Thursday, April 20, 2006

வணக்கம்

இணையத்தில் நான் சிலவற்றைத் தேடினேன் அவைகள்
காமாராஜ்
கக்கன்ஜி
கட்டபொம்மன்
சின்னமருது பெரியமருது
வேலு நாட்சியார்
பூலித்தேவன்
முத்துராமலிங்க தேவர்
கள்ளர் சரித்திரம்
அம்பிகாபதி, அமாராவதி
இன்னும் பல
அவைகள் இல்லாத தால் அவற்றை ஏற்றவேண்டும் என்ற கொள்கையுடன்
இணையத்தில் நான் கள்ளர் சரித்திரம் எழுதி வெளியிட்டேன் . அதை அதிக சிரமத்தோடு எழுதியவர் பண்டித நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் ஊர் ஊராகச்சென்று மக்களை நேரில் சந்தித்து எழுதியது அது.
இதேபோல் அம்பிகாபதி, அமாராவதியை வெளியிட்டேன் 1950ல் மறைமலை யடிகளால் இயற்றப்பட்ட அம்பிகாபதி அமராவதி என்னும் நாடகத்தை சற்று எளிமையாக்கி முத்தமிழ் மன்றத்தில் கொடுத்து தற்போது எனது பிளாக்கில் கொடுத்து வருகிறென் முன்னுரையிலே எழுதினேன் அதில் சில தவறுகள் இருந்ததால் இடையில் எழுதலாம் என இருந்தேன் உண்மையிலே இதைப்படித்தால் கம்பர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை தெரிந்து கொள்ளலாம் . இதே போல் நாட்டாருக்கும் உடல் நலம் சரியில்லாமல் பல கஷ்டங்களையும் அடைந்தார்
உண்மையில் இந்த நாடகமும் , கள்ளர் சரித்திரமும் நான் முழுமையாகப் படித்து விட்டேன் நன்றாக உள்ளது
சில சந்தேகங்களை பிறகு ஒவ்வொன்றாக தெரிந்தவரை விளக்குகிறேன் நண்பர் குமரன் சில வற்றை கேட்டுள்ளார் அவருக்கும் பிறகு விளக்குகிறேன்
நன்றி

2 comments:

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி ஐயா

ENNAR said...

அடுத்த பதிவையும் படியுங்கள் உங்கள் ஐயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும் என நினைக்கிறேன்