கூருண்டு பாய்ச்சக் குறிதான் தெரியவில்லை....!
வேம்பெடுத்துப் பூச்சூடும் வேந்தனவன் அம்பெடுத்து
வீம்பெடுத்த சோழர் குடமுக்கில் வீசினான்முன்!
வாள் கொடுத்தோம், வாளுக்கு யாமும் எமக்காகத்
தோள் கொடுத்தார் பல்லவர்கள், தோற்றோம், அவர்வென்றார்
தோற்றதனால் யாமிழந்தோம் சோணாட்டின் தென்பகுதி,
தோற்றதனால் யாதழந்தார் சொல்லுமப் பல்லவர்கள்?
மீண்டும் அரிசிலாற் றங்கரையில் வேலெடுத்த
பாண்டியர்கள் ஓர்பக்கம், பல்லவர்கள் எம்பக்கம் !
தென்பாண்டி வேந்தன்தன் சித்தத்திலும் சோழ
மண்தீண்டா வாறுநாம் வாட்டி விரட்டிவிட்டோம்.
யாபெற்ற தென்னஅவ் வெற்றியினால்? பல்லவர்கள்
தாம்பெற்றார் யாம் வென்ற சோழத் தரையெல்லாம் !
'வெற்றால் பலன் அவர்க்கு, தோற்றால் இழப்பெமக்கு'
என்றால் துணைஎதற்கு? சொல்லும் நீர்.
வேளிர்
இட்டஓர் நெல்
கட்டுக் கதிராகும் காவிரிபாய் சோழமன்னா !
மட்டுப் படாச்சினத்தை மாற்றித்தாம் கேட்டருள்க.
போரெடுத்துச் சோணாட்டு மண்ணில் புதுப்பகைவர்
யாரடுத்தார் என்றாலும் தாமே எழுந்திடுவார்
பல்ல்வர்கள் காக்க நமை....
No comments:
Post a Comment