மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா உலகப் புகழ்பெற்ற பெண்மணி. இளவரசர் சார்லசை மணந்து வில்லியம், ஹாரி என்ற குழந்ஹைகளுக்கு தாய். சார்லசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அரச குடும்பதை விட்டு பிரிந்தவர்.
பின் டோடி அல் பயத்துடன் காதல் கொண்ட அவர் 1997-இல் பாரீஸ் நகரில் ஒரு விபத்தில் மரணமடைந்தார். டயானா அரச குடும்ப வாழ்க்கையை விரும்பாத சுதந்திர பறவை. ஆனால் அந்த இளம் பறவை பலரின் வேட்டைக்கு உள்ளான மர்மங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளன.
டயானா வாழ்க்கையில் நடந்த திரைமறைவு ரகசியங்களை அவரிடம் 6 வருடம் மெய்க்காப்பளராக பணியாற்றிய கென்வார்ப் அம்பலப்படுத்துகிறார்.
1993-ம் ஆண்டு டயானா தனது மகன்கள் வில்லியம், ஹாரியுடன் ஆஸ்திரியா லீச் நகரத்திற்கு பயணம் சென்றார். அது பனி சறுக்கு விளையாடுவதற்கு ரம்மியமான இடம். பல்வேறு நாடுகளின் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களும் கோடீசுவரர்களும் குவியும் நாடு அது. சொர்க்கலோகம் போன்ற உல்லாச வாழ்க்கை நகரம் அது.
அங்கே ஆல்ப்பெர்க் ஓட்டலில்தான் டயானா தன் இரு மகன்களுடன் தன்கி இருந்தார்.
ஒருநாள் சரியாக காலை 6 மணிக்கு நான் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தேன். திடீரென எனது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. நான் என் உறக்கத்தை கலைத்து விட்டு கதவை திறந்தேன். இரவு நேர பாதுகாப்பு அதிகாரி மார்க் ஜாவோஸ்கி நின்றிருந்தார். அவரது முகத்தில் பீதி பரபரப்பு.
இளவரசி இப்போது நன்றாகத்தானே இருக்கிறார் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மார்க் எதற்காக இப்படி பூடகமாக கேட்கிறார் என்று நினைதேன். என்ன நடந்தது என்று கேட்டேன். மார்க் மூச்சு வாங்கியவாறே பேசத்தொடங்கினார்.
அதிகாலை 5.30 மணி இருக்கும் ஹோட்டலின் கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. ஓடிசென்று பார்த்தேன்
கரிய இருளில் ஸ்கார்ப், தொப்பி அணிந்து இளவரசி வெளியே நின்று இருந்தார். என்னைபார்த்தும் குட்மார்னிங் என்று கூறி விட்டு தனது அறைக்கு போய்விட்டார்.
அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. மார்க் யாருக்கும் தெரியாமல் எப்படி இளவரசி வெளியே போனார்
இப்போது அவர் எங்கே. என அடிவயிற்றில் இருந்து கேள்வி வந்தது. அவரது ரூமில்தான் இருக்கிறார் என்று மார்க்கூறியதும் தான் எனக்கு நிம்மதி வந்தது. எப்படி போனார் நான் மார்க்கிடம் கேட்டேன் அவர் முன்பக்க வாசல் வழியாக அவர் போயிருக்க வாய்ப்பு இல்லை மார்க் அப்படி சொன்னதும் நான் வெளியே எட்டி பார்த்தேன்.
நாங்கள் அந்த ஓட்டலின் முதல் மாடியில் தங்கி இருந்தோம். பால்கனியில் இருந்து கீழே உள்ள புல் தரைக்கு 20 அடி உயரம் இருக்கும். அவர் பால் கனி வழியாக குதித்துதான் வெளியே சென்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். உடனே நான் கீழே சென்று புல்வெளியை பார்த்தேன். அங்கு காலடி தடங்கள் இருந்தன.
நல்ல வேளை அவர் கீழே குத்தித போது பனி அதிகமாக பெய்து கொண்டு இருந்ததால் அவருக்கு அடியேதும் விழவில்லை.
இளவரசி அதற்கு முந்தைய ஆண்டுதான் இளவரசர் சார்லசிடம் இருந்து பிரிந்து இருந்தார். பதிரிகைகாரர்களும் புகைப்படக்காரர்களும் துரத்தி துரத்தி செய்தி சேகரித்த நேரம் அது.
