நல்லவர் வல்லவர் காவல்துறை அமைச்சராக எட்டு ஆண்டுகள் பணியாற்றியவர் தனக்கென
எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர் காமராஜரின்நிழல் போவே இருந்தவர் ஒரு முறை
இரயிலில் ஒரு குறிப்பட் ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுத்து இரயில் தூங்கி விட்டார்
அவர் இறங்க வேண்டிய ஸ்டேசனைத் தாண்டி வண்டி சென்று அடுத்த ஸ்டேசனில் நின்றது
அங்கு இறங்கிய அவரை டிக்கெட் பரிசோதகர் சோதணை செய்து அபராதம் கட்டும்படி கூற
அவ்வழியே வந்த ஒரு காங்கிரஸ் தொண்டர் இச்சம்பவத்தைப் பார்த்து," ஐயா இவரை
யாருன்னு தெரியலையா? இவர் தான் முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி" எனச் சொல்ல ; அந்த
பரிசோதகர்," கேள்விப்பட்டிருக்கேன் இவர் எனத்தெரியாது" என தனது வருத்தத்தை
தெரிவித்து; அபராதம் வாங்காமல் அனுப்பியுள்ளார்.
ஒரு முறை எம்.ஜி.யார். முதல்வராக இருக்கும் போது மதுரை அரசு மருத்துவமனையில்
கக்கன்ஜி சாதாரண மக்களுடன் மக்களாக தரையில் படுத்து மருத்துவ சிகிச்சை செய்து
கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு உடனே அவரை பார்த்து சென்னைக்கு அனுப்பிவைத்து
நல்ல முறையில் வைத்தியம் பார்க்க ஏற்பாடு செய்தார்.
வெள்ளையர் ஆட்சியில் சிறையில் அடைப்பதற்கு முன் நீதிபதி விசாரணை செய்வாராம்.
என்ன சாப்பிடுவார்கள் விசாரணை செய்வது வழக்கம் அதற்கு அரிசி சோறுதான் என
எல்லோரும் கூறவர்.
அவ்வாறு கேட்கும் போது ஒரு நபரை நீதிபதி கேட்டிருக்கார்," உணக்கு கேள்வரகு கூழ்
கொடுக்கச் சொல்கிறேன்" என்றாராம் அதற்கு அவர்," அது எனக்குத் தெரியாதே" என்றாராம்.
"சரி அப்படியனால் வாரம் இரண்டு நாள் உணக்கு அரிசி சோறு தரச்சொல்கிறேன்"
என்றாராம். கக்கன்ஜியிடம் கேட்டதற்கு எதைக்கொடுத்தாலும்சரி என்று ஏற்றுக்
கொண்டாராம்.
அவர் மராமத்து இலாக பார்த்தபோது ஒரு முறை மதுரையில் பாலம் கட்ட ஒரு
தொகையை மதிப்பீடு செய்து ஒதுக்கப்பட்டதாம் கக்கன்ஜி அந்த தொகைக்குள் மேற்படி
வேலையை முடித்து விட்டார் காமராஜர்," என்ன செலவு இன்னும் எவ்வளவு பணம் தேவை"
என கேட்க கக்கன்ஜி,"ஐயா ஒதுக்கிய தொகையிலே மீதம் இருங்குங்க" என்றாராம்
இன்று அந்த தொகையும் பத்தாமல் மறுபடியும் மதிப்பீடு செய்து அதிகமாக சுருட்டக்கூடிய
காலத்தில் அவர் நாட்டிற்காக அவ்வாறு பாடு பட்ட மக்கள் தலைவரை இம்மக்கள் மறந்து
விட்டனரே.
பார்த்ததுண்டா இப்படி பெரிய மனிதரை
கேட்டதுண்டா இவர் பெயரை
சொன்னதுண்டா இவரது செயலை
அனுபவித்துக் கொண்டே மறந்து விட்டோமோ அம்மாமனிதரை
இப்படிப்பட்ட தன்னலங்கருதா தங்கங்களை மறந்ததால் போற்றாததால் தான் அப்படிப்பட்ட
நல்லவர்கள் இப்பூமியில் தோன்ற வில்லை போலும்
10 comments:
என்னார்,
இன்னுமொரு நிகழ்ச்சியை என் தாயார் கூறக் கேட்டிருக்கின்றேன்.
