தோட்டம் என்று அர்த்தம். அறிக்கை கூறுகிறது:"பெயரைப் பார்த்தால் தோட்டம் என்று தோன்றும்: ஆனால், ஜலியன்வாலா பாக் எந்த விதத்திலும் தோட்டம் அல்ல. உபயோகத்தில் இல்லாத ஒரு நிலம் அது. நீண்ட சதுர (ரெக்டாங்குல்) வடிவம் கொண்டது. அங்கங்கே பாழடைந்த கட்டிட இடிபாடுகள் மூடிக்கிடந்தன. அநேகமாய் முழுவதுமே அதைக் கட்டிடச் சுவர்கள் சூழ்ந்திருந்தன. அதற்குள்ளே வரப்போகச் சில வழிகளே இருந்தன. அந்த வழிகளும் நன்றாயில்லை. அடிக்கடி மக்களின் பெருங்கூட்டங்கள் அதில் நடப்பது வழக்கம் என்று தெரிகிறது. அதன் ஒரு கோடி வழியாக ஜெனரல் டையர் நுழைந்தார். அந்தக் கோடியின் நுழைவாயிலுக்கு இரண்டு புறமும் தரை மேடாக இருக்கிறது. டையர் நுழைந்த கோடிக்கு எதிர்க்கோடியில் ஒரு பெரிய கூட்டம் இருந்தது. ஜெனரல் டையர் தம் துருப்புக்களை நிறுத்திய இடத்திலிருந்து 150 கஜ தூரத்தில் உயரமாக அமைந்த மேடை ஒன்றின் மீது ஒரு மினதன்ட நின்றுகொண்டு அந்த மக்கள் கூட்டத்துக்குப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்." பாக்கில் பத்தாயிரத்துக்கு மேல் இருபதாயிரம் மக்கள் வரையில் கூடியிருந் திருக்கிறார்கள் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.
இருபத்தைந்து கூர்க்காக்கள் (அதாவது நேப்பாளப் போர் வீரர்கள்), பலூச்சி்ஸ்தானத்திலிருந்துவந்த இருபத்தைந்து பலூச்சிகள் இந்த இரு கூட்டத்தினரும் ரைஃபிள் (சிறு துப்பாக்கி) தங்கியிருந்தார்கள்; நாற்பது கூர்க்காக்கள் கத்திமட்டுமே வைத்திருந்தார்கள். இவர்களோடும் இரண்டு கவச (ஆர்மர்டு) மோட்டார்களோடும் டையர் வந்தார்."ஜலியன்வாலா பாக் பக்கமாக வந்ததும், குறுகிய நுழைவாயில் வழியாக அதனுள் இந்தப் படையுடன் டையர் புகுந்தார். கவச மோட்டார்கள் புகப் போதிய அகலமாக அந்த வாயில் இல்லை, எனவே, வெளியே தெருவிழலேயே அவற்றை டையர் விட்டு வைத்தார்". என்று அந்த அறிக்கை அறிவிக்கிறது.
மேலும் அது தொடர்ந்து சொல்கிறது: "பாக்கினுள் நுழைந்தவுடனே, நுழைவாயிலின் ஒரு பாக்கம் உள்ள மேட்டில் இருபத்தைந்து துருப்புக்களையும் மறு பக்கம் உள்ள மேட்டில் இன்னோர் இருபத்தைந்து துருப்புக்களையும் டையர் நிறுத்திவைத்தார். மக்கள் கூட்டத்துக்கு எந்த வித எச்சரிகையும் செய்யாமலே அவர்களைச் சுடத் தம் துருப்புக்களுக்குக் கட்டளையிட்டார். தடை உத்தரவுப் பிரகடனத்தை மீறி மக்கள் கூடியிருந்ததால், அவர்களுக்கு அப்படி எந்த எச்சரிக்கையும் செய்யத் தேவையில்லை என்று அவர் கருதினாராம். துருப்புக்கள் சுமார் பத்து நிமிட நேரம் தொடர்ந்து சுட்டார்கள். என்ன விதமான பிரசங்கத்தை மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவில்லை. மக்களில் எவரும் துப்பாக்கி தாங்கியிருக்க வில்லை. ஆனால், அவர்களில் சிலர் தடிகள் வைத்திருந் திருக்கக் கூடும்.....துருப்புகள் சுட ஆரம்பித்வுடனே, கூட்டம் கலையத் தொடங்கியது. மொத்தம் 1650 தடவை(ரவுண்டு) துருப்புக்கள் சுட்டார்கள்.... தனித் தனினயே சுட்டார்கள்; சரமாரி (வால்லி) ஆகச் சுடவில்லை....சுமார் 379 பேர் மாண்டதாக, கமிஷனின் இந்த விசாரணையில் புலனாகிறது."
மாண்டவர்களைப் போல் மூன்று மடங்கு மக்கள் காயமுற்றிருக்க வேண்டும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது. ஆகவே செத்தவர் 379 பேர்; காயமுற்றவர் 1137 பேர். இந்த இரண்டு எண்ணிக்கையையும் கூட்டிப் பார்க்கும் போது, 1650 துப்பாகிக் குண்டினால்1516 ஆள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. தாழ்வான 'தோட்ட'த்தில் பட்டியில் அடைபட்ட ஆடு மாடுகள் போல் மக்கள் சிக்கியிருந்திருக்கிறார்கள்; வீரர்களின் குண்டுகளுக்குச் சரியான இலக்காகியிருக்கிறார்கள்.
டையரை ஹண்டர் கமிஷன் முன் குறுக்கு விசாரணை செய்தார்கள். தம்முடைய மனப்பான்மையையும் நோக்கத்தையும் அப்போது அவர் வெளியிட்டார்.
கேள்வி: "சுடுவதை அடிக்கடி நீர் திசை மாற்றினீரா? மக்கள் எங்கே அடர்த்தியாய் நின்றார்களோ அங்கே பார்த்துச் சுடச் சொன்னீரா?"
தொடரும்.......
2 comments:
என்னார் வாழ்த்துக்க!
மிக அவசியமான ஒரு பதிவு இது என்று கருதுகிறேன். தமிழ்மணம் என்பது வெறும் அரட்டை மடமாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய இளைய தலைமுறைக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது. எனவே இவையனைத்தையும் எளிய முறையில் பதிப்பிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் ஜாலியன் வாலாபாக் பதிவு முக்கியத்துவம் வாய்ந்தது.
தொடர்ந்து எழுதுங்கள்...
டயரை சுட்ட உத்தம் சிங்கின் வரலாறையும் மறக்காமல் சொல்லுங்கள்... அது ஒரு பெரும் காப்பியம். மகத்தான வரலாறு எனக்கு பிடித்த சுதந்தரப் போராட்ட வீரர்களில் ஒருவர் உத்தம் சிங்.
நன்றி சந்திப்பு
அந்த உத்தம்சிங் கைப்பற்றி தாங்கள் எழுதுங்களேன் எனக்குத்தெரியவில்லை படித்துக்கொண்டிருக்கிறேன் அதில் வந்தால் எழுதுகிறேன்.
Post a Comment