மறுநாள் டயானாவிடம் நீங்கள் நேற்று இரவு எங்கு சென்றீர்கள் என்று கேட்டேன். அது எனக்குள் இருக்க வேண்டிய ரகசியம் என்று கூறிவிடார். அத்துடன் நான் பேச்சை முடித்துக் கொண்டேன். இரண்டு வாரங்கள் கழித்து நான் லீச் நகருக்கு சென்ற போதுதான் அவர் யாரை சந்திக்க சென்றார் என்பது தெரியவந்தது.
செல்சியா (இங்கிலாந்து) நகரின் மிகப்பெரிய கோடீசுவரர்களில் ஹோரே என்பவரும் ஒருவர். ஈரானிய ஓவியக்கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர் இவரது மனைவி டாயனே. இவர் பிரெஞ்சு அரச குடும்பத்தை சேர்ந்த பெண்மணி. இதனால் இவர்களுக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தவருடன் நெருக்கம் உண்டு.
1985-ம் ஆண்டு ஹோரேவும் அவரது மனைவி டாயனேவும் ஒரு முறை லண்டனுக்கு வந்தார்கள். இருவரும் ராணியின் விருந்தினர்களாக ஒருவாரம் `வின்ட்சர் காஸ்டில்' அரண்மனையில் முகாம் போட்டார்கள். அந்த ஒரு வாரமும் கேளிக்கை, விருந்துதான். `ஹோரே' பார்ப்பதற்கு ஆள் ஜோராக இருப்பார். அப்போது ஹோரேவுக்கு வயது 39. இளவரசி டயானாவுக்கு வயது 25.
ஹோரேவும், டயானாவும் ஒருவரையொருவர் அப்பொழுதுதான் முதல் முறையாக பார்த்துக் கொள்கிறார்கள். ஹோரே கை குலுக்க முன்வருகிறார். (அரச குடும்பத்தில் ஆண்-பெண் கைகுலுக்கி கொள்வது சகஜம்). ஆனால் டயானாவின் முகத்தில் வெட்கம், நாணம் பீறிடுகிறது. தயங்கிக் கொண்டே ஹோரேவுடன் கைகுலுக்குகிறார்.
அதன்பிறகு டயானாவே, `தான் ஹோரேவுடன் கைகுலுக்கியபோது வெட்கப்பட்டதாக' ஒப்புக் கொண்டும் இருக்கிறார். ஹோரேயின் மனைவி டாயனேவும் இளவரசி டயானாவும் அவரவர் குடும்ப சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ள `நட்பு' வலுப்பெற்றது.
டயானா, ஹோரேயையும் அவரது மனைவி குழந்தைகளையும் தனது கென்சிங்டன் மாளிகைக்கு அழைத்து விருந்தும் கொடுத்தார். இந்த நேரத்தில்தான் இளவரசர் சார்லஸ்- காதலி காமில்லா பார்க்கர் விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது.
ஹோரேயிடம் தனது மனக்குமுறலைக் கொட்டினார் இளவரசி. ஹோரேயும் சார்லஸ்- டயானா பிரச்சினையை தீர்க்க முன் வந்தார். அது திசைமாறியது. சார்லஸ்-காமில்லா பார்க்கர் `காதல்' விவகாரத்தை ஹோரே மூலம் தணிக்க முயன்ற இளவரசி டயானா மெல்ல மெல்ல காதல் பாதைக்கு மாறிவிட்டார்.
ஹோரேவுக்கோ `டபுள்' கொண்டாட்டம். ஒருபக்கம் இளவரசர் சார்லஸ்_காமில்லா விவகாரத்தை தலையிட்டு சமாளிப்பது மாதிரி போக்கு காண்பித்துக் கொண்டே டயானாவின் அன்பையும் பெற்று விட்டார்.
செல்சியா நகருக்கு ஹோரே திரும்பிய பிறகும் டயானா சும்மா இருக்கவில்லை. அவ்வப்போது போனில் சார்லஸ் பற்றி தொண தொணக்க ஆரம்பித்துவிட்டார். ஹோரே ஆறுதல் கூற டயானாவுக்கு அவர்மீது அபரிமிதமான காதல் வளர்ந்தது.
1992-ம் ஆண்டு வாக்கில் டயானா முழுவதுமாக தன்னை மறந்து ஹோரேவை காதலிக்க தொடங்கிவிட்டார். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ஹோரேவை முதல் தடவையாக டயானா பார்த்தபோதே அவரிடம் மனதை அடகு வைத்து விட்டார். ஒரு கம்பீரமான ஆண் என்றால் ஹோரேயை மாதிரித்தான் இருக்கவேண்டும் எனவும் நினைத்தார்.
இவர்கள் இருவரும் இது போன்று காதலை வளர்த்துக் கொண்டாலும் பட்டும் படாத மாதிரி சற்று தூரத்தில் நிற்பது மாதிரித்தான் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.
