Sunday, November 20, 2005

ஆந்திராவில் ஆற்றில் அணை

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் கிளை நதியான பாபி கொண்டலு நதி ஓடுகிறது. இந்த நதி மலைகளின் நடுவில் ஓடுகிறது.

இதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் இயற்கை எழில் மிகுந்த ஆறு ஆகும். இதை பல கவிஞர்கள் பாராட்டி பாடியிருக்கிறார்கள். பல திரைப்படமும் எடுத்து இருக்கிறார்கள்.

அத்தகைய இயற்கை எழில் கொஞ்சும் நதியின் குறுக்கே புதிய அணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்து இருக்கிறது. மராட்டியம் மற்றும் சத்தீஷ்கார் மாநில எல்லையில் சுமார் 601 கிலோ மீட்டர் (இது பிழையாக இருக்கலாம்) தூரம் இந்த அணை கட்டப்படுகிறது.

இதற்கு போலவரம் நீர்த்தேக்கம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதை கட்டி முடித்தால் ஆண்டு முழுவதும் 95 கி.மீ. வரை இங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெறும்.

ஆனால் அழகிய பாபி கொண்டலு நதி காணாமல் போய் விடும். இதன் அருகே அமைந்துள்ள பல்வேறு கிராமங்கள் அழிந்து விடும்.

ராமகிருஷ்ண பரமஹம் சரின் சீடர் பாலானந்த சுவாமி பேரண்டம் பள்ளி ஆதிவாசிகள் கிராமத்தில் கட்டிய ஆசிரமம் அழிக்கப்படும். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள்.
மாலை மலர்
தமிழ் நாட்டில் இலவச வேட்டி சேலை வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய். இங்கு எந்த நலத்தி்ட்டமும் வரப்போவதில்லை ஜெயலலிதா தொடங்கினால் கருணாநிதி கிடப்பில் போட்டுவிடுவார். கருணாநிதி தொடங்கினால் ஜெயலலிதா கண்டுக்க மாட்டார். கர்நாடகா , ஆந்திராவில் நீர் அணைகள் அதிகரிக்கிறது , இங்கு காங்கிரசாருடன் போய்விட்டது.