Thursday, June 23, 2005

காந்தி பெயரில் மாட்டுக்கறி விற்பனை

ஆஸ்திரேலியாவின் சவுத்வேல்ஸ் நகரில் 'காந்தி' கடையில் சிக்கன், மட்டன், பீப்,
மீன், நண்டு என எல்லா ஐட்டங்களும்தாராளமாக சுடச் சுடக் கிடைக்கும். ஆம் புலால் உண்பதை அறவே தவிர்த்த, எல்லாரையும் தவிர்க்கச் சொன்ன அந்த மகாத்மாவுக்கு இப்போது இப்படி ஒரு கதி!

நல்ல வேலை நமது பிரதமர் இதற்கு கண்டனம் தெறிவித்து தடுத்துவிட்டார்
நன்றி சொல்லுவோம் நம் தலைமைஅமைச்சருக்கு

3 comments:

SnackDragon said...

ஐயகோ

துளசி கோபால் said...

ஏங்க, அந்தக் கடைக்கு
'மஹாத்மா காந்தி'ன்னா பேர் வச்சிருந்தாங்க?

குஜராத்லே 'காந்தி'ன்ற சர்நேம் சர்வசாதாரணம். இதுக்கும், மஹாத்மா காந்தி'க்கும் முடிச்சா?

அவுங்கவுங்க சர்நேமை உபயோகப்படுத்தக்கூடத்தடையா?

காந்தின்ற பேர் இல்லாதவுங்க காந்தின்ற சர்நேமை உபயோகப்படுத்தறது மட்டும் தப்பு இல்லையாமா?

இந்திரா காந்திக் குடும்பத்துக்கு 'காந்தி' பேர் எப்படி வந்ததுன்னு யாரும் ஆராயலையா?

என்னவோ போங்க.

என்றும் அன்புடன்,
துளசி.

முகமூடி said...

நவீன சட்டகர் - சட்டம் போட்டு தடுப்பவர் - திரு. அன்புமணி அய்யா அவர்களுக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் 'காந்தி' பெயர் வைத்து இறைச்சி மட்டுமல்ல சிகரெட் பீடி தண்ணி முதலியவையும் விக்க கூடாதுன்னு சட்டம் போட்டுடுவார்.... என்னா அந்த சட்டம் நியூசியில செல்லாதா... என்னா நக்கலா... செல்ல வைக்க சைக்கிள் பயணம் போவாங்கோ... அப்ப என்னா செய்வீங்க (சட்டகர் வார்த்தைக்கு நன்றி: திரு. டோண்டு)