அப்பொழுது நான் பள்ளி மாணவன் எனக்கு வயது 8 அல்லது 9 இருக்கும் 1959 அல்லது 1960 இருக்கும், என நினைக்கிறேன் சரியாக ஞாபகம் இல்லை; எங்கள் ஊருக்கு பெருந்தலைவர் காமராஜரும், கக்கன்ஜியும் வருகிறார்கள் என சிறிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சொல்லப்போனால் கிராமமே விழாக்கோளம் பூண்டிருந்தது என்று சொல்லலாம்; அந்த அளவிற்கு மாவிலை வேப்பிலை தோரணங்கள் கூடவே காங்கிரஸ் கொடிகள்; எனது மாமா வேம்புராஜ் தொண்டமார் தான் பஞ்சாயத்து போர்டு தலைவர் அன்று. அவர் வீட்டு விஷேசம் போல விருந்து; வெளியூரிலிருந்து வந்த கட்சிக்காரர்களுக்கு அங்கு தான் சாப்பாடு. ஏன் என்றால் 5 மைல் சென்றால் தான் சுமாரான சாப்பாட்டுக்கடை BHEL வரவில்லை. ஊரில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் சட்டை போட மாட்டார்கள் வேட்டி துண்டுதான் அணிவது வழக்கம். ஒருவர் ஊரின் முக்கியஸ்த்தர் தனது வெள்ளை வேட்டையை இடுப்பில் கட்டி அதை இறக்கிவிட்டால் காமராஜர் வருவதற்குள் அழுக்காகிவிடுமாம் அதற்கா சுற்றிவைத்துக் கொண்டிருந்தார் கையில் ஒரு வெள்ளைத்தாள் அதில் எங்களது நீர் நிலைகளுக்கு பெருந்தலைவர் கொண்டு வந்த புதிய மேட்டுக் கட்டளைக் கால்வாயிலிருந்து தண்ணீர் கேட்டு எழுத்திய மனு அதில் என்னால் காணமுடிந்த வாசகம் மஹா ரா ரா ரா ஸ்ரீ காமராஜ் அய்யவுக்கு
மட்டும்தான் படிக்க முடிந்தது. மாலை சுமார் 6 மணி இருக்கும் மூன்று கார்களில் காமராஜர் கக்கன்ஜி வந்தனர். அப்பொழுத மனுக்களை முண்டியடித்துக்கொண்டு கொடுக்க முன்வந்தவர்களை காமராஜ், "ஏ ஏ ஏய்யா இப்படி தள்ளுறீங்க எல்லா மனுவையும் பொருமையாக நான் வாங்கிக்கொண்டுதான் போகப்போகிறேன்" என்றார். அப்பொழுது மனுக்களை ஒருவர் மற்றவர்களிடமிருந்து மொத்தமாக வாங்க முயற்சிக்கும் போது நான் சொன்ன அந்த பெரியவர். அவரிடம் கொடுக்காமல்," காமராஜிடம் தான் கொடுப்பேன்" என சத்தமாகச் சொல்லவும். காமராஜரின் பார்வை அங்கு திரும்பியது," யாராப்பா அங்கு விடுப்பா அவரை" என எழுந்து அங்கு போய் அந்த பெயரியவரிடம்," என்ன குறை" என கேட்க அந்த பெரியவர்," ஏங் கொளத்துக்கு ஆத்துத்தண்ணீர் வேணும்யா இஞ்சினீர் முடியாதுங்ரார்" என சொல்ல. இந்த பகுதி காரர்களுக் காகத்தானேய்யா தண்ணீர் கொண்டு வருகிறோம் உங்களுக்கு எப்படி முடியதுன்னு அந்த இஞ்சினீயர் சொன்னார் நாளையே நான் கேட்கிறேன் என அடுத்த நாள் கேட்டு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
3 comments:
திரு. என்னார், இப்படி நடந்த விஷயங்களைப் படிப்பதில் எனக்கு மிக்க விருப்பம். இனி அடிக்கடி உங்கள் பதிவுகளைப் படிக்க வேண்டியதுதான்.
காந்தியின் வரலாறுக்கு அடுத்து காமராஜரின் வாழ்க்கை வரலாறு நாம் அனைவரும் படிக்க வேண்டிய படித்துத் திருந்த வேண்டிய அற்புத நீதிநூல் போன்றதாகும்.
காமராஜருக்கு கோபமும் அதிகமாக வரும் அதை ஒரு பதிவில் எழுதுகிறேன்.குமரன், ssk,மூர்த்தி அனைவருக்கும் நன்றி.
Post a Comment