Wednesday, April 19, 2006

அம்பிகாபதி அமராவதி

˜

அம்பிகாபதி அமராவதி

ஒரு செந்தமிழ் நாடகம்

முதல் நிகழ்ச்சி: முதற் காட்சி



களம்: தஞ்சயிற் சோழன் அரண்மனை

நேரம்: மலை


சோழன்: , கடம்பா! கூத்தரிடம் உடனே சென்று யான் நிலாமுற்றத்தே இருக்கின்றேன் என்றம், இப்போதே அவர் தனியே வந்து என்னைக் காணவேண்டும் என்றுந் தெரிவித்து அவரைக் கையோ டழைத்துவா!


கடம்பர்: அப்படியே செய்கின்றேன் வேந்தோ!

(வணங்கிப் போய்விடுகின்றான்)


சோழன் மனைவி::- பெரும! அரசியல் முயற்சிகளையுங் கலை நூலாராய்ச்சிகளையும் விட்டு நாம் ஓய்ந்து மகிழ்ந்திருக்கும் இந்தநேரத்திற், புதலவர் பொருமான் கூத்தரை இவ்வளவு விரைவாக இங்கே அழைக்க வேண்டு வதேனோ அறிகிலேன்

சோழன்: கண்மணி, அங்கயற்கண்ணி! நம் புலவர் குழுவில் ஒரு மணிவிளக்கம் போல் திகழா நின்ற கம்பர் வடமொழியிலுள்ள வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்து ஒரு பெருங்காம்பியமாகப் பாடி இருக்கின்றார். நம் அருமைத் தோழரும் நின் பாட்டனும் ஆன சடையப்ப பிள்ளை அதனை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற வேண்டுமென வேண்டிக் கேட்கின்றார். அதைப் பற்றிக் கூத்தருடன் தனியே கலந்து பேச வேண்டுவது இன்றியமையாத தா யிருக்கின்றது.


சோழன் மனைவி::- என்ன! வடநாட்டரசனான இராமனை ஒரு தெய்வமாக்கிப் பாடிய இராமாயணத்தையா, சிவபெருமானையன்றி வேறெதனையும் வணங்கு வதில்லா நாம், நமது அவையிற் படிக்கக் கேட்டு சிறப்பிப்பது?


சோழன்: கண்மணி, அங்ஙனம் அன்று; நமது அரசாட்சியின் கீழ்ச் சைவர், வைணவர், பெளத்தர், யவனர், துருக்கர் முதலான பற்பல சமயத்தவரும் உயிர் வாழ்கின்றனர். நமது கொள்கை சைவ சமயமாயிருப்பினும், யான் அரசன் என்ற முறையில் எல்லாச் சமயத்தவர்க்கும் பொதுவாயிருந்து, அவரவர் தத்தஞ் சமய வாழ்க்கையினை மற்றையோர்க்குத் தீது பயவா வகையில் நன்கு நடாத்திக்கொண்டு வாழத்துணை செய்ய வேண்டும். ஈது எனது பெருங் கடமையாயிருக்கின்றது. நமது புலவர் பேரவையிற் பல மதத்திற் குரியவர்களும் இருக்கின்றனர் அதனால் அவ்வம் மதத்தினர் இயற்றிய நூல்களையும் படிக்கக் கேட்டு அவை குறைபாடுகள் உள்ளனவாயின் அக்குறைகளைக் களைந்து திருத்தியும், குறைபாடுகள் இல்லனவாயின் அந்நூல்களைப் பாராட்டியும் அவ்வவர் வரிசைகளுக்குத் தகப் பரிசளித்து வருகின்றேன். ஆகையால் கம்பரது இராமாயணத்தையும் அரங்கேற்றிக் கேட்டால் நமது அரசியல் முறைக்கு ஒத்ததே யாகும்.

சோழன்மனைவி: பெரும! அது உங்கள் அரசியல் முறைக்குப் பொருத்தந்தான். ஆனாலும் எல்லா மக்கட்கும் பொதுவான கொள்கைகளைத் தொடுத்துப் புலவர்கள் இயற்றும் நூல்களை மட்டும் உங்கள் பேரவையில் அரங்கேற்று விப்பதும் , அவரவர் தத்தஞ் சமயப்பொருள் கோத்து ஆக்கும் நூல்களை அவ்வச் சமயத்தார்கூடுஞ் சமய மன்றங்களில் மட்டும் அரங்கேற்றுவிப்பதும் நல்ல முறை ஆகாவோ?.

மீதம் .......2

6 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறேன்

இந்த பாகம் சிரியதாக உள்ளது சற்று பெரியதாக அடுத்த பாகம் அளிக்கவும்

ENNAR said...

நல்லது குமரன் அப்படியே செய்வோம்

G.Ragavan said...

என்னார் எழுதிய நாடகமென்றால் யாரும் படிக்காமல் இருக்க எண்ணார்.

தொடரட்டும் இந்த நாடகம்.

ENNAR said...

//என்னார் எழுதிய நாடகமென்றால் யாரும் படிக்காமல் இருக்க எண்ணார்.//
GR நீங்கள் சொல்வது விளங்கவில்லையே

குமரன் (Kumaran) said...

என்னார் ஐயா. நன்றாய் இருக்கிறது இந்த நாடகம். நீங்கள் எழுதியதா இல்லை மற்றவர் எழுதியதை வலையேற்றுகிறீர்களா?

மேலே குமரன் என்ற பெயரில் உள்ள பின்னூட்டம் செந்தில் குமரன் என்னும் வலைப்பதிவாளர் இட்டது.

ENNAR said...

ஆமாம் ஈரோட்டு செந்தில் குமார்