தேவசபையில் கண்ணனும் துரியோதனனும் சந்தித்தால் என்ன பேசுவர்?- ஒரு கற்பனை
துரியோதனன் : வணங்குகிறேன் கண்ணா
கண்ணன் : என்ன துரியோதனா? அடக்கம் பணிவு எல்லாம் இங்கு வரவும் வந்து விட்டது போல் இருக்கி றது.
துரியோதனன் : எங்கு எனக்கு இல்லை? கண்ணா?
கண்ணன் : அன்று என்னிடம் குருச்சேத்திர போருக்கு உதவி கேட்க வந்தாயே அன்று?
துரி : அன்று என்ன?
கண்ணன் : என் தலைமாட்டில் அமர்ந்தல்லவா இருந்தாய் அது என்ன அடக்கமா? அவமறியாதையா?ஆனவமா?பாசமா?நேசமா? பணிவா? பக்தியா? சொல் துரியோதனா?
துரி : ஓ அதுவா நான் வந்ததைக் கண்டு தூங்குவது போல் நடித்த நடிகர் திலகமே கண்ணா நீ ஒரு மோசக்காரன், எப்பொழுதும் உனது கால்பக்கம் இருப்பது யார்?தலைபக்கம் இருப்பது யார்?
கண்ணன் : தலைமாட்டில் ஆதிசேசன்,கால்மாட்டில் என்தேவி.
துரி : அதாவது பணிவு தலைமாட்டில், சொந்தம் பாசம் கால்மாட்டில் அதாவது உன் தொண்டன் இருந்தபக்கம் நான் உனது தேவியிருந்தபக்கம் பாண்டவன் அவ்வளவுதான் இல்லையா? கண்ணா.....இது பணிவா? பாசமா?
கண் : அது போகட்டும் பாண்டவருக்காக தூதுவந்தபோது கொலுமண்டபத்தில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து என்னை வணங்கியபோது நீ மட்டும் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாயே அது உனானவத்தைக் காட்ட வில்லையா? துரியோதனா!
துரி : நான் சிம்மாசனத்தில் இருந்ததாக கூறிவிட்டாய் அங்கு அந்த இடத்தில் நீ யார்? நான் யார்? கண்ணா!
கண் : நீ அஸ்த்தினாபுற மன்னன் நான் தூதுவன்
துரி : தூதுவனுக்கு மன்னர் எங்காவது எழுந்து வணங்குவதும் வரவேற்பதும் உண்டா கண்ணா?
கண் : சரி அதுபோகட்டும்,
துரி : நான் படையுதவி கேட்டு வந்தபோது '' நான் ஆயுதமேந்தமாட்டேனெற்று'' பகன்றனை பின் ஏனிந்த சக்ராயுததத்தை எடுத்தனை கண்ணா?
கண் : அது வந்து வேறு வாழியில்லை
துரி : கர்ணன் நல்லவன், வல்லவன், வள்ளல், வீரன், சூரிய குமாரன் உண்மையான எனது நண்பன் அவனை பாவி கொன்று விட்டாயே!!! பாவி...
கண் : சண்டை வேண்டாம் சமாதானமாக போங்கள் என்று பிதாமகர் செல்லும் போது, ''வயதான காலத்தில் வாய்மூடி கிடக்காமல் உபதேசம் செய்கிரீர்கள் என்று கர்ணன் சொன்னதற்கு பிதாமகர்,''உபதேச தர்மம் உனக்குப் பிடிக்காதா?'' என்று கேட்டதற்கு உபதேச தர்மம் ஒருவனை பலர் முன்னே கோழையாக்கிவிடும். என்றான்,''வீராவேச தர்மம் பலர் முன்னே ஒருவனை பகைவனாக்கிவிடும் கர்ணா!! நாடு கொடுத்தான் என்பதற்காக நன்றியுணர்வோடு பேசுகிறாயே தவிர நல்லதை பேசவில்லையே?'' ,'' நன்றி என்பதையே நிறையபேர் என்னெற்று தெரியாமால் இருக்கின்றனரே'' என்ற கர்ணனுக்கு,'' என் பேரன் ஒருவனால் அரசவாழ்வு கண்ட உன்னால் புண்படுத்தப்பட்டேன் '' என்று பிதாமகர் மிக துயரப்பட்டு வருத்தப்பட்டு சொன்னாரே சரியா?