ஒரு நாள் சார்லஸ் இல்லாத நேரத்தில் ஹோரே இளவரசி டயானாவின் கென்சிங்டன் அரண்மனைக்கு வந்தார். இது புதிய விஷயம் அல்ல. இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின் டயானா என்னிடம் உதிர்த்த வார்த்தைகள்தான் என்னால் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. "கென், நாங்கள் பேசிக்கொண்டுதான் இருந்தோம். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இனிமையான மனிதர்" என்று என்னிடம் சொன்னார்.
"ஒரு ஆண் அழகானவர், பழகுவதற்கு இனிமையானவர் அனுபவம் வாய்ந்தவர்" என்றால் அதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
அன்று விடிகாலை 3.30 மணி இருக்கும். இளவரசியின் அறை பக்கமிருந்து திடீரென்று `புகை அலாரம்' அடிக்க ஆரம்பித்தது. நான் "ஐயோ இளவரசிக்கு என்ன ஆயிற்றோ ஏது ஆயிற்றோ" என்ற பீதியில் அலறியவாறு அவரது அறையை நோக்கி ஓடினேன். ஆனால் இளவரசியின் அறைக்குள் நுழையும் முன்பே ஒரு போலீஸ்காரன் என்கிற முறையில் அங்கே நடந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது.
அந்த அறையில் ஒரு பெரிய செடி. அருகே தலைகலைந்த கோலத்தில் ஹோரே சிகரெட்டை உறிஞ்சி இழுத்துக் கொண்டிருந்தார். டயானாவுக்கு சிகரெட் புகையை சுவாசிக்க பிடிக்கவில்லை. அதனால் ஹோரேயை சற்றுத்தள்ளிச் சென்று புகை பிடிக்கும்படி கூறி இருக்கிறார். ஆனால் `புகை அலாரம்' அங்கு இருந்ததை டயானா மறந்துவிட்டார். அதனால்தான் அலாரம் அடித்து இருக்கிறது.
நான் அங்கே வந்ததை ஹோரே விரும்பவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. என்றாலும் அவரது சிகரெட்டை அணைக்கச் சொன்னேன். அவர் பயந்தவாறே என்னைப்பார்த்தார். பிறகு கீழே விழுந்த நெருப்புச் சாம்பலை கூட்டி தள்ளினார். பின் அங்கிருந்து சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் இந்த சம்பவத்தை நான் வேடிக்கையாய் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த டயானாவிடம் விவரிக்க முயன்றேன். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் சென்று விட்டார்.
இளவரசர் சார்லசைப் பிரிந்த டயானாவின் கவனம் முழுக்க முழுக்க ஹோரே மீதே இருந்தது. அதனால் இந்த விஷயம் வெளியே கசிந்தால் உங்களுக்குத்தான் ஆபத்து என்பதை டயானாவிடம் வெளிப்படையாகவும் சொன்னேன்.
இளவரசி அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க இல்லை. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டார்.
தனிமை, பிரிவு அவரை வாட்டியது. குழப்பமான சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டார். ஹோரேயுடன் எப்படியாவது தனது உறவை நீட்டிக்க விரும்பி அவரது மனைவி டாயனேவை தோழியாக்கிக்கொள்ளவும் முனைந்தார். இதுவும் கைகூடவில்லை. அவரது, வேதனை, ஆற்றாமை, ஏமாற்ற உணர்வு பெருகப் பெருக `தேவைகள்' அதிகப்பட்டுக் கொண்டே போயின.
இதனால் செல்சியாவில் இருந்த ஹோரே வீட்டுக்கு போன்மேல் போன் போட்டார். இரண்டு மாதத்தில் அவர் ஹோரே வீட்டுக்கு போட்ட போன் கால்கள் மட்டும் 400-க்கும் மேலிருக்கும்.
எதிர்முனையில் போனை ஹோரே எடுத்துப்பேசினால் மட்டுமே இளவரசி டயானா அவருடன் சுவாரஸ்யமாக பேசுவார். அவர் மனைவி டாயனே எடுத்தது தெரிந்தால் போனை `டொக்'கென்று வைத்து விடுவார்.
இந்த `அனாமதேய' போன் தொல்லையால் அவதிப்பட்ட ஹோரேவின் மனைவி டாயனே போலீசில் புகார் செய்துவிட்டார். விசாரணை நடந்தது. அப்போது அந்த போன் கால்கள் எல்லாமே கென்சிங்டன் மாளிகையில் இருந்து பேசப்பட்டவை என்பது தெரிந்தது.
