Friday, October 07, 2005

போகமுனிவர்

மெய்வழிகண்டவர் என்று திருமூலர் பிரானால் தம்மோடொப்பாக வைத்துச் சிறப்பிக்ப்பட்ட போகமுனிவர் திருமூலர் காலத்தைச் சேர்ந்தவராகத்தானே இருக்க வேண்டும்?
ஆனால் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் அறிஞர் மு. அருணாசலம் போகர் பதினாறாம் நூற்றாண்டில் பழனியில் வசித்ததாகக் கூறுகிறாரே?
எது உண்மை?
இந்த ஐயம் தோன்றுவது இயல்பே.
போகர் தமிழகத்தில் இருந்தார். சீனத்துக்குச் சென்றார். அங்கே பல காலம் வாழ்ந்திருந்து சீனமொழியில் பல நூல்களைச் செய்தார். பின் தமிழ் நாட்டுக்குத் திரும்பிவந்தார். பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷாணக் கட்டால் அமைத்தார் என்று எடுத்துக் கொள்டவது சரியாக இருக்கலாம்.
போகமுனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்தபோதிலும் அவற்றைவிட மிகமிக அதிகமாகச் சீனமொழியில் இயற்றியுள்ளார். சீனாவில் அவருக்கு போ-யாங் என்று பெயர் என்றும் வா-ஓ-சியூ என்ற பெயரில் சீனாவின் தலை சிறந்தஞானி என்று கொண்டாடப்படுகிறார் என்றும் போகரைப் பற்றி நீண்ட ஆய்வுகள் செய்துள்ள பேராசிரியர் இராமையா யோகி அவர்கள் தமது போகர் சத்தகாண்டம் நூலின் பதிப்புரையில் கூறியுள்ளார். இவர் அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருந்தவராகையால் இவர் கூற்றில் ஐயப்பாட்டிற்கு இடமிராது என்று நம்புகிறோம்.
போ-யாங்=போகர்
போகமுனிவர் சீன நாட்டில் போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்து சீன நாட்டவராகவே வாழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது.
சீன நாட்டில் நெடுங்காலம் வாழ்ந்தபின் தமிழ்நாட்டுக்கு வந்த போது சீனத்து உடலிலேயே வந்தாரா அல்லது தமது பழைய உடலோடு வந்தாரா என்பதும் தெரியவில்லை.
போகமுனிவர் சீனநாட்டுக்குச் செல்வதற்கு முன்டபுதான் கொங்கணவர், கருவூரார், இடைக்காடர், சட்டைமுனி போன்ற சீடர்கள் அவருடன் இருந்தார்கள்.
சீனத்திலிருந்து அவரோடு வந்தவர் புலிப்பாணி என்பர். புலிப்பாணியே சீனாவுக்குச் சென்று அவரைக் கண்டு படித்து அழைத்து வந்ததாகவும் முதுமை காரணமாக போக முனிவரால் நடக்க முடியாததால் புலிப்பாணி அவரைத் தமது முதுகில் சுமந்து வந்ததாகவும் கூறுபவர்களும் உண்டு.
ஆனால் சித்தரின் உடலுக்கு முதுமை என்பது ஏது?
போகர் சீனாவிலிருந்து திரும்பி வந்தது பற்றி வேறொரு வரலாறும் கூறப்படுகிறது.

எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்து

தொடரும்.........

5 comments:

b said...

சீனர்கள் உடல் கட்டுறுதியிலும் தியானங்களிலும் நாட்டு மருத்துவத்திலும் அக்குபஞ்சரிலும் வல்லவர்கள்.

ஒருமுறை நண்பர் ஒருவர் தியானம் செய்தவாறு (பத்மாசன நிலையில்)தன் உடலை லேசாக மேலெழுப்பியதைப் பார்த்திருக்கிறேன்.

G.Ragavan said...

வாருங்கள் என்னார். உங்களை இங்கே சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி.

போகர் பற்றித் தெரியாத விஷயங்களை எடுத்துச் சொன்னதிற்கு நன்றி.

ENNAR said...

நன்றி மூர்த்தி, ராகவன். இன்னும் உள்ளது வளரும்

என்னார்

rakkatchi said...

YOUR INFORMATION ONBOGAR IS VERY USEFUL AND INFORMATIVE. COULD YOU THRO SOME LIGHT ON SOME OF THE MEDICINES OF BOGAR? IT WILL BE VERY USEFUL FOR ALL OF US IF YOU KNOW
JAGATHEESAN

ENNAR said...

I do not know JAGATHEESAN who is he