Friday, February 03, 2006

N.S. கிருஷ்ணன்

திருச்சி தென்னூரில் குதிரை வண்டி ஸ்டாண்ட் கட்டுவதற்காக

மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் கிந்தனார் கதாகாலச்ட்சேபம் நிகழ்சிசயை என்.எஸ். கிருஷ்ணன் நடத்தினார். இதில் வசூலான தொகை ரூ.1360துடன் தன்னுடைய நன்கொடையாக ரூ.1640 ம் சேர்த்து ரூ.3000 த்தை அன்றைய நகரசபைத் தலைவரிடம் கொடுத்து கிந்தனார் குதிரை வண்டி ஸ்டாண்ட் கட்டவைத்தார். பிறகு போக்கு வரத்துக்கு இடஞ்சலாக இருப்பதால் அந்த வண்டி ஸ்டாண்டை எடுத்து மேற்கு பக்கம் கட்டினார்கள் . சென்ற ஆண்டு அந்த வண்டி ஸ்டாண்டை மாநகராட்சி முழுவதும் அப்புறப்படுத்திவிட்டது.

"முன்னுக்கு வாங்க .....முன்னுக்கு வாங்க....... கேய் .....கேய் ....கேய் "

என குதிரை வண்டடிக்காரன் சொன்ன வார்த்தை அவருக்கு பிடித்தது. யாரும் முன்னுக்கு வாங்க முன்னுக்கு வாங்க என நம்மை முன்னேரச்சொல்ல மாட்டார்கள் அந்த குதிரைவண்டிக்காரன் தான் அப்படிச் சொல்வான் என்பதற்காக அவர்களுக் அதை ஏற்படுத்திக் கொடுத்தார்.


2 comments:

குமரன் (Kumaran) said...

ஐயா. என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் இந்த விஷயத்திற்காக கிந்தனார் காலக்ஷேபம் நடத்திக் கொடுத்தார் என்று படித்திருக்கிறேன். அண்மையில் அது அகற்றப்பட்டது என்பது செய்தி.

ENNAR said...

ஆமாம் உண்மைதான் அன்று நான் திருச்சியில் தான் இருந்தேன் .