டயானாவிடம் விசாரணை நடந்தது. அடியோடு இல்லை என்று சொல்லிவிட்டால் நம்ப மாட்டார்கள் என்று உணர்ந்த இளவரசி "நான் ஹோரே வீட்டுக்கு போன் செய்து பேசியது உண்மை. ஆனால் நான் பேசியவை கொஞ்சம்தான். மற்றவற்றை நான் பேசவில்லை" என்று மழுப்பிவிட்டார்.
அந்த விஷயம் அதோடு முடிந்து விட்டது. ஆனால் அன்று `லீச்'சில் தங்கியிருந்தபோது ஹோட்டல் பால்கனியில் இருந்து இளவரசி டயானா குதித்து எங்கே சென்றிருப்பார் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. `ஹோரேவும் லீச்' வந்திருந்தார். அவர் தங்கியிருந்த இடத்துக்குத் தான் அந்த நள்ளிரவில் டயானா சென்றார் என்பதை இன்னும் சொல்லவும் வேண்டுமோ?
டயானாவின் மெய்க்காப்பாளராக பணியாற்றிய கெனëவார்ப் இளவரசியின் காதல் அனுபவங்களை தொடர்கிறார்.
அரச குடும்பத்தவர்கள் தங்களது அந்தரங்க விஷயங்களை முழுமையாக மறைத்து விட இயலாது. மறைப்பதும் கடினம். இதற்கு டயானாவும் விதி விலக்கானவர் அல்ல. அவருடைய பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் அவர் சில விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும்.
இளவரசி தோழிகள் யாருடனாவது தியேட்டருக்கு செல்ல விரும்பினாலோ, அல்லது ஆண் ஆதரவாளர் எவருடனாவது சாப்பிட விரும்பினாலோ அதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப நான் பணிபுரிய வேண்டும்.
ஹைகுரோவ் மாளிகையில் இருந்த தலைமை இன்ஸ்பெக்டர் கிரஹாம் சுமித் நான் டயானாவிடம் பணிபுரிய வருவதற்கு முன்பே என்னிடம் ரகசியமாக சொன்னார். "இளவரசிக்கு ஒரு ஆணுடன் தொடர்பு உண்டு. அவர் குதிரை பயிற்சியாளர் கேப்டன் ஜேம்ஸ் ஹெவிட்."
அரச குடும்பத்தில் யார்எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி மெய்க்காப்பாளார் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பாது காப்பாக இருக்கிறார்களா? அவர்களை எவ்வாறு பாதுகாப்பது? என்பதே எங்கள் பணி.
இளவரசி டயானாவிடம் வேலைக்கு சேரும் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஜேம்ஸ் ஹெவிட்டை இளவரசி சந்தித்து இருக்கிறார். டயானாவìன் மெய்க்காப்பாளரான பின்பு `ஹெவிட்' உடன் பேசிய விஷயங்களை அவர் என்னிடம் கூறியிருக்கிறார். ஹெவிட் உடனான முதல் சந்திப்பு இயல்பாக இருந்ததாக என்னிடம் டயானா கூறுவார். அதனால் அவார் மீது டயானாவுக்கு ஈர்ப்பு உண்டு என்பதை அறிவேன்.
ஹெவிட் அரச குடும்பத்தின் குதிரையேற்ற பயிற்சியாளர். குதிரையில் சவாரி செய்வதில் உள்ள சிக்கல் பற்றி டயானா கூறும்போதெல்லாம் அதை சுலபமாக சமாளிப்பது எப்படி என்று ஹெவிட் விளக்கி கூறுவார். இயல்பாக இருந்த இவர்களது பேச்சு சந்திப்பு `உறவு' வைத்துக் கொள்ளும் அளவிற்கு மாறிப்போனது.
இளவரசர் சார்லஸ் மீது டயானா உயிரையே வைத்திருந்தார். ஆனால் உடல் டயானாவிடமும் உயிர் காமில்லா பார்க்கரிடமும் இருந்தது. இதனால் நொறுங்கி போயிருந்த டயானாவுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது. அந்த வடிகாலாய் வந்து வாய்த்தார் ஜேம்ஸ் ஹெவிட். ஏற்கனவே பெண் பித்தர் என்று பெயரெடுத்தவர் அவர். அதனால் இளவரசி டயானா போன்றவர் கிடைத்தால் விடுவாரா என்ன? தனது உடல் இச்சைகளை தணித்துக் கொள்ள தயாராகி விட்டார்.
நீங்கள் கள்ளத்தொடர்பு வைத்தால் எனக்கு வைக்கத் தெரியாதா? என்பது போல இருந்தது டயானாவின் தேடுதல்.
