Wednesday, March 29, 2006

புத்தர் சிலையை உடைத்தவர்




இஸ்லாமாபாத், மார்ச். 29-

சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் கிறிஸ்டியன் பெரி. இவர் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகள் பற்றிய தகவல்களைசேகரித்து அவற்றை டாக்குமென்டரி படங்களாக எடுத்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் பாமி யான் மலைப்பகுதியில் உலகின் 2 மிகப்பெரிய புத்தர் சிலைகள் இருந்தன. சிலை 1,500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. இந்த சிலைகளில் ஒன்று 180 அடி உயரம் இருந்தது. இன்னொன்று 121 அடி உயரம்.

யுனெஸ்கோ நிறுவனத்தால் இவை உலக பழங்கால அரிய சிற்பங்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்த சிலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு தலிபான் ஆட்சி இருந்த போது உடைக்கப்பட்டன.

இந்த சிலைகளை உடைக்கும்படி அல்கொய்தா இயக்க தலைவன் பின்லேடன்தான் உத்தரவிட்டுள்ளான். அவற்றை உடைக்க தலிபான் தலைவர் முல்லா உமருக்கு விருப்பம் இல்லை என்றாலும் பின்லேடன் உத்தரவுபடி சவூதி அரேபியா மற்றும் பாகிஸ் தானை சேர்ந்த என்ஜினீயர்கள் அவற்றை உடைத்து எறிந்தனர். உலக வர்த்தக மைய கட்டிடம் தகர்க்கப்படுவதற்கு முன்பே இந்த சிலைகள் தகர்க்கப்பட்டன.

இதற்கான ஆதாங்கள் தன்னிடம் இருப்பதாக சுவிட்சர்லாந்து இயக்குனர் கிறிஸ்டியன் பெரி தெரிவித்தள்ளார்.
மாலை மலர்

2 comments:

Amar said...

நல்ல பதிவுங்க.

சுட்டி இருந்தா கொடுக்க முடியுமா?

(அப்புறம் கடவுளின் சீடர்களை பற்றி ஏன் தவறாக பதிவு போடுகிறீர்கள்? :) )

ENNAR said...

இதோ சுட்டி
http://www.maalaimalar.com/
//அப்புறம் கடவுளின் சீடர்களை பற்றி ஏன் தவறாக பதிவு போடுகிறீர்கள்? :) )//
எதைச் சொல்கிறீர்கள்