அகஸ்திய முனிவர் போகரை சீனாக்காரர் என்றே கூறுகிறார். அகஸ்தியர் பனிரெண்டாயிரம் நான்காம் காண்டத்தில் .
போகமுனிவர் சீனபதிக்கு உகந்தபாலர். காலங்கியின் சீடர் சித்தர்களில் முதன்மையானவர். புலிப்பாணியின் குரு இவருடைய தாய் தந்தையர்கள் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்கிறார் அகஸ்தியர். போகர் சலவைத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர் என்கிறார்.
அதோடு சவர்க்காரம் - சித்தர்கள் அறியவேண்டிய முதன்மையான பொருள். போகரின் தாய் தந்தையர் அதன் தன்மையை உணர்ந்தவர்கள் என்று கூறி எதிர்காலத்தில் போகர் சவர்க்கார வழலை மார்க்கம் கண்டதற்கு ஒரு அடிப்படையையும் உண்டாக்கியுள்ளார்.
பாரேதான் சீனபதி வெள்ளை மாண்பர்
பாருலகில் போகருட மரபென்பார்கள்
நேரேதான் பதினெட்டு வெள்ளை மாண்பர்
நெடிதான பூவுலகில் வாழ்ந்தாரப்பா
சீன நாட்டிலுள்ள வெள்ளை நிற மக்கள் போரின் மரபு என்பாரகள். உலகத்தில் பதினெட்டு வகையான வெள்ளை மனிதர்கள் உண்டு. அவர்களிலே சீனர்களும் ஒருவகையாவர்.
பால்குடிக்கும் பச்சிளங் குழவிப் பருவத்திலும், ஆறேழு மாதங்கள் உடைய இளம் சிசுவாக இருந்த போதும் குழந்தை பேசும் சொற்களைக் கேட்டுத் தாயார் திடுக்கிடுவாள். உலக அதிசயங்களில் ஒன்று போல் தன் வயதுக்கு மீறிய சொற்களைக் கூறும்.
மந்திரச் சொற்களை மழலை மொழியில் தாறுமாறாக உச்சரிக்கும். உலகத்தின் நிலையாமை பற்றியும் எல்லோக்கும் தாயான ஒருத்தி இருக்கிறாள் என்றும் கூறும். குழந்தை இப்படிப் பேசுவதைக்க கண்ட தாயானவள்,"அது என்னமோ ஏதோ தெரியவில்லையே?" என்று மிகுந்த துக்கம் அடைவாள்.
அவ்வாறு தாயார் துக்க மடையும் சமயங்களில்,"அம்மா நீ ஏன் கவலைப் படுகிறாய்? என்னைச் சாதாரண மனிதன் என்று நினைத்துக்கொள்ளாதே. நான் பிறவிக் கடலைத் தாண்டிப் பெரும் பேறடையப் பிறந்தவன். இந்த உலகம் எல்லாம் சுற்றி வரப்போகிறேன் . ஏழுகடல்களையும் தாண்டிப் போகப் போகிறேன்," என்றெல்லாம் வித்தாரம் பேசும்.
சிறு குழந்தையாக இருந்தபோதே ஞானத்தை உபதேசிப்பவர் போல் பேசுவார். பெரிய ஞானிபோல் பேசுவார், பிற்காலத்தில் உலகத்திற்கு அநேகம் நூல்களை அளிக்ப் போகிறவர் அல்லவா? அவர் இந்த உலகத்தின் மேல்நெடுங்காலம் இருந்தார்.
அகத்தியமுனிவர் போகரைப்பற்றி இவ்வாறு கூறுகிறார். அகத்தியர் பனிரெண்டாயிரம் என்ற நூல் மட்டும் கிடைக்காமலிருந்தால் போகரைப் பற்றிய இந்த வரலாறு உலகிற்கு தெரியாமலே போயிருக்கும்.
அது மட்டுமன்று, போ_யாங் என்ற சீனப் பெயரே போகர் என மருவியது என்று துணிவாரும் உளர். உலகத்தில் எங்குமே இல்லாத பெயராக பேகர் என்ற பெயரை உண்டாக்கி போகத்தில் ஆழ்ந்து போனவர். ஆகையால் அப்பெயர் ஏற்பட்டது என்ற வதந்தியை உண்டாக்கி அவதூறுக் குள்ளாக்கப் பட்டார். அதற்குத் தக்கபடி கதைகளும் உண்டாக்கப் பட்டன என்று கருதுவார் பலர்.
பேகர் என்ற பெயருக்கு நியாயமான, ஒரு காரணம் கற்பிக்க விரும்புபவர் சகலதுறைகளிலும் துறை போயவர் ஆகையல் போகர் என்ற வெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
போ_யாங் என்ற பெயர் போ_யர் என்று மரியாதை நிமித்தம் அழைக்கப்பட்டு போகர் என்று மருவியிருக்கலாம் என்பதே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.
போகர் ஏழாயிரத்தில் பேகர் தம்மைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்
உரைத்தோமே எந்தனிட சாதிமார்க்கம்
உத்தமனே விஸ்வகர்மன் என்னலாகும்
திரைத்ததொரு எந்தனது தலைமுறைதானப்பா
திரளான பதினெட்டுத் தலைமுறையேயாகும்
பேகர் தாம் விஸ்வகர்ம குலத்தில் ஐந்து பிரிவுகளில் ஒன்றில் பிறந்ததாக கூறுகிறார் .அதில் இருந்து போகர் பொற்கொல்லர் குலத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகின்றது ஆனால் கருவூரார் தமது வாதகாவியம் 700-ல்
பாரப்பா போக நாதர் பண்பள மட்குலால்
நேரப்பா ஜெனித்து யிந்த நீணிலமதனி லேதான்
மட்குலாலர் = குயவர்
என்று கூறுகிறார்
அகஸ்தியரும் தமது அமுத கலை ஞானம் 1200 என்ற நூலில்
உறுதியுள்ள போகனுமே குசவன் சாதி
ஓகோகோ அவன்பாடல் லக்கோ இல்லை
என்று கூறுகிறார்.
எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்து
எது எப்படியோ நமக்கு போகர் தமிழ் நாட்டுக்காரர் அது போதும்
தொடரும் . . . . . .
3 comments:
ஹலோ குட்டி ராஜா,
போகர் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிடும் நூல்கள் எங்கே கிடைக்கும்?
குமரன்.
திருச்சியில் பெரியகடைவீதியில் உள்ளது
என்னார்
Pl write more about Sidhdharkal.
nandri.
Post a Comment