ஒரு புறம் சார்லஸ், காமில்லா பார்க்கர் ஜோடி காதல் களியாட்டம் போட இன்னொரு பக்கம் ஹெவிட், டயானா சல்லாபம் என்று ஹைகுரோவ் மாளìகை காதல் சண்டைக்களமாக மாறிப்போனது. ஆனால் சார்லஸ் கொஞ்சம் அடங்கிப் போவார். இளவரசியை சமாதானப்படுத்துவார். ஆனால் எதுவும் எடுபடாது.
பல தடவை சார்லஸ் பிரச்சினைகளை மறந்து தனது நண்பர்களை டின்னருக்கு அழைத்து வருவார். "டயானாவோ உங்கள் அழுகிப்போன நண்பர்களை நான் எதற்கு கவனிக்க வேண்டும்.? அவர்கள் எனது நண்பர்களே அல்ல!" என காட்டு கத்தாக கத்துவார்.
இருவருக்குமìடையே பனிப்போர் நீடித்தது.
ஹெவிட்டை முதன் முதலாக நான் மத்திய லண்டனில் உள்ள `நைட்ஸ் பிரிட்ஜ் பாரக்ஸில் சந்தித்தேன். கூடவே டயானாவும் இருந்தார். என்னை இளவரசியின் மெய்க்காப்பாளன் என்று நினைத்தாரோ, அல்லது காதலியின் காவலன் என்று நினைத்தாரோ எனக்கு ஏக மரியாதை கொடுத்தார் தனது காதலுக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று கூட அவரது உபசரிப்புக்கு அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.
ஹெவிட் மீது இருந்த காதலை டயானா என்னிடம் எடுத்த உடனே கூறி ஒப்புக் கொள்ளவில்லை. வெளிப்படையாகவும் பேசத் தயங்கினார். எனக்கு தர்ம சங்கடமாகிப் போனது.
இந்த சூழ்நிலையில்தான் ஹெவிட்டின் தாயார் ஷெர்லியை டேவன் நகரில் உள்ள அவரது வீட்டில் டயானா சந்தித்துப் பேசி பரபரப்பை உண்டு பண்ணிவிட்டார்.
நான் "இதெல்லாம் வேண்டாம் அம்மா உங்களுக்கு சரிப்பட்டு வராது." என்று எவ்வளவோ கூறிப்பார்த்தேன். எதையும் கேட்கவில்லை.
இன்னொரு நாள்.
குதிரை சவாரிப் பயிற்சிக்காக இளவரசி அடிக்கடி வெளியே செல்வதுண்டு. அப்படிபோன போது ஷெய்லிங் காட்டேஜில் நாங்கள் தங்கியிருந்தோம்.
அன்று மாலை நான் சமையல் செய்து கொண்டிருந்தேன். (இந்த பொறுப்பும் எனக்கு உண்டு) இளவரசியும், ஹெவிட்டும் வெளியே ஹாலில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருநëதார்கள்.
ஒரே கூத்து, கும்மாளம்தான். அதன் பின் இரவு வரை நான் ஜேம்ஸ் ஹெவிட்டுடன் சீட்டு விளையாடுவதில் மும்முரமாக இருந்தேன். இளவரசி வந்ததும் அவர் எழுந்து கொண்டார். இருவரும் மாடிப்படியில் ஏறி படுக்கை அறைக்குச் சென்றனர்.
மறு நாள் காலை டயானா வெகுநேரம் கழித்து எழுந்தார். வெளியே வந்த போது அவர் தலைமுடி கலைந்து இருந்தது.
சிறிது நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டவர் வெளியே கிளம்பி விட்டார். ஜேம்ஸ் ஹெவிட்டுடன் தனியாகத்தான் புறப்பட்டார். அந்த காட்டேஜிலë தங்கியிருந்த நாட்களில் ஜேம்சும், டயானாவும் எங்கு போனாலும் தனியாகத்தான் போவார்கள். வாக்கிங் போனால் கூட அவருக்குத் துணை ஜேம்ஸ் ஹெவிட்தான்.
இவர்களது ரகசிய காதல் வெளியுலகத்திற்கு தெரிய வந்த போதுதான் சார்லசும், டயானாவும் பிரிவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
ஹெவிட்டுடன் இருந்த தொடர்பால் டயானாவின் 2-வது மகன் ஹாரி ஹெவிட்டுட்டுக்கு பிறந்திருக்கலாம் என்று கூட வதந்திகள் வெளியாயìன.
ஆனால் ஹாரி பிறந்த பிறகுதான் ஹெவிட்- டயானா உறவு மலர்ந்தது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும்.
டயனா ரகசியங்கள்...4
No comments:
Post a Comment