Thursday, April 20, 2006

அம்பிகாபதி அமராவதி - 3 -

கூத்தர்: ஆம் ஆசிரியன் மனம் உவக்க செய்தல் மாணாக்கன் கடமையாயின் நின் முன்னோர் சிவத்தொண்டும் வழி வழிச் சிறக்க வேண்டும் அல்லவா? அமைச்சர் சேக்கழாரைக்கொண்டு திருத்தொண்டர் புராணம் பாடுவித்த அநபாய சோழனாம் நின் மூதாதையரின் கீர்த்தி இவ்வுலகெலாம் பரவி என்றும் மங்காது விளங்குவதொன்றன்றோ? சிவபிரானைக் குறைத்துக் குறும்பாய்ப் பேசிய இராமாநுசரை நின் பாட்டன் குலோத்துங்கன் இச்சோழநாட் டெல்லையில் இராதபடி செய்தும் தில்லை முன்றிலிலிருந்த திருமால் கோயிலை அவன் பெயர்தழித்ததும் அறியாதார் யார்? அத்தகைய சிவத்தொண்டன் கால் வழியிற் பிறந்த நீ அவற்குச் செய்யவேண்டிய கடமையினையும் நினைத்துப் பார்.

அரசன்: உண்மை, உண்மை புலவர் பிரானே, இப்போதியான் இருதலைக் கொள்ளி எறும்பாயினேன். ஒரு பக்கம் என் ஆசிரியரது உள்ளத்தை உவப்பிக்க வேண்டிய கடமை, மற்றொரு பக்கம் என் முன்னோரின் சிவத்தொண்டினைத் தொடர்ந்து நடத்தவேணடிய கடமை. இவ்விரண்டிலும் யான் வழுவுதல் ஆகாது. இதற்கொரு வழி தாங்களே கூற வேண்டும்.

கூத்தர்: நல்லது, நாளை காலையில் நின் அமைச்சர் நம்பிப்பிள்ளையுடன் சூழ்ந்து செய்ய வேண்டுவதின்ன தென்று தெரிவிக்கின்றேன். அதுபற்றிக் கவலை வேண்டாம் ; நீடு வாழ்மின்!
(
கூத்தர் செல்கிறார் )
(
அரசர் தனது மனைவியை நோக்கி)
அரசன்: அங்கயற் கண்ணி இப்போது நமக்கு கவலை நீங்கியது கம்பர் தமது இராமாயணத்தை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற விடார் கூத்தர் .

மீதம் ...4

6 comments:

குமரன் (Kumaran) said...

//சிவபிரானைக் குறைத்துக் குறும்பாய்ப் பேசிய இராமாநுசரை நின் பாட்டன் குலோத்துங்கன் இச்சோழநாட் டெல்லையில் இராதபடி செய்தும் தில்லை முன்றிலிலிருந்த திருமால் கோயிலை அவன் பெயர்தழித்ததும் அறியாதார் யார்?//

இதில் வரலாற்றுப் பிழை இருக்கும் போல் தெரிகிறதே. எனக்குத் தெரிந்தவரை கம்பர் தன் நூலை திருவரங்கத்தில் அரங்கேற்றும் போது வைணவ ஆசாரியராக இருந்தவர் இராமானுஜருக்கு குருவான ஆளவந்தாருக்கும் குருவான உய்யக்கொண்டாருக்கும் குருவான நாதமுனிகள். இராமானுஜருக்கு குறைந்தது மூன்று தலைமுறைக்கு முன்னவர் நாதமுனிகளின் சமகாலத்தவரான கம்பர். அப்படியிருக்க இராமானுஜரின் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி எப்படி கூத்தர் கம்பரின் காலத்தில் பேசுகிறார்? வியப்பாய் இருக்கிறதே!

ENNAR said...

//ஸ்ரீராமாநுசருக்கு முதலாம் குலோத்துங்க சோழனால் (கிபி 1070-1120) பல தொந்திரவுகள் நேர்ந்தன. சைவசமயத்தில் பற்று கொண்ட அரசன், ஸ்ரீராமாநுசர் மற்றும் அவரது சீடர்களான பெரியநம்பி, கூரத்தாழ்வான் ஆகியோருக்கு பல கொடுமைகளைச் செய்தான் என்று கூறப்படுகிறது. இதனால்//
http://desikann.blogspot.com/2004_07_19_desikann_archive.html
முதலாம் குலோத்துங்கள் 1070-1120
இரண்டாம் குலோத் 1122-1133
முன்றாம் (அமராவதிதந்தை1133-1150
சரியில்லையென்றால்சொல்லுங்கள் இருவரும்சோர்ந்து கண்டுபிடிப்போம்

குமரன் (Kumaran) said...

ம்ம்ம். குழப்பமாய் தான் இருக்கிறது என்னார் ஐயா. உங்கள் பின்னூட்டத்தைப் படித்தவுடன் கம்பர் என்று கூகுளில் தேடிய போது கிடைத்த சுட்டிகள் இவை:

http://home.att.net/~s-prasad/kamban.htm
http://www.tamilnation.org/literature/kamban/kambaramayanam.htm

இவற்றிலிருந்து கம்பரின் காலம் 9ம் நூற்றாண்டா, 11ம் நூற்றாண்டா என்பதில் சர்ச்சை இருப்பதாய் தெரிகிறது. நாதமுனிகளின் காலம் 9ம் நூற்றாண்டு. இராமானுஜரின் காலம் 11ம் நூற்றாண்டு. இராமானுஜரின் காலம் நீங்கள் சொல்லியிருப்பதைப் போன்று முதலாம் குலோத்துங்கனின் காலத்திற்குப் பொருந்துகிறது. ஆனால் கம்பரின் காலத்தில் தான் குழப்பம். வைணவ குருபரம்பரை நூல்களிலும் மற்ற தனிப்பாடல்களிலும் சொல்லுவதை நம்பினால் கம்பர் நாதமுனிகளின் காலத்தவர் (9ம் நூற்றாண்டு). இல்லை நீங்கள் பட்டியலிட்டுள்ள சோழவரசர்களின் காலத்தைப் பார்த்தால் கம்பர் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இன்னும் அதிக ஆராய்ச்சி செய்யத் தான் வேண்டும் போல.

ENNAR said...

நாதமுனி நான் கேள்விப்பட வில்லை
தங்கள் கொடுத்த முகவரியில்
ஒன்றில் இப்படியும்
(9th Century A.D)
மற்றொன்றில் இப்படியும் வருகிறது
Zvelebil (1995) has suggested two probable dates for Kampan, 855 or 1185 A.D. This will correspond to the reign of utthama ChOzhan(உத்தம சோழன்)or KulOthunka ChOzhan III (குலோத்துங்க சோழன்).

ENNAR said...

குமரன் இதில் பருங்கள்
//2. MIDDLE MIDDLE TAMIL, கி.பி.1200
žவக சிந்தாமணி, கம்பராமாணம், பெரிய புராணம் உரைகள//
http://noolaham.net/library/books/01/50/50c.htm

ENNAR said...

இதையும் பாருங்கள்
This ancient shrine is rich in legends and beliefs and is closely associated with the Tamil poet Ottakoothar - a contemporary of Kamban and the author of works such as Kulottunga Cholan Ula. Ottakkoothar enjoyed the patronage of the Imperial Chola rulers.

Legend has it that a young devotee desirous of knowledge performed severe penances at the Saraswati shrine here (11th-12th century CE), seeking the blessings of Saraswati.
http://www.templenet.com/Tamilnadu/koothanur.html