போகர் தியானத்தில் அமர்ந்தது
போகமுனிவருக்கு ஆறுபத்து மூன்று சீடர்கள் இருந்தனர் . அவர்களுக்கு அட்டாங்க யோகங்களையும் கற்பித்து இனி நீங்கள்வெளியில் போய்க் கற்றுக் கொண்ட வித்தைகளைப் பரிசோதித்துப் பாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
அறுபத்து மூன்று பேரும் நாடெங்கும் சுற்றிப் பார்த்த பின் விண்வெளியில் தாவிஆங்கு உள்ள ஆறு தலங்களையும் நன்றாகப் பார்த்துவிட்டு மனோண்மணிதேவி எழுந்தருளியிருக்கும் இடம் வரை சென்று சிலம்பொலி கேட்டுப்பின் பூவுலகை நோக்கித் திரும்பினர். பூவுலகில் மேருமைலையை வலம் வந்து வணங்கிப் பின் கீழே இறங்கி வந்து போகமுனிவரை வணங்கினார்கள்.
போக முனிவர் மிக மகிழ்ச்சி அடைந்தவராக இனிச் சிறிது காலம் சமாதியில் இருங்கள் எனறு கூறி அனுப்பி விட்டுத் தாமும் சுணங்க மரத்தின் கீழ் வேட்டியை விரித்துப் போட்டுச் சிவயோகத்தில் அமர்ந்தார்(இங்கு எனக்கொரு அய்யம் அதாவது புலித்தோளில் அல்லவா அமந்து யோகம் செய்வர் இவர் ஏன் தனது வேட்டியை அவிழ்து போட்டு அமர்ந்தார்).அவர் மனம் வெளிஒளிப்பாழில் லயித்துப் போய் பிரம்ம நிலையில் அப்படியே தங்கிவிட்டது.
நாட்கள் கடந்தன. ஆண் ஒன்று பெண் ஒன்றுமாக இரண்டு சிங்கங்கள் அவ்வழியாக வந்தன. அந்த இடம் வாழ்க்கை நடத்த ஏற்றதாக இருப்பதாக நினைத்தன.
ஏதோ ஒரு கற்சிலை இருக்கிறது. அதுவும் நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டன.
அங்கேயே விலங்குகளை அடித்தக் கொண்டு வந்து தின்றன. அங்கேயே ஆணும் பெண்ணும் விளையாடிக் கலவியில் ஈடு பட்டு குட்டிகளை ஈன்றன. காலப்போக்கில் அங்கு ஒரு சிங்கக் கூட்டமே உண்டாகிவிட்டது.
ஒரு நாள் ஆண்சிங்கம் கற்சிலையின் மடியில் படுத்து நாவில் வாயைத் தடவிக் கொண்டிருக்கையில் சிலையின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளி ஒன்று அதன் வாயில் விழுந்தது. வெளிஒளிப் பாழில் அனுபவித்த அளவு கடந்த ஆனந்த நிலையின் காரணமாக உண்டான கண்ணீர் அது, சிங்கம் திடுக்கிட்டுப் போய்க் கீழே குதித்தது. சித்தர் முகத்தைப் பார்த்தது.
சித்தரின் உடலில் சற்றும் கூடச் சலமில்லை. ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர்த் துளிகள் சொட்டுச் சொட்டாக உருண்டு உதிர்ந்து கொண்டிருந்தன. சித்தரின் கண்ணீர்த் துளியை உண்டதால் அதற்கு ஞானம் உண்டாகிவிட்டது.
உடனே தன் மனைவி மக்களை அழைத்தது. "ஐயகோ! நாம் கற்சிலை என்று நினைத்தது சிலையல்ல இதோ பாருங்கள் கற்சிலை கண்ணீர் விடுமா? இது சிலை அல்ல. யாரோ மகான்! சமாதி யோகத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த இடத்தை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறோம். என்னென்ன தப்புத் தண்டாக்களை யெல்லாம் இங்கேயே செய்தோம்!
"ஐயகோ! ஐயகோ! முனிவர் விழித்தக் கொண்டால், நம்மைச் சபிக்கப் போகிறார்...." என்று புலம்பியது.
உடனே நிலைமையைப் புரிந்து கொண்ட பெண் சிங்கம் அந்த இடத்தைச் சுத்தப் படுத்தத் தொடங்கியது. மற்ற சிங்கங்களும் உதவிபுரிந்தன, எலும்புகளும், தோல்களுமாகக் ககிடந்த அந்த இடத்திலிருந்த அசுத்தங்களை யெல்லாம் போக்கித் தண்ணீர் தெளித்து நறுமணமலர்களைக் கொண்டுவந்து குவித்து மங்களகரமான இடமாக மாற்றிவிட்டன.
அன்று முதல் சிங்கங்கள் புலால் உண்ணுவதை விட்டுவிட்டன. ரிஷிகள் உண்பதைப் போன்று காய்கனி இலை சருகுகளைப் புசித்து வாழ்ந்தன. அவையும் சிவ சிந்தை நெறியில் நின்றன.
இப்படி இருக்கும் காலத்தில் போகமுனிவர் வெளி ஒளிப்பாழில் பதிந்திருந்த தம் மனதைவீட்டு உலகிற்குக் கொண்டுவந்தார். தன் அருகிலிருந்த சிங்கத்தைப் பார்த்து "நீ யார்?" என்று கேட்டார்.
சிங்கம் தான் விலங்காக வாழ்ந்த காலத்தில் பல தவறுகள் செய்ததையும் அவருடைய கண்ணீர்த் திவலை தன் வாயில் விழுந்ததால்,ஞானம்பெற்று அன்று முதல் தூய வாழ்க்கை நடத்தி வருவதையும் கூறித் தான் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டது.
போகமுனிவரின் அருளால் சிங்கம் ராஜ குடும்பத்தில் பிறந்து நீதியுடன் அரசாண்டு முத்திபெற்றது.
(இதை என்னால் நம்ப முடியவில்லை விலங்காக இருந்த காலத்தில் என்று சொல்வதைப்பார்த்தால் கண்ணீர் திவலை வாயில் விழுந்து விட்டதால் மனித உருவம் பெற்று விட்டாத எனத் தெரியவில்லை )
எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்து
தொரும் . . . . . . . . .
No comments:
Post a Comment