துரி : என்னுயிர் நண்பர் கர்ணனை தேரோட்டி மகன் என அவனை எல்லோரும் தாழ்த்திப்பேசினர். அவனது வீரத்தை யாரும் போற்றிலர் அதில் பிதாமகருக்கும் பங்குண்டு. பாவி ! பாவி !! சண்டாளா !! என் நண்பன் பல ஆண்டுகளாக செய்த தர்மத்தின் பலனை ஒரே நாளில் இரந்து விட்டாயே வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை தான் செய்த புண்ணி, தர்மங்கள் என்று சொல்வார்களே அதையும் கவர்ந்து விட்டாயே கள்வா, அதை விட கொடுமை அவன் செய்த புண்ணியங்களை பெற்று அதனால் ஒரு புண்ணியம் கிடைக்குமல்லவா அதையும் என் நண்பர் உனக்கு கொடுத்து உயர்ந்து விட்டான் தர்மங்களையே யாசகம் பெற்ற யாசகா. இதனால் தான் தற்போது பூவுலகில் யாரும் தர்மம் செய்வதில்லை போலும் நீதான் பொய்யன் மாயவி மோசக்காரன் திருடன் நீ பொய் சொன்னது போதாதென்று பொய்யே பேசாத தர்மமையுமல்லவா? பொய் சொல்ல வைத்து விட்டாய் ''அசுவத்தாமா அதகா குஞ்சரா''.என்று நீ அன்று சொல்ல வைத்த பொய் இன்றும் ஆழ் போல் தலைத்து அறுகு போல் வேரூன்றி நன்றாக பரவிவருகிறது. யுத்த தர்மம் என்று ஒன்று இருக்கிறது அதை மீறி என்னை அடிக்ககூடாத இடத்தில் பீமனை அடிக்க வைத்தாயே கண்ணா இன்றும் பூலோகத்தில் நடக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நீ தான்.
கண் : முடிந்ததா அரவக்கொடியேனே! பாஞ்சாள நாட்டு மகள், உன் தந்தைக்கும் மருமகள், சபை நடுவே பொதுமக்கள், படைவீரர்கள்,பணிப்பொண்கள் மந்திரி இவ்வளவு பேருக்கு மத்தில் அவள் சேலையை நீக்க ஆணையிட்டது சரியா? முறையா?
துரி : ஏன் என்ன நடக்கும் அடிமையென்றால் என்று அந்த தர்மனுக்குத் தெறியாதா? ராஜ நீதி என்ன? அடிமையை நாம் எப்படியும் நடத்தலாம் என விதியிருக்கிறதே மேலும் அடிமையான பின் ஏன் பாண்டவர்கள் தங்கள் மார்பில் துணியேந்தியிருந்தனர் மணிகளையும் போட்டிருந்தனர் அடிமைகளுக்கு மார்பில் துணியேந்தும் வழக்கமில்ல என்பது தெறியாதா? அப்போதே கர்ணன் சொன்னானே,'' அடிமைகளுக்கு மார்பிலே துணியேந்தும் வழக்கமில்லை என்றவுடன் பாண்டவர்கள் தங்கள் மேல்துண்டையும் அணிகளன்களையும் எடுத்து வைத்து விட்டனரே பிராட்டியார் மாட்டும் செய்யாததால் தான் நான் ஆணையிட்டேன். இதில் என்ன தவறு?
இங்கு வந்து தெரிந்து கொண்டேன் நீயும் சகுனியும் சேர்ந்து தான் இந்த நாடகத்தை நடத்தினீர்கள் என்று. எது எப்படியோ தர்மனை பொய் சொல்லவைத்து பூலோக மக்களை பொய் சொல்லவைத்து விட்டாய் கொடையால் கிடைத்த புண்ணியங்கள் அனைத்தையும் பெற்று பூவுலகில் யாரையும் புண்ணியம் செய்யாமால் வைத்த புண்ணியன் நீ.