அப்போ எங்க அம்மா மதுரை மாவட்டத்திலே மேலூர் என்ற இடத்துலே மருத்துவராக
இருந்தாங்க. ஒரு சமய்ம் 'காலரா' ஊசி போடவேண்டி ஒரு கிராமத்துக்குப் போகவேண்டிவந்தது.
அப்ப ஊசிபோட்டுக்கொள்ள மேல்சட்டை கூட அணியாம ஒரு வயசானவர் வந்தாராம்.
அம்மா, ரெஜிஸ்தர்லே எழுதப் பேர் கேட்டாங்களாம். அவர் சொன்னாராம், 'வெள்ளைக்கக்கன்'னு.
இன்னும் குடும்பத்துலே வேற யார் இருக்காங்க ஊசி போட்டுக்கன்னு கேட்டப்பத்தான்
தெரிஞ்சதாம் இவரோட மகந்தான் கக்கன் அவர்கள்னு. அப்ப அவர் சுகாதார அமைச்சர்!
பொழைக்கத் தெரியாத மனுசன். என்னதான் நாட்டுக்காக செய்தாலும் ஒரு நல்ல தாத்தாவாய்,தகப்பனாய்,தாயாய்,தோழியாய் தனது சொந்தங்களுக்கு ஒன்றுமே செய்யாத மனிதர்களை எல்லாம் நாங்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை. சாரி சார் நாங்க கட்சி மாநாட்டுக்குப் போகனும் வரட்டா.
அன்பின் என்னார் அய்யா,
மதிப்புமிகு கக்கன் அவர்களை மறக்க முடியுமா அய்யா? தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த தன்னலம் கருதாத தலைவர் அய்யா அவர்! அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற உதாரண புருஷர் அய்யா அவர்!
அவரையே நம் மக்களுக்கு மறந்துவிடாமல் நினைவு படுத்த வேண்டி இருக்கிறதே?!
நன்றி என்னார் அவர்களே!
கக்கன் போன்ற மாபெரும் தலைவர்களை உங்களைப் போன்றோர் சொன்னால் தான் தெரிந்துக் கொள்ள வேண்டிய நிலையில் இன்றைய தலைமுறை இருக்கிறது.
நீங்க கண்டிப்பாக தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி துளசி கோபால், பிழைக்கத்தெரிந்த கல்வெட்டு,நண்பர் மூர்த்தி,பரம்ஸ்
அனைவருக்கும் நன்றி பல
// பொழைக்கத் தெரியாத மனுசன். என்னதான் நாட்டுக்காக செய்தாலும் ஒரு நல்ல தாத்தாவாய்,தகப்பனாய், தாயாய், தோழியாய் தனது//
அப்படி அவர் இருந்திருந்தால் நாம் இப்படி நினைவு கொள்ள முடியுமா? பாராட்டு கிடைக்கமா? ஒரு வன் வாழ்ந்தால் சூரிய சந்திரன் உள்ளவும் நினைக்கப்படவேண்டும்
நம்மால் தான் அது முடியவில்லை யென்றாலும் அப்படிப்பட்டவர்களையாவது நினைத்துப் பார்ப்போமே111
Avasiyamana Pathivu!
நன்றி ஜோ
அய்யா என்னார்
கக்கன் காந்தியைக் குறித்து எழுதிய நூலில்
நாம் சிறுவயது பாடத்தில் படித்த
காந்தி முக்கிய பொருளைத்தேட
கடைசியில் அது குட்டியூண்டு பென்சில்.ஒரு சிறுவன் பரிசளித்தது.அந்த விபரம் இடம் பெற்றிருக்கும்.
கக்கன்ஜியை நினைவுகூரச் செய்த உங்களுக்கு நன்றி
அப்படியா நன்றி மதுமிதா நான் படிக்கவில்லை அதை கேள்விபடவும் இல்லை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நல்லது
Post a Comment