Monday, June 27, 2005

ந.மு.வேங்கடசாமி நாட்டார்



நாட்டு மக்களால் நாட்டார் ஐயா என அன்புடன் அழைக்கப்படும் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்னும் சிற்றூரில் வீ.முத்துசாமி நாட்டாருக்கும் தையலம்மாளுக்கும் நன்மகனாய் 12-04-1884 ல் பிறந்தார்.


தம் சிறு வயதிலேயே ஆசிரியர் எவருடைய உதவியுமின்றித் தாமே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சைவ சித்தாந்த நூல்களையும் ஐயம் திரிபறப் பயின்று, மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரவேச பணடிதம், பால பண்டிதம் ,பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் மூவாண்டில் (1905,1906,1907) முறையாக எழுதி முதன்மையாகத் தேர்ச்சி பெற்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பெருமகனாராகிய பாண்டித் துரைத் தேவர் அவர்களால் தங்கப் பதக்கங்களும், தங்கத் தோடாவும் அளிக்கப் பெற்றுப் பெருமை அடைந்தார்கள்.


தாமே பயின்ற தமிழ்ப் பேராசிரியரின் அறிவாற்றலை அறிந்து அவரைப் பணிபுரிய அழைத்த கல்வி நிறுவனங்கள் பல. கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக ஓராண்டும் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 24 ஆண்டுகளும் , அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக 7 ஆண்டுகளும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். பின் தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தைப் புரவர் கல்லூரியில் நான்கு ஆணடுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணி செய்து சிறப்பித்தார்கள்.


1940-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் நாவலர் என்னும் சிறப்புப்பட்டம் செப்பேட்டில் பொறித்து வழங்கப் பெற்றது. ஐயா அவர்கள்எழுதிய உரைகள் தமிழராய்ச்சி நூலகள் பல. 1921-22-இல் திருவருட் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவ முயற்சி செய்து முயற்சி நிறைவேறாமல் போக, 1925-26 -இல் தஞ்சை அல்லது திருச்சியில் தமிழ்ப் பலகலைக் கழகம் ஒன்று அமைகட்கப்பெற வேண்டுமென்று விரும்பி அப்போதைய அமைச்சர் டி.என். சிவஞாமப்பிள்ளை அவரகள் தலைமையில் அமைத்த செயற்குழுவில் உறுப்பனராகவிருந்து செயலாற்றிச் சிறப்பித்தார்கள்.


எளிய வாழ்வும் இனிய நோக்கமும் கொண்டவர்; நெஞ்சிலுரமும் நேர்மைத்திறமும் மிக்கவர்; சிறந்த புலமையாளர்; உயர்ந்த பண்பாளர், தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்ககாகவே தொண்டாற்றிய நாட்டார் 28-3-44 அன்று தம் மணிவிழா நடைபெறுவதற்கு இருவாரத்திறகு முன்டகாலமானார். அன்னாரின் உடல் பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டு அதன்மேல் கற்கோயில் எழுப்பி ஆகம விதிகளின்படி பூசை நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் இக்காலத்தில் தமிழ்ப் புலவர் ஒரு வருக்ககாக எழுப்பப்பட்ட முதல் கற்கோயில் இது.

தஞ்சை தமிழ் பல்கலைக் கலகத்துக்கு ஐயா பெயரை வைக்காதது ஐயாவின் தமிழ்த் தொண்டைமதிக்காத செயலாகும்.

1 comment:

Vassan said...

தகவல்களுக்கு நன்றி. ரத்தினச் சுருக்கமாய் எழுதியுள்ளீர்கள். நாட்டார் போன்றோர்கள் பற்றி எழுதும் போது மேலும் விவரித்து எழுத கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

வாசன்