13 comments:
நல்லதொரு கற்பனை...
பாராட்டுக்கள்..
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..
http://seemachu.blogspot.com
நன்றி சீமச்சு
//கண்ணன் : என் தலைமாட்டில் அமர்ந்தல்லவா இருந்தாய் அது என்ன அடக்கமா? அவமறியாதையா?ஆனவமா?பாசமா?நேசமா? பணிவா? பக்தியா? சொல் துரியோதனா?
//
இது கண்ணனின் தலைமாட்டிலா அரவாணனின் தலை மாட்டிலா? அரவாணனின் தலை மாட்டில் களபலிக்கு கேட்க வந்ததாக ஞாபகம்
நன்றி
இல்லை நண்பரே;
குருச்சேத்திர போருக்கு உதவி கேட்க்க தருமனும் துரியோதனனும் செல்கின்றனர்
அப்போது முதன் முதலில் சென்றவன் துரியோதனன், முதலில் வந்தவனுக்குத் தான் உதவுவது வழக்கம் எனவே கண்ணன் தூஙகுவது போல் பாசாங்கு செய்கிறான் உடனே துரியோதனன் தலைமாட்டில் உட்காருகிறான். பின் வந்த பாண்வன் கால்மாட்டில் அமருகிறான் கண்விழித்த கண்ணன் முதன் முதலில் தான் பாண்டவனைத்தான் பார்த்தேன் அவனுக்குத்தான் 'துணைபோவேன்' என்பான் அதற்கு துரியோதனன், 'அப்படியானால் உனது படையை எனக்குக் கொடு' என்பான்
என்னப்பன் சிவனின் அடியவரே வணக்கம்
நான் மேற்கொண்டார் தான் எதையும் மேற்கொண்டவன்(நல்லவைகளை). அது என்ன மின் ஓலையா? பனை ஓலையா?
நல்ல வேலை 'தரித்திர நாயகன்' என அழைக்காமால் இருந்தால் சரி
என்னார் ஐயா. நல்ல கூர்மையான வாதங்கள்...
நல்ல கற்பனை உரையாடல். ஆனால் கர்ணணிடம் கண்ணன் கையேந்தி கொன்றது. எந்த யுத்த தர்மம் என தெரியவில்லை.
//ராவணண் வாரிசு//
மாற்றனின் மனைவியை கவர்ந்தவர்களை க்கொண்டா?
அனுசுயா
தேர்த்தட்டில் கர்ணன் குற்றுயிராக கிடக்கிறான் அப்பொழுது வந்து மாயக்கண்ணனிடம் தான் பெற்ற புண்ணிய பலன்கள் அனைத்தையும் கொடுத்து 'இந்த தானம் தருகிறேனே இதற்கும் ஒரு புண்ணியம் கிடைக்கு மல்லவா அதையும் உனக்குக் கொடுத்தேன்' என கொடுப்பான் பெற்றுக்கொண்டு, 'கர்ணா! நீ தாரை வார்த்துத் தராத தானம் செல்லுபடியாகாது தண்ணீரால் தாரை வார்த்துக் கொடு' என்பான். உதிரம் குறைந்தால் உயிர் போகும் என்பது சின்ன குழந்தைக்குக் கூடத்தெரியும் அவனது இரத்தத்தைக் கொண்டு தாரை வார்க்கச் சொன்னான் அந்த பாவி. அந்த கொடை வள்ளலின் உதிரம் தன் கையில் பட்டதும் இந்த கல்மணம் கொண்ட கண்ணனுக்கும் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது, 'உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என வினவினான் வள்ளலிடம்.
நன்றி குமரன்
நல்ல கற்பனை அய்யா.
நன்றி தனரா
இதற்கு எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லையே!!
Post a Comment