Thursday, November 17, 2005

50 கோடி செலவு அபு, மோனிகாவை கொண்டுவர

மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய தாதா அபு சலீமையும், மோனிகாவையும் இந்தியாவிற்கு கொண்டுவர இதுவரை ஆன செலவு ரூ.50 கோடி.
  1. போர்ச்சுகல் நீதி மன்றத்தில் வாதாட சீனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் ஒரு மணிநேரத்திற்கு. இரண்டு ஜுனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் ஒரு மணி நேரத்திற்கு. ஒரு நாளைக்கு ஒரு சீனியர் இரண்டு ஜுனியர் வாதாடினர். ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணிவரை விசாரணை நடந்தது. தினமும் ரூ. 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை வக்கீல் கட்டணமாக செலவு செய்யப்பட்டதாம். மொத்தம் 15 நாட்கள் விசாரணை நடந்ததில் சி.பி.ஐ.க்கு ரூ.15 கோடி செலவு ஆனது.
  2. சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் இந்திய வக்கீல்களுக்கு போக்குவரத்து, தங்கும் செலவு ரூ. 3 கோடி, இவ்வாறு செஷன்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு மொத்தம் ரூ12 கோடி செலவு செய்யப்பட்டது.
  3. உச்சநீதிமன்றத்தில் வாதாட போர்ச்சுகல் சீனியர் வக்கீல் சீனியர் வக்கீல் மணிக்கு ரூ.10 லட்சம் கட்டணம் வாங்கினார். ஜுனியர் வக்கீலுக்கு ரூ.5 லட்சம் கட்டணம் 2 சீனியர் வக்கீல்களையும் 2 ஜுனியர் வக்கீல்களையும் அமர்த்திக் கொண்டதில் ஒரு மணி நேர விசாரணைக்கு ரூ.30 லட்சம் செலவு. உச்சநீதிமன்றத்தில் தினமும் 6 மணி நேரம் வீதம் 6 நாட்கள் விசாரணை நடந்தது. இதனால் தினமும் ரூ.1.80 கோடி வக்கீல் கட்டணம் கொடுக்கப்பட்டதாம்.
  4. உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல்களையே அரசியல்சாசன நீதிமன்றத்துக்கும் சி.பி.ஐ. பயன்படுத்திக் கொண்டது. அங்கு 4 நாட்கள் விசாரணை நடந்தது. தினமும் ரூ.1.80 கோடி வீதம் 4 நாட்களுக்கு மொத்தம் ரூ7.2 கோடி வக்கீல் கட்டணம் கொடுக்கப்பட்டதாம்.
  5. நாடு கடத்தல் உத்தரவை அரசியல் சாசன நீதிமன்ற் பிறப்பித்ததும், டில்லியில் இருந்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று லிஸ்பனில் 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தனர். இதற்கான போக்குவரத்து மற்றும் தங்கும் செலவு ரூ.3 கோடி லிஸ்பனில் இருந்து அவர்களை அழைத்து வர தனி விமானத்துக்கு வாடகை ரூ.75 லட்சம்.
  6. மற்றும் இதர செலவுகள் ஆவணங்கள் தயாரிப்பு வாகனங்கள் வாடகை, சாப்பாட்டுச் செலவு மற்றும் இதர செலவுகளையும் சேர்த்தால் மொத்தம் ரூ.50 கோ.............டி.......
இவர்களுக்கு தூக்குத்தண்டணை கூடாதாம் . நாட்டின் பணம் எவ்வளவு சேதம் பாருங்கள்.
தகவல் தினமலர்

4 comments:

b said...

நியாயமான மனக்குறை அய்யா. தீவிரவாதத்தினை கையில் எடுத்தால் கண்டதும் சுடும் சட்டத் திருத்தம் வேண்டும் அய்யா.

தருமி said...

இதோட மோசமான விஷயம் இந்த கேசு முடிவுக்கு வரும்போதுதான் தெரியுங்க. ஏன்னா என்னைக்கி நம்ம C.B.I. இந்த மாதிரி கேஸ்கள்ல ஜெயிச்சிருக்காங்க. இதையும் பாருங்க...

ENNAR said...

நன்றி மூர்த்தி தருமி தங்களது தொடுப்பைத் திறக்க முடியவில்லையே .
என்ன செய்வது அரசாங்கம் நல்லவர் கைகளில் இல்லை

நல்லவன் said...

இந்த அளவிற்கு செலவு செய்தால் கஜானா காலி