மானைக் கொன்ற
சல்மான்காணுக்கு
ஐந்தாண்டு சிறை
நல்ல தீர்ப்பு
சேடப்பட்டி வந்தார்
சரத் குமார் சென்றார்
பாவம் கலைஞர் குடும்பம்
மாண்ட்ரீல், ஏப். 10-
அமெரிக்கா பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் இயக்கங்களில் தீவிரவாத இயக்கங்கள் எவை என்று பட்டியலிட்டு அவற்றுக்கு தடை விதித்து வருகிறது. இந்த பயங்கரவாத இயக்க பட்டியலில் இதுவரை இந்தியாவில் செயல்பட்டு வரும் இயக்கங்கள், பாகிஸ் தானில் செயல்பட்டு வரும் இயக்கங்கள் உள்பட 45-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
விடுதலைப்புலிகள் இயக் கத்தையும் பயங்கரவாத இயக்க பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. இந்த இயக்கங் களுக்கு யாரும் நிதியுதவி அளிக்கக்கூடாது. அந்த இயக் கத்தின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாது.
இதேபோல கனடா அரசும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளையும் கனடா அரசு சேர்த்துள்ளது.இதற்கான முறைப்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. ஏற்கனவே 38 இயக்கங்களை கனடா அரசு தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
No comments:
Post a Comment