போடாத கும்பிடெல்லாம் போட்டு பெரிய பெரிய வார்த்தைகளால் புகழ்ந்து, "நீங்கள் மனது வைத்தால் இவன் பிழைப்பான். இல்லாவிட்டால் செத்துப் போவான். இவனுக்கு நீங்கள் தான் உயிர் பிச்சை அளிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.

அகத்தியர் பார்த்தார். திரணாக்கியரின் கபாலத்திற்குள் தேரை புகுந்து கொண்டிருக்கிறது. கபாலத்தைத் திறந்து தேரையை வெளியேற்றினால் தான் அவர் பிழைப்பார் என்பதைத் தெரிந்து கொண்டார். அக்காலத்திலேயே அகத்தியர் மூளை அறுவை சிகிச்சை வரை செய்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

அகத்தியர் திரணாக்கதியரின் மண்டை ஓட்டைத் திறந்தார். உள்ளே தேரை இருந்தது. அதை எடுப்பதற்காக இடுக்கியை எடுத்தார். தேரையை எடுக்க வேறு வழி இல்லை என்பதாலேயே அகத்தியர் அவ்வாறு செய்தார். ஆனால் சற்று இசகு பிசகாக இடுக்கி பட்டுவிட்டால் கூடஉடனே நோயாளி இறந்து போய்விடுவானே? தவிர அகத்தியர் இடுக்கியால் பிடிக்கும் வரை தேரை உட்கார்ந்து கொண்டா இருக்கும்?

அதைப்பற்றி யெல்லாம் யோசிக்க அகத்தியருக்கு அவகாசம் இருக்கவில்லை. ஆனால் புத்திசாலியான ஊமைச் சீடன் உடனே நிலைமையைப் புரிந்து கொண்டான். சட்டென்று அகத்தியரைத் தடுத்து விட்டான். ஓடிப்போய் ஒரு தாம்பாளத்தில் தண்ணீர் கொண்டு வந்து தேரையிடம் காட்ட அது மூளையை விட்டு தாம்பாளத் தட்டில் குதித்தது.

அகத்தியருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவும் கூறமுடியுமா? ஊமைப் பையனாகக் காட்சியளித்த அந்தச் சீடன் எவ்வளவு மாபெரும் காரியத்தைச் சாதித்து விட்டான்! நோயாளியின் உயிரைக் காப்பாற்றி விட்டான். தன்னுடைய மானத்தையும் காப்பாற்றி விட்டான். அது முதல் அந்தச் சீடனுக்குத் தேரையர் என்ற பெயரே நிலைத்து விட்டது.

அந்த தலைநோய் நீங்கிய திணாக்கிய முனிவர் தான் பின்னாளில் அகத்தியரின் மாணக்கனாகி தொல்காப்பியம் என்ற சிறந்த இலக்கண நூலை இயற்றிய தொல்காப்பியர்

தகவல் சித்தர்கள் வரலாறு

No comments: