Tuesday, May 16, 2006

அம்பிகாபதி அமராவதி - 14 -

அரசன்: கம்பர் எதுமே சொல்லிற்றிலர். ஆனால், அவர் மகன் அம்பிகாபதி எழுந்து, 'புலவர்' என்னுஞ் சொல்லுக்கு கடவுளர் என்னும் பொருளுமுண்டு; அதனாற் கடவுள் வணக்கஞ் சொல்லவே புலவர் வணக்கமும் அதன்கண் அடங்கும் என்றான். அவ்விடையின் நுட்பத்திற்காக அம்பிகாபதியை எல்லாரும் வியந்தனர்.

அரசி: ! கம்பர் மகன் அவ்வளவு நுண்ணிய கல்வியறிவு வாய்ந்தவனா! அவனுக்குத் துத்தி யாது சொன்னான்?

அரசன்: துத்தி அவனை நோக்கி ஏதும் கூறிற்றிலன் ஆயினும், புலவரெல்லாரையும் பார்த்து, 'என் மனைவிக்கு ஆண்பிள்ளை மேல் விருப்பம்; எனக்குப் பெண் பிள்ளைமேல் விருப்பம்; ஆகையாற் சுவாமிகளே, எனக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்க வரங்கொடுங்கள்' என்று கேட்டு எல்லாரையுஞ் சிரிக்க வைத்தனன்.

அரசி: நகையாடக் கூறிய துத்தியின் சொற்களும் நுட்பம் உடையனவாகவே காணப்படுகின்றன! பிள்ளைப் பேறு வழங்கல் கடவுள் ஒருவரால் மட்டுமே இயலுமன்றி மக்களால் இயலாது. ஆகவே, மக்களாகிய புலவரைக் கடவளார் என்றல் பொருந்தாமை, அவன் கூறிய சொற்களிற் குறிப்பாய்க் காட்டப்படுகின்றது. (கோமாளியை நோக்கி) நின் சொல்லின் நுட்பத்தை வியந்தேன். (கோமாளி மகிழ்ச்சி மிக்குக் கோணற்கும்பிடு போடுகிறான்) அதன்பின் யாது நிகழ்ந்ததோ?

அரசன்: அதன் மேற் கோமாளியைப் பேசவிடாமல் அடக்தகினேன். புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை தருமாறு நங் கூத்தமுதலியார் வேண்டக், கம்பர் வாளாவிருந்தனர். ஆனால், அம்பிகாபதியோ ஒவ்வொரு கேள்வி கட்கும் அனைவரும் வியக்கத்தக்க விடைகளை நுண்ணறிவோடும் நூற்சான்றுகளோடும் நன்கு பகர்ந்தே வந்தான். என்ன நம்பிப்பிள்ளே! நுங்கள் கருத்தையுஞ் சொல்லுங்கள்.

அமைச்சர்: அம்பிகாபதியார் கூறிய விடைகள் நுண் பொருள் பொதிந்த பழைய வைணவத்திற்குஞ் சைவசமயவுண்மைக்கும் முற்றும் ஒத்திருந்தன. அவர் கூறிய விடை விளக்கத்தில் வைத்து நோக்கினால், கம்பர் கூறிய கடவுள் வாழ்த்திற்குக் குற்றம் வராதென்று கருதினேன். ஆனாற் சைவத்திற்கப் பகையாய்ப் பிற்காலத்து வைணவர்கள் கட்டிய புராணக் கதைகளையே விடாப்படியாய்ப் பிடித்திருக்கும் நம் வைணவப் புலவர், அம்பிகாபதியாரின் விடைகளைச் சிறிதுமே ஏற்றுக் கொள்ளவில்லை. திருமாலின் பிறப்பான இராமன், திருமாலினும் நான்முகன் சிவபிரானிலுஞ் சிறந்தவன் என்றே முழங்கினார். அதுகண்டு நங் கவிச்சக்கரவர்த்தி கூத்தர் எவ்வளவு சீற்றங்கொண்டு அதனை மறுத்தனர்! சமண் சாக்கியப் புலவர்கள் கடவுள் உண்மையினை ஒப்புக் கொள்ளாவிடினம், இராமாயணக் கதை பொய்யென்றே கழறினர்; சாக்கியப் புலவர் தமது மிகப் பழைய 'தசரத ஜாதகச்' ' சான்று கொண்டு இராமாயணப் பின் நிகழ்ச்சி முழுப் பொய்யென்று காட்டியதை அம்பிகாபதியாரும் ஒருவகையில் உடன் பட்டே மொழிந்தனர். இருந்த வாற்றாற் பண்டைக்காலத்தில் முருகவேள் சூரன்மேற் சென்று அவனை வென்ற நிகழச்சியே, வைணவர்கள் இராமன் இராவணனை வென்ற நிகழ்ச்சியாகப் பிற்காலத்தே மாற்றி இராமாயணம் எழுதி வைத்தார்களென்று கருதுகிறேன்.

அரசன்: அதுதான் உண்மை. இனி, நம் அம்பிகாபதியின் நுண்ணுணர்வையும் பரந்தாழ்ந்த கல்வியறிவையும் அழகையும் இனிய குணங்களையும் நினைக்கநினைக்க அவனைப் பிள்ளையாகப் பெற்ற கம்பர் என்ன தவஞ் செய்தனரோ வென்றெண்ணி வியக்கின்றேன்! இத்தகையன் ஒருவன் நம் அரச குடும்பத்திற் பிறந்திலனே என்றெண்ணியும் வருந்துகின்றேன்!

அரசி: அத்துணைச் சிறந்த அம்தபிகாபதியை நம் அரச குடும்பத்தில் ஒருவனாகவே வைத்துப் பாராட்டுதல் நமக்குப் பெருமையேயன்றிச் சிறுமையாகாதே?

அரசன்: அஃதெங்ஙனம் அங்கயற்கண்ணி? அவனோ உவச்ச குலத்திற் பிறந்தவன்: நாமோ உயர்ந்த வேளாள குலத்தினேம்( வேளாண்மை செய்யும் குலம்) நம்மினும் எத்தனையோ மடங்கு தாழ்ந்த குலத்தவனான அவனை நம் குலத்தவருள் ஒருவனாக வைத்து நலம் பாராட்டுதல் ஒரு சிறிதும் ஆகாது. ஆயினும், அவனை அவன் தந்தையாரைப் போலவே நம் புலவர் பேரவையில் ஒரு பெரும் புலவனாக வைத்துப் பல சிறப்புகளுஞ் செய்யக் கருதியிருக்கின்றேன். அதனோடு இன்னம் இரண்டு மூன்று நாட்களில் நம் அருமைப புதல்வி அமராவதிக்கு அம்பிகாபதியை ஆசிரியனாகவும் அமர்த்த முடிவு செய்திருக்கின்றேன். அவளது கூர்த்த அறிவுக்கு இசையத் தமிழ் கற்பிக்கவல்லவன் அவனே.

அரசி: ஈதென்ன பெருமானே! அம்பிகாபதி கல்வியும் நுண்ணிறிவும் வாய்ந்தவனாதலோடு, பேரழகும் இளமையும் இனிய குணங்களும் உடையனென்றும் நீங்களே சொல்லுகிறீர்கள், இத்தகைய ஒருவனை, மடந்தைப் பருவத்தினளும் பேரழகியும் முத்தமிழ்ப் பயிற்சியில் மிக்க விழைவினளுந் திருமணமாகாதவளுமான என் மகளுக்கு ஆசிரியனாக அமர்த்துதல் நன்றாகுமா? என நினையாமற் பேசுகிறீர்களே? நுங்கள் சொல்லைக்கேட்டு என் நெஞ்சம் நடுங்குகின்றது! மேலும் ஆசிரியர் கம்பர்தாம் நம்மருமைப் புதல்விக்குத் தமிழ் கற்பித்து வருகையில் அவர் மகனை எதுக்காக அவளுக்கு ஆசிரியனாக அமர்த்தக் கருதுகிறீர்கள்?

அரசன்: அதன் காரணத்தை யான் உனக்குத் தெரிவிக்கும் முன் வேறுபேச்சு வந்து குறுக்கிட்டது. கம்பர் தமது இராமாயணத்தை நமது புலவர் பேரவையில் அரங்கேற்றுவதற்கு நம் புலவர் எவரும் இடங்கொடுக்கவேயில்லை. அதுகண்டு நம் அமைச்சர் அதனை அவர் தில்லைவாழந்தணரிடையிலாவது திருவரங்கத் திருமாலடி யாரிடையிலாவது கொண்டுபோய் அரங்கேற்றுக வென்று சொல்லி விட்டார். (அமைச்சரைப் பார்க்க)
வரும்...........15

6 comments:

குமரன் (Kumaran) said...

துத்தியின் நகைச்சுவை நன்றாக இருக்கின்றது. :-)

முருகப்பெருமான் கதையினை வைத்து இராமாயணம் எழுதப்பட்டதாகச் சைவரும், அதனைத் திருப்பிப் போட்டு வைணவரும் சொல்லுவதைப் படித்திருக்கிறேன். முருகனுக்கும் இராமனுக்கும் பல ஒற்றுமைகளும் உண்டு. முதல் ஒற்றுமை இருவரும் பார்ப்போர் மயங்கும் அழகர்கள்.

ENNAR said...

நன்றி குமரன்
அப்பனிடம் கோவித்துககொண்டு மலைக்குச்சென்றவன் முருகன்
வளர்ப்பன்னையால் காடு சென்றவன்
அவன் சுரனை வென்றவன் இவன் இராவணணை வென்றவன்

Unknown said...

Dear Sir,

Your wrote "அரசன்: அஃதெங்ஙனம் அங்கயற்கண்ணி? அவனோ உவச்ச குலத்திற் பிறந்தவன்: நாமோ உயர்ந்த வேளாள குலத்தினேம்( வேளாண்மை செய்யும் குலம்)"

This is little confusing. I need your help to understand this better. Kallar Charithram by Nattar Ayya mentions that Chozhar were Kallars. I have also heard that "Kallarum, Maravarum, Agamudayarum mella mella velalar aanare".

Did Velalar originate from Kallar? Is that why you have written that the Queen is saying that they belongs to Velala Clan. Please write in detail about the relationship between these tamil groups.

ENNAR said...

Sathuragiri vEL
வருக
அந்த அம்பிகாபதி நாடகத்தை எழுதியவர் மறைமலையடிகள் அவர் அவ்வாறு சொல்லியுள்ளார்.(எனக்கு அதை பிடித்திருந்ததால் அதை வலையேற்றினேன்) சிலர் சோழர்களை வெள்ளாளர் இனம் என்றும் சொல்லாம் சொல்கிறார்கள் என கருதுகிறேன். நாட்டார் சொன்னவை சரியாக இருக்கலாம்(கள்ளர்) என்பது எனது கருத்து அவர் சொல்லியுள்ள அத்தணையும் உண்மையே? மேன்காவல், காராள வெள்ளாளரை துரத்திவிட்டது கல்வெட்டு இவைகளே தங்கள் மின்னஞ்சலை கொடுத்து தொடர்புகொள்ளுங்கள்

Sharmalan Thevar said...

Sathugiri,

As per the Tamil quote...Kallars, Maravars and Agamudayars slowly became the Vellalar clan.

The Kallars, Maravars and Agamudayars are grouped together as the Mukkulathors.

Some of these Mukkulathors focused more on agriculture and became a separate clan known as the Vellalars.

The Vellalars migrated to various places in Tamilakam and divided themselves according to the regions.

We have Cholia Vellalar, Pandya Vellalar, Chera Vellalar, Kongu Vellalar, Thondaimandala Vellalar, Veerakodi Vellalar, Nanjil Vellalar etc etc.

They use the title Mudaliar, Pillai and Gounder. This clan is closely related to the Mukkulathors when compared with other clans.

There has been alot of intermarriages between the Mukkulathors and the Vellalars because they are considered to have the same origins.

Sharmalan Thevar said...

Sathugiri,

As per the Tamil quote...Kallars, Maravars and Agamudayars slowly became the Vellalar clan.

The Kallars, Maravars and Agamudayars are grouped together as the Mukkulathors.

Some of these Mukkulathors focused more on agriculture and became a separate clan known as the Vellalars.

The Vellalars migrated to various places in Tamilakam and divided themselves according to the regions.

We have Cholia Vellalar, Pandya Vellalar, Chera Vellalar, Kongu Vellalar, Thondaimandala Vellalar, Veerakodi Vellalar, Nanjil Vellalar etc etc.

They use the title Mudaliar, Pillai and Gounder. This clan is closely related to the Mukkulathors when compared with other clans.

There has been alot of intermarriages between the Mukkulathors and the Vellalars because they are considered to have